ண்ணாமலை திடீரென்று டெல்லிக்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார். பா.ஜ.க.வில் அண்ணாமலையின் ஹனிட்ராப் ஆபரேஷனால் பாதிக்கப்பட்ட கே.டி. ராகவனுக்கு அதிகாலை மாரடைப்பு வந்தது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டி ருக்கிறார். இந்த இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள்.

"அண்ணாமலையின் கடை மூடப்படுகிறது. அவர் நடத்திய வியாபாரம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அண்ணாமலை தன்னைப் புகழ்ந்து பேசுவதற்காக அமர் பிரசாத் ரெட்டி மூலம் ஏகப்பட்ட நபர்களுக்கு பணம் கொடுத்து வந்தார். அந்தப் பண விநியோகம் நின்றுவிட்டது. அண்ணாமலையைப் புகழ்ந்தபடி வாழ்ந்துகொண்டிருந்தவர்கள் பலர் நடுத்தெருவுக்கு வந்துவிட்டார்கள். அண்ணாமலை போல் வாரி அள்ளிப் பணம் கொடுப்பவர்கள் இனிமேல் யார் கிடைப்பார்கள்' என்று கதறுகிறார்கள்.

annamalai

Advertisment

அண்ணாமலையின் முக்கியத் தளபதியாக இருந்தவர் கோவை முருகானந்தம். அண்ணாமலை கைகாட்டும் நபர்களிடம் போய்ப் பணம் வசூலித்துக் கொடுப்பது இவரது வேலை. அவர் இப்பொழுது அப்ரூவர் ஆகிவிட்டார்.

"அண்ணாமலை தமிழ்நாட்டு அரசியலை மட்டுமல்ல, பா.ஜ.க.வையும் பாழ்படுத்திவிட்டார். கட்சி அரசியல் இவற் றைக் கெடுத்ததோடு தமிழ்நாட்டில் உள்ள ஊடகங்களையும் பா.ஜ.க.விற்கு எதிராகத் திருப்பிவிட்டார்'' என குற்றம்சாட்டு கிறார் முருகானந்தம். அண்ணாமலையுடன் ஒட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான செந்திலுக்கே கட்டிங் வாங்கிக் கொடுத்த கேசவ விநாயகம் அவரது சொந்த ஊர்க்காரரான பொன்.ராதாகிருஷ்ணன் காலில் விழுந்துவிட்டார்.

அவர் அண்ணாமலை பற்றி பல ரகசியங்களை அவிழ்த்து விட்டிருக்கிறார். “"அண்ணாமலை சாதாரண ஆளில்லை. நான் ஒரு எம்.ஜி.ஆர். என அண்ணாமலை கூறிக்கொள்வார். அவருக்குப் பணியாத கட்சிக்காரர்களை எம்.ஜி.ஆர். எப்படி ராமாவரம் தோட்டத்தில் வைத்து அடிப்பாரோ அது போல அண்ணாமலையும் அடித்திருக்கிறார்''’என அதிர்ச்சித் தகவலை கேசவ விநாயகம் கூற... அதிர்ந்துபோன பொன்னார், கோவை முருகானந்தம், கேசவ விநாயகம் போன்றோர் சொன்ன கருத்துக்களை அகில இந்திய பா.ஜ.க. கட்சித் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ktraghavan

இந்நிலையில் எடப்பாடியுடன் நேரடி மோதலில் இறங்கிய அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் தங்கமணியை தனது வலைக்குள் கொண்டுவந்துவிட்டார். தங்கமணிக்கு பா.ஜ.க.வில் நல்ல பதவி வாங்கித் தருகிறேன் என வாக்குறுதி அளித்து, அவரை எடப்பாடிக்கு எதிராகத் திருப்பிவிட்டி ருக்கிறார். அத்துடன் சி.வி.சண்முகத்தையும் எடப்பாடிக்கு எதிராகத் திருப்பி விட்டார். எடப்பாடி, பா.ஜ.க.வின் ‘ஐ.டி. விங்’ தலைவரான நிர்மல்குமாரை அ.தி.மு.க.வில் சேர்த்ததற்கு எதிராக தங்க மணியையும் சி.வி.சண்முகத்தையும் எடப்பாடிக்கு எதிராக திருப்பி விட்டார் அண்ணாமலை.

அண்ணாமலையின் இந்த முயற்சிகளுக்கு கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வேலுமணியும் பலியானார். சுதாரித்துக்கொண்ட எடப்பாடி, வேலுமணியைக் கூப்பிட்டு என்ன நடந்தது என விசாரிக்க, பா.ஜ.க. தரப்பிலிருந்து அண்ணாமலை கொடுத்த அழுத்தங்களைப் பட்டியலிட்டார் வேலுமணி. "அ.தி.மு.க.வை உடைக்கப் பார்க்கிறாரா அண்ணாமலை?'’என டென்ஷன் ஆன எடப்பாடி, பா.ஜ.க.வின் தலைமையை தொடர்புகொண்டு, “"அண்ணாமலை தலைவராக இருந்தால் அ.தி.மு.க. கூட்டணி என்பது கஷ்டம்'”என புகார் வாசித்திருக்கிறார் எடப்பாடி.

அதைப்பற்றி பா.ஜ.க. தலைமை அண்ணாமலையிடம் கேட்டபோது "விரைவில் எடப்பாடி கொடநாடு வழக்கில் சிறைக்குப் போவார். அதன் பிறகு அவர் செல்லாக்காசாகி விடுவார்'' என பதில் சொல்லியிருக்கிறார். டென்ஷன் ஆன பா.ஜ.க. தலைமை, “தமிழகத்தில் யாருடன் கூட்டணி என முடிவு செய்வதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? நீங்கள் எப்படி அ.தி.மு.க.வின் எதிர்ப்பைச் சம்பாதிக்கலாம்? அ.தி.மு.க.வில் பா.ஜ.க. எதிர்ப்பு என்பது அடிமட்டத் தொண்டர்கள் முதல் மேல்மட்டம் வரை நீடிக்கிறது. அப்படி ஒரு உணர்வு அந்தக் கட்சிக்குள் பரவ நீங்கள்தான் காரணம். எடப்பாடியின் உருவ பொம்மையை எரித்ததோடு, அ.தி.மு.க.வுக்குள் புகுந்து அதைக் கபளீகரம் செய்யும் வேலையிலும் ஈடுபடுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?"’ என அண்ணா மலையை மிகக்கடுமையான வார்த்தைகளில் எச்சரித்தது பா.ஜ.க. தலைமை. அத்துடன் அண்ணாமலையை அரசியலுக்குக் கொண்டுவந்த பி.எல்.சந்தோஷையும் கூப்பிட்டு கடுமையான எச்சரிக்கையைக் கொடுத்தது. அண்ணாமலைக்கும் அமர்பிரசாத் ரெட்டிக்கும் கண்கண்ட தெய்வம் பி.எல்.சந்தோஷ்தான். அந்த சந்தோஷே, அண்ணாமலையைக் கூப்பிட்டு மிகக்கடுமையாக போனில் எச்சரித்தார். இதனால் அண்ணாமலை ‘கேம்ப்’ மனமுடைந்து போனது.

"தி.மு.க., அ.தி.மு.க. இல்லாமல் ஒரு தனியான பாதையை நான் பா.ஜ.க.விற்கு வகுத்துத் தருவேன்'’என கட்சிக் கூட்டங்களில் முழங்கி வந்த அண்ணாமலை, கிட்டத்தட்ட ‘மன நிலை பிறழ்ந்தது போல் மாறிவிட் டார். “"கூட்டணி யாருடன், எப்படி அமையும் என் பதை கட்சியின் தேசியத் தலை மைதான் தீர்மா னிக்கும்'” என பேட்டியளித்தார். பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகளான நைனார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் போன்றோர் அண்ணாமலைக்கு எதிராகப் பேச ஆரம் பித்தார்கள். பொன் ராதாகிருஷ்ணன் அமைதியாக இங்கு நடக்கிற செயல்களை டெல்லிக்கு எடுத்துச் சொல்லிவந்தார்.

இந்நிலையில் அனைவரும் அண்ணா மலையால் பாதிக்கப்பட்ட கே.டி.ராகவனிடம் சரணடைந்தார்கள். அமித்ஷாவிடமும், நிர்மலா சீதாராமனிடமும் நேரடியாகப் பேசும் கே.டி. ராகவன் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த மாநிலத் தலைவர் என்கிற நிலை உருவானது. இதனால் டென்ஷன் ஆன அண்ணா மலை, கே.டி.ராகவனிடம் காரசாரமாக சண்டை போட, அது அவரது மாரடைப்பில் போய் முடிவடைந்திருக்கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.