Advertisment

அண்ணாவின் தேவை இன்றைக்கும் இருக்கிறது! திருச்சி சிவா பேச்சு! (சென்ற இதழ் தொடர்ச்சி...)

trichy-siva

முதலமைச்சருடைய கட்டளைக்கேற்ப நான் டெல்லிக்கு ஒரு கூட்டத் திற்கு சென்றுவிட்டு இன்று திரும்பியிருக் கிறேன். நேற்றைய மேடையை இன்றைக்கு எனக்கு பெரிய மனதோடு மாற்றித் தந்த பபாசி அமைப்பினருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் சூழ்நிலையை அவர்கள் புரிந்துகொண்ட காரணத்தினால் தான் நக்கீரன் கோபாலிடம் பேசினேன். அவர்தான் என்னை இந்த நிகழ்ச்சிக்கு உறுதிசெய்தவர். நிலைமையைச் சொன்னபோது "எனக்கு புரிகிறது, நீங்கள் நாளை வரலாம்' என்று சொல்லி எனக்காக இந்த நிகழ்ச்சியை இன்றைக்கு மாற்றியமைத்ததற்கு நான் நன்றி சொல்கிறேன். காரணம், இந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. சென்னை புத்தகத் திருவிழாவில் பேசுகிற மகிழ்ச்சியும் பெருமையும் தனியானது. 

Advertisment

நானும் நிறைய படித்திருக்கிறேன். பல பேரை படித்திருக்கிறேன். கல்லூரிக் காலத்திலே ஓராண்டு காலம் சிறையிலிருந்தபோது என்னுடைய வேலையே நூல்களைப் படிப்பதுதான். தலைவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள். நல்ல கருத்தைச் சொல்கிறபோது இந்த நாடு வரவேற்கிறதா? ரத்தினக் கம்பளம் விரித்து வைக்கிறார்களா என்றால் இல்லை.

Advertisment

அண்ணாவை ஏன் இப்போது மேற்கோள் காட்டுகிறோம்? அண்ணா மறைந்து 56 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒரு மனிதன் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பின்னாலும் அண்ணாவின் பெயரை சொல்லாமல் அரசியல் இல்லை. அண்ணாவின் சிந்தனைகள் இல்லாமல் எதுவுமில்லை. அன்றைக்கு அவர் சொன்னது எல்லாம் இன்றைக்கு தேவையாக இருக்கிறது. அவர் சொன்னதெல்லாம் வழிகாட்டியாக இருக

முதலமைச்சருடைய கட்டளைக்கேற்ப நான் டெல்லிக்கு ஒரு கூட்டத் திற்கு சென்றுவிட்டு இன்று திரும்பியிருக் கிறேன். நேற்றைய மேடையை இன்றைக்கு எனக்கு பெரிய மனதோடு மாற்றித் தந்த பபாசி அமைப்பினருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் சூழ்நிலையை அவர்கள் புரிந்துகொண்ட காரணத்தினால் தான் நக்கீரன் கோபாலிடம் பேசினேன். அவர்தான் என்னை இந்த நிகழ்ச்சிக்கு உறுதிசெய்தவர். நிலைமையைச் சொன்னபோது "எனக்கு புரிகிறது, நீங்கள் நாளை வரலாம்' என்று சொல்லி எனக்காக இந்த நிகழ்ச்சியை இன்றைக்கு மாற்றியமைத்ததற்கு நான் நன்றி சொல்கிறேன். காரணம், இந்த வாய்ப்பை நான் இழக்க விரும்பவில்லை. சென்னை புத்தகத் திருவிழாவில் பேசுகிற மகிழ்ச்சியும் பெருமையும் தனியானது. 

Advertisment

நானும் நிறைய படித்திருக்கிறேன். பல பேரை படித்திருக்கிறேன். கல்லூரிக் காலத்திலே ஓராண்டு காலம் சிறையிலிருந்தபோது என்னுடைய வேலையே நூல்களைப் படிப்பதுதான். தலைவர்கள் எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறார்கள். நல்ல கருத்தைச் சொல்கிறபோது இந்த நாடு வரவேற்கிறதா? ரத்தினக் கம்பளம் விரித்து வைக்கிறார்களா என்றால் இல்லை.

Advertisment

அண்ணாவை ஏன் இப்போது மேற்கோள் காட்டுகிறோம்? அண்ணா மறைந்து 56 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஒரு மனிதன் மறைந்து அரை நூற்றாண்டுக்கு பின்னாலும் அண்ணாவின் பெயரை சொல்லாமல் அரசியல் இல்லை. அண்ணாவின் சிந்தனைகள் இல்லாமல் எதுவுமில்லை. அன்றைக்கு அவர் சொன்னது எல்லாம் இன்றைக்கு தேவையாக இருக்கிறது. அவர் சொன்னதெல்லாம் வழிகாட்டியாக இருக்கின்றது. 

அதுபோலத்தான் பெரியார் என்ற தலைவர். அவர் வாழ்ந்த காலத்தில் நடந்தது என்ன? யார் அவரை ஏற்றுக்கொண்டார்கள்? எத்தனை எதிர்ப்புகள், எத்தனை இன்னல்கள், கொஞ்சநஞ்சமா? ஒருமுறை அவர்  கூட்டத்திற்கு போகிறபோது வழியிலே செருப்பு தோரணமாகக் கட்டியிருக்கிறார்கள். எல்லாம் பிய்ந்துபோன செருப்புகள். அதை அறுத்தெறியப் போகிறார்கள் தோழர்கள். அதற்கு பெரியார் சொல்கிறார்... "பேசாம இருயா, அவன் உன்னைவிட என்மீது அன்பு கொண்டவன்.' "என்னய்யா அப்படிச் சொல்கிறீர்கள்?' என்றபோது, "ஆமா நீ ஒரு நாலணா கொடுத்து துண்டு வாங்கி வந்தாய், அவர் எட்டணா கொடுத்து மாலை வாங்கி வந்தார், அவன் இந்த பிஞ்சுபோன செருப்புக்காக எத்தனை குப்பை மேடுகளை தேடிக் கொண்டுவந்து கட்டி னானோ தெரியவில்லை' என்று சொல்லுகிற அந்த அணுகுமுறை இருந்தது.

முதன்முதலாக கோபால் அவர்கள் இன்று அவர் நடத் திக் கொண்டிருக் கிற அந்த பத்திரி கைக்கு பெயர் வைத்தபோது அது ரொம்ப புதுமையாக இருந்தது. அதே நேரத்தில்தான் ஜூனியர் விகடனும் வந்தது. ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவர் அந்த நக்கீரன் பெயரை எங்கிருந்து வாங்கினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தார் அல்லவா, அதுதான் அவருடைய சிறப்பு. இன்றுவரை அவர் அந்த நிலையில்தான் இருக்கிறார். யாராக இருந்தாலும் சரி... பரமனாக இருந்தாலும் சரி, பாராள்கிறவனாக இருந்தாலும் சரி, எனக்கு தோன்றியதை நான் எழுதுவேன் என்று சொல்றதுக்கு ஈடாக இன்றைக்கு நக்கீரன் நடக்கிறது. அந்த துணிச்சலைப் பாராட்டுகிறோம். அந்த முயற்சிக்கு நாம் துணை நிற்கவேண்டும். அவருடைய எழுத்துக்களால் ஏற்படக்கூடிய மாற்றங்களைப் பார்த்து நாமும் நமதாக்கிக்கொள்ள அதை பாராட்டு கின்றோம். 

நான் நாடாளுமன்றத்தில் பேசினேன். மறைக்கப்பட்ட தென்னிந்திய விடுதலை வீரர்கள் என்று நான் பேசினேன். வடக்கே இருப்பவர்களை மட்டுமே வாழ்த்துகிறீர்களே, பாராட்டுகிறீர்களே, நாங்களும் சேர்ந்து கொண்டாடுகிறோமே, என் மண்ணிலே பிறந்த வீரர்களை, வீராங்கனைகளை நீங்கள் மதிப்பதில்லையே ஏன்? என்று நான் கேட்டேன்.  அங்கே நான் பேசியதை நூலாகக் கொண்டு வந்திருப்பவர் கோபால். நான் அவரிடம் சொல்லவே இல்லை, அவர் தன் கடமையாக அதை உணர்ந்தார்.

தமிழ்நாட்டு வீரர்களைப் பற்றி தமிழ்நாட்டிலிருந்து சென்ற ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பேசுகிறார் என்றால் அது அன்றைக்கு பேசியதோடு, சில யூடியூப் சேனலில் வந்ததோடு முடிந்து விடக்கூடாது என்று, எல்லோருக்கும் சென்று சேரவேண்டுமென்று நூலாக வெளியிட்டு இங்கே பதிப்பகத்திற்கும் கொண்டு வந்திருக்கிறார்கள்... நான் நன்றி சொல்கிறேன்.

நான் நாடாளுமன்றத்தில் வயிற்றெரிச்ச லோடு, வேதனையோடு, ஆதங்கத்தோடு பேசினேன். அதை கேட்டுவிட்டு உணர்ச்சிவசப் பட்ட நக்கீரன்கோபால், தொடராக வெளி யிட்டதோடு நில்லாமல், அதை தொகுப்பாகவும் வெளியிட்டிருக்கிறார். வழக்கத்திற்கு மாறாக நான் அதிக நேரம் பேசியிருக்கிறேன், ஆனால் பேசிய கருத்துக்கள் எதுவும் வீணானவை அல்ல. உங்களுக்கு தெரியவேண்டியவை, மறைக்கப் பட்டவை, மறக்கப்பட்டவை, தெரிந்துகொள் ளாமலே போனவை. இன்றைக்கு தலைவர்களாக நிலைத்து புகழ்பெற்றிருக்கிற எல்லோரும் வாழ்க்கையில் சந்தித்தது சோதனைகள், நிந்தனைகள், பல்வேறு அவமானங்கள். 

கடைசி நாள்வரை கேவலமாகத் தூக்கியெறியப் பட்டவர்கள், ஆயிரம், நூறு ஆண்டுகளைக் கடந்து வாழ்கிறார்கள் என்றால் தீர்க்கமான முடிவும், உறுதியான செயல்பாடும், எதைக் கண்டும் கலங்காத தன்மையும் தான் காரணம். இளைய தலைமுறையிடம் நான் அதைத்தான் எதிர்பார்க்கிறேன். 

நீங்கள் யாரோ ஒருவராக, ஏதோ ஒரு படிப்பு, ஏதோ ஒரு வேலை, எவ்வளவோ சம்பளம், ஒரு கார், ஒரு வீடு, வசதியோடு, நாங்கள் அங்கே போனோம், இங்கே போனோம் என்று சொல்லி வாழ்வதல்ல வாழ்க்கை. உங்கள் மரணத்திற்குப் பின்னாலும் உங்கள் பெயர்  நிலைத்திருக்க வேண்டும். ஒரு தலைவனாக, ஒரு விஞ்ஞானியாக, ஒரு கண்டுபிடிப்பாளனாக, ஒரு சிந்தனையாளனாக நீங்கள் மாறவேண்டும். இன்றைக்கு இந்த புத்தகத் திருவிழாவில் எனக்கு கிடைத்த வாய்ப்பில் இதுதான் உங்களுக்கு நான் வைக்க விரும்புகிற வேண்டுகோள். சிறந்த எதிர்காலத்தை இளைஞர்களுக்கு தருவதல்ல எங்கள் கடமை. சிறந்த இளைஞர்களை எதிர்காலத்திற்கு தருவதுதான் எங்கள் கடமை. எவ்வளவு நல்ல நாட்டை உருவாக்கித் தந்தாலும் காப்பாற்றவேண்டியவர்கள் கையாலாகாமல் இருந்தால் அதில் உபயோகம் இல்லை. ஆனால் ஒன்றுமே இல்லாத மண்ணைக் கொடுத்தால்கூட அதை உருவாக்கிக் காட்டக்கூடிய வல்லமை இளைஞர்களுக்கு இருக்குமேயானால் எதிர்காலம் வளமானது. 

எனவேதான் நான் நக்கீரன் கோபால் அவர்களுக்கு, வைரவன் அவர்களுக்கு, இங்கிருக்கிற நிர்வாகிகள் எல்லோருக்கும் சொல்வேன், நல்லவேளை இன்றைக்கு நான் வந்தேன். நீண்ட நாள் கனவு இது. பல ஊர்களில் பேசி யிருக்கிறேன். இங்கே இந்த இடத்தில் பேச வேண்டுமென்று பேசியிருக்கிறேன். சற்றேறக்குறைய ஒருமணி நேரம் பேசியிருக்கிறேன். உணர்ச்சிபொங்கத்தான் பேசினேன். நான் கருத்துக்களை சுமந்து வரவில்லை, என் உள்ளத்தில் இருந்ததைப் பேசுகிறேன். நான் வகுத்துக்கொண்டு வரவில்லை, ஆனால் நான் சொன்னதைப்போல் எதிரே இருக்கிற நீங்கள் என்னைப் பேசவைத்தீர்கள். சுப.வீ.  வந்து எதிரே  உட்கார்ந்தவுடன் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் என்மீது மாறாத அன்பு கொண்டவர். என் பேச்சில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். கோபாலும் அப்படித்தான்... எல்லோரும் அப்படித்தான். ஆனால் இன்றைக்கு வேலை முடிந்து கடைக்கு வந்த நோக்கம் முடிந்து, கடைகள் எல்லாம் அடைக்கப்பட ஆரம்பித்துவிட்டன. வீட்டுக்கு திரும்பியவர்கள் இவ்வளவுநேரம் உட்கார்ந்திருக்கிறீர்களே, இன்றைய நிகழ்வின் வெற்றி இதுவென்று நான் கருதுகிறேன். 

எனவேதான் வந்தவர்கள், வாங்கியவர்கள், வாங்கிப் படிக்கப் போகிறவர்கள், அதை அப்படியே வைத்துக் கொண்டிருக்காமல் என் தம்பி இமையத்தைப் போல, ஊருக்கு தெரியாத கிராமப்புற வாழ்க்கை எழுதுகிறவர்களும் நிறைய எழுதியிருக்கிறார்கள். இதையெல்லாம் வாங்கிக்கொண்டு படிப்பதோடு மட்டுமல்லாமல் இதுபோன்ற நிகழ்வுகளில் எங்களைப் போன்றோர் பேசுகிற கருத்துக்களையும் சுமந்துசெல்லுங்கள். இளைய தலைமுறை சார்ந்தவர்கள் குறிக்கோள் ஒன்றை வகுத்துக்கொள்ளுங்கள், உறுதியாக நில்லுங்கள்!

-தொகுப்பு: தாஸ்

படம்: ஸ்டாலின்

nkn240126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe