மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்தது பா.ஜ.க. அரசு. எங்களுக்கு நல்லது செய்ததாக பீற்றிக்கொள் கிறார்கள். அத்தனையும் பொய்” என மீனவர்கள் கொதித்தெழுந்த நிலையில், "ஆருத்ரா மூலம் கொள்ளையடித்த ரூ.3000 கோடி எங்கே?', "பற்றியெறியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?' என்கின்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகளே அண்ணாமலையை வரவேற்றன. தி.மு.க. அரசைக் கண்டிக்கும்விதமாக முதலில் ஜனவரி மாதத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபயணம் துவக்குவதாகத் திட்டமிடப் பட்டது. பின், அது ஏப்ரலில் என அறிவிக்கப்பட்டது. எனினும் ஜூலை 28-ல் நடைபயணம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. "என் மண் என் மக்கள்' எனும் பெயரிலான நடைபயணத்தில் 234 தொகுதி களையும் கவர்செய்து அதன் மூலம் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன் றத் தேர்தலை எதிர்கொள்வதே தமிழக பா.ஜ.க.வின் திட்டம்.
இதை உறுதிசெய்யும் விதமாக அண்ணாமலை தலைமையேற்று நடத்தும் நடைபயணத்தை துவக்கிவைக்க ஜூலை 28 அன்று ராமேஸ்வரத்திற்கு வந்துசேர்ந்தார் உள்துறை அமைச்சரான அமித்ஷா. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் துவக்க விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் என வரையறுக்கப்பட்ட நிலை யில், பொதுக்கூட்டம் நடக் கும் மேடைப் பகுதியை புதி தாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்தின் முகப் புப் பகுதியைப் போன்று வடிவமைத்திருந்தனர் தமிழக பா.ஜ.க.வினர்.
25 டி.எஸ்.பி.க்கள் உட்பட 2,500 போலீஸார் பாதுகாப்பு வளையத்திலிருந்த ராமேஸ்வரம் பொதுக் கூட்ட மேடையில் அனைவ ருக்கும் வீடு திட்டம், வீடு தோறும் குடிநீர் இணைப்பு, சாலையோர வியாபாரி களுக்கு கடன் திட்டம், இலவச மருத்துவக் காப்பீடு, வங்கிக் கணக்கு திட்டம், முத்ரா கடன் திட்டம், மலிவு விலை மக்கள் மருந்தகம், கிராமப்புற இளைஞர்களு
மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையே அழித்தது பா.ஜ.க. அரசு. எங்களுக்கு நல்லது செய்ததாக பீற்றிக்கொள் கிறார்கள். அத்தனையும் பொய்” என மீனவர்கள் கொதித்தெழுந்த நிலையில், "ஆருத்ரா மூலம் கொள்ளையடித்த ரூ.3000 கோடி எங்கே?', "பற்றியெறியும் மணிப்பூர் உங்கள் மண் இல்லையா?' என்கின்ற வாசகங்கள் தாங்கிய சுவரொட்டிகளே அண்ணாமலையை வரவேற்றன. தி.மு.க. அரசைக் கண்டிக்கும்விதமாக முதலில் ஜனவரி மாதத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபயணம் துவக்குவதாகத் திட்டமிடப் பட்டது. பின், அது ஏப்ரலில் என அறிவிக்கப்பட்டது. எனினும் ஜூலை 28-ல் நடைபயணம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. "என் மண் என் மக்கள்' எனும் பெயரிலான நடைபயணத்தில் 234 தொகுதி களையும் கவர்செய்து அதன் மூலம் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன் றத் தேர்தலை எதிர்கொள்வதே தமிழக பா.ஜ.க.வின் திட்டம்.
இதை உறுதிசெய்யும் விதமாக அண்ணாமலை தலைமையேற்று நடத்தும் நடைபயணத்தை துவக்கிவைக்க ஜூலை 28 அன்று ராமேஸ்வரத்திற்கு வந்துசேர்ந்தார் உள்துறை அமைச்சரான அமித்ஷா. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் துவக்க விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் என வரையறுக்கப்பட்ட நிலை யில், பொதுக்கூட்டம் நடக் கும் மேடைப் பகுதியை புதி தாக அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கட்டடத்தின் முகப் புப் பகுதியைப் போன்று வடிவமைத்திருந்தனர் தமிழக பா.ஜ.க.வினர்.
25 டி.எஸ்.பி.க்கள் உட்பட 2,500 போலீஸார் பாதுகாப்பு வளையத்திலிருந்த ராமேஸ்வரம் பொதுக் கூட்ட மேடையில் அனைவ ருக்கும் வீடு திட்டம், வீடு தோறும் குடிநீர் இணைப்பு, சாலையோர வியாபாரி களுக்கு கடன் திட்டம், இலவச மருத்துவக் காப்பீடு, வங்கிக் கணக்கு திட்டம், முத்ரா கடன் திட்டம், மலிவு விலை மக்கள் மருந்தகம், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி, விவசாயிகளுக்கு 6000 ஊக்கத் தொகை, இலவச உணவு தானிய திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கான ஊக்கத் தொகை உட்பட தங்களது ஆட்சியில் கொண்டுவந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு நோட்டீசு களை, புத்தகங்களை வழங் கினர் பா.ஜ.க.வினர். இதே வேளையில், மாலை 4.45 மணிக்கு ஹெலிகாப்டரில் மண்டபம் வந்தடைந்த அமித்ஷாவை காரில் ஊர் வலமாக அழைத்துவந்தனர்.
மேடையிலிருந்த கூட்டணிக் கட்சியினர் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் வெற்றிபெற வாழ்த்துரை வழங்கிய நிலையில், தன் பங்கிற்கு வாழ்த்துரை வழங்கிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை பாதியோடு பேச்சை நிறுத்த வைத்தனர். மேடையில் பேசிய அண்ணாமலையோ, "1983-ல் சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியிலிருந்து ராமேஸ்வரம் வரை நடந்தார். பின்னர் விமானம் மூலம் சிகாகோ சென்று அங்கு நமது இந்து மதத்தைப் பற்றிப் பேசி நமது பெருமையைப் பரப்பினார். அப்போது பாரதத்தாயின் மிக நீண்ட இருள் விலகியிருக்கிறது என்றார். நான் இப்போது அவரை நினைவில்கொள்ள விரும்புகிறேன். தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப் படாத நிலையில், ஊழல் அமைச்சர்களைக் காப்பாற்றுவதிலும், தி.மு.க. முதல் குடும்பத்தின் ‘நிதிகளைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் தி.மு.க. அரசு இன்று கவனம் செலுத்துகிறது. இந்த யாத்திரை அண்ணாமலையின் அல்லது மாநில தலைவரின் யாத்திரை அல்ல. மாறாக பா.ஜ.க.வின் ஒவ்வொரு தொண்டர்களின் யாத்திரை''’என்றார்.
அடுத்ததாக மைக் பற்றிய அமித்ஷாவோ, "ராமநாதசுவாமி அருள் நிறைந்துள்ள புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்' நடை பயணம் தொடங்குகிறது. இதில் மாவட்டங்கள், தொகுதிகள்தோறும் மோடி குறித்த செய்தி கொண்டுசெல்லப்படுகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஏழை களுக்கான திட்டங்களை மீண்டும் கொண்டுவரவே இந்த நடைபயணம். பாரம்பரியமிக்க தமிழ்மொழி, கலாச்சாரத்தை வளப்படுத்தி "யாதும் ஊரே யாவரும் கேளிர்' என உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் பாரதப் பிரதமர் மோடி. மகாகவி பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11-ஆம் தேதியை தேசிய மொழிகள் தினமாக அறிவித்தது பிரதமர் மோடி. இன்று தமிழக மீனவர்களின் கஷ்டத்திற்கு காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியின் ஆட்சியே காரணம். அண்ணாமலை நடை பயணத்தை முடிக்கும்போது 2024 தேர்தலில் வெற்றிபெற்று மோடியே மீண்டும் பிரதமராக வருவார். அப்போது தமிழகத்தில் மாற்றங்கள் உண்டு. எனவே மக்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுக்கே வாக்களிக்கவேண்டும்''’என்றார்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையின் பாதயாத்திரையை அமித்ஷா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுக்கூட்டம் நடைபெற்ற வாஜ்பாய் திடல் முன்பிருந்து புறப்பட்ட பாதயாத்திரை, ராமநாதசுவாமி கோவில் மேல கோபுரவாசல் முன்புவரை நடைபெற்றது. மொத்தமே 1 கி.மீ. தூரமே நடந்த அண்ணாமலை ஆங்காங்கே செல்பி எடுத்து மக்களை குஷிப்படுத்தத் தவறவில்லை.
மண்டபம் ஒன்றியத்திலுள்ள ஏரகாடு கிராமத்தில் அமித்ஷாவிற்காக காத்திருந்தவரின் வீட்டிற்குச் சென்ற அண்ணாமலையோ, அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு "3 சென்ட் இடம் வாங்குங்க... பிரதமர் திட்டத்தில் வீடு கட்டித்தர்றேன்' என பீதியைக் கிளப்பினார்.
மறுநாள் முதுகுளத்தூர் மற்றும் பரமக் குடியில் நடைபயணம் எனத் திட்டமிடப்பட்டி ருந்த நிலையில், முதுகுளத்தூர் சென்று காந்தி சிலையிலிருந்து நடைபயணமாக 700மீ தூரமுள்ள பேருந்து நிலையத்தை அடைந்தார். அதன்பின் மாலை வேளையில், பரமக்குடி சென்று கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் இருந்து நடைபயணமாக 2.5 கி.மீ தூரமுள்ள ஐந்துமுனை பகுதிக்குச் சென்று உரை யாற்றினார்.
"முதல்நாள் 1 கி.மீ, மறுநாள் 2 கி.மீ, அதற்கடுத்த நாள் மொத்தமே 3.2 கி.மீ. மீதமெல்லாம் பேருந்துப் பயண யாத்திரையே! அப்புறம் எதற்கு நடைபயணம் என பீற்றிக்கொள்ள வேண்டும். அண்ணாமலையின் நடைபயணத்தால் பாதிக்கப்படுவது நாங்களும், பொதுமக்களுமே. அவர் வருவதற்கு முன்பாக சுமார் 3 மணி நேரம் முன்பாகவே டிராஃபிக்கை சரிசெய்து இந்த பக்க மிருந்து அந்த பக்கம் யாரும் செல்லாதவாறு காக்க வேண்டும். இது தேவையா?'' என ஆதங்கப்பட்டார் போலீஸார் ஒருவர்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மா.செ. கருணாமூர்த்தியோ, "அண்டப்புளுகர்கள் அண்ணாமலையும், அமித்ஷாவும். மீனவர்களின் நிலையைப் பற்றி என்ன தெரியும் அவர்களுக்கு. நாங்கள்தான் செய் தோம் என வாயில் வந்ததைக் கொட்டுகிறார் கள் இருவரும். குறை சொல்றதுக்காகவே காங்கிரஸையும், தி.மு.க.வையும் பேசுகிறார்கள். இவங்க ஆட்சிக்குவந்து 9 வருஷத்துக்குமேல ஆயிடுச்சு. இதுவரை மீனவர்களுக்காக என்ன செய்தார்கள்? ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. உண்மையைச் சொல்லணும்னா காங்கிரஸ் ஆட்சியில் இலங்கை ராணுவத் தினரால் பிடிபடும் படகுகளை திரும்பக் கொடுத்துவிடுவார்கள். பா.ஜ.க. ஆட்சியில் ஒரு படகுகூட திரும்பத் தரப்படவில்லை. இந்திய மீனவர்களிடமிருந்து கைப்பற்றப் பட்ட சுமார் 200-க்கும் அதிகமான விசைப்படகுகளை உடைத்து ஏலம் விட்டுள்ளது இலங்கை அரசு. இதில் நாட்டுப்படகான 25 வல்லங்களும் அடக்கம். மீனவனின் வாழ்வாதாரத்தை மொத்தமாக அழித்தது பா.ஜ.க.தான். ஒரு வார்த்தைகூட இலங்கை அரசிற்கு கண்டனம் தெரிவிக்காத பா.ஜ.க., தற்பொழுது மீனவர்களைப் பாதுகாத்ததாகப் பேசுவதெல்லாம் புளுகு'' என்கிறார் அவர்.
அண்ணாமலையின் நடைபயணத்தால் மக்கள் இன்னும் என்னென்ன விசித்திரங்களை சந்திக்கப்போகின்றனரோ?
________
இறுதிச் சுற்று
தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் நிறை வேற்றப்படும் திட்டங்களை ஒவ்வொரு வாரமும் தொடங்கி வைத்தபடி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வரிசையில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம்நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை திங்கள்கிழமை (31/07/23) கோட்டையில் வழங்கினார் ஸ்டாலின். மேலும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் தொகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள திறன் வகுப்பறைகளை திறந்து வைத்து, பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார். அதேபோல் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மஹிந்திரா ஆராய்ச்சி மையத்தில் 200 கோடி ரூபாய் முதலீட்டில், 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் நிறுவியுள்ள மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தை காணொலி காட்சி வழியாக திறந்து வைத்ததுடன், திருவண்ணாமலை மாவட்டத் திலுள்ள செய்யார் சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள மஹிந்திரா நமய பரிசோதனைத் தளத்தில் 290 கோடி ரூபாய் முதலீட்டில் மின் வாகன விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
-இளையர்