மது அலுவலக தொலைபேசி எண் ணில் தொடர்புகொண்டு பேசிய பெண்ணின் கதறல் கணவனைப் பிரிந்துவாழும் ஒவ் வொரு தனிமைப் பெண்ணும் அனுபவிக் கும் வேதனையாக இருந் தாலும் "தன்வழிப்படுத்த ஓர் ஆண் இப்படியெல் லாம்கூட பாலியல் தொந்தரவு செய் வானா?' என்று அதிர்ச் சியூட்டுகிறது அவரது குற்றச்சாட்டு.

ffசென்னை போரூர் மவுலிவாக்கத்தைச்சேர்ந்த தமிழாசிரி யர் தனலட்சுமி நம் மிடம், “""ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டா காவல் நிலையத்துல புகார் கொடுக்கலாம். ஆனா, காவல்துறையின் உதவி யுடன் பாலியல் துன் புறுத்தலில் ஈடுபட்டா என்ன செய்றது? திரு மணமாகி குழந்தையும் இருக்கும் அவனது வக் கிர புத்தியால பிரபல இண்டர்நேஷனல் பள்ளியில் 38,000 ரூபாய் சம்பளம் வாங் கிக்கிட்டு ‘பெஸ்ட் டீச்சர் அவார்டு’ விருது பெற்ற நான், இப்போ வேலையை இழந்து வாங்கின கடன்களுக்கு வட்டி கட்டமுடியாம இரண்டு பெண் குழந் தைகளை வெச்சுக் கிட்டு கஷ்டப்பட்டுக் கிட்டிருக்கேன். ஆனா லும், அவனோட டார்ச்சர் தொடர்ந்துக் கிட்டுத்தான் இருக்கு. கணவனை பிரிந்து ஒரு பெண் தனியா வாழ்ந் தாலே அவளுக்கு இந்த சமுதாயத்துல பாது காப்பு கிடைக்காதா?'' என்று நக்கீரனிடம் ஆதாரத்துடன் புகார் கொடுத்து கண்ணீர் வடிக்கிறார்.

என்ன நடந்தது?

2016 ஆம் ஆண்டு சென்னை முடிச்சூரில் இடம் வாங்கித்தருவதாக ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜசேகர் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியதாக 2018 பிப்ரவரி மாதம் மாங் காடு காவல்நிலையத்தில் புகார் dddகொடுத்தார் பள்ளி ஆசிரியர் தன லட்சுமி. அப்போது தான், சுரேஷ்பாபு என்பவர் தனலட்சுமி யை தொடர்பு கொண்டு, "உங்களைப் போலவே நானும் புரோக்கர் ராஜசேக ரிடம் பணம் கொடுத்து ஏமாந்துட்டேன். அதனால, நாம ரெண்டுபேரும் சேர்ந்து புகார் கொடுத்து போராடலாம்'’என் கிறார். அதற்குப்பிறகே, புரோக்கர் ராஜசேகரின் பிரச்சனையைவிட சுரேஷ்பாபுவின் பாலி யல் டார்ச்சர் அதிக மானது என்கிற ஆசிரியர் தனலட்சுமி நம்மிடம், ""நான் கணவரிடமிருந்து பிரிஞ்சிருக்கேங்கிறதை புரோக்கர் ராஜசேகர் மூலமா தெரிஞ்சுக் கிட்ட சுரேஷ்பாபு, இரவு 12 மணிக்கு மேல் வீடியோகால் பண்ண ஆரம்பிச்சுட்டான். ஏமாற்றிய ராஜசேக ருக்கு எதிரா போராடு வதைவிட சுரேஷ் பாபுவின் நோக்கம் வேறமாதிரி இருந்ததால் 2018 ஆகஸ்டு 4-ந் தேதி மடிப்பாக்கம் எஸ்.ஐ. செல்வராஜிடம் அவன் மீது புகார் கொடுத் தேன். அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கல. ஆனா, அவன் மேல நான் புகார் கொடுத்துட்டேன்னு என்னை பழிவாங்குற துக்காக நான், புரோக் கர் ராஜசேகரின் மனைவின்னும் ராஜ சேகருடன் சேர்ந்து நானும் அவனிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய தாகவும் அதே மடிப் பாக்கம் காவல்நிலை யத்தில் சுரேஷ்பாபு பொய்ப்புகார் கொடுத் துட்டான்.

Advertisment

அதனால், காவல் நிலையம் சென்று நான் புரோக்கர் ராஜசேகரிடம் பணம் கொடுத்து ஏமாந்தது குறித்த புகார், ராஜ சேகர் பணத்தை எனக்கு திருப்பித்தரு வதாக பத்திரத்தில் எழுதிக் கொடுத்தது… சுரேஷ்பாபு என்னி டம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்தது குறித்து, என எல்லா ஆவணங்களையும் அப்போதைய, மடிப் பாக்கம் இன்ஸ் பெக்டரிடம் காண் பித்து விளக்கினேன். அதோடு, என்னை அனுப்பிட்டாங்க.

புதிதாக வந்த மடிப்பாக்கம் இன்ஸ் பெக்டர் கண்ணன், 2019 ஜூன் 3-ந் தேதி எனக்கு போன் பண்ணி, ‘"உன்மேல எஃப்.ஐ.ஆர். dddபோட்டாச்சு. உன்னை ரிமாண்ட் பண்ணப் போறேன். உன் தலையெழுத்தையே மாத்தப்போறேன்'னு மிரட்டியதும் அதிர்ச்சி யானேன். அதுமட்டுமில்ல, ஜூலை 1-ந் தேதி எஸ்.ஐ. ரவிக்குமார், இன்ஸ்பெக்டர் முருகன் என்கிற பெயர்களில் தொடர்ந்து சுரேஷ் பாபுவும் மடிப்பாக்கம் போலீஸாரும் நான் வேலை செய்யும் மயிலாப்பூர் எம்.சி.டி.எம். இண்டர்நேஷனல் பள்ளிக்கு போன் செய்ததால், பள்ளி நிர்வாகம் என்னை வேலையை விட்டே ரிசைன்பண்ணச் சொல் லிடுச்சு.

அப்பவும் ஈவு இரக்கமில்லாத அந்த சுரேஷ்பாபு, மறுபடியும் இரவுநேரங்களில் தவறான மெசேஜ்களை அனுப்பி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதோடு என் மகள்கள் குறித்தும் விசாரிக்கிறான். அதனால், சுரேஷ்பாபு மீது கடந்த 2019 ஆகஸ்ட் 12-ந் தேதி ஆதாரங்களுடன் மாங்காடு காவல்நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தேன். இன்ஸ் பெக்டர் ஜெயச் சந்திரன் பல நாட்களாகியும் புகார் மீது நடவடிக்கை எடுக்கல'' என்று கண்கலங்குகிறார்.

Advertisment

இதுகுறித்து, குற்றஞ்சாட்டப்பட்ட சுரேஷ்பாபுவை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது, “""புரோக் கர் ராஜசேகர் தனது மனைவி தனலட்சுமிதான் என்று சொல்லி 2017-ஆம் ஆண்டு போரூர் மவுலி வாக்கத்திலுள்ள அவரது வீட்டுக்கே அழைத்துச்சென்றார். இடம் வாங்க புரோக்கர் ராஜசேகரிடம் 5 லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். ஆனால், அந்த இடத்தில் வில்லங்கம் இருப்பதால் பணத்தை திருப்பிக் கேட்டேன். ஆனால், பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார் புரோக்கர் ராஜ சேகர்''’என்றவரிடம்...

"தனலட்சுமியிடம் நீங்கள் பணம் கொடுத்ததற்கு ஆதாரம் உள்ளதா? பாலியல் ரீதியாக வலைவீசும் மெசேஜ்களை அனுப்பி தொந்தரவு செய்து கொண்டிருப்பது ஏன்?' என்று நாம் கேட்ட போது, அதுகுறித்து பேச மறுத்துவிட்டார். "இதுகுறித்து, நட வடிக்கை எடுக்காதது ஏன்?' மாங்காடு புதிய இன்ஸ்பெக்டர் செல்வக் குமாரிடம் கேட்ட போது, “"உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்'’’என்றவர், அதிரடியாக வழக் குப்பதிவு செய்து சுரேஷ் பாபுவிடம் விசாரணை நடத்திவருகிறார்.

"ஆசிரியர் தன லட்சுமியும் ரியல் எஸ்டேட் புரோக்கர் ராஜசேகரும் கணவன் மனைவி என்று தவறாக வழக்குப்பதிவு செய் துள்ளார் மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

சுரேஷ்பாபுவை சட்டப்படி தண் டித்தால்தான் தனி மைப் பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் காவல்துறை பாது காப்பானது. தைரியமாக புகார் கொடுக்கலாம்' என்ற எண்ணம் ஏற்படும்.

-மனோசௌந்தர்