Advertisment

அப்பல்லோவுக்காக ஆறுமுகசாசி கமிஷனை முடக்கி அமித்ஷா! சசியின் ஒரு டஜன் வீடியோ லிஸ்ட்!

ss

""ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் மறுபடியும் நாகரிக அரசியல் துளிர்விட ஆரம்பிச்சிருக்கே...''

Advertisment

""எடப்பாடி பழனிசாமி அம்மா இறந்ததை துக்கம் கேட்க, முதல்வர் வீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் போனதைத்தானே சொல்றே?''

stalin

""ஆமாங்க தலைவரே, சிலுவம்பாளையம் கிராமத்தில் இருந்த எடப்பாடி, சென்னை வந்ததும் க்ரீன்வேஸ் சாலை வீட்டுக்குப் போய், அவரோட அம்மா படத்துக்கு மலர்தூவி, எடப்பாடியிடம் துக்கம் விசாரித்தார் ஸ்டாலின். இருவரும் 20 நிமிடங்கள் நல விசாரிப்புடன் பல விசயங்களைப் பகிர்ந்துக்கிட்டாங்க. அப்ப, தனது தாயாரின் கடுமையான உழைப்பையும், அளவு கடந்த அன்பையும் பற்றி ஸ்டாலிடனிடம் நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கார் எடப்பாடி. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியொரு அரசியல் நாகரிகம் இருந்திருக்குமான்னு அ.தி.மு.க தரப்பிலேயே கேட்கிறாங்க.''

Advertisment

""கவர்னர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்னு பலரும் ஸ்டாலினைத் தொடர்ந்து க்ரீன்வேஸ் சாலைக்குப் போயிருந்தாங்களே?''’

""ஆமாங்க தலைவரே, திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் போன போதும், அவரை எழுந்து நின்னு வரவேற்ற எடப்பாடி, அவரிடமும் தன் அம்மாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துக்கிட்டாராம். சசிகலா பற்றி எடப்பாடி விசாரிப்பாராங்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த சமயத்தில் விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதா எடப்பாடிக்கு போன் வர, உடனே அவர் தஞ்சைக்குப் போக ரெடியானாராம்.''

""சசிகலா, ஜனவரிக்கு முன்பே ரிலீசாவார்ன்னு மன்னார்குடித் தரப்பு அடிச்சி சொல்லுதே?''

sasi

""சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கட்ட, அவங்க தரப்பு ரெடியா இருக்குதாம். டெல்லியில் சில டீலிங் நடந்துக்கிட்டிருக்கு.

""ஹலோ தலைவரே, தமிழ்நாட்டில் மறுபடியும் நாகரிக அரசியல் துளிர்விட ஆரம்பிச்சிருக்கே...''

Advertisment

""எடப்பாடி பழனிசாமி அம்மா இறந்ததை துக்கம் கேட்க, முதல்வர் வீட்டுக்கு எதிர்க்கட்சித் தலைவர் போனதைத்தானே சொல்றே?''

stalin

""ஆமாங்க தலைவரே, சிலுவம்பாளையம் கிராமத்தில் இருந்த எடப்பாடி, சென்னை வந்ததும் க்ரீன்வேஸ் சாலை வீட்டுக்குப் போய், அவரோட அம்மா படத்துக்கு மலர்தூவி, எடப்பாடியிடம் துக்கம் விசாரித்தார் ஸ்டாலின். இருவரும் 20 நிமிடங்கள் நல விசாரிப்புடன் பல விசயங்களைப் பகிர்ந்துக்கிட்டாங்க. அப்ப, தனது தாயாரின் கடுமையான உழைப்பையும், அளவு கடந்த அன்பையும் பற்றி ஸ்டாலிடனிடம் நெகிழ்ச்சியோடு சொல்லியிருக்கார் எடப்பாடி. ஜெயலலிதா இருந்திருந்தால் இப்படியொரு அரசியல் நாகரிகம் இருந்திருக்குமான்னு அ.தி.மு.க தரப்பிலேயே கேட்கிறாங்க.''

Advertisment

""கவர்னர், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள்னு பலரும் ஸ்டாலினைத் தொடர்ந்து க்ரீன்வேஸ் சாலைக்குப் போயிருந்தாங்களே?''’

""ஆமாங்க தலைவரே, திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் போன போதும், அவரை எழுந்து நின்னு வரவேற்ற எடப்பாடி, அவரிடமும் தன் அம்மாவைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துக்கிட்டாராம். சசிகலா பற்றி எடப்பாடி விசாரிப்பாராங்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. அந்த சமயத்தில் விவசாயத்துறை அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதா எடப்பாடிக்கு போன் வர, உடனே அவர் தஞ்சைக்குப் போக ரெடியானாராம்.''

""சசிகலா, ஜனவரிக்கு முன்பே ரிலீசாவார்ன்னு மன்னார்குடித் தரப்பு அடிச்சி சொல்லுதே?''

sasi

""சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோ ருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் கட்ட, அவங்க தரப்பு ரெடியா இருக்குதாம். டெல்லியில் சில டீலிங் நடந்துக்கிட்டிருக்கு. ஜனவரிக்கு முன்பே என்னை ரிலீஸ் பண்ணனும்னு சசிகலா கோரிக்கை வச்சிக் காத்திருக்காராம். டெல்லி சிக்னல் கொடுத்ததும், அபராதத் தொகையைக் கட்டிட்டு, சசி டீம் வெளியே வந்துடும்ன்னு அவங்க தரப்பு நம்பிக்கையாச் சொல்லுது.''

""ஜெயலலிதா தொடர்பான வீடியோக்கள் சசிகலா வசம் இருக்குன்னு நம்ம நக்கீரன்லயே கட்டுரை வந்துருக்கே?''

""ஜெ. அப்பல்லோவில் அட்மிட்டான நேரத்தில், அவர் டாக்டர்களிடம் பேசுறப்ப, சினிமா தியேட்டர் முன் சீட்டில் உட் கார்ந்துக்கிட்டு விசிலடிக்கிற மாதிரி என் மூச்சுச் சத்தம் எனக்கே கேக்குதுன்னு சொன்னாராம். அதே போல் சிங்கப்பூரிலிருந்து வந்த டீம் அவருக்கு பிஸியோதெரபி சிகிச்சை கொடுத்தப்ப, தினசரி அவர் கால்களைத் தூக் கும் உயரத்தை அளந்து குறித்துக் கொண்டதாம். அவர் இருந்த அறையில் வைக்கப் பட்டிருந்த டி.வி.யில் ஜெய் ஹனுமான் சீரியலைப் பார்க்கும் ஜெ. அந்த நேரத்தில் கட்சி பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் பிறர் பற்றியும் கருத்துப் பரிமாறிய வீடியோக் காட்சி களும் இருக்கிறதாம். இப்படி ஒரு டஜன் வீடியோக்களை சசிகலா ரெடியா வச்சிருக்காராம். இதையெல்லாம் வருகிற தேர்தல் களத்தில் பயன்படுத்துவது பற்றி ஆலோசிக்கிறாராம்.''’’

""ஜெ.வின் மர்ம மரணத்தை விசாரித்து வந்த நீதிபதி ஆறுமுக சாமி, தனது விசாரணைக்கு எதிராக அரசுத் தரப்பே இருந்ததுன்னு முதல்வர் எடப்பாடிக்குக் கடிதம் எழுதியிருக்காரே?''

ss""ஆமாங்க தலைவரே, அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ தரப்பு தடை வாங்கி 18 மாதங்கள் ஆகியும், அதை உடைப்பதில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் ஆர்வம் காட்டலைன்னு குற்றச்சாட்டை வச்சிருக்கார். ஆறுமுகசாமி கமிஷனுக்கு தடை விதிக்கனும்னு அப்பல்லோ தரப்பு உச்சநீதி மன்றத்துக்குப் போகக் காரணமே, விசாரணையில் ஆஜரான பலரும் அந்த மருத்துவமனை ஜெ.வுக்கு உரிய சிகிச்சையை வேண்டுமென்றே தர வில்லைங்கிற ரீதியி லேயே வாக்குமூலம் கொடுத்ததால்தானாம். விசாரணை அறிக்கையில் தாங்கள் கண்டிக்கப்பட்டால் அது மருத்துவமனைக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்னு பயந்துதான், அப்பல்லோ நிர்வாகம் உள்துறை அமைச்சர் அமித்ஷா மூலம் மூவ் செய்திருக்கு. உச்சநீதிமன்றம் ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்குத் தடை விதித்த தோடு, அந்த கமிஷனை அமைத்ததற்கான அரசாணைக்கும் தடை விதித்தது. இதை உடைக்க வேண்டிய எடப்பாடி அரசு கம்முன்னு இருந்ததற்கு காரணம், அமித்ஷாவிடமிருந்து வந்த உத்தரவுதானாம்.''

amtsha

""அம்மா அரசுன்னு சொல்லிக்கிட்டே... அம்மா மரண மர்மத்தையே குழி தோண்டி புதைக்குது எடப்பாடி அரசுன்னு சொல்லு. தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர் களையும், தி.மு.க.வின் அரசியல் ஆலோசனைக் குழுவான ஐ-பேக்தான் தேர்ந்தெடுக்கும்ன்னு சொல்லப்படுதே?''

""பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 5 பேரைக் கொண்ட தி.மு.க. வேட் பாளர் பரிந்துரைப் பட்டியல் தயாரிக் கப்பட்டது. இதை 3 பேர் பட்டியலாக் கும் வேலையும் நடக்குது. தி.மு.க.வில் சீட் வாங்க நினைக்கும் பலரும் ஐ-பேக் டீமை பிடிப்பதில் மும்முரமா இருக்காங்க. இதைப் புரிஞ்சிக்கிட்டு, ஐபேக் பட்டியலில் உங்கள் பெயரையும் இடம்பெறச் செய்கிறோம்னு அரசிய லுக்கு அப்பாற்பட்ட கும்பல் ஒன்றும், வேட்பாளராகும் ஆசையில் உள்ள தி.மு.கவினரிடம் வரு மானம் பார்க்க அலைகிறதாம். இந்த நேரத்தில், iகூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும், அந்தந்தக் கட்சிகளிடம் தலா 3 பேர் கொண்ட பட்டியலை வாங்கி, நாமே தேர்ந்தெடுக்க லாம்ங்கிற யோசனையை ஐபேக்கின் பாஸான பிரசாந்த் கிஷோர், ஸ்டாலினிடம் சொல்லியிருப்பதா தகவல் கசிய, நல்லா இருக்கிற கூட்டணிக்கு வேட்டு வைப்பதான்னு தி.மு.க. சீனியர் களிடமும், கூட்டணியினரிடமும் சலசலப்பு ஏற்பட்டிருக்குது.''

""தாங்கள் நடத்திவரும் டிராக்டர் பேரணிக்கு எடப்பாடி அரசு இடையூறு தருதுன்னு காங்கிரஸ் தரப்பு குற்றம்சாட்டுதே?''

""மத்திய அரசின் வேளாண் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுதும் காங்கிரஸ், டிராக்டர் பேரணியை நடத்திக்கிட்டு இருக்கு. திருவண்ணா மலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் டிராக்டர் பேரணி நடந்தது. இதேபோல் தேனியில் இருந்து டெல்டா மாவட் டங்கள் வரை இந்தப் பேரணியை நடத்தவும் காங்கிரஸ் ரெடியாச்சு. இதற்காக இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் குழுவினர் 200-க்கும் மேற்பட்ட டிராக்டர்களை வாடகைக்குப் பேசிவச்சாங்க. டிராக்டர் பேரணி விவசாயிகளிடம் பாப்புலராவதை அறிந்த மத்திய அரசு, எடப்பாடி அரசை எச்சரித்தது. இதைத் தொடந்து தேனி மாவட்ட காவல்துறை, டிராக்டர்களை வாட கைக்கு கொடுத்த விவசாயிகளை மிரட்டியதோடு, அந்தப் பேரணிக்கும் அதிரடியாகத் தடை விதித்தது. இதையும் மீறி அழகிரி தலைமையில் காங்கிரஸார் 19-ந் தேதி பேரணியை நடத்த, அவர்களைக் கைது செய்து, அன்று மாலையே விடுவிச்சிருக்கு எடப்பாடி அரசு.''

""அண்மையில் காலமான அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல், கடைசி நாட்களில் மன உளைச்சலில் இருந்தார்னு சொல்லப் படுதே?''

dd

""அ.ம.மு.க. நிதியில் இருந்து எம்.பி. தேர்தலுக்காக 100 கோடி ரூபாய் செலவிடப் பட்டதாம். இதில் 14 கோடிக்கு முறையான கணக்கு வழக்குகள் இல்லையாம். இந்த விவகாரத்தில் தினகரனுக்கும் வெற்றிக்கும் இடையில் அதிருப்தி இருந்ததாம். அதனால் அவரை தினகரன் அண்மைக் காலமாக புறக்கணித்ததாகவும் சொல்றாங்க. வெற்றிவேல் அவரை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்ட நேரத்தில், காஞ்சி மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் கரிகாலனுக்கு அப்பாயின்ட்மெண்ட் கொடுத்து அவருடன் தினகரன் நீண்ட நேரம் செல விட்டாராம். இதெல்லாம் அ.தி.மு.கவுக்கே திரும்பிடலாமான்னு நினைச்ச வெற்றியை அப்செட்டாக்கி, உடல்நிலையையும் பாதிச் சிடிச்சின்று அவர் தரப்பில் சொல்றாங்க. இன்னும் சிலரோ, வெற்றிவேல் மரணத்துக்கு தினகரன் கண்ணீர் கசிய விடுத்த இரங்கல் செய்தியில் அவர் உள்ளத்தைப் பார்க்கலாம்னு சொல்றாங்க.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். 2ஜி மேல்முறையீட்டு வழக்கு, ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு, கௌதம சிகாமணி சொத்து முடக்கம்னு மோடி அரசின் உத்தரவுப்படி வேகம் காட்டும் சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும், தேர்தலுக்கு முன்பாக மு.க.ஸ்டாலின் மீது ஸ்ட்ராங்கா வழக்குப் போட்டு அலைக்கழிக்க தீவிரமா வேலை செய்றதா டெல்லித் தகவல்.''’’

___________

இறுதிச்சுற்று

புலிகளுக்கு விதித்த தடை நீக்கம்!

பிரிட்டனில் 2001ஆம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டு, அது நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2018ல் பிரிட்டிஷ் அரசின் உள்துறை நீட்டித்த தடையை எதிர்த்து, நாடு கடந்த தமிழீழ அரசு வழக்குத் தொடர்ந்தது. இதனை விசாரித்த பிரிட்டன் நீதிமன்றத்தின் மேல்முறையீட்டு ஆணையம், பயங்கரவாத நடவடிக்கை களில் தற்போது புலிகள் ஈடுபடவில்லை என்ற மனுதார ரின் தரப்பின் வாதங்களை கவனத்தில் கொண்டதுடன், தடை நீட்டிப்புக்கான காரணங்களாக பிரிட்டன் உள்துறை முன்வைத்த வாதங்களை நிராகரித்து, தடை விதித்தது செல்லாது எனத் தீர்ப்பளித்தது. பிரிட்டன் அரசு 28 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகெங்கும் உள்ள புலம் பெயர் தமிழர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

-கீரன்

nkn241020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe