""ஹலோ தலைவரே, திகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஒருவழியாக ஜாமீனில் வெளியே வந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருக்கார்.''’
""சிறையில் இருந்து வெளியில் வந்ததுமே நாடாளுமன்றத்துக்குப் போன முன்னாள் நிதியமைச்சரான அவர், வெங்காய விலை பற்றிப் பேசிய இந்நாள் நிதி யமைச்சர் நிர்மலாவுக்கு பதிலும் கொடுத்திருக்காரே!'’
""ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிக்கிய ப.சி.யை சி.பி.ஐ. மற்றும் அமலாக் கத்துறை மூலமா முடிந்தளவு ஜெயிலிலேயே வைக்க நினைத்தது பா.ஜ.க. அரசு. அப்படியிருந்தும் நீதிபதி பானுமதி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஜாமீன் கொடுத்ததையடுத்து, 4-ந் தேதி ப.சி. விடுவிக்கப்பட்டி ருக்கார். திகாரிலிருந்து வெளியே வந்த அவர், தோல் சுருங்கிய நிலை யில் மிகவும் இளைத் துக் காணப்பட்டார். விடுதலையானதும் சோனியாவை சந்தித் தார். நெகிழ்வோடு வரவேற்ற சோனியா, முதல்ல, ஹெல்த் செக் கப் செஞ்சிக்கங்கன்னு அக்கறையா சொன்னார். நாடாளுமன்ற முகப்பில் வெங்காய விலைக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலும் ப.சி. கலந்துகிட்டார்.''’
""போலி என்கவுண்டர் வழக்கில் அமித்ஷாவை 104 நாட்கள், காங்கிரஸ் ஆட்சியில் ப.சி. சிறையில் அடைத்துவைத்தார். அதை ஈடுகட்டும் விதமா அமித்ஷா, ப.சி.யை இப்ப 106 நாள் உள்ளே வச்சிட்டாரே?''
""ஆமாங்க தலைவரே, ப.சி. கைதான போதே, அமித்ஷா சிறையில் இருந்த நாட்களுக்குக் குறையாமல் ப.சி. சிறையில் இருப்பார்னு நம்ம நக்கீரன் சொல்லியிருந்தது. இப்ப விடுதலையான ப.சி. கிட்ட சோனியா, பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை நாடு முழுக்க டூர் போய் அம்பலப்படுத்துங்கன்னு சொல்லியிருக்காராம். ப.சி.யும் ரெடியாக, அவரை வேறு ஏதாவது வழக்கில் முடக்க முடியுமான்னு இப்பவே தாயம் உருட்ட ஆரம்பிச்சிடுச்சாம்.''’
""உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை, வேட்பாளர் பட்டியலை அ.தி.மு.க.தான் முதலில் ரெடி பண்ணியிருக்குன்னு தகவல் வருதே?''’
""ஆமாங்க தலைவரே, அமைச்சர்கள், மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள்ன்னு அவங்கவங்க ஏரியாவில் இன்னின்னாருக்கு சீட் கொடுக்கணும்னு லிஸ்ட்டை ரெடி பண்ணினாங்க. குறிப்பா அமைச்சர்களே இவங்க இவங் களுக்குத்தான் சீட்டுன்னு ஃபைனல் பண்ணி எடப்பாடிகிட்ட அனுப்பி வச்சிட்டாங்களாம். அதை எல்லாம் பார்த்துத் தொகுத்து, ஒரு அப்ராக்ஸிமேட் லிஸ்ட்டை அ.தி.மு.க. தலைமை ரெடி பண்ணிடுச்சி. இதைக் கையில் வச்சிக்கிட்டுதான் கூட்டணிக் கட்சிகளோட, சீட் ஷேரிங் குறித்துப் பேசணும்ங்கிற முடிவில் அ.தி.மு.க. இருக்கு.''’
""சீட் ஷேரிங் தொடங்கும் முன்பாகவே அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் உரசல் போக்கு அதிகரித்து வருதாமே?''’
""உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க.வுக்கு செல்வாக்குள்ள குமரி மாவட்டத்திலும் தென் மாவட்டங்களிலும் அதற்கு அதிக சீட்டைத் தராமல் செக் வைக்கணும்னு அ.தி.மு.க. தலைமை நினைக்கிது. அதேபோல் உள்ளாட்சி சீட்டுகளில் 80 சதவிகித சீட் வரை தங்களுக்கு ஒதுக்கிக் கொண்டு, மிச்சத்தையே பா.ஜ.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரிச்சிக் கொடுத்துட லாம்ன்னு அ.தி.மு.க. கணக்குப் போட்டு வச்சிருக்கு. அதுபோலவே, வட மாவட்டத்தில் பா.ம.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும், அதிக சீட்டைக் கொடுத்து, சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அவர்களை பலமானவர்களாக ஆக்கிவிடக் கூடாதுன்னும் கவனமா இருக்குது. இதை எல்லாம் கவனிச்ச பா.ஜ.க.வும் பா.ம.க.வும் இப்பவே அ.தி.மு.க.வுக்கு எதிராகக் கைகோத்துக்கொண்டு புதிய வியூகங்களை வகுக்க ஆரம்பிச்சிடுச்சி.''’
""கூட்டணிக்குள் கூட்டணியா?''’
""அ.தி.மு.க.வுடன் உரசல்கள் அதிகமாகி வரும் நிலையில், அன்புமணிக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுங்கன்னு பா.ஜ.க.விடம் பா.ம.க. வலியுறுத்த ஆரம்பிச்சிருக்கு. பா.ஜ.க.வும், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு பா.ம.க.வோடும், ரஜினி, அதற்குள் கட்சியைத் தொடங்கிவிட்டால் அவரோடும் ஒரு வலிமை யான கூட்டணியை உருவாக்கி, அ.தி.மு.க.வை யும் தி.மு.க.வையும் ஒருசேர ஓரம் கட்டிட ணும்னு ஃபார்முலாக்களை வகுத்துக்கிட்டு இருக்குதாம்.''’
""ரஜினி மட்டும்தானா, கமல் இல்லையா?''
""ரெண்டு வருசத்துக்கு முன்பே, புதுக் கட்சியைத் தொடங்கப் போறேன்னு அறிவிச்ச ரஜினி, தொடர்ந்து புதுசு புதுசா படங்களில் நடிச்சிக்கிட்டே இருக்கார். ’கமலின் கலைப் பயணம் 60’ விழாவில் இருந்தே கமலும் ரஜினியும் ஒன்னா சேர்ந்து அரசியலைக் கலக்கப் போறாங்கன்னு விறுவிறு செய்திகள் வெளி வந்த தோட, ரஜினியும் கமலுமே நாங்க இணைஞ்சி அரசியல் செய்வோம்ன்னு சொல்லி, எதிர்பார்ப்பின் அளவை அதிகமாக்கினாங்க. சமீபத்தில்,’"கைதி'’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜை அழைத்து ரஜினி பாராட்டினாரு. இருவரும் சேர்ந்து படம் பண்ணப்போறதாகவும், அதை தயாரிக்கப்போறது கமலின் ராஜ்கமல் பட நிறுவனம்னும் தகவல்கள் கசியுது. இந்தப் படத்தில் ரஜினியுடன் கமலும் நடிப்பாரா? இருவரின் அரசியல் கூட்டணிக்கான ட்ரைலரா இந்தப் படம் இருக்குமாங்கிற டாக் ஆரம்பிச்சிடிச்சி. ரஜினியின் நண்பர்கள் தரப்போ, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே கட்சியைத் தொடங்கிடுவார்ன்னு அழுத் தம் திருத்தமா சொல்லுது.''’
""ரஜினி, கட்சியை ஆரம்பித்தால் அ.தி.மு.க.வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?ன்னு முதல்வர் எடப்பாடி, இப்ப உளவுத்துறை மூலம் ரிப்போர்ட் எடுத்திருக் காராமே?''’
""உண்மைதாங்க தலை வரே, அந்த ரிப்போர்ட்டைப் பார்த்ததும், அதை எடுக்கச் சொன்ன எடப்பாடியே ஆடிப்போயிட்டாராம். காரணம், ரஜினி கட்சியைத் தொடங்கினால் அ.தி. மு.க.வைச் சேர்ந்த அமைச்சர் கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் உள்ளிட்ட பலரும், தேர்தல் நேரத்தில் ரஜினி பக்கம் போயிடு வாங்கன்னு சொல்லப்பட்டி ருக்குதாம். இந்த ஷாக் ரிப்போர்ட் பற்றி முதல்வர் ஆலோசித்ததோடு, பா.ஜ.க.வின் அத்துமீறலை எப்படி சமாளிக்கிறதுன்னும் சீரியஸாக ஆலோசிக்கத் தொடங்கிவிட்டாராம்.''’
""அமைச்சர்கள் சிலர், தன்னை மதிக்கலைங்கிற எரிச்சலும் எடப்பாடிக்கு இருக்குதாமே?''’
""ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வேலுமணி வசம் இருக்கும் சிறப்புத் திட்டங்களுக்கான செயலாக்கத் துறையைத் தானே கவனிக்கலாம்ங்கிற எண்ணத்துக்கு வந்திருக்கார் எடப்பாடி. இதைப் பற்றி வேலுமணியிடம் பேசுனப்ப அவரோ, நான் நல்லாத்தானே கவனிக்கிறேன். இதைப் பத்தியெல்லாம் கவலைப்படாம உங்க துறைகளை நீங்க கவனிங்கன்னு சொல்லிட்டாராம். அதேபோல், கூட்டுறவுத் துறை பணியாளர் நியமனத்தில் ஏகத்துக்கும் குளறுபடின்னு எடப்பாடியிடம் புகார்கள் போயிருக்கு. உடனே துறை அமைச்சரான செல்லூர் ராஜுவிடம் இதுபற்றி அவர் கேட்டிருக்கார். அமைச் சரோ, என் துறையை எப்படிப் பார்க்கணும்ங்கிறது எனக்குத் தெரியும்னு பதில் சொல்லியிருக்கார். இதெல்லாம் எடப்பாடியை மனம் வெதும்ப வச்சிருக்கு. ஆளுங்கட்சிக்குக்குள் நடக்கும் எல்லா விவகாரங்களையும் கூர்ந்து கவனிச்சிக்கிட்டு இருக்குதாம் பா.ஜ.க.''’
""ஓ''’
“""எடப்பாடியோடு முரண்படும் அமைச்சர்களையும் காலம் வரும் போது ரஜினி பக்கம் தாவவச்சி, அ.தி.மு.க.வின் கொஞ்ச நஞ்ச பலத்தையும் உறிஞ்சிட ணும்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. அதேபோல் தி.மு.க.விலும் சலசலப்பை ஏற்படுத்த என்ன வழின்னு பா.ஜ.க. நிறைய யோசிக்கிதாம். 2 ஜி தொடர்பான மேல் முறையீட்டு வழக்குகளைச் சீக்கிரம் விசா ரிக்கணும்னு உச்ச நீதிமன்றம் கெடு விதிச் சிருக்கு. இதை வச்சி, தி.மு.க.வுக்கு நெருக்கடி தரும் ஆலோசனையும் டெல்லியில் நடந் திருக்குது. ரஜினி கட்சி தொடங்கினால், மு.க.அழகிரி அதில் முக்கியமானவரா இருப்பாருன்னும் பேசப்பட்டிருக்கு.''’
""இத்தனை ஆலோசனைகள் நடந்திருக்கிற நேரத்தில் அதே டெல்லியில், 16 அம்ச கோரிக்கை யோடு தி.மு.க. எம்.பி.க்கள் பிரதமர் மோடியை சந்திச்சிருக்காங்களே?''’
""நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வுக்கும் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுக்கும் இடையே ஒரு இணக்கமான போக்கை உருவாக்க ஒரு முயற்சி அங்கே நடந்துக்கிட்டு இருக்கு. இந்த சூழல்லதான், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்தனுப்பிய 16 அம்ச கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை, தி.மு.க. எம்.பி.க்களான டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பிரதமர் மோடியிடம் கொடுத்தாங்க. அப்போது, கலைஞர் எழுதிய "குறளோவியம்' புத்தகத்தையும், கலைஞருக்காகத் தயாரிக்கப்பட்ட நினைவு மலரையும் பரிசளித்தாங்க. புத்தகங்களைத் தன் இரு கைகளிலும் ஏந்தியபடி மோடி போஸ் கொடுக்க, அது பரவலா ஷேர் ஆனது. ஸ்டாலினின் உடல்நலம் குறித்தும் தி.முக. எம்.பி.க்களிடம் அக்கறையாக விசாரித்திருக்கிறார் மோடி.''
""அரசியல் வட்டாரத்தில் இந்த சந்திப்பை எப்படி பார்க்குறாங்க?''
""அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் சந்தேகப் பார்வை அதிகமாகியிருக்குது. மோடியுடன் தி.மு.க. டீல் போட்டிருப்பதா பார்க்குறாங்க. டெல்லியில் என்ன நடக்குதுன்னு முதல்வர் எடப்பாடி விசாரிக்க, டெல்லித் தரப்போ, மத்திய அரசுக்கு எதிராக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை அறிவித்திருந்த ஸ்டாலின், கவர்னரை சந்தித்தவுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றார். காரணம் அந்த சந்திப்பில் சில முக்கிய விஷயங்கள் பேசப்பட்டன. அப்போது தி.மு.க. கொடுத்த புகார்களின் அடிப்படையில் எடப்பாடி அரசுக்கு எதிராக சில நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்று அவரிடம் சொல்லப்பட்டி ருக்கிறது. இதுவும் இப்போது மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்று எடப்பாடிக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இது மேலும் அவரைக் கவலையடையச் செய்திருக்கிறதாம்.''’
""எடப்பாடி அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தில் ஏகப்பட்ட சிக்கலாமே?''’
""உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களைக் கவரணும்னுதான், பொங்கலுக்கான பொருட் களோடு 1000 ரூபாயைப் பரிசா கொடுக்கும் திட்டத்தை அறிவிச்சார் எடப்பாடி. இது அரிசி வாங்கும் கார்டுகளுக்கு மட்டும்தான்னு சொல்லப்பட்டதோட, சர்க்கரை கார்டையும் அரிசி கார்டா மாற்றிக்கலாம்னு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் அரிசிக் கார்டுகளுக்கே கொடுப்பதற்குப் போதுமான அரிசி இல்லைன்னு அதிகாரிகள் தலையைப் பிய்ச்சுக்கறாங்களாம். கார்டு மாற்றும் திட்டத்தால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் திணறிக்கிட்டு இருக்குதாம்.''’
""நானும் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் யூரியா உரம், இங்குள்ள விவசாயிகளுக்கே கிடைக்கலை. கடுமையான தட்டுப்பாடு நிலவுது. இந்த நிலையில் வருவாய்த்துறை, வேளாண்துறை அதிகாரிகள் சிலரின் உடந்தையோடு அது கேரளாவுக்குக் கடத்தப்படுவதாக புகார் எழுந்திருக்கு. இதில் நேர்மையான அதிகாரின்னு பெயர் எடுத்த வருவாய்த்துறைச் செயலாளரான ககன்தீப்சிங் பேடியின் பெயரும் அடிபடுவது தான் பலரையும் திகைக்க வச்சிருக்கு.''’