பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும் அவரது மகன் டாக்டர் அன்புமணிக்கும் இடையிலான மோதல்கள் இன்னும் முற்றுப்பெறவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு, பாட்டாளித் தொண்டர்களைப் பெரிதும் கவலையடைய வைத்துள்ளது. இந்தச் சூழலில், அன்புமணிக்கு எதிராகக் கொந்தளித்திருக்கும் பா.ம.க.வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணியை தொடர்புகொண்டு பேசினோம்.
தந்தையும் மகனும் ஒன்றுசேர நான் தடையாக இருப்பேன் என நினைத்தால் கட்சி யிலிருந்தும் எம்.எல்.ஏ. பதவியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என நீங்கள் ஆவேசப்படுமளவுக்கு என்ன நடந்தது?
அப்பாவையும் மகனையும் நான் பிரித்துவிட் டேன்னும், துரோகின்னும் என்னை விமர்சிக்கிறார் அன்புமணி. மனசாட்சி உள்ள யாரும் இதனை நம்பமாட்டார்கள். அவர், அப்படி கூறியது எனக்கு வேதனையாக இருக்கிறது. யார் துரோகம் செய்துகொண்டிருக்கிறார்கள்னு அவருக்கே தெரியும். அரசியலில் உயர்ந்த இடத்துக்கு அன்புமணி வந்திருக்கிறார் என்றால் அதற்கு நான்தான் காரணம். பா.ம.க.வில் ஒவ்வொரு சூழலிலும் அவருக்காக அய்யா ராமதாசிடம் வாதாடி யவன் நான். ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க பா.ம.க.வுக்கு வாய்ப்பு வந்தபோது, அய்யாவிடம் சொல்லி மத்திய அமைச்சர் பதவியை தனக்கு வாங்கிக்கொடுக்க என்னிடம் அன்புமணி வலியுறுத்தினார். அய்யாவிடம் இதைச் சொன்ன போது, "தலைவர்ங்கிறதுனால நீ ஆடுறீயா? அவன் கேட்கிறான்னா உனக்கு அறிவு எங்கே போச்சு? நான் செய்து கொடுத்திருக்கும் சத்தியம் என்னவாகும்?' என்றெல்லாம் என்னிடம் கடுமை யாக கோபப்பட்டார். ஆனாலும், அன்புமணிக்காக மீண்டும் முயற்சிகளை எடுத்த நான், காடுவெட்டி குருவை அழைத்துச் சென்று அய்யாவை சந்தித்து, எந்த ஒரு அதிகாரத்திற்கும் ஆசைப்படாதவர் நீங்கள். அதற்காக, அன்புமணியும் அப்படியே இருக்கக்கூடாது அய்யா. அவரை அமைச்சராக்குவ தால் எந்த சர்ச்சையும் வராது. கட்சியின் வளர்ச் சிக்கு உதவும் என்றெல்லாம் பல விசயங்களை நாங்கள் சொன்ன பிறகுதான், அன்புமணியை அமைச்சராக்க ஒப்புக்கொண்டார் அய்யா. ராஜ்ய சபா எம்.பி. சீட் பா.ம.க.வுக்கு கிடைத்தபோது, ஒருமுறை என்னை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்தார் அய்யா. அதைத்தவிர்த்து, "அன்புமணிக் குத்தான் கொடுக்க வேண்டும்' என பரிந்துரைத் ததும் நான்தான். அதனால் தான், அன்புமணி எம்.பி. ஆனார். இன்னும் சொல் லப் போனால், கட்சியின் தலைவராக அவரை நியமிக்க வைத்ததற்கும், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கச் செய்ததற்கும் அடிப்படையில் எனது பரிந்துரைகளும், வலியுறுத்தல்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட என்னை, துரோகி என அன்புமணி சொல்வதுதான் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் பதவியை ராஜினாமா செய்வதாகச் சொன்னேன்.
உங்கள் மீது அவருக்கு ஏன் இவ்வளவு கோபம்?
அதுதான் எனக்கும் புரியவில்லை. அய்யா விடம் நான் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பது அவருக்கு பிடிக்காமல் போயிருக்க லாமோ என்னவோ? பா.ம.க.விலும் சரி, அரசியலி லும் சரி, எனது நேர்மையை யாரும் சந்தேகித்தது கிடையாது. அன்பு மணிக்கு எந்த சூழலிலும் கெடுதல் நினைத்தது கிடையாது. அவரது மனதைத்தான் பலரும் கெடுத்து வைத் திருக்கிறார்கள். அவரது மனசாட்சிக்குத் தெரியும். நான் துரோகியா என அவரது மனசாட்சியிடம் கேட்கட்டும். அப்போது அவருக்கு புரியும். அவரது மனசாட்சிக்கு அவரால் பதில் சொல்ல முடியாது. அய்யா ராமதாசுடன் நான் இருப்பதாலும், அன்புமணியுடன் நான் செல்லாததாலும் என் மீது அன்புமணி கோபப்படுகிறார்னுதான் நான் நினைக்கிறேன்.
அப்பாவுக்கும், மகனுக்கும் இடையிலான விரிசல்களுக்கு யார் காரணம்? இந்த பிரச்சனைகளுக்கு எப்போதுதான் முற்றுப்புள்ளி?
கட்சிக்குள்ளும் வீட் டுக்குள்ளும் பேசவேண்டி யதை பொது வெளியில் அன்புமணி பேசியிருக்கக் கூடாது. அவர் பேசியதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். அதனால் விரிசலுக்கு அவர்தான் காரணம். அது என்னவென்று சொல்வது சரியாக இருக்காது. அய்யாவும் அன்புமணியும் உட்கார்ந்து 10 நிமிடம் பேசினாலே அனைத்துப் பிரச்சனை களுக்கும் முற்றுப்புள்ளி விழும். இப்போதும் கூட அதற்கான முயற்சிகளை எடுத்துத்தான் வருகிறோம். விரைவில் சரியாகும் என எதிர்பார்க்கிறோம். அய்யாவும் மகனும் ஒன்றுசேர, பா.ம.க.வில் நான் இருக்கக்கூடாது என அன்புமணி எதிர்பார்ப்பாரே யானால், அவரது விருப்பத்தை நிறைவேற்ற நான் தயார். நான் மட்டுமல்ல; அன்புமணிக்கு யார் யாரை எல்லாம் பிடிக்காதோ அவர்கள் எல்லோ ரும் கட்சியிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் விலகத் தயார். எங்களைப் பொறுத்தவரை அப்பாவும் மகனும் ஒன்றாக இருக்கவேண்டும்; பா.ம.க. எப்போதும் வலிமையாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான்.
அன்புமணி தலைமையில் இருப்பதுதான் உண்மையான பா.ம.க. என்று அன்புமணி தரப்பு தொடர்ந்து சொல்லிவருகிறதே?
இது மிகவும் தவறானது. கட்சியின் நிறுவனர் அய்யா ராமதாஸ். அவருக்குத்தான் அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது. கட்சித் தொண்டர் களும், சமூகமும் அய்யா பக்கம்தான் இருக் கிறார்கள். அவரைக் கடந்து யாரும் கட்சியில் உயர்வானவர்கள் கிடையாது. ஒவ்வொரு கிராமமாக நடையாய் நடந்து, சைக்கிளில் போய் கட்சியை வளர்த்தவர் அய்யா. அவரது தியாகத்திற்கு ஈடாக யாரும் இருக்க முடியாது. இது எல்லோருக்கும் தெரியும். அவரது தியாகத் தை மதிக்காமல் உரிமை கோர யாருக்கும் தகுதி கிடையாது. அவர் நடத்திய சமூக நீதி போராட்டங்கள் போல யாரும் நடத்தியதில் லை. மக்க ளுக்காக, சமூக நீதிக்காக பல சிறைகளுக்குச் சென்றவர் அய்யா. ஒரு முறை யாவது சிறைக்கு சென்றுள்ளாரா அன்புமணி? பொய்யான, போலியான டாகுமெண்ட்டுகளை வைத்து தேர்தல் ஆணை யத்தை ஏமாற்றியிருக்கிறார்கள். அதனை எதிர்த்து நாங்கள் உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, எங்கள் பக்கம் இருக்கும் உண்மைகளை உணர்ந்து, தலைமை யாருக்கு என்பதை சிவில் நீதிமன்றத்தில் தீர்வு காணுங்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதனால் அய்யா தலைமையில் இருப்பதுதான் உண்மையான பா.ம.க. தொண்டர்களும் அதனைத்தான் ஏற்கிறார்கள்.
பா.ம.க. தலைமை யாருக்கு என்பதில் சட்டச்சிக்கல் இருக்கும் சூழலில், தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை அன்புமணி வாங்குகிறாரே?
அன்புமணி தரப்பில் விருப்ப மனு வாங்குவது மோசடித்தனமானது. நீதிமன்ற உத்தரவுகளுக்கும் எதிரானது. பா.ம.க.வின் சட்ட விதிகளின்படியும் தார்மீகத்தின்படியும் விருப்ப மனு வாங்கும் அதிகாரம் அய்யா ராமதாசின் உத்தரவுகளின்படிதான் நடக்க வேண்டும், அதுதான் நடக்கும். அன்புமணி செயல்பாடுகள் துரதிர்ஷ்டவசமானவை.
தமிழகம் முழுவதும் அன்புமணி சுற்றுப்பயணம் செய்கிறாரே?
ஊர் ஊராக சுற்றினாலும் பா.ம.க. தொண்டர்களின் ஆதரவை அவரால் பெறமுடியாது. மக்களின் ஆதரவும், செல் வாக்கும் அய்யா ராமதாசுக்கு மட்டுமே இருக்கிறது. அய்யாவை யும் பா.ம.க.வையும் பிரித்து யாரும் பார்க்க முடியாது.
தேர்தல் என்றாலே கூட்டணியை முதலில் உறுதிப் படுத்துவது அய்யா ராமதாஸ்தான். ஆனால், தற்போது தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி என்பதில் அய்யா முடிவெடுக்காமல் இருக்கிறாரே?
தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? எந்த கட்சியுடன் கூட்டணி என்பதில் அய்யா ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார். அதற்கு முன்னதாக கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தை நடத்தி, விவாதிக்கப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும். அய்யா ராமதாஸ் இருக்கும் கூட்டணிதான் இமாலய வெற்றி பெறும்.
தேர்தல் காலகட்டத்தில் பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள இந்த மோதல், கூட்டணி பேச்சுவார்த்தையில் பின்னடைவை ஏற்படுத்தாதா?
அய்யா தலைமையிலான பா.ம.க.வைத்தான் பிரதான அரசியல் கட்சிகள் விரும்பும். அது தான் உண்மையான பா.ம.க. என்பதை அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர். தற்போது நிலவும் பிரச்சனைகள் நீர்க்குமிழிகள் மாதிரி; உடைந்துவிடும். அதனால், இத்தகைய பிரச்சனைகளெல்லாம் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் எந்த பின்னடைவையும் ஏற்படுத்தாது.
-இளையர்
படம் : ஸ்டாலின்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/19/gkmani-2025-12-19-11-19-09.jpg)