அண்ணா பல் கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட் டில் மோசடி நடந்ததாக விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில்... "கடந்த 2018 விடைத்தாள் களை அழித்துவிட வேண்டும்' என்ற கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் புதிய அறி விப்பு சர்ச்சையை உண் டாக்கியிருக்கிறது. "புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் மகன் அதிக மதிப்பெண் பெற்ற விடைத் தாள்களை அழிக்கவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்' என்று அண்ணா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத் தின் புகார் கடிதத்திலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் கிளம்பியதால், விசாரிக்க ஆரம்பித்தோம்.…
""கடந்த 2016-17-ஆம் ஆண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் வழங்கியதாகவும் இதில் கோடிக்கணக் கில் மோசடியில் ஈடுபட்ட தாகவும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உட்பட 10-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தது. சீனிவாசலு, புகழேந்தி, செல்வமணி, குலோத்துங் கன் உள
அண்ணா பல் கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட் டில் மோசடி நடந்ததாக விசாரணை தொடர்ந்து கொண்டிருக்கும் சூழலில்... "கடந்த 2018 விடைத்தாள் களை அழித்துவிட வேண்டும்' என்ற கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் புதிய அறி விப்பு சர்ச்சையை உண் டாக்கியிருக்கிறது. "புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரின் மகன் அதிக மதிப்பெண் பெற்ற விடைத் தாள்களை அழிக்கவே இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்' என்று அண்ணா பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கத் தின் புகார் கடிதத்திலேயே இந்தக் குற்றச்சாட்டுகள் கிளம்பியதால், விசாரிக்க ஆரம்பித்தோம்.…
""கடந்த 2016-17-ஆம் ஆண்டு விடைத்தாள் மறுமதிப்பீட்டில் லஞ்சம் வாங்கிக்கொண்டு அதிக மதிப்பெண் வழங்கியதாகவும் இதில் கோடிக்கணக் கில் மோசடியில் ஈடுபட்ட தாகவும் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் உமா உட்பட 10-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவந்தது. சீனிவாசலு, புகழேந்தி, செல்வமணி, குலோத்துங் கன் உள்ளிட்ட பல பேரா சிரியர்கள் இன்னமும் துறைரீதியான விசாரணை களை எதிர்கொண்டிருக்கும் சூழலில் 2018-ஆம் ஆண்டு விடைத்தாள்களை அழிக்கவேண்டும் என்ற அண்ணா பல்கலைக்கழக கூடுதல் தேர்வுக் கட்டுப்பாட்டு (ஏ.சி.ஓ.இ.) அலுவலர் சஞ்சீவியின் அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சி.இ.ஜி. காம்பஸ் எனப்படும் கிண்டி சென்னை பொறியியல் கல்லூரி, குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி., ஏ.சி.டெக் எனப்படும் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் அண்ட் ப்ளானிங் உள்ளிட்ட நான்கு மையங்களுக்குள் படிக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக ஏ.சி.ஓ.இ.தான் தேர்வு நடத்துகிறது. 2016-17 விடைத்தாள் கள் திருத்துவதில் மோசடி நடந்திருப்பதாக 2019-ஆம் ஆண்டில் விசா ரணை நடந்துகொண்டிருக்கும்போது 2018 நவம்பர், டிசம்பர் விடைத்தாள் களை அழிக்கவேண்டிய அவசியம்; அவசரம் என்ன'' என்கிறவர்கள், அதற்கான பின்னணிக் காரணத்தையும் விவரிக்கிறார்கள். ""ஒட்டுமொத்த அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக (சி.இ.ஓ) இருப்பவர் வெங்கடேசன். அவரது மகன் 2019-ஆம் ஆண்டில் குரோம்பேட்டை எம்.ஐ.டி.யில் பி.இ. படித்தார். இவர் சேரும்போது அப்பா வெங்கடேசன் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இல்லை, கணிதப் பேராசிரியராகத்தான் இருந்தார்.
2019 ஏப்ரலில் இவரது மகன் பி.இ. முடித்தார். சி.இ.ஓ. அதிகாரத்தை பயன் படுத்தி மகன் படித்த 62 பாடப் பிரிவு களில் 29 பாடப் பிரிவுகளில் "ஓ'’ கிரேடு வாங்கியுள்ளார். பெரும்பாலும் ஏ+ மற்றும் ஏ கிரேடு வாங்கியுள்ளார். அதாவது, ஓ, ஏ+, ஏ, பி+, பி உள்ளிட்ட கிரேடுகளில் ‘"ஓ'’ கிரேடுதான் இருப்பதி லேயே ஹையஸ்ட் கிரேடு'' என்றவர் களிடம், ""அவர், நன்றாகப் படித்துகூட ‘"ஓ'’ கிரேடு வாங்கியிருக்கலாமே?'' என்று நாம் கேட்டபோது... “2015-ஆம் வருடம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த வெங்கடேசன் மகனின் கட் ஆஃப் மார்க் 196.25தான்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் படிப்பில் சேரவேண்டும் என்றால் 200-க்கு 200 செண்ட மாகவோ, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்களோ எடுத்திருக்கவேண்டும். அந்தளவுக்குப் படிக்காததால் எம்.ஐ.டி.யில் சேர்ந்தார். அதனால் அவரது அப்பா, தனது பதவியைப் பயன்படுத்தி மகனுக்கு அதிக மதிப்பெண் கொடுத்துவிட்டார். அதனால்தான், அவரது மகனின் விடைத்தாள் களை எடுத்துப் பார்த்து ரீ வேல்யூஷன் செய்யவேண்டும் என்று சஸ்பெண்ட் ஆகி விசாரணையில் இருக்கும் பேராசிரியர்கள் உட்பட சர்ச்சையை கிளப்புகிறார்கள். இந்தச்சூழலில்தான், தனது கட்டுப்பாட்டில் இருக்கும் ஏ.சி.ஓ.இ. சஞ்சீவி மூலம் அனைத்து விடைத்தாள்களையும் அழிக்கிறார் சி.இ.ஓ. வெங்கடேசன்'' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சக்திநாதனைத் தொடர்புகொண்ட போது... ""நாங்கள்தான் புகார் அனுப்பினோமா என்று பல்கலைக்கழக பதிவாளர் கருணாமூர்த்தியும் கேட்டார். நாங்கள் அப்படியொரு புகாரை அனுப்பவே இல்லை என்று சொன்னேன். எங்கள் சங்கத்தின் பெயரைப் பயன் படுத்தி யாரோ அப்படியொரு கடிதத்தை அனுப்பி யிருக்கிறார்கள். எங்களுக்கும் அந்த புகார் கடிதத்திற்கும் எந்த ஒரு தொடர்புமில்லை'' என்று மறுத்தார்.
குற்றச்சாட்டு குறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கடேசனை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, ""எனது மகன் உட்பட அத்தனைபேரின் விடைத்தாள்களும் அப்ப டியேதான் இருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து பார்த்து ஆய்வு செய்துகொள்ளலாம். முறைகேடாக செயல்பட்ட பலர் மீது நான் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளேன். அதனால், பொய்யான புகார்களையும் வதந்திகளையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒவ்வொரு வருடமும் வழக்கமாக அனுப்பப்படும் சுற்றறிக்கைதான். சர்ச்சைக்குள்ளானதால் எந்த விடைத் தாளையும் அழிக்கக்கூடாது என்று சொல்லிவிட்டோம்'' என்றார் விளக்கமாக.
நாம் மேலும் விசாரித்தபோது, “தேர்வுக்கட்டுப் பாட்டு அலுவலர் வெங்கடேசனின் மகன் மட்டுமல்ல, அவரது மகளும் நன்றாக படிக்கக்கூடியவர். 200-க்கு 117 கட் ஆஃப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் எல்லாம் ஃபவுண்டர் கோட்டாவில் சேர்ந்திருக்கிறார்கள். ஏற் கனவே, புகாருக்குள்ளான தேர்வுக் கட்டுப் பாட்டு அலுவலர் உமா உள்ளிட்ட பேராசிரியர்கள் தரப்புக்கும் தற்போ தைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலு வலர் வெங்கடேசனுக்குமான மோதல் பல்வேறு வழிகளில் வெளிப்படுகிறது.
இதுகுறித்த முழுமையான உண்மைகள் ஆராயப்படவேண்டும்.
-மனோசௌந்தர்