அண்ணா பல்கலைக்கழகமும் ஊழல்களும் பிரிக்க முடியாதவை. அதில் லேட்டஸ்ட், வேலை வாய்ப்பு மோசடி. அண்ணா பல்கலைக்கழகம், தமிழக மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி போலி நியமன ஆணைகளை வழங்கியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார் விஸ்வா. அதேநேரத்தில், இந்த மோசடிக்கு மூல காரணமாக இருந்துள்ள பார்த்தசாரதியை கைது செய்யவிடாமல் அவரை உயரதிகாரிகள் பாதுகாப்பதாக பல்கலைக்கழக வளாகத்தில் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ""அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.ஓ. வேலை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பதாகச் சொல்லி 2017 ஆகஸ்ட் மாதம் புரோக்கர்கள் சிலர் எங்களை அணுகினார்கள். வேலைக்கு உத்தரவாதம் எனில் பணம் கொடுக்கிறோம் என்றோம். சரி என ஒத்துக்கொண்ட புரோக்கர்கள், எங்களை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் விஸ்வா என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரோ, "என் அப்பா பார்த்தசாரதிதான் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் (டெபுடி ரெஜிஸ்தரர்). இண்டர்வியூ நடத்தி வேலை நியமன உத்தரவில் கையெழுத்துப் போடுபவரே அவர்தான். அதனால் நீங்கள் நம்பிக்கையாக பணம் கொடுக்கலாம்' என அழகாகப் பேசினார்.
எங்களுக்கு நம்பிக்கை வந்தது. பார்த்தசாரதி டெபுடி ரெஜிஸ்ட்ராரா என்பதையும் உறுதி செய்துகொண்டோம். இண்டர்வியூக்கு ஏற்பாடு செய்தார்கள். பல்கலையில் தனக்கான அறையில் பார்த்த சாரதிதான் இண்டர் வியூவை நடத்தினார். அதேபோல மின்சார வாரியத்திலும் ஒரு அறையில் இண்டர் வியூ நடத்
அண்ணா பல்கலைக்கழகமும் ஊழல்களும் பிரிக்க முடியாதவை. அதில் லேட்டஸ்ட், வேலை வாய்ப்பு மோசடி. அண்ணா பல்கலைக்கழகம், தமிழக மின்சார வாரியம், பொதுப்பணித்துறை ஆகியவற்றில் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி போலி நியமன ஆணைகளை வழங்கியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட புகாரில் அதிரடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார் விஸ்வா. அதேநேரத்தில், இந்த மோசடிக்கு மூல காரணமாக இருந்துள்ள பார்த்தசாரதியை கைது செய்யவிடாமல் அவரை உயரதிகாரிகள் பாதுகாப்பதாக பல்கலைக்கழக வளாகத்தில் குற்றச்சாட்டுகள் எதிரொலிக்கின்றன.
பாதிக்கப்பட்டவர்கள் சிலரிடம் நாம் பேசிய போது, ""அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.ஓ. வேலை, பொதுப்பணித்துறை மற்றும் மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பதாகச் சொல்லி 2017 ஆகஸ்ட் மாதம் புரோக்கர்கள் சிலர் எங்களை அணுகினார்கள். வேலைக்கு உத்தரவாதம் எனில் பணம் கொடுக்கிறோம் என்றோம். சரி என ஒத்துக்கொண்ட புரோக்கர்கள், எங்களை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் விஸ்வா என்பவரிடம் அழைத்துச் சென்றார்கள். அவரோ, "என் அப்பா பார்த்தசாரதிதான் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை பதிவாளர் (டெபுடி ரெஜிஸ்தரர்). இண்டர்வியூ நடத்தி வேலை நியமன உத்தரவில் கையெழுத்துப் போடுபவரே அவர்தான். அதனால் நீங்கள் நம்பிக்கையாக பணம் கொடுக்கலாம்' என அழகாகப் பேசினார்.
எங்களுக்கு நம்பிக்கை வந்தது. பார்த்தசாரதி டெபுடி ரெஜிஸ்ட்ராரா என்பதையும் உறுதி செய்துகொண்டோம். இண்டர்வியூக்கு ஏற்பாடு செய்தார்கள். பல்கலையில் தனக்கான அறையில் பார்த்த சாரதிதான் இண்டர் வியூவை நடத்தினார். அதேபோல மின்சார வாரியத்திலும் ஒரு அறையில் இண்டர் வியூ நடத்தினார் பார்த்தசாரதி. இண்டர் வியூ முடிந்ததும், "என் மகன் விஸ்வா உங்களை சந்திப்பார்' என சொல்லி அனுப்பினார்..
அதன்படி விஸ்வா எங்களை தனித்தனியாக சந்தித்து, போட்டி அதிகம் என்பதால் முதலில் பணம் கொடுப்பவர் களுக்கு முன்னுரிமை. பணம் கொடுத்ததும் ஆர் டர் கையில் கொடுக்கப் படும் என்றதும் நம்பினோம். அரசு வேலை என்பதால் விஸ்வா சொன்ன தொகையை கொடுக்க சம்மதித்தோம். வேலையின் தன்மையை பொறுத்து 4 லட்ச ரூபாய் முதல் 20 லட்சம் வரை கொடுத்தோம். மொத்த தொகையையும் புரோக் கர்கள் எங்களிடம் வசூலித்து எங்களை வைத்துக் கொண்டே விஸ்வாவிடம் தந்தனர். பணம் கொடுத்தும் ஆர்டர் கொடுக்காததால், விஸ்வாவை யும் பார்த்தசாரதியையும் சந்தித்து சத்தம் போட்டோம். அதன்பிறகே பணி நியமன ஆர்டர் எங்களுக்கு தரப்பட்டது.
அந்த ஆணையுடன் மின்சார வாரியத்திலும் பொதுப்பணித்துறையிலும் வேலையில் ஜாய்ண்ட் பண்ண சென்றபோது, "இப்படி ஒரு இண்டர்வியூ நடத்தப்படவில்லை. இந்த நியமன ஆர்டர் போலியானது' என உயரதிகாரிகள் கூறிவிட்டனர். நாங்கள், புரோக்கர்களிடம் தகராறு செய்த போது, "துறைகளில் காலியிடம் பற்றி இன்னும் அரசு அறிவிக்கவில்லை. அறிவித்தபிறகுதான் உங்களை அதில் எடுத்துக் கொள்வார்கள். அரசாங்கத்தில் பார்த்தசாரதிக்கு நிறைய செல்வாக்கு உண்டு. அதனால் உங்களுக்கு வேலை நிச்சயம். வேலையில் சேரும் போது புதிய ஆர்டர் தருவார்கள்' என்றார். விஸ்வாவும் இதையே சொன்னார். நம்பியாக வேண்டிய சூழல் ஏற்பட்டது.
காலி பணியிட அறிவிப்பு வந்தபோதும், எங்களுக்கு வேலை கிடைக்கவில்லை. அதன் பிறகே முழு மோசடியையும் உணர்ந்தோம். விஸ்வாவையும் பார்த்தசாரதியையும் சந்திக்கவே முடியவில்லை. புரோக்கர்களும் இழுத்தடித்த தால், எங்களில் சிலர் போலீஸில் புகார் கொடுத்தனர். புகார் கொடுத்தவர்களில், இரண்டு புரோக்கர்களும் இருக்கிறார்கள். இருந்தும், விஸ்வாவை மட்டும் கைது செய்துவிட்டு, உச்சத்தில் இருக்கும் பார்த்தசாரதியை கைது செய்யாமல் பாதுகாக்கிறார்கள்'' என்று விவரித்தனர் ஏமாந்தவர்கள்.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொடுக்கப்பட்ட புகாரின் மீது விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், பார்த்தசாரதி மற்றும் அவரது மகன் விஸ்வா மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்திருக்கிறார். போலீஸ் விசாரணையில், விஸ்வாவும் தன் அப்பா தொடர்பான உண் மைகளைச் சொல்லியிருக்கிறார். ஆனால், உயர்கல்வித்துறையிலும் காவல்துறையிலும் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்து வருகிறார் பார்த்தசாரதி.
இது குறித்து மத்திய குற்றப்பிரிவு வட்டாரங்களில் விசாரித்த போது, ""அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.ஓ. பதவிக்கு 15 லட்சம், மின்சாரவாரியத்தில் உதவிப் பொறியாளர் பதவிக்கு 10 லட்சம், இளநிலை பொறியாளர் பதவிக்கு 8 லட்சம், ஆசிரியர் பணிக்கு 10 லட்சம் என தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 5 கோடி வரை பணம் வசூலித்து மோசடி செய்து போலி நியமன ஆர்டர் கொடுத்திருக்கிறார் பார்த்தசாரதி.
விஸ்வாவின் புரோக்கர்களாக ஈரோடு வள்ளி இளங்கோ, இளங்கோவன், சென்னை பெரம்பூர் ராஜூ, சென்னை அண்ணா நகர் ராஜபாண்டி, சூலைபுதூர் ராமசாமி, வேலூர் ரவீந்திரராஜா, மதுரை ஆறுமுகம் ஆகியோர் பணம் வசூலித்துள்ளனர். இவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து மின்சார வாரியத்தில் வேலைக்காக ஈரோடு மரகதவள்ளி, கார்த்தி, தமிழ்ச்செல்வன், சரவணகுமார், கவிதாஞ்சலி, பிரேமா, சென்னிமலை மயில்சாமி, திருப்பூர் சிவ.பிரகாஷ், பிரபு, தாராபுரம் கோமதி, எடப்பாடி பூங்கொடி, அரச்சலூர் ஜெகதீஸ், அண்ணா பல்கலைக்கழக பி.ஆர்.ஓ. பணிக்காக சென்னிமலை பழனிநேரு, மோகன், சம்பத்குமார், பெருந்துறை பிரவீன்குமார், டெக்னிக்கல் அசிஸ்டெண்ட் பதவிக்காக ஈரோடு சத்தியமூர்த்தி, திருப்பூர் திலீபன், சிவக்குமார், கமலக்கண்ணன், புவியரசு, ரகுபதி, விழுப்புரம் மணிமாறன், பொதுப்பணித்துறை வேலைக்காக ஈரோடு கிருஷ்ணவேணி, சதீஷ்குமார், ஆனந்த்குமார், லோகராஜ், விஜய்குமார் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஏமாந்துள்ளனர்.
அக்டோபர் 2017 முதல் டிசம்பர் 2018 வரை வெவ்வேறு காலகட்டங் களில் விஸ்வேஸ்வரரின் ஹெச்.டி. எஃப்.சி (அக்கவுண்ட் எண் : 50100013237939), இண்டஸ் பேங்க் (3 அக்கவுண்ட் எண்: 25006253399, 201000326413, 158892603155) வங்கிகளில் பணம் போட்டுள்ளனர். பார்த்த சாரதியின் வீட்டிலிருந்து லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென் ட்ரைவ், சில டாகுமெண்ட் ஆகியவை கைப்பற்றப் பட்டுள்ளன. இந்த மோசடியில் பார்த்தசாரதிக்கு தொடர்பு இருந்தும் உயரதிகாரிகளின் உத்தரவால் அவரை மத்திய குற்றப்பிரிவினரால் நெருங்க முடியவில்லை'' என்கின்றனர் மத்திய குற்றப்பிரிவு போலீஸார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் விசா ரித்தபோது, ""மெயின் பிராஞ்சில் துணை பதிவாளராக இருந்த பார்த்தசாரதி, கடந்த 6 மாதத்திற்கு முன்புதான் எம்.ஐ.டி.யின் துணை பதிவாளராக ட்ரான்ஸ்ஃபரில் நியமிக்கப் பட்டிருக்கிறார். அண்ணா பல்கலைக் கழகத்தின் மெயின் பிராஞ்சில் இவர் இருந்தபோதுதான் அவரது அறையில் வைத்தே போலி இண்டர்வியூ நடத் தப்பட்டிருக்கிறது. வேலை நியமனம் ஒரிஜினல் ஆர்டரில் கையெழுத்து போடும் அதிகாரம் இவருக்கு இருக்கிறது. அதனை பயன் படுத்தித்தான் இவரது கையெழுத்துடன் போலி நியமன ஆர்டர் இஷ்யூ செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இவர் மீது பண கையாடல் புகார் இருக்கிறது. அதில் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்களாக விஷ்வநாதன், ராஜாராம் இருந்த காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் இவர் மீதும், பதிவாளராக இருந்த கணேசன் மீதும் குற்றச்சாட்டுகள் உண்டு. ஆனால், மேலிட செல்வாக்கால் இவர்கள் தப்பித்தனர். ராஜாராமுக்கு பிறகு கிட்டத் தட்ட 1 வருட காலம் துணைவேந்தர் இல்லாமல் பல்கலைக்கழகம் இயங்கிய போதுதான் பார்த்தசாரதி போன்றோர் போலி நியமன ஆர்டர் உட்பட பல்வேறு தில்லாலங்கடி வேலைகளில் ஈடுபட்டனர்.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இவரது போலி நியமன ஆர்டரை வைத்து பலர் வேலையில் சேர்ந்திருப்பதாக தற்போது சந்தேகம் எழுந்துள்ளது. பார்த்தசாரதியின் கையெழுத்துடன் உள்ள ஆர்டரை பார்த்தால் பல்கலைக்கழகத்தின் டீன் பொறுப்பில் இருப்பவர்கள் எந்த சந்தேகமும் படாமல் வேலையில் அவர்களை சேர்த்துக்கொள்வார்கள். அதனால், துணை வேந்தராக சூரப்பா வருவதற்கு முன்பு வரை பார்த்தசாரதியின் கையெழுத்துடன் இருக்கும் வேலை நியமன ஆர்டரை பரிசோதித்தால் நீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி போல, போலி வேலை நியமன மோசடியும் பல பூகம்பத்தை கிளப்பக்கூடும்'' என்கிறது பேராசிரியர்கள் வட்டாரம்.
இது குறித்து பார்த்தசாரதியின் கருத்தறிய அவரது மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டபோது, ஸ்விட்ச் ஆஃப் கண்டிஷனிலேயே இருந்தது அவரது எண்! உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு இந்த மோசடி விவகாரம் தெரியும். அவர் ஏனோ அக்கறை காட்டவில்லை. சூரப்பாவின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப் பட்டிருக்கிறது. சாட்டையை அவர் எடுப்பாரா?
-இரா.இளையசெல்வன்