முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் ஆக நடந்த நெல்லை மாநகர நிர்வாகிகளின் சந்திப்பில், "2026 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் கட்சி நிர்வாகிகள் அனைவரின் பதவிகளும் பறிக்கப்படும்'' என்று முதல்வரே சீறியிருப்பது தி.மு.க. வட்டத்தில் பதற்றத்தைக் கிளப்பி யிருக்கிறது.
முதல்வரின் சீற்றம் குறித்து மூத்த முன்னோடிகளிடம் பேசியதில், "அப்துல்வகாப் நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பிலமர்த்தப் பட்டபோது, அரசியல், அணுகுமுறை, செயல்திறன் போன்றவைகளை கட்சியின் மூத்த முன்னோடிகளை அணுகி, ஆலோசித்து பெற்றிருக்க வேண்டும். அதை விடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்த கெத்தில், அனுபவமிக்க கட்சிக் காரர்களை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அனுபவமில்லாத தனது விசுவாசிகளுக்கு பொறுப்புகளைக் கொடுத்து மாநகரக் கட்சியை தன் கைக்குள் கொண்டுவந்தார் அப்துல் வகாப்.
நகர தி.மு.க.வில் அனுபவமுள்ள எக்ஸ் தி.மு.க. எம்.எல்.ஏ. மாலைராஜா, உலகநாதன், மேயர் ரா
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் ஒன் டூ ஒன் ஆக நடந்த நெல்லை மாநகர நிர்வாகிகளின் சந்திப்பில், "2026 தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற வேண்டும். இல்லையென்றால் கட்சி நிர்வாகிகள் அனைவரின் பதவிகளும் பறிக்கப்படும்'' என்று முதல்வரே சீறியிருப்பது தி.மு.க. வட்டத்தில் பதற்றத்தைக் கிளப்பி யிருக்கிறது.
முதல்வரின் சீற்றம் குறித்து மூத்த முன்னோடிகளிடம் பேசியதில், "அப்துல்வகாப் நெல்லை மாவட்ட செயலாளர் பொறுப்பிலமர்த்தப் பட்டபோது, அரசியல், அணுகுமுறை, செயல்திறன் போன்றவைகளை கட்சியின் மூத்த முன்னோடிகளை அணுகி, ஆலோசித்து பெற்றிருக்க வேண்டும். அதை விடுத்து, மாவட்ட செயலாளர் பொறுப்பு கிடைத்த கெத்தில், அனுபவமிக்க கட்சிக் காரர்களை பொறுப்பிலிருந்து நீக்கிவிட்டு, அனுபவமில்லாத தனது விசுவாசிகளுக்கு பொறுப்புகளைக் கொடுத்து மாநகரக் கட்சியை தன் கைக்குள் கொண்டுவந்தார் அப்துல் வகாப்.
நகர தி.மு.க.வில் அனுபவமுள்ள எக்ஸ் தி.மு.க. எம்.எல்.ஏ. மாலைராஜா, உலகநாதன், மேயர் ராமகிருஷ்ணன், எக்ஸ் பகுதி செயலாளர் ரவீந்தர் அருண்குமார், அனுபவமிக்க முன்னாள் எம்.எல்.ஏ. டி.பி.மைதீன்கான் போன்றவர்களை கார்னர் செய்து விட்டு, தனக்கான விசுவாசிகளை வைத்துக்கொண்டார். களச்செயல் பாடு, அரசியல் சாதுர்யம், கட்சியை நிர்வகிக்கிற சூட்சுமம் போன்றவற்றுக்கு சீனியர்களிடம் கலந்திருந்தால் நிலைமை இந்தளவுக்கு முற்றியிருக்காது. அதன் விளைவே, 2021 தேர்தலில் தி.மு.க. திருநெல்வேலியை இழக்க நேரிட்டது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/13/nellaidmk1-2025-11-13-15-54-48.jpg)
2021 தேர்தலில், தமிழ்நாட்டில் தி.மு.க. பெரிய வெற்றியைப் பெற்றதால், நெல்லை தோல்வி பற்றி கேள்வி எழவில்லை. அந்நேரமே கட்சித் தலைமை சாட்டையைச் சுழற்றியிருந்தால், நிர்வாகிகளின் அஜாக்கிரதை இந்தளவுக்குப் போயிருக்காது. தேர்தலுக்குப் பின்பு நெல்லை மேயர் சரவணனுக்கும், மா.செ. வகாப்பிற்குமான முட்டல்கள் வலுவாயின. இறுதியாக தலைமை தலையிட, மேயர் சரவணன் ராஜினாமா செய்ய நேர்ந்தது.
வண்ணாரப்பேட்டை முக்கிய பகுதியின் பஸ் ஸ்டாப் சென்டரை இடித்துத் தள்ளிய சர்ச்சையில் சிக்கிய மா.செ. வகாப், தலைமைக்கு வேண்டப்பட்ட ஒரு நிறுவனத்திடம் விவகாரத்தை வளர்த்தது தலைமைக்குப் புகாராகப் பறந்தது. அதே நேரத்தில் உளவுத்துறையும், மா.செ.வின் செயல்பாடுகள் குறித்து நெகடிவாக நோட் போட, இதுகுறித்து விசாரிக்க குமரி மாவட்ட தி.மு.க. நிர்வாகி ஆஸ்டினை விசாரணை அதிகாரியாக நியமித்தது. அவருடைய விசாரணையில் புகார்களின் உண்மைத்தன்மை வெளிப்பட்டதோடு, மானூர் விவகாரமும் பெரிதாகப் பேசப்பட்டது.
அதையடுத்தே மா.செ. அப்துல் வகாப்பின் பதவி பறிக்கப்பட்டு எக்ஸ் எம்.எல்.ஏ. டி.பி.மைதீன்கான் மாநகர மா.செ. பொறுப்பிலமர்த் தப்பட்டார். இடைப்பட்ட சில மாதங்களுக்குப் பின்பு, திருநெல்வேலி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான தங்கம் தென்னரசு மாற்றப்பட்டு அமைச்சர் கே.என்.நேரு புதிய பொறுப் பாளராக நியமிக்கப்பட்டார். வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட அப்துல் வகாப், மீண்டும் நெல்லை மாநகர மா.செ.வானது கட்சி, தொகுதி மட்டத்தில் ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. டி.பி.மைதீன் கான் நீக்கப்பட்டு மறுபடியும் மா.செ. பொறுப்பிற்கு வந்த அப்துல் வகாப்பின் செயல் பாடுகளில் மாற்றமில்லை.
கட்சியினரை அனு சரிக்காத போக்கு, பாளை மார்க்கெட் பகுதியின் புதிய கடைகள் ஒதுக்கீட்டில் குறுக்கீடு, அரசுத்துறைகளில் அவரின் தலையீடு குறித் தெல்லாம் உளவுத்துறை விரிவான ரிப்போர்ட் டை முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியிருக் கிறது. இந்நிலையில்தான், 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் டோஸ் விட்டிருக்கிறார்!
முதல்வரின் அந்த சந்திப்பு நிகழ்ச்சியில் மாநகர மா.செ. அப்துல் வகாப், பகுதிச் செயலாளர்களான நமச்சிவாயம் என்ற கோபி, டாக்டர் சங்கர், மாரியப்பன், வக்கீல் சங்கர், ஒன்றிய செ.க்களான அருள்மணி, அன்பழகன் மாநகர செ. சுப்பிரமணியன், பேரூர் செயலாளர்களான செல்வபாபு, பேச்சிமுத்து உள்ளிட்ட 9 பேர் ஆய்வில் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் கட்சி, தொகுதிப் பணிகள் சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்டார் முதல்வர். நிர்வாகிகளிடம் பணிகள் பற்றி பல கேள்விகளைக் கேட்டவர், நமச்சிவாயம் என்ற கோபியிடம், "உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது. முடியும்னா பாருங்க, இல்லைன்னா விட்டுருங்க'' என்றிருக்கிறார். அடுத்து, கிழக்கு பகுதி செயலாளரான சங்கரிடம் "உங்க பகுதியில எத்தனை பூத்துகளிருக்கு?'' என்று கேட்டபோது, அவரோ பதில் சொல்ல முடியாமல் திணறினாராம். "இந்த அடிப்படை விவரங்கள்கூட தெரியலையா?'' என்று அவரைக் கண்டித்த முதல்வரின் கவனத்திற்கு மா.செ.விற்கும், நிர்வாகி ஒருவருக்குமான மோதலைச் சுட்டிக்காட்டியதும், அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக் கிறார்.
நெல்லை மாநகர நிர்வாகிகளுடனான தொகுதி பற்றிய சந்திப்பில் அத்தனை திருப்தியில்லாம லிருந்த முதல்வர், அவர் களைக் கண்டித்ததோடு, வெற்றிபெறக் கடுமையாக உழைக்கவேண்டும் என்றவர், திருநெல்வேலி தொகுதியில் வெற்றிபெறவேண்டும், இல்லை யென்றால் மாவட்டச் செயலாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளின் பதவிகள் பறிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்திருக்கிறார்.
இதுகுறித்து கருத்தறியும் பொருட்டு நாம் மாநகர மா.செ. அப்துல் வகாப்பை தொடர்பு கொண்டு கேட்டதில், "கட்சித் தலைவரின் கட்டளைப்படி அவர்களின் ஆணைக்கிணங்க தீவிரமாகப் பணியாற்றுவோம். தலைவரின் ஆணையை நிறைவேற்றுவோம்.. திருநெல்வேலியில் கட்சி உறுதியாக ஜெயிக்கும்''’என்றார்.
-பி.சிவன்
படங்கள்: ப.இராம்குமார்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us