ஊர் ஊராகப் பரப்புரை சென்று மக்களை சந்திக்கும் கமல், வார இறுதி நாட்களில் வீடு வீடாக டி.வியில் மக்களை சந்திக்கிறார். 2020 அக்டோ பர் 04-ஆம் தேதி ஆரம்பமான பிக்பாஸ்-4, நிறைவு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜய் டி.வி. குறித்த வில் லங்க சென்டி மெண்டுகளும் வெளி வர ஆரம்பித்து டி.வி.மற்றும் சினிமா பிரபலங்களை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த சேனலின் ஹிட் சீரியலான ‘"பாண்டியன் ஸ்டோர்ஸ்'’முல்லை சித்ராவின் சமீபத்திய (தற்)கொலைக்குப் பின் வில்லங்க சென்டிமெண்டால் ரொம்பவே வெடவெடத்துக் கிடக்கிறார்கள். பழைய வில்லங்க விவகாரங்களையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
""தனது தனித்துவமான ஸ்டைலால், “"காபி வித் டிடி'’ புரோக்ராமை ஹிட்டாக்கியவர் டிடி என அறியப்பட்ட திவ்யதர்ஷினி. பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்றதால் விஜய் டிவியின் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறியது. புரோகிராம் மூலம் நடிகர் தனு
ஊர் ஊராகப் பரப்புரை சென்று மக்களை சந்திக்கும் கமல், வார இறுதி நாட்களில் வீடு வீடாக டி.வியில் மக்களை சந்திக்கிறார். 2020 அக்டோ பர் 04-ஆம் தேதி ஆரம்பமான பிக்பாஸ்-4, நிறைவு கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் விஜய் டி.வி. குறித்த வில் லங்க சென்டி மெண்டுகளும் வெளி வர ஆரம்பித்து டி.வி.மற்றும் சினிமா பிரபலங்களை மிரள வைத்துக் கொண்டிருக்கிறது.
அந்த சேனலின் ஹிட் சீரியலான ‘"பாண்டியன் ஸ்டோர்ஸ்'’முல்லை சித்ராவின் சமீபத்திய (தற்)கொலைக்குப் பின் வில்லங்க சென்டிமெண்டால் ரொம்பவே வெடவெடத்துக் கிடக்கிறார்கள். பழைய வில்லங்க விவகாரங்களையும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
""தனது தனித்துவமான ஸ்டைலால், “"காபி வித் டிடி'’ புரோக்ராமை ஹிட்டாக்கியவர் டிடி என அறியப்பட்ட திவ்யதர்ஷினி. பிரபலங்கள் பலரும் இதில் பங்கேற்றதால் விஜய் டிவியின் டி.ஆர்.பி. ரேட்டிங் எகிறியது. புரோகிராம் மூலம் நடிகர் தனுஷின் ஃப்ரண்ட்ஷிப் கிடைத்ததால் தனுஷ் தயாரித்து டைரக்ட் பண்ணிய ‘"பவர் பாண்டி'’ படத்தில் ரேவதிக்கு மகளாக நடித்தார் டிடி. அதன் பின் முழுக்க முழுக்க சினிமாவின் பக்கம் கவனத்தைத் திருப்பிய டிடி, ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் டி.வி., சினிமா சார்ந்த வாழ்க்கை முறை நீடிக்க, ஒன்றரை வருடத்திலேயே டிடியை விவாகரத்து செய்தார் ஸ்ரீகாந்த். இப்போது ஃப்ரீபேர்டாகிவிட்ட டிடி, சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்'' என்றார், சேனலின் பழைய நிர்வாகி ஒருவர்.
"" "கலக்கப் போவது யாரு?'’ "நம்ம வீட்டுக் கல்யாணம்'’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விஜய் டி.வி. ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் வி.ஜே. ரம்யா. இவருக்கும் அபராஜிதன் என்பவருக்கும் 2014-ல் கல்யாணம் ஆகி, ஒரே வருசத்துல டைவர்ஸ் ஆகிருச்சு. அதே "கலக்கப் போவது யாரு?' நிகழ்ச்சியில் வின்னராக வந்த கே.பி.ஒய்.நவீன் என்பவர், திவ்யா என்பவரை கல்யாணம் பண்ணி பத்து வருசம் குடும்பம் நடத்தினார். விஜய் டி.வி.மூலம் புகழடைந்ததும் மலேசியாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ய முயற்சி பண்ணினார். திவ்யா கொடுத்த கம்ப்ளெய்ண்டால் திருமணம் தடைபட்டு, ஜெயிலுக்குப் போனார் நவீன். ஜெயிலிலிருந்து வந்ததும் கிருஷ்ணகுமாரியை கல்யாணம் பண்ணி திவ்யாவை திராட்டில்விட்டார் நவீன்''’என சொல்லிக்கொண்டே வந்தவர், அடுத்த சப்ஜெக்ட் பக்கம் சென்றார்.
""லேட்டஸ்டா முல்லை சித்ரா தற்கொலை கேஸ்ல பேர் அடிபட்டுச்சே அந்த ரக்ஷனும் ஜாக்குலினும்தான் ‘"கலக்கப் போவது யாரு?'’நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். ரக்ஷனுக்காக தாராளமாக செலவு செய்தார் ஜாக்குலின். திடீர்னு முல்லைக் கொடி பரவ... அப்செட்டான ஜாக்குலின், சீரியலில் கவனம் செலுத்தியதுடன், நயன்தாராவின் ‘"கோலமாவு கோகிலா'’ சினிமாவிலும் நடித்து முடித்து, இரண்டு திரையிலும் பிஸியாகிவிட்டார்.
இந்த வில்லங்க சென்ட்டிமெண்ட், "பிக்பாஸ்' நிகழ்ச்சி பங்கேற்பாளர்களிடமும் தொடர்ந்ததுடன், இமேஜ் டேமேஜூம் ஏற்பட்டது. வனிதா விஜயகுமாருக்கு கல்யாணம், டைவர்ஸ், கல்யாணம், சர்ச்சைன்னு பழகிப் போயிருச்சு. ஆனா சிவனேன்னு இருந்த டைரக்டர் சேரன் சில தேவைகளுக்கு ஆசைப்பட்டு, பிக்பாஸ் வீட்டுக்குள் போய், மீராமிதுனெல்லாம் படுமோசமாக பேசும் அளவுக்கு ஆளானார். ’’"சேராத இடத்தில் சேர்ந்த சேரா, பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியே வா'’’ என டைரக்டர்கள் லிங்குசாமியும் அமீரும் குரல் கொடுக்கும் அளவுக்குப் போனது. அதேபோல் காமெடி நடிகை மதுமிதா, தனது கையை பிளேடால் கிழித்துக் கொள்ளும் அளவுக்கு கொடூரமானது. "பிக்பாஸ் என்பது ஒரு சமூக விரோத நிகழ்ச்சி' என்றார் நடிகை கஸ்தூரி''’என்பதையும் சொன்னார்.
சினிமா பி.ஆர்.ஓ. குமரசேன் பார்வை மாறுபடுகிறது. “""சின்னச் சின்ன கேரக்டர்களில் நடித்த நடிகையான ரித்விகா, "பிக்பாஸ்-2'வில் வின்னராகி 50 லட்சம் ரொக்கம் வென்றாரென் றால், அவரது புத்திசாலித்தனத்தால்தானே. கமல். "பிக்பாஸ்' முதல் சீசனுக்குப் பிறகுதான் "மக்கள் நீதி மய்யம்' கட்சியை ஆரம்பித்தார். மூன்று தேர்தல்களிலும் போட்டியிட்டார். அடுத்த தேர்தலுக்கு தயாராகிவிட்டார்''’என்கிறார்.
திரைத்துறை எழுத்தாளரும் விமர்சகருமான ஆர்.எஸ்.அந்தணன், ""ஸ்டார்களை உருவாக்குகிற ஸ்டாராக இருக்கிறது ஸ்டார் விஜய் டி.வி. இதற்கு உதாரணம் இப்போது சினிமாவில் பீக்கில் இருக்கும் சிவகார்த்திகேயனும் சந்தானமும். அதேபோல் ‘"நீயா? நானா?'’ கோபிநாத் போன்ற சமூக ஆர்வலர்களையும் உருவாக்கியிருக்கு. வீட்டுக்கு வீடு தண்ணீர் கேன் சப்ளை செய்த திவாகர் என்ற இளைஞர்தான் "ஏர்டெல் சூப்பர் சிங்கர்'’ வின்னராகி உலக பிரபலம் ஆனார்''’என பாசிட்டிவ் பக்கங்களை எடுத்துக் காட்டினார்.
நல்லவை நடப்பதும் அல்லவை விலகுவதும் அவரவர் செயல்களில்தான் இருக்கிறது.
-ஈ.பா.பரமேஷ்வரன்