அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை தேவை!' -தி.மு.க. நிர்வாகிகளின் எதிர்பார்ப்பு

dd

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்பதே மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைச் சாதித்திருக் கிறது. இத்தேர்தலில் ரிசல்ட்டுக்கு முன் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ஆளுங்கட்சியான தி.மு.க. என இரு தரப்பிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எல்லா இடங்களிலும் இரு கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என வாக்காளர்களுக்கு கரன்சியை மழையாகக் கொட்டினார்கள். இரு தரப்பிலும் ஒவ்வொரு வேட்பாளர்களும் 80 சதவீத வாக்காளர்களுக்கு "கவனிப்பு' செய்தார்கள். ஆனால், சென்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்கு சதவிகிதத்தைவிட குறைவான வாக்குகளே இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகியுள்ளது ஒரு கவலைக் குரிய அம்சம்தான்.

இது ஆளும் தரப்பான தி.மு.க. தலைமையை சற்று அதிர வைத்துள்ளது என்பதே உண்மை. பேரூராட்சி, நகராட்சிகளில் 70 சதவீதம் வரையிலும் வாக்கு ப

தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஒன்பதே மாதத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைச் சாதித்திருக் கிறது. இத்தேர்தலில் ரிசல்ட்டுக்கு முன் எதிர்க்கட்சியான அ.தி.மு.க., ஆளுங்கட்சியான தி.மு.க. என இரு தரப்பிலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. பேரூ ராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எல்லா இடங்களிலும் இரு கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் என வாக்காளர்களுக்கு கரன்சியை மழையாகக் கொட்டினார்கள். இரு தரப்பிலும் ஒவ்வொரு வேட்பாளர்களும் 80 சதவீத வாக்காளர்களுக்கு "கவனிப்பு' செய்தார்கள். ஆனால், சென்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலின்போது பதிவான வாக்கு சதவிகிதத்தைவிட குறைவான வாக்குகளே இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகியுள்ளது ஒரு கவலைக் குரிய அம்சம்தான்.

இது ஆளும் தரப்பான தி.மு.க. தலைமையை சற்று அதிர வைத்துள்ளது என்பதே உண்மை. பேரூராட்சி, நகராட்சிகளில் 70 சதவீதம் வரையிலும் வாக்கு பதிவாக, மாநகராட்சிகளில் 60 சதவீதமே வாக்குப் பதிவாகியுள் ளது. இதில் கரூர் போன்ற சில மாநகராட்சிகளில் கூடுதல் கரன்சி பாய்ச்சலால் வாக்கு சதவீதம் சற்று கூடியிருக்கிறது.

dd

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மக்களிடம் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பெரும் பாலும் நிறைவேற்றியுள்ளதாகக் கூறிவரும் நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வுக்கு பலம்சேர்க்கும் வகையில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்திருக்க வேண்டும். ஆனால் நேரெதிராக இருக்கிறது வாக்கு சதவிகிதம் காட்டும் யதார்த்தம். இதற்கான கார ணத்தை முதல்வர் ஆய்வு செய்யவேண்டுமென கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பிலுள்ள கொங்கு மண்டல தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர் வெளிப்படையாகப் பேசினார்.

"அரசு நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் இயங்குகிறது. லஞ்சம், ஊழல், முறைகேடு எதுவும் இல்லை. அதேபோல் மகளிருக்கு நகர்ப்புற பேருந்தில் இலவச பயணம் போன்ற திட்டங்களும் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இவை மட்டும் போதாது. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் அறிந்து செயல்பட வேண்டியுள்ளது.

ff

முதல்வருக்கு ஆலோசனை கூறுமிடத்தில் நல்ல அதிகாரிகள்தான் இருக்கிறார்கள். நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது, சாதாரண -எளிய மக்களின் மனநிலையை அறிந்து அவர்கள் வல்லவர்களாகச் செயல்பட வேண்டும். காரணம், முதல்வர் முழுமையாக அவர்களை நம்புகிறார்.

பொங்கல் பொருட்கள் கொடுத்ததில் சில குறைபாடு ஏற்பட்டது. பொங்கலுக்கு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் அரசு ஆயிரம் ரூபாயாவது கொடுத்திருக்க வேண்டும். நகைக் கடன் தள்ளுபடி பேசவேண்டிய மற்றொரு விஷயம். ஐந்து பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்திருந்தால் அந்த நகைக்கான கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றுதான் முதல்வர் அறிவித்திருந்தார். அ.தி.மு.க. ஆட்சியில் போலியாக -மோசடியாக நகைக்கடன் வாங்கப்பட்டிருப்பதை தி.மு.க. அரசு அம்பலப்படுத்தியது.

அதே நேரத்தில் ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, கணவன், மனைவி, மகள் என பலரும் வசிப்பார்கள். அவர்களிடம் ஒரு தாலிக்கொடி, தங்க செயின், வளையல், மோதிரம் என ஆபரணத் தங்கம்தான் இருக்கும். உதாரணத்திற்கு இரண்டு அல்லது மூன்று நகைகளை அடமானம் வைக்கிறார்கள் என்றால் அதன் அளவு ஐந்தரை பவுன் அல்லது ஆறு பவுன் என இருக்கும். எல்லோரும் மிகச் சரியாக ஐந்து பவுன் வைத்ததுபோக மீதி நகையை வெட்டி வைக்கமுடியாது. இப்போது அதிகாரிகளின் அறிவிப்புப் படி ஒருவர் ஐந்து பவுனுக்குமேல் ஒரு கிராம் அதிகமாக வங்கியில் அடமானம் வைத்திருந்தாலும் அவர்களுக்குத் தள்ளுபடி கிடையாது. அதேபோல் குடும்பத்தில் இரண்டு பேர் நகைக் கடன் பெற்றிருந்தாலும் தள்ளுபடி கிடையாது. அதாவது கணவன், மனைவி தனித்தனியாக தலா மூன்று அல்லது நான்கு பவுன் அடமானம் வைத்திருந்தால் அவர்களுக்கும் கிடையாது என்பதுதான்.

அளவு கூடுதலாக இருந்தாலும் ஒரு ரேசன் கார்டு அல்லது ஒரு குடும்பத்திற்கு ஐந்து பவுன் கடன் மட்டுமே தள்ளுபடி என அறிவிப்பு இருந்திருந்தால் ஏழை, எளிய மக்கள் உண்மையிலேயே நேரடியாக பயன்பெறுவார்கள். அப்படி செய்தால்தான் மக்கள் நம் மீது அதிக ஈடுபாடு வைப்பார்கள். தலைவர் கலைஞர் எந்த செயலை செய்யும் முன்பும் சில சீனியர்களோடு கலந்துரையாடுவார். பிறகு அவரே முடிவெடுப்பார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் அதிகாரிகளின் ஆலோசனையோடு அனுபவம் வாய்ந்த மூத்த நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினால் செய்யக்கூடிய செயல் சிறப்பாக அமையும்'' என்றார்.

தேர்தல் வாக்குறுதிகள் நிறை வேற்றம் தாண்டியும், 20 சதவிகித மக்கள் இந்த தேர்தலில் ஆர்வம் காட்டாததற்கு வேறுபல காரணங் களும் இருக்கலாம். அவற்றின்மீது தி.மு.க. தலைமை அக்கறைகாட்டி ஆராய வேண்டும். அத்தகைய காரணங்களில் நிவாரணம் தரமுடிந்த வற்றை செய்துகொடுத்தால், இயல்பாகவே கட்சியின் வாக்கு விகிதம் அதிகரிக்கும். ஜனநாயகம் மீது வாக்காளர் கள் நம்பிக்கை இழப்பதையும் தடுக்கலாம்.

nkn260222
இதையும் படியுங்கள்
Subscribe