Advertisment

ராங்கால் அண்ணாமலை + அமர்பிரசாத் ரெட்டி! 100 கோடி டார்கெட்! இடைத்தேர்தலில் இரட்டை இலை! காங்கிரஸ் மெத்தனம்! அதிருப்தியில் அமைச்சர்கள்!

ssd

"ஹலோ தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது ஒரு மெஹா மோசடிப் புகார் கிளம்புது.''”

Advertisment

"ஆமாம்பா, மரம் நடும் திட்டம் என்கிற பெயரில் அண்ணாமலை கலெக்ஷனுக்கு ரூட் போடறார்னு செய்தி வருதே?''”

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை, தனது கட்சியின் லேபிளைப் பயன்படுத்தி, ரூபாய் 100 கோடிக்கும் மேல் மெஹா வசூல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்னு கமலாலயத் தரப்பிலேயே பேச்சு அடிபடுது. கிழக்குக் கடற்கரைச் சாலையில், பத்து லட்சம் மரக்கன்றுகளை தனது சுவாசம் அறக்கட்டளை மூலம் அவர் நடப் போவதாகவும், அந்தத் திட்டத்தின் படி, ஒருவர் பெயரில் ஒரு மரம் வளர்க்க, அவர்களிடம் தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் வசூலித்து வருவதாகவும் சொல்கிறார்கள். மரம் நடும் அந்த கோல்மால் அமைப்பிற்கு அண்ணாமலையின் மனைவி அகிலாதான் தலைவராம். அந்த அறக் கட்டளையின் செயலாளர் தொடர்ந்து மோசடி சர்ச்சைகளில் சிக்கிவரும் மற்றொரு பா.ஜ.க. பிரமுகரான அமர்பிரசாத் ரெட்டியாம்.''”

rang

Advertisment

"பா.ஜ.க. ஆதரவு யு-டியூபரான மாரிதாஸே அமர்பிரசாத் ரெட்டி ஒரு ’ஃபோர் டுவென்ட்டி பேர்வழின்னு அண்மையில் வீடியோவில் பரபரப்பா புகார்களைச் சொல்லியிருக்காரே?''”

"அந்த அமர்பிரசாத் ரெட்டியோடு கைகோத்துக்கிட்டுதான், இப்படி ஒரு திட்டத்தை அண்ணாமலை நடத்துகிறாராம். கட்சியின்

"ஹலோ தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது ஒரு மெஹா மோசடிப் புகார் கிளம்புது.''”

Advertisment

"ஆமாம்பா, மரம் நடும் திட்டம் என்கிற பெயரில் அண்ணாமலை கலெக்ஷனுக்கு ரூட் போடறார்னு செய்தி வருதே?''”

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை, தனது கட்சியின் லேபிளைப் பயன்படுத்தி, ரூபாய் 100 கோடிக்கும் மேல் மெஹா வசூல் நடத்த திட்டமிட்டிருக்கிறார்னு கமலாலயத் தரப்பிலேயே பேச்சு அடிபடுது. கிழக்குக் கடற்கரைச் சாலையில், பத்து லட்சம் மரக்கன்றுகளை தனது சுவாசம் அறக்கட்டளை மூலம் அவர் நடப் போவதாகவும், அந்தத் திட்டத்தின் படி, ஒருவர் பெயரில் ஒரு மரம் வளர்க்க, அவர்களிடம் தலா ரூபாய் ஒரு லட்சம் வீதம் வசூலித்து வருவதாகவும் சொல்கிறார்கள். மரம் நடும் அந்த கோல்மால் அமைப்பிற்கு அண்ணாமலையின் மனைவி அகிலாதான் தலைவராம். அந்த அறக் கட்டளையின் செயலாளர் தொடர்ந்து மோசடி சர்ச்சைகளில் சிக்கிவரும் மற்றொரு பா.ஜ.க. பிரமுகரான அமர்பிரசாத் ரெட்டியாம்.''”

rang

Advertisment

"பா.ஜ.க. ஆதரவு யு-டியூபரான மாரிதாஸே அமர்பிரசாத் ரெட்டி ஒரு ’ஃபோர் டுவென்ட்டி பேர்வழின்னு அண்மையில் வீடியோவில் பரபரப்பா புகார்களைச் சொல்லியிருக்காரே?''”

"அந்த அமர்பிரசாத் ரெட்டியோடு கைகோத்துக்கிட்டுதான், இப்படி ஒரு திட்டத்தை அண்ணாமலை நடத்துகிறாராம். கட்சியின் தேசியத் தலைமையின் உத்தரவால் கர்நாடக தேர்தல் வேலைக்காகச் செல்ல இருக்கும் அண்ணாமலை, அங்கே போவதற்குள் முடிந்தவரை கலெக்ஷனை முடித்துக்கொண்டு போய்விட வேண்டும் என்று முனைப்புடன் செயல்படுகிறாராம். அமர்பிரசாத்தோடு சேர்ந்து, அண்ணாமலை தொடங்கியிருக்கும் இந்த மெஹா மோசடித் திட்டத்தைக் கண்டு கொதித்துப்போன கட்சியின் சீனியர்கள், அவர் மீது டெல்லிக்குப் புகார்களை அனுப்பிவருகிறார்களாம். கூடவே அமர்பிரசாத் எப்படியெல்லாம் கடந்த காலங்களில் போர்ஜரி பண்ணி வாழ்ந்தார் என்றும், அவர் எப்படி எல்லாம் அரசியலை வைத்துப் பிழைக்கிறார் என்றும் ஆதாரத் தோடு, மாரிதாஸ் தோலுரிக்கும் வீடியோ ஆதாரத்தை அவர்கள் டெல்லிக்கு அனுப்பத் தவறவில்லை.''”

"இடைத்தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கு?''”

"ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரான காங்கிரஸ் இளங்கோவனை வெற்றிபெற வைக்க தி.மு.க. அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு பெரும் உ.பி.க்கள் படையே ஓடியாடிக்கிட்டு இருக்குது. காங்கிரசின் வெற்றிக்காக களப்பணியில் ஜரூர் காட்டும் அமைச்சர்களுக்கு ஒரு வருத்தமும் இருக்குதாம். அதாவது, காங்கிரசுக்காக நாம் போராடிக்கிட்டு இருக்கோம். ஆனால், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, தங்கள் கட்சியின் தேர்தல் வெற்றியில் கொஞ்சமும் அக்கறை காட்டலையேன்னு நினைக் கிறாங்களாம். ஒரே ஒருமுறை ஈரோட்டுக்கு வந்து இளங்கோவனைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆன அழகிரி, அதுக்கப்புறம் பெருசா எதையும் செய்யலை என்கிறார்கள். அதனால் கூட்டணிக்காக அவர்களை நாமே முழுக்க முழுக்கத் தூக்கிச் சுமக்கவேண்டி இருக்குதேங்கிற ஆதங்கம் ஒட்டுமொத்த தி.மு.க. தரப்புக்கும் இருக்குது. தங்கள் தரப்பினர் மீதான இதே வருத்தம் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவ னுக்கும் இருக்குதாம்.''”

"எதிர்த்தரப்புக்கு அங்கே இலைச் சின்னம் கிடைச்சிருக்கே?''”

rr

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. சொன்னபடி ஓ.பி.எஸ். தரப்பு போட்டியில் இருந்து ஒதுங்கியதால், எடப்பாடித் தரப்பு வேட்பாளரான தென்னரசுக்கு, இரட்டை இலைச் சின்னம் கிடைச்சிருக்கு. இதையே தங்களின் பலமாக நினைக்குது எடப்பாடி தரப்பு. தங்கள் கூட் டணியின் அசுர பலத்தோடு போட்டியிடுவதால், காங்கிரஸ் இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று என அறிவாலயம் நினைத்திருந்த நிலையில், இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கு கிடைத்திருப்பதால் போட்டி கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும்னு கட்சியின் சீனியர்களே ஸ்டாலினிடம் சொன்னார்களாம்.''”

"எதனால் அப்படியாம்?''”

"இதே கேள்வியைத்தான் ஸ்டாலினும் கட்சி சீனியர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள், உதயசூரியனும் இரட்டை இலையும் போட்டியிட்டால் இலையை நாம் எளிதாக ஜெயித்துவிடலாம். ஆனால், இலையை எதிர்த்து போட்டி யிடுவது சூரியன் இல்லை. காங் கிரஸின் கை சின்னம். அதோடு அங்கே காங்கிர ஸுக்கு நல்ல பெயர் இல்லை. போதாக் குறைக்கு ஈ.வி. கே.எஸ்.ஸின் பழையை சர்ச் சைக்குரிய தடாலடி பேச்சுக்களை எல்லாம் எதிர்த் தரப்பினர் தொகுதி முழுக்கப் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்னு பலவித நிலவரங்களையும் சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்ட ஸ்டாலின், நமக்குக் கூட்டணி பலம் அதிகம். அதோடு நம் ஆட்சியின் சாதனைகள் மக்களிடம் போய்ச் சேர்ந்திருக்கின்றன. அதனால், பதிவாகும் வாக்குகளில் 70 சதவீத வாக்குகளை நம் கூட்டணி பெறும்னு தெம்பாகவே சொல்லியிருக்கிறார். எனினும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அங்கே காங்கிரஸ் கரையேறும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணிக்கிறார்கள்.''”

"தேர்தல் போட்டியில் இருந்து தினகரனின் அ.ம.மு.க.வை விலக வைத்தவர் எடப்பாடிதான் என்று தகவல் வருதே?''”

rr

"இந்த இடைத்தேர்தலைப் பொறுத்த வரை, தி.மு.க. கூட்டணிக்கும் அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே நேரடிப் போட்டி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் எடப்பாடி. தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகள் எந்த வகையிலும் பிரிஞ்சிடக்கூடாது என்பதுதான் அவருடைய ஒரே நோக்கம். அதனால் டெல்லி லாபியைப் பயன் படுத்தி இரட்டை இலை சின்னத்தைப் பெற்றதுடன், பா.ஜ.க.. மூலம் பிரஷர் கொடுத்து, ஓ.பி.எஸ். தரப்பையும் ரேஸில் இருந்து ஓரம் கட்ட வைத்தார் எடப்பாடி. இதே பாணியில் தினகரன் தரப்பையும் ஓரம் கட்ட நினைத்த அவர், அழுத்தம் கொடுத்ததால்தான் தினகரனையும் போட்டியில் இருந்து ஒதுங்கச் சொன்னது பா.ஜ.க. தினகரனோ, எந்தக் காரணத்தைக் காட்டி நாங்கள் இடையில் விலகுவது என்று கேட்க, அதன்பிறகே "குக்கர் சின்னத்தை கட் பண்ணுகிறோம். அதையே காரணம் காட்டுங்கள்' என்று அவருக்கு சொல்லப்பட்டதாம். இதன்பின் தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் கிடைக்காத படி காய் நகர்த்தப்படிருக்கிறது. இப்படியாக, தன் பங்காளிகளை எல்லாம் ஆட்டத்தில் இருந்து ஓரம்கட்டிவிட்டார் கில்லாடிப் பேர்வழியான எடப்பாடி.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். முதல்வர் அலுவலகத்தில் பா.ஜ.க. குடும் பத்தைச் சேர்ந்த பரத்குமாரை உதவி மக்கள்தொடர்பு அலுவலராக நியமித்தது குறித்து, கடந்த முறை நாம் பேசிக்கிட்டோம். இந்த நிலையில், முதல்வர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்ட அந்த பரத்குமாரை அங்கிருந்து நகர்த்தி, சென்னையில் உள்ள தமிழரசு பத்திரிகை அலுவலகத்தில் உட்கார வைத்துவிட்டது செய்தித்துறை. இன்னும் செய்தித்துறையில் என்னென்ன முறைகேடுகள், குழறுபடிகள் நடந்திருக்கிறது என்பதை யெல்லாம் இப்போது பட்டிய லிட்டு வருகிறார்கள். இவற்றை எல்லாம் விரைவில் சரிசெய் யப் போகிறதாம் அரசு.''

nkn110223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe