"ஹலோ தலைவரே... மழையில் சென்னை தத்தளித்ததற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட் சிட்டி ஊழல்தான்னு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓப்பனா குற்றம் சாட்டி யதை கவனிச்சீங்களா?''”
"ஆமாப்பா.. இதைப் பற்றி நம்ம நக்கீரனில் போன முறை வந்த ஸ்பெஷல் கவர் ஸ்டோரியையும் படிச் சேம்ப்பா...''”
"கவர்னர்கள் மாநாட்டில், மாநில அரசு திட்டங்கள் தொடர்பா கவர்னர்கள் தனிக் கவனம் செலுத்த ணும்னு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் பேசுவதற்கு ஒரு நாள் முன்னாடி, அ.தி.மு.க ஆட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல் பற்றி ஸ்டாலின் குற்றம் சாட்டினாரு. இதுவும் கவர்னர்கள் மாநாட்டில் கவனத்தை ஈர்த்திருக்கு. இந்த ஊழலை முழுதாகக் கிளறி, உரியவர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்கணும்னு, ஒரு பெரிய சி.பி.ஐ. டீமையே சென்னைக்கு அனுப்பி இருக்கு. இந்த ஸ்மார்ட் சிட்டிக்கான முழு டெண்டரையும், அப்போதைய உள்ளாட்சித்துறை மந்திரியான வேலுமணி, தன் சகோதரர் அன்பரசன் மற்றும் தனது நண்பர்கள் பெயரில் எடுத்துக் கிட்டாராம். பார்க்கிங் காண்ட் ராக்ட்டைக் கூட மற்றவர் களுக்கு விட்டுக் கொடுக்க லையாம்.''
"ம்...''”
"இப்படி முழுக்க முழுக்க தனக்கு வேண்டியவர்கள் பெயரில் பல நூறு கோடிக்கான காண்ட் ராக்ட்டை எடுத்துக்கொண்ட வேலுமணி டீம், தரமற்ற வேலைகளைச் செய்ததோடு, சென்னை தி.நகர் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால்களை எல்லாம் டேமேஜ் பண்ணிடிச்சி. அத னால்தான் அங்கே அவ்வளவு வெள்ளம். இந்த ஊழல் விவகாரத்தில் வேலுமணியோடு, மாஜிக்களான தங்கமணி, வீரமணி, காமராஜ், மற்றும் எடப்பாடி உள்ளிட்ட பலரும் சம்பந்தப்பட்டிருக்காங்களாம். எடப்பாடியின் பி.ஏ.க்கள் சிலரும் இந்த ஊழல் பட்டியலில் இருக்காங்க. ஆதாரங்களோட அவர்களைக் கைது செய்யவும், வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கு. அதனால் அதிரடிக் காட்சிகளை விரைவில் எதிர்பார்க்கலாம்னு டெல்லித் தரப்பு சொல்லுது. அதேபோல் பொள்ளாச்சி காமக் கொடூர வழக்கிலும் தீவிரம் காட்டும்படி டெல்லியில் இருந்து உத்தரவு வந்திருக்குதாம்.''”
"அமித்ஷா கூட்டிய தென்மண்டல வளர்ச்சிக்கான கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கலையே?''”
"ஆமாங்க தலைவரே, தென் மண்டல வளர்ச்சிக்கான கவுன்சில் கூட்டத்தை 14-ந் தேதி திருப்பதியில் கூட்டினார் அமித்ஷா. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதா? வேண் டாமா?ன்னு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் முதலில் ஆலோசனை நடந்தது. கடைசியில், அவர் கலந்துக்குவார்னு அமித்ஷாவுக்கு சொல்லப்பட்டது. அதனால் அந்தக் கூட்டத்தில் ஸ்டாலின் என்ன பேசுவார்? என்னென்ன கோரிக்கையை வைப்பார்னு முன்னதாகவே தெரிஞ்சிக்க ஆசைப்பட்டு, அது பற்றி விசாரிக்கவும் ஆரம்பித்தாராம் அமித்ஷா. ஆனால், தமிழகத்தை முற்றுகையிட்ட திடீர் மழை வெள்ளம் காரணமாக, கள ஆய்வுப்பணியில் முதல்வர் இறங்கிட்டார். அதனால் அவரால் அந்தக் கூட்டத்தில் நேரில் கலந்துக்க முடியாமல் போயிடிச்சி. தமிழகத்தின் சார்பில் அமைச்சர் பொன்முடி கலந்துக்கிட்டாரு.''”
"தமிழகத்தில் பல ஊர்களிலும் பா.ஜ.க.வுக்காக அவசர கதியில் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டு வருதே?''”
"தமிழகத்தின் பெரும்பாலான ஊர்களில் தி.மு.க.வுக்கு கட்சி அலுவலகங்கள் இருப்பதை கவனித்த பா.ஜ.க. தேசியத் தலைமை, கட்சி வளர்ச்சிக்கு இது முக்கியம்னு உணர்ந்து, முதற்கட்டமாக அனைத்து மாவட்டத்திலும் பா.ஜ.க.வுக்கான கட்சிக் கட்டிடங் களைக் கட்டணும்னு சில வருடங்களுக்கு முன்பே மாநிலத் தலைமைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி அலுவலகத்தைக் கட்ட இடம்தேடி நிர்வாகிகள் அலைஞ்சாங்க. அந்த வகையில், தற்போது நெல்லை, திருப்பூர், திருப்பத்தூர் உள்பட 17 மாவட்டங்களில் இடம் வாங்கி, பா.ஜ.க. வுக்கு கட்சி அலுவலகம் கட்டப்பட்டிருக்கு. இதை யெல்லாம் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, வரும் 24-ந் தேதி திருப்பூருக்கு வந்து அங்கி ருந்தபடியே எல்லா கட்டடங் களையும் காணொலி வாயிலாகத் திறந்துவைக்க இருக்கிறார்.''”
"அதோடு கட்சியின் மாநில செயற்குழுவைக் கூட்டவும் அண்ணாமலைக்கு அவர் உத்தரவிட்டிருக்கிறாராம்.''”
"ஓ...''”
"அண்ணாமலைக்கு எதிராக சமீபத்தில் பல புகார்களை ஜே.பி.நட்டாவுக்கும், அமித்ஷா வுக்கும் தமிழக பா.ஜ.க தலை வர்கள் அனுப்பி இருப்பதால், இதுகுறித்து அவரிடம் நட்டா தீவிர விசாரணை நடத்து வாருன்னும் சொல்லப்படுது. ஆனால் அண்ணாமலையோ, எல்லாரையும் வசியம் பண் ணிடுவேன். அத னால் நட்டா எனக்கு ஃபிட்டா ஆயிடுவார்னு சொல்லிக்கிட்டு இருக்கிறாராம்.''”
"சசிகலா பக்கம் சாய்ந்திருந்த ஓ.பி.எஸ்., யூ-டர்ன் ஆகிறாரே?''”
“கட்சியின் தலைவரா எடப்பாடி ஆகிவிடக்கூடாதுன்னு அவரையே குறிவைத்திருந்த ஓ.பி.எஸ்., அவரைக் கவிழ்க்க சசிகலாதான் லாயக்குன்னு முதலில் கணக்குப் போட்டாராம். அவரைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு கட்சியின் ரிமோட்டை கைப்பற்றலாம் என்பதும் அவர் நினைப்பாக இருந்ததாம். ஆனால், சசி தரப்போ, அவரைப் பழைய அடிமையாகவே ட்ரீட் பண்ணியதாம். அதனால், அவருக்கு இவரே பெட்டர்னு முடிவெடுத்து எடப்பாடி பக்கம் மறுபடியும் அவர் கரை ஒதுங்கிவிட் டாராம். டிசம்பருக்குள் கட்சியின் பொதுக்குழுவைக் கூட்டவேண்டும். சசிக்கு இடம் கொடுக்காமல் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஆகிடணும்னு குறியா இருக்கும் எடப்பாடியின் கையைக் கெட்டியாப் பிடிச்சிக் கிட்டாராம் ஓ.பி.எஸ். தனக்கு பழையபடி கட்சியின் பொருளாளர் பதவியைக் கொடுத்தால் கூடப் போதும் என்பது ஓ.பி.எஸ்.சின் எதிர்பார்ப்பாம். எடப்படியோ, அவரை அவைத் தலைவராக்கி உட்காரவைக்க நினைக்கிறாராம். அந்தக் கூடாரத்தில் இன்னும் முழுக் குழப்பமும் தீரலை.''”
"தி.மு.க.வுக்கு எதிராகக் காங்கிரஸில் குரல் எழுந்திருக்கே?''”
"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக, சத்தியமூர்த்திபவனில் கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டம், மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, கட்சியின் மேலிடப் பொறுப் பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகி யோர் முன்னிலை யில் நடந்தது. இதில் பேசிய வேளச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசன் மௌலானா, கள்ளக்குறிச்சியில் சுயேட்சையாக காங்கிரசைச் சேர்ந்த சிலர் போட்டியிட்டனர். அவர்களில் 3 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அவர்களை தி.மு.க.வில் சேரச் சொல்லி, மிரட்டி வருகின்றனர். இதனை கட்சித் தலைமை கவனிக்கவேண்டும் என்று புகார் கூறினார். எனிலும், இதை எவரும் பெரிதாக எடுத்துக்கலையாம்.''
"காசியில் பிரேமலதா சிறப்பு பூஜை நடத்தியிருக்காரே?''”
"உண்மைதாங்க தலைவரே, உடல்நலக் குறைவால் தீவிர அரசியலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்து வருகிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். கொரோனாவின் வேகம் சர்வதேச அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவரை மருத்துவப் பரிசோதனைகளுக்காக லண்டனுக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அவர்களது குடும்ப மருத்துவர்களோ, நீண்ட தூரம் விமானப் பயணம் செய்ய அவரது உடல்நிலை ஒத்துழைப்பது கஷ்டம். அதனால் அவருக்கு கொடுக்கக்கூடிய சிகிச்சைகளை இங்கேயே கொடுப்போம் என்று சொன்னதால், லண்டன் பயணம் ரத்து செய்யப் பட்டுவிட்டது. இந்த நிலையில், விஜயகாந்த்தின் உடல்நலத்திற்காக காசிக்கு சென்று, சிறப்பு வழிபாடு செய்யும்படி, அவரது குடும்ப ஜோதிடர் சொன்னதால், தன் மகன் விஜயபிரபாகரனுடன் காசிக்குப் போய் ஆகவேண்டியதைச் செய்திருக்கார் பிரேமலதா.''”
"கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி தரப்பு மறைக்க நினைத்த தெல்லாம் வெளியே வருதேப்பா?''”
"கனகராஜ் மீது காரை மோதிய டிரைவர் ரபீக்கையும், அந்தக் காரின் உரிமையாளர் மல்லிகா நல்லுசாமியையும், விசாரணை டீம் கடுமையாக விசாரிக்கிது. இனி தப்ப முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்ட அவங்க ரெண்டு பேரும், உண்மையை முழுதாகச் சொல்லிவிடு கிறோம்னு சொல்றாங்களாம். இதையறிந்த எடப்பாடி தரப்பு, இருக்கும் சிக்கல்கள் போதாதா? இதுவேறா?ன்னு திகிலில் இருக்குதாம்.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். பள்ளி மாணவிகளுக்கு பாலியில் ரீதியிலான டார்ச்சர்களைக் கொடுத்து, கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சுஷில்ஹரி பள்ளி சிவசங்கரனின், அந்தரங்க அறை இன்னும் சோதனை செய்யப்படவே இல்லை. காரணம், இந்த வழக்கை விசாரித்துவந்த சி.பி.சி.ஐ.டி. பிரிவு டி.எஸ்.பி.யான குணவர்மன்தானாம். சிவசங்கரனுக்கு சாதகமாகவே நடந்து வந்த அவரை, கார்ப்பரேசனுக்கு மாற்றிவிட் டார்கள். இப்போது விசாரணை டீம், குணசேகருக்கு எதிரான எவிடன்ஸுகளோடு, அவரை விசாரிக்க, அவருக்கு சம்மன் அனுப்பியிருக்குதாம். இந்த நிலையில் மற்றொரு முன்னாள் மாணவி கொடுத்த புகாரின் பேரில், சிவசங்கரன் மீது மற்றொரு போக்ஸோ வழக்கும் பதிவாகியிருக்குதாம். இப்ப சிவசங்கரின் கைரேகைப் பதிவுமூலம் மட்டுமே திறக்கக்கூடிய அவரது ஆசிரம அந்தரங்க அறையைத் திறக்க, அவரை அங்கே அழைத்துச் செல்லவும் முயற்சி நடக்குது.'' ”