"ஹலோ தலைவரே, ஆட்சி மாற்றத்தால் பல்வேறு வகையிலும் மீண்டுகொண்டிருந்த தமிழகம், இப்ப புயல், மழை, வெள்ளம்னு தத்தளிக்கிது.''”

"ஆமாம்பா இயற்கைப் பேரிடரை யாராலும் கை வைத்து தடுத்துவிட முடியாது. ஆனால், இயற்கைப் பேரிடரால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான திட்டங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் கை வைத்ததால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தத்தளிக்குது.''”

rr

"சரியாச் சொன்னீங்க தலைவரே, ஜனங்க என்ன ஃபீல் பண்றாங்கன்னா, மழை-வெள்ள பருவகாலங்களுக்கேற்ப கட்டமைப்பு பணிகளை அரசு இயந்திரம் மேற்கொள்ளணும்ங்கிறதுதான். அரசாங்கம் தங்களுக்காக இருக்கணும்ங்கிறது அவங்க எதிர்பார்ப்பு. அதற்கேற்ப சென்னையில் அடைமழை தொடங்கியதில் இருந்து தினசரி காலையும், மாலையும், மழைநீரை வடியவைக்கும் பணிகளை முதல்வர் ஸ்டாலினே நேரடியாகப் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அரசும், மாநகராட்சியும், வானிலை ஆய்வு மையமும், மகக்ளைப் பாதுகாப்பாக இருக்கச் சொல்லி, எச்சரித்து வருது. நிவாரணப் பணிகளையும் தீவிரமா முடுக்கிய முதல்வர், தேசிய பேரிடர் மீட்புப் படையினரையும் அங்கங்கே களமிறங்க வச்சிருக்கார்.''”

Advertisment

"அப்படி இருந்தும் மழை வெள்ளப் பணிகளில் அரசு தீவிர கவனம் செலுத்த ணும்னு கவர்னர் வேண்டு கோள் வச்சிருக்காரே?''”

"மாநில அரசுக்கு செக் வைக்கணும்னு தான் கவர்னர் ஆர்.என்.ரவியை டெல்லி இங்க கொண்டுவந்து உட்கார வச்சிருக்கு. மாநில அரசு மற்றும் அமைச்சர்கள் பற்றி அடிக்கடி அதிகாரிகளிடம் அவர் ரிப்போர்ட் கேட்டுக் கிட்டே இருக்கார். இந்த நிலையில் இப்ப வழக்கத்துக்கும் அதிகமா அடைமழை பெய்துவரும் நிலையில், தி.மு.க. அரசு நிவாரணப் பணிகளில் தீவிரமா களமிறங்கியிருக்கு. இருந்தாலும், கவர்னர் தன் பங்குக்கு ‘தேவையற்ற மக்களின் நடமாட்டத் தையும் விரும்பத்தகாத சம்பவங்களையும் தவிர்க்க ணும்னு எச்சரிக்கை செய்ததோட, டி.ஜி.பி.யையும் அழைத்து விசாரிச்சார். இதைப் பார்த்த அதி காரிகள், கவர்னர் என்ன, பேரலல் கவர்ன்மெண்ட் டை நடத்தப் பார்க்கிறாரா?ன்னு எரிச்சல் படறாங்க.''

"முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி "அம்பேத்கர் சுடர்' விருதை அறிவிச்சிருக்கே?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, தேசிய அளவில் அரசியல், சமூகம், இலக்கியம் உள்ளிட்ட தளங்களில் ஆளுமை செய்யும் தலைவர்கள்ல சிறந்து விளங்குபவர்களுக்கு, ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தைகள் கட்சி "அம்பேத்கர் சுடர்', "பெரியார் ஒளி', "அயோத்திதாசர் ஆதவன்', "காமராசர் கதிர்', "காயிதேமில்லத் பிறை' உள்ளிட்ட பெயர் களில் விருதுகளை வழங்கி வருது. இந்த வருடத்துக் கான "அம்பேத் கர் சுடர்' விருதை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுக்கு "பெரியார் ஒளி' விருதும், தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு "காமராஜர் கதிர்' விருதும் வழங்குகிறார் திருமாவளவன். ஆதிதிராவிடர்-பழங்குடியினர் ஆணையத்தை முதல்வர் அமைத்ததற்காகவும், அயோத்திதாச ருக்கு மணிமண்டபம் அமைத்ததற்காகவும், பஞ்சமி நிலங்களை மீட்கும் நடவடிக்கையை அவர் தலைமையிலான அரசு தொடங் கியதற்காகவும் முதல்வரை கௌரவிக்கிறார்களாம் சிறுத்தைகள்.''”

"தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க.வும் சீமானின் ’நாம் தமிழர்’ கட்சியும் கைகோக்குதே?''”

seeman

"முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரைத் தேக்கி வைக்கும் விவகாரத்தில், கேரள அரசைத் தன்னிச்சையாக தி.மு.க. அரசு செயல்பட விட்டுடுச்சின்னு சொல்லி, அதைக் கண்டிச்சி அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் போராட்டக் களத்தில் இறங்கியிருக்கு. இந்த நிலையில், வருகிற 14-ந் தேதி தேனியில், கேரள மற்றும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டக் களத்தில் இறங்குகிறார் ’நாம் தமிழர்’ சீமான். இதுக்கு என்ன காரணம்ன்னு விசாரிச்சப்ப, சீமானும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலையும் போனில் பேசினார்களாம். நீங்க ஏன் தனியா நிக்கறீங்க? வாங்க, தி.மு.க. அரசுக்கு எதிரா போராடலாம்னு அழைத்தாராம் அண்ணாமலை. அந்த மந்திர அழைப்புதான் இப்ப வேலை செய்யுதாம். ஏற்கனவே பா.ஜ.க.வின் வலையில் சீமான் விழுந்துட்டாருன்னு டாக் அடிபட்டுவரும் நிலையில், அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக சீமானின் போராட்ட அறிவிப்பு இருக்குன்னு சொல்றாங்க. நாம் தமிழர் கட்சி நிர்வாகத்தினரோ, நாங்கள் எப்போதும் தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள். ஏற்கனவே தமிழக கனிம வளம் கேரளாவுக்குப் போவதை எதிர்த்து கன்னியாகுமரி மாவட்டத்தில் போராட்டம் நடத்தினாம். அதுபோலத்தான் இது எங்களின் தனித்தன்மையான போராட்டம்கிறாங்க.''”

"வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீட்டினை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அப்செட்டிலேயே இருக்கிறாராமே?''”

rr

"இந்த விவகாரத்தில் தமிழக அரசு, தனது வாதத்தை சரியா முன்வைக்கவில்லைன்னு ஆதங்கப்படுகிறாராம் டாக்டர் ராமதாஸ். அதனால் அரசின் மேல்முறையீட்டில் பா.ம.க.வையும் இணைத்துக் கொள்வதற்கான முயற்சியை அவர் முடுக்கிவிட்டிருக்கிறாராம். இதனிடையே இட ஒதுக்கீட்டுக்காக இனி போராடக்கூடிய பா.ம.க.வினர் மீது, குண்டர் சட்டம் பாயும் வகையில் நடவடிக்கை எடுக்க தி.மு.க அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதனை முறியடிக்கவேண்டும் என்றும் கட்சிப் பிரமுகர்களிடம் சொல்லியிருக்காராம். தி.மு.க மீதான கோபம் டாக்டருக்கு நாளுக்கு நாள் அதிகரிக்குதாம்.''”

"சரிப்பா, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா மாநிலத்துக்கு இடமாற்றம் செய்யப் பட்டிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, கடந்த ஜனவரியில் தான் நியமிக்கப்பட்டார். ஒரு வருடம் கூட நிறைவுபெறாத நிலையில், அவரை மேகாலயாவுக்கு இடமாற்றம் செய்யணும்னு கொலீஜியம் பரிந்துரை செய்திருக்கு. ஒன்றிய அரசு கொண்டுவர விரும்பிய பொருளா தார இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்க பானர்ஜி மறுத்துவிட்டாராம். அதேபோல் தமிழக அரசின் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாதுன்னும் அவர் உறுதியா இருந்துட்டார். இப்படிப்பட்ட நிலையில், அவர் மாற்றப்பட்டிருப்பதும், அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் முனீஷ்வர் நாத் பண்டாரி சென்னைக்கு நியமிக்கப்படுவதும் கவனத்தை ஈர்த்திருக்கு.''”

"காஞ்சி சங்கரமடத் தரப்பின் கோபத்தை பிரதமர் மோடி சம்பாதிச்சிருக்காரே?''”

"உண்மைதாங்க தலைவரே, கேரள மாநில காலடியில் பிறந்த ஆதிசங்கரர், அவர் தனது 32-ஆம் வயதில் காஞ்சி மடத்தில் முக்தி யடைந்ததாக இவ்வளவு காலமாகக் கூறிவந்தனர். இந்த நிலையில் கடந்தவாரம் உத்தரகாண்டில் இருக்கும் கேதார்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கேதான் ஆதிசங்கரர் இறந்ததாகவும், அங்கிருப்பதுதான் அவரது சமாதி என்றும், அந்தக் கோயில் அருகே இருந்த சமாதியில் 12 அடி உயர ஆதிசங்கரரின் சிலையையும் திறந்து வைத்திருக்கிறார். இது காஞ்சி சங்கர மடத்தைக் கோபப்படுத்தியிருக்குது. கேதார்நாத் நிகழ்வில் சாமி சன்னதியில் ஷூ கால்களுடன் பிரதமர் இருந்தார்னு சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கிளப்பப்படுது.''”

rra

"எனக்கு கிடைச்ச ஒரு தகவலை சொல்றேம்ப்பா.. பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு டிசம்பர் 8ந் தேதி தொடங்கி 12ந் தேதி வரைக்கும் நடக்கவிருக்குது. ஏற்கனவே அ.தி.மு.க ஆட்சியில் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதால் இந்த மறுதேர்வு நடக்கிறது. ஆனால், முந்தைய ஆட்சியில் நூற்றுக்கும் அதிகமான வெளிமாநிலத்தவர், குறிப்பா வடமாநிலத்தவர் கலந்துக்கிட்டு தேர்வானது போலவே, இந்த ஆட்சியில் நடக்கும் தேர்விலும் வட மாநிலத்தவர்கள் அதிகளவில் கலந்துக்கப் போறாங்க. காரணம், தேர்வு எழுதுபவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கு. தமிழ் மொழி தெரியாமலேயே தமிழ்நாட்டில் பிற மாநிலத்தவர்கள் தேர்வெழுதி வேலைக்குச் செல்வதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது. முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் நடைமுறையையே தி.மு.க. ஆட்சியும் பின்பற்றுவது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு. முதல்வரும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் உடனே கவனம் செலுத்தி, தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமையைப் பாதுகாக்கணும்ங்கிற குரல்கள் ஒலிக்குது.''

"நானும் ஒரு முக்கியமான தகவலை, உங்க மூலம் பகிர்ந்துக்கறேன். கடந்த எடப்பாடி ஆட்சிக் காலத்தில், கோவையில் கோலோச் சியவர் அந்த ஐ.பி.எஸ். அதிகாரி. இவர் மாஜி வேலுமணிக்கும் வலதுகரமாக இயங்கினார். வடமாநிலத்தைச் சேர்ந்த தமிழக கேடர் ஐ.பி.எஸ்.ஸான இவர் டெல்லிவரை நெருக்கமான நட்பைப் பேணி வருகிறார். அந்த நட்பை வைத்து மாஜி வேலுமணி மீதான லஞ்சஒழிப்புத் துறையின் வழக்குகளை ஒன்றுமில்லாதபடி தான் பார்த்துக் கொள்வதாக அவருக்கு நம்பிக்கை தந்து வருகிறாராம். கடந்த ஆட்சியில் தன்னிடம் குவிந்த பணத்தை எல்லாம் வைரங்களாக மாற்றி பதுக்கி வைத்திருக்கிறாராம் அந்த கில்லாடி ஐ.பி.எஸ்.''”