Advertisment

நக்கீரன் வெற்றிக் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்! -கொலம்பிய பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம்!

ss

ட்டோ சங்கர் சுயசரிதையை நக்கீரனில் வெளியிட அப்போதைய தமிழக அரசு தடைவிதித்ததற்கு எதிராக நக்கீரன் உச்சநீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விவரங்கள், கொலம்பிய பல்கலைக்கழகத்தின், க்ளோபல் ஃப்ரீடம் ஆப் எக்ஸ்பிரஷன் வலைத்தளத்தில் (website) இடம்பெற்றுள்ளது என்பது இந்திய வரலாற்றில் அதுவும் ஒரு பிராந்திய மொழி தமிழ் பத்திரிகைக்கு கிடைத்த மிக உயரிய அங்கீகாரம் என்பதை மார்தட்டிச் சொல்வோம். 35 ஆண்டுகால நக்கீரனின் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

Advertisment

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழகம், உலகின் மிகப் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஜார்ஜால் 1754-லேயே தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஐந்தாமிடம் வகிக்கிறது.

1858-ல் இங்கு உருவாக்கப்பட்ட கொலம்பியா ஸ்கூல் ஆப் லா, சட்டம் தொடர்பான படிப்புகளுக்குப் பேர் பெற்றதாகும். ஆராய்ச்சி மற்றும் கற்பிக்கும் நிறுவனமாகத் தொடரும் இந்த கொலம்பிய பல்கலைக்கழகத்தில்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் என போற்றப்படும் அம்பேத்கர் பொருளாதாரம், அரசியல், தத

ட்டோ சங்கர் சுயசரிதையை நக்கீரனில் வெளியிட அப்போதைய தமிழக அரசு தடைவிதித்ததற்கு எதிராக நக்கீரன் உச்சநீதிமன்றத்தில் நடத்திய சட்டப் போராட்டத்தின் விவரங்கள், கொலம்பிய பல்கலைக்கழகத்தின், க்ளோபல் ஃப்ரீடம் ஆப் எக்ஸ்பிரஷன் வலைத்தளத்தில் (website) இடம்பெற்றுள்ளது என்பது இந்திய வரலாற்றில் அதுவும் ஒரு பிராந்திய மொழி தமிழ் பத்திரிகைக்கு கிடைத்த மிக உயரிய அங்கீகாரம் என்பதை மார்தட்டிச் சொல்வோம். 35 ஆண்டுகால நக்கீரனின் உழைப்பிற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம்.

Advertisment

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள கொலம்பிய பல்கலைக்கழகம், உலகின் மிகப் பிரபலமான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இங்கிலாந்து அரசர் இரண்டாம் ஜார்ஜால் 1754-லேயே தொடங்கி வைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் மிகப் பழமையான பல்கலைக்கழகங்களில் ஐந்தாமிடம் வகிக்கிறது.

1858-ல் இங்கு உருவாக்கப்பட்ட கொலம்பியா ஸ்கூல் ஆப் லா, சட்டம் தொடர்பான படிப்புகளுக்குப் பேர் பெற்றதாகும். ஆராய்ச்சி மற்றும் கற்பிக்கும் நிறுவனமாகத் தொடரும் இந்த கொலம்பிய பல்கலைக்கழகத்தில்தான், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்தவர் என போற்றப்படும் அம்பேத்கர் பொருளாதாரம், அரசியல், தத்துவம், சமூகவியல் பாடங்களைப் பயின்றார்.

https://globalfreedomofexpression.columbia.edu/cases/r-rajagopal-v-state-of-t-n// என்ற -ங்க்-கின் கீழ் இடம் பெற்றிருக்கும் இப்பக்கத்தில், ஆட்டோ சங்கர் வழக்கின் சுருக்கமும் விளைவும், உண்மைகள், முடிவு ஒரு கண்ணோட்டம் என்ற தலைப்பின்கீழ் விவரித்துள்ளது. "க்ளோபல் ப்ரீடம் ஆப் எக்ஸ்பிரஷன்' வலைத்தளத்தில் இடம்பெற்ற விவரங்களின் விரிவான தகவல்கள் இதோ... ...

Advertisment

cc

வழக்கின் சுருக்கமும் விளைவும்

இந்திய உச்சநீதிமன்றம், ஒரு பத்திரிகைக்கு சிறைவாசி ஒருவரால் எழுதப்பட்ட சுயசரிதையை வெளியிட, அவரது சம்மதமோ அங்கீகாரமோ இல்லாதபோதும் உரிமையுண்டு என தீர்ப்பு வழங்கி யுள்ளது. சிறை அதிகாரிகள், சிறைக்கைதியை வலுக்கட்டாயமாக சுயசரிதையை வெளியிடக்கூடாது என வேண்டுகோள் விடுக்கச்செய்து, அந்தப் பத்திரிகை சுயசரிதையை வெளியிடுவதை தடுக்க முயற்சி செய்தனர். ஊடகச் சுதந்திரத்துக்கும், தனிப்பட்ட உரிமைக்குமான சமநிலை பேணப்படுவது முக்கியம் என விளக்கமளித்த நீதிமன்றம், மாநில அரசும் அதன் அதிகாரிகளும், பதிப்பில் வரும் விஷயங்கள் மாநில அரசுக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தில் முன்கூட்டியே தடைகளை விதிக்க அதிகாரம் இல்லை என்றது.

உண்மைகள்

நக்கீரன் தமிழ் பத்திரிகையின் அச்சாளர், வெளியீட்டாளர், ஆசிரியர், துணை ஆசிரியர் உள்ளிட்டோர் இந்த வழக்கின் மனுதாரர்கள் ஆவர். மாநில அரசு, சிறைத்துறை ஐ.ஜி., சிறைத்துறை சூப்பிரண்ட்டண்ட் ஆகியோர் இதற்குப் பதிலளித்தனர். நக்கீரன் இதழில், ஆட்டோ சங்கர் எனும் சிறைக்கைதியின் சுயசரிதையை வெளியிடவிடாமல் பிரதிவாதிகள் தடை கோரினர். சங்கர் ஆறு கொலைகளுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி. அவர் சிறையில் இருக்கையில், தனது சுயசரிதையை எழுதி, மனுதாரர் களின் பத்திரிகையில் அதை வெளியிட விருப்பம் தெரிவித்தார். சுயசரிதையை வெளியிடும் முன், நக்கீரன் அதை வெளியிடுவதாக விளம்பரம் செய்தது. சிறை அதிகாரிகளோ, அந்த சுயசரிதை வெளியாகக்கூடாதென பத்திரிகைக்குக் கடிதம் எழுதும்படி ஆட்டோ சங்கரை நிர்ப்பந்தித்தனர். எனவே மனுதாரர்கள் பத்திரிகை மற்றும் சிறைக்கைதியின் கருத்துச் சுதந்திரத்தை மீறும் பிரதிவாதிகளின் நடவடிக்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தனர்.

dd

முடிவு ஒரு கண்ணோட்டம்

நீதிமன்றம் கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக அங்கீகரித்தாலும், அது முழுமையானதல்ல என்றது. 1) தனியுரிமை பொதுச் சட்டம், தனிநபரின் வெளியில் சட்டபூர்வமற்ற முறையில் நுழைவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கான அநீதிச் செயல் களுக்கும், 2) தனிப்பட்ட உரிமைகளுக்குத் தரப்பட்ட அரசியலமைப்புச்சட்ட அங்கீகாரம், சட்டபூர்வமற்ற அரசாங்க நடவடிக்கையால் தனிப்பட்ட சொத்துகளுக்கு எதிராக, ஏற்படும் அநீதிகளி -ருந்து பாதுகாப்பதாக நீதி மன்றம் குறிப்பிட்டது. உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட சில முடிவுகளைக் குறிப்பிட்டு, இந்த முடிவுகள் இந்திய அரசிய லமைப்புச் சட்டத் தின்கீழ் எத்தனை பொருத்தமானவை யென கேள்வி யெழுப்பியது. மேலும், நீதிமன்றம் பத்திரிகைச் சுதந் திரத்துக்கும் தனிநபர் உரிமைக்குமான சமநிலை பேணப் படுவது முக்கியமென விளக்கியது.

மாநில அரசுக்கும் அதன் அதிகாரிகளுக்கும், பதிப்புக்கான விஷயங்கள் வெளியாகும்முன்னே, அவை மாநில அரசுக்கு களங்கத்தைக் கொண்டுவருமென தடைவிதிக்கும் உரிமை கிடையாதெனக் குறிப்பிட்டது. எனவே, “பிரதிவாதிகள், முன்மொழியப்பட்ட சுயசரிதை மீது முன்கூட்டியே கட்டுப்பாடுகளோ தடையோ விதிக்கக்கூடாது.” அந்தக் கட்டுரை வெளியிடப்பட்டபின் மாநில அரசு அவதூறு வழக்கு தொடுக்கக்கூடாது என இந்தத் தீர்ப்புக்கு அர்த்தமல்ல. அவர்கள் முன்கூட்டியே அந்தக் கட்டுரையை வெளியிடக் கட்டுப் பாடுகளோ, தடையோ விதிக்கக்கூடாது என்பதே ஆகும்.

“இந்த மேற்சொன்ன விதிகளைப் பயன்படுத்துகையில், மனுதாரர் அவர்கள் ஆட்டோ சங்கரின் வாழ்க்கைக் கதை/ சுயசரிதை என்று சொல்-க்கொள்ளும் ஒன்றை அவரது சம்மதம் அல்லது அங்கீகாரமின்றியே வெளியிட உரிமை உண்டு. ஆனால் அப்படி அவர்கள் முன்னேறிச் சென்று அவரது வாழ்க்கைக் கதையைப் பிரசுரிக்கையில், அவர்கள் ஒருவேளை அவரது உரிமை அல்லது அந்தரங்கத்தில் அத்துமீற நேர்ந் தால், சட்டப்படி அதன் விளைவுகளுக் குப் பொறுப்பாவார் கள். அதேபோல, மாநிலமோ அதன் அதிகாரிகளோ மேற் சொன்ன வெளியீட் டைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்த வோ கூடாது. வெளி யீட்டுக்குப் பின் பாதிக்கப்பட்ட பொது அதிகாரிகள்/பொது ஆளுமைகள், மேலே விவரிக்கப்பட்டபடி அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த வழக்கு, ஊடகங்கள் செய்தி களை வெளியிடும்போது, மாநிலம் முன் கூட்டியே கட்டுப்பாடுகளோ தடையோ விதித்து கட்டுப்பாடு விதிப்பதைத் தடுத்து, கருத்துச் சுதந்திர வெளிப்பாட்டை விரிவுபடுத்தி யது. நக்கீரன் தொடர்ந்த வழக்கு ஒட்டுமொத்த ஊடகத் துறைக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கொலம்பிய பல்கலைக்கழகத்தின், க்ளோபல் ப்ரீடம் எக்ஸ்பிரஷன் தளம் அதைப் பதிவுசெய்திருப்பது, நக்கீரன் வெற்றிக் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்!

-தொகுப்பு: க.சுப்பிரமணியன்

nkn071222
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe