இக்கட்டில் அம்ரீந்தர் சிங்! பஞ்சாபில் காங்கிரஸின் செல்வாக்குத் தொடருமா?

;

2017 சட்டமன்றத் தேர்தலில் பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணியை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியிலமர்ந்தது. 2022-ல் அடுத்த தேர்தல் வரவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு வரும் மோதல்கள், பஞ்சாபில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

காங்கிரஸுக்கும், தற்போதைய முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் தலைவலியை ஏற்படுத்தும் விவகாரங்களில் முதன்மையானது 2015-ல் பேபல் காளன் மற்றும் காட்காபுரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்.

f

சீக்கிய ஆலயங்களின் முன்பு சீக்கியர்களின் புனித நூலான "குரு கிரந்தம்' அடையாளம் தெரியாத நபர்களால் கிழித்துவீசப்பட்டதாக தொடங்கிய ஆர்ப்பாட்டம் வலுவான போராட்டமாக உருவெடுத்த நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது அப்போதைய அகாலிதள அரசு.

ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அம்ரீந்தர் சிங் அ

2017 சட்டமன்றத் தேர்தலில் பத்தாண்டுகளாக ஆட்சியிலிருந்த அகாலிதளம்-பா.ஜ.க. கூட்டணியை முறியடித்து காங்கிரஸ் ஆட்சியிலமர்ந்தது. 2022-ல் அடுத்த தேர்தல் வரவிருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டு வரும் மோதல்கள், பஞ்சாபில் காங்கிரஸ் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

காங்கிரஸுக்கும், தற்போதைய முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கும் தலைவலியை ஏற்படுத்தும் விவகாரங்களில் முதன்மையானது 2015-ல் பேபல் காளன் மற்றும் காட்காபுரத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்.

f

சீக்கிய ஆலயங்களின் முன்பு சீக்கியர்களின் புனித நூலான "குரு கிரந்தம்' அடையாளம் தெரியாத நபர்களால் கிழித்துவீசப்பட்டதாக தொடங்கிய ஆர்ப்பாட்டம் வலுவான போராட்டமாக உருவெடுத்த நிலையில், போராட்டத்தைக் கட்டுப்படுத்த தடியடி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் இறங்கியது அப்போதைய அகாலிதள அரசு.

ஆட்சி மாற்றத்துக்குப் பின் இதுகுறித்து சிறப்பு விசாரணைக் குழுவொன்றை அம்ரீந்தர் சிங் அமைத்தார். அகாலி தளம் ஆட்சியிலிருந்தபோது நடந்த இச்சம்பவத்தில், இன்றுவரை அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.… முன்னாள் முதல்வர் குடும்பத்தினர் மீது அம்ரீந்தர் சிங் மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதாக முணுமுணுப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து காங்கிரசில் இணைந்த சித்து, உண்மையான குற்றவாளிகளை முதல்வர் தப்பிக்கவிடுவதாக அம்ரீந்தர்சிங் மேல் வலுவான குற்றச்சாட்டைக் கிளப்பினார்.

தவிரவும், பஞ்சாப்பில் போதைப்பொருள் விற்பனை பெரிய இடைஞ்சல்கள் ஏது மின்றி தொடர்ந்துவருகிறது. கடந்த அகாலிதள ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரச் சனைகளில் போதைப்பொருள் விற்பனையும் ஒன்று. ஆட்சி மாறியும் காட்சி பெரிதாக மாறவில்லை.

கட்சிக்குள் முதல்வர் அம்ரீந்தர் சிங்குக்கு எதிராகவும் எதிர்ப்புக் குரல்கள் சமீபமாக வலுத்து வருகின்றன. நவ்ஜோத் சிங் சித்து, ரந்தாவா, பர்கத் சிங், மேலும் சில எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கினர். அவர்கள் தங்களுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்களைக் கூட அணி திரட்டத் தொடங்கினர். இத னைச் சமாளிக்க சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமை யில் குழு அமைத்தார். கட்சியின ரின் குரல்களைப் பட்டியலிட்டு தலைமைக்கு ஒரு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டது.

மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான குழு அமைக் கப்பட்ட பின் விவகாரத்தில் பலமாகக் குரல்கொடுத்த சிலர், தற்சமயம் தங்கள் சத்தத்தைக் குறைத்துள்ளனர். சித்துவே கூட தன் குற்றச்சாட்டின் வேகத்தைக் குறைத்துள்ளார். சித்துவை தன் பக்கம் இழுப்பதில், அம்ரீந்தர் சிங் தற்காலிகமாக வெற்றிபெற் றுள்ளார். எனினும் பிரச்சனை முற்றிலுமாக முடங்கிவிடவில்லை என்பதுதான் உண்மை.

ஆட்சிக்கு வந்த ஜோரில், அம்ரீந்தர் சிங் ரூ.5000 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். யார் பயனாளிகள் என்பதை அதிகாரிகளே முடிவு செய்தனர். பயனாளிகளின் வங்கிக் கணக்கிலேயே பணம் போடப் பட்டது.

ஆனால் தேர்தலை எதிர்கொள்வது கட்சியினர், பெயர் வாங்குவது அதிகாரிகளா என காங்கிரஸுக்குள் அதிருப்தி அலை எழுந்தது. அதாவது, விவசாயிகள் திருப்தி- அரசியல்வாதிகள் அதிருப்தி என்று விஷயம் தலைகீழாக மாறியது.

g

நில அபகரிப்பு வழக்கு, மணல் கடத்தல், போதைப் பொருள், மதுக் கடத்தல் விவகாரங்களில் தொடர்புடைய கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீது தக்க ஆதாரங்களுடன் தரப்பட்ட புகார்களில், தொடர்புடை யவர்கள் மீது முதல்வர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி விவகாரத்திலும் மாநிலத்தில் அதிருப்தி நிலவி வருகிறது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆளும் மாநிலமென்பதால் மாநிலத்துக் கான தடுப்பூசி ஒதுக்கீடு குறை வாக இருக்கும் நிலையில், அந்த தடுப்பூசிகளும் தனியார் மருத் துவமனைகளுக்கே ஒதுக்கப் படுகின்றன. மாநில அரசு இலவச தடுப்பூசி அளிப்பதற்குப் பதில், தனியாருக்கு விற்பதிலேயே ஆர் வம் காட்டுவதாக அகாலி தளம் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளது.

போதாக்குறைக்கு மாநில அரசின் கடன் சுமை வேறு, புதிய திட்டங்களை அறிமுகப் படுத்தவோ, சலுகைகளை அறிவிக்கவோ இடைஞ்சலாக உள்ளது. மத்தியில் காங்கிரஸும் இல்லாத நிலையில், பா.ஜ.க. அரசிடமிருந்து தேவையான நிதிகளைப் பெறுவதும் சவாலாக அமைந்துள்ளது.

இத்தனை இடைஞ்சல் களைத் தாண்டித்தான், காங் கிரஸை தேர்தல் களத்துக்கு அம்ரீந்தர் சிங் அழைத்துச் சென்று வெற்றிகளைக் குவித்தாக வேண்டும்.

காங்கிரஸுக்கு வலுவான ஆதாரமாக உள்ளது, வேளாண் சட்டத்துக்கு எதிரான விவசாயி களின் போராட்டம்தான். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் விவசாயி களின் போராட்டம், பா.ஜ.க. வுக்கு எதிராக ஒட்டுமொத்த பஞ்சாப் மக்களின் கோபத்தைத் திருப்பியிருக்கிறது.

அதேசமயம், உள்ளூர்ப் பிரச்சனைகளால் அகாலி தளம், ஆம் ஆத்மி தரப்பின் பலம் அதிகரித்து வருகிறது. எதிர்க்கட்சி பிரமுகர்களை விலைக்கு வாங்கும் உத்தியை பஞ்சாப் தேர்தலை யொட்டி பா.ஜ.க. நடத்துமெனில் அதுவும் காங்கிரஸுக்கு இக் கட்டாக முடியலாம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கேப்டன் அம்ரீந்தர்சிங், இந்த இக்கட்டுகளை எப்படிச் சமாளிக்கிறார் என பொறுத் திருந்து பார்க்கலாம்.

nkn230621
இதையும் படியுங்கள்
Subscribe