பிரதமர் மோடி வருகையை யொட்டி அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க., தனது கூட்டணிக் கட்சிகளை உறுதி செய்யும் ஆபரேஷ னில் இறங்கியுள்ளது. அ.தி.மு.க.வை பொறுத்தவரை பா.ஜ.க., பா.ம.க. (அன்புமணி) மட் டும்தான் உறுதிப்படுத்தப்பட்ட கூட்டணியாக இருக்கிறது. தி.மு.க. கூட்டணியைப் போல ஒரு அணியாக மேடையேறும் அளவிற்கு உறுதியாக இல்லை. ஆகவே அதை சரிப்படுத்த, மேலும் புதிய கட்சிகளை சேர்க்க பா.ஜ.க. கடுமையாக முயற்சிகளை எடுக்கிறது. அதில் முதலிடம் பெறுபவர் நடிகர் விஜய். நடிகர் விஜய், கரூர் மரணம் தொடர்பான சி.பி.ஐ. வழக்கில் டில்லியில் ஆஜராகிவருகிறார். அவருடன் ஜான்ஆரோக்கியசாமி என்கிற வியூக அமைப் பாளரும் ஆஜரானார்.
விஜய்யுடன் சி.பி.ஐ. விசாரணை ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, மறுபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்துகொண் டிருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். விஜய்யிடம் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது. முதல் கட்டமாக அ.தி.மு.க. கூடடணியில் இணைய வேண்டும் என விஜய்யிடம் பேசியிருக்கிறார்கள். அதற்கு அவர் எங்களுக்கு 100 சீட் தருவீர்களா என எதிர்கேள்வி கேட்டுள்ளார். 100 சீட் முடியாது என அ.தி.மு.க. தரப்பிலிருந்து பதில் சொல்ல, அடுத்தகட்டமாக 70 சீட், துணை முதல்வர் பதவி என பேரம் நடந்துள்ளது. இந்த பேரமும் படியாமல் போக, கடைசியாக 50 சீட் என விஜய் தரப்பிலிருந்து பேசப்பட்டுள்ளது. அதிலும் ஒரு முடிவு வரவில்லை. 50 சீட் விஜய்க்கு கொடுத்தால், பா.ஜ.க.விற்கு கொடுக் கும் 35 சீட்டுகளில் 10ஐ குறைத்துவிடுவோம். டி.டி.வி.க்கு 10 சீட் கொடுப்பதாக இருக்கிறோம். அதில் 8 சீட்டாக குறையும். பா.ம.க. சீட் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் முடியும் என்றெல்லாம் சீட் பேரம் சென்றுகொண்டிருக் கிறது என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள். அத்துடன், ஒருவேளை விஜய் தனித்துப் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களை பெறுவா ரேயானால், அடுத்து அமையும் அ.தி.மு.க. ஆட்சிக்கு அவர்கள் வெளியிலிருந்து ஆதர வளிக்க வேண்டும் என்பது போன்ற பேரங்களும் பேசப்பட்டு இருக்கிறது.
இவை எதுவும் முடிவுக்கு வரவில்லை. பிரதமர் மோடி தமிழகம் வரும்போது, அவரது மேடையில் டி.டி.வி.தினகரனையும் ஓ.பி.எஸ்.ஸை யும் ஏறவைக்க கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது பா.ஜ.க. கடைசியாக யாரோ ஒருவர் பிரதமர் விழா நடக்கும் மேடையருகே டி.டி.வி.யின் படம் அடங்கிய பேனர் வைக்க, இறுதியில் டி.டி.வி. விழாவில் பங்கெடுக்கிறார் என முடிந்தது. ஆனால் ஓ.பி.எஸ். விழாவில் பங்கெடுப்பது உறுதி செய்யப் படவில்லை. ஓ.பி.எஸ். ஸுக்கு ஷாக் கொடுக்கும் விதமாக அவருடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்களை தி.மு.க.வில் இணைக்க அண்டர்கிரவுண்ட் வேலை களை பார்த்துக்கொண்டி ருக்கிறது. ஜி.கே.வாசனுக்கு 5 சீட் தரப்படலாம் என எடப்பாடியுடன் பேசி முடிக்கப்பட்டது. அந்த சீட் எண்ணிக்கை குறையலாம் என்பதால் அவரும் அப்செட். இதற்கிடையே, பா.ம.க.வின் ராமதாஸிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
இந்நிலையில், காலையில் விஜய், மாலை யில் ஜான்ஆரோக்கியம் என விசாரணையை வகுத்துள் ளது சி.பி.ஐ. ஜான்ஆரோக் கியம் மிகக்கடுமையான விசாரணையை எதிர் கொள்ளப் போகிறார் என சொல்கிறார்கள் சி.பி.ஐ.யை சேர்ந்தவர்கள். ஜான் ஆரோக்கியத்தின் வங்கி பரிவர்த்தனைகளை எடுத்து வைத்துள்ள சி.பி.ஐ. அவரையும், ஆதவ் அர்ஜுனாவையும் அவ்வளவு சீக்கிரம் விசாரணை வளையத்திலிருந்து விடுவிக்கமாட்டார்கள் எனச் சொல்கிறார்கள்.
இதில் ஜான் மீதும், ஆதவ் மீதும் சி.பி.ஐ. கடுமையாக பாய்வதை விஜய் விரும்பவில்லை. ஜானின் வங்கி பணப் பரிமாற்றங்கள் எல்லாம் விஜய்க்காக செய்தவை என்பதால் இது விஜய்க்காக வைக்கப்பட்ட பொறி என்றே அவர் கணக்குப் போடுகிறார்.
விஜய்யிடம் நடக்கும் விசாரணை மிகவும் சீரியஸாகப் போகும் என்பதால் தமிழக அரசியல் வட்டாரங்கள் குறிப்பாக அ.தி.மு.க.வில் விஜய் டீமிலிருந்து யாராவது கைது செய்யப்படு வார்களா? என்கிற கேள்வியுடன் டில்லி தகவல்களை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேரம் முடிந்தால் விஜய் தப்பிப்பார். இல் லையென்றால், விஜய் டீமில் கைதுகள் ஆரம் பிக்கும் என்கிற எதிர் பார்ப்பு அதிகரித்துள் ளது. அது ஜானா, அல்லது ஆதவ் அர்ஜுனாவா? என்பது தான் மர்மமாக இருக் கிறது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்த வர்கள்.
இதற்கிடையே, ஒன்றிய அரசின் இந்த தாக்குதல் பற்றி விஜய் எதுவும் பேசாமல் இருப் பதும் "ஜனநாயகன்' படம் ரிலீஸாகாமல் இருப் பதும் ஒட்டுமொத்த த.வெ.க.வையே சீர் குலைக்க வைத்துள்ளது. தேர்தல் நெருங்கிவரும் இந்த நேரத்தில், அர சியல் நடவடிக்கை எது வும் இல்லாமல் த.வெ.க. ஓய்ந்து கிடக்கிறது. அர சியல் ஒருங்கிணைப்புக் குழு என்ற ஒற்றை அறிவிப்பு மட்டுமே த.வெ..க.வில் வெளிவந்துள்ளது. அதில் கூட, முக்கிய நிர்வாகி நிர்மல்குமார் இடம் பெறவில்லை. நிர்மல் சி.பி.ஐ.யில் கொடுத்த வாக்குமூலம் விஜய்க்கு எதிராக இருந்தது என விஜய் நினைக் கிறார் என்கிறார்கள் த.வெ..க.வைச் சேர்ந்தவர்கள்.
ஆக, தங்கள் கூட்டணிக்குள் விஜய்யை இழுக்க சி.பி.ஐ. மூலம் தொடர்ந்து விரட்டும் அமித்ஷாவின் நெருக்கடியால் மூச்சுத்திணறி வருகிறாராம் விஜய்!
_____________
குற்றப்பத்திரிகையில் விஜய் பெயர்?
த.வெ.க. தலைவர் விஜய்யிடம் 19ஆம் தேதி திங்களன்று இரண்டாம்கட்ட விசாரணை நடத்திய சி.பி.ஐ., அடுக்கடுக்கான கேள்விகளால் திணறடித்துள்ளது. மேலும், குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரை சேர்க்கவுள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னதாக பிப்ரவரியில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகுமென்றும் தெரியவருகிறது.
கரூர் பரப்புரைக் கூட்டத்திற்கு 7 மணி நேரம் தாமதமாக வந்தது ஏன்? கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதை உணர்ந்தீர்களா? கூட்ட நெரிசல் குறித்து உங்களுக்குத் தகவல் வரவில் லையா? நிலைமை மோசமாவது உங்களுக்குத் தெரியவில்லையா? அபாயத்தை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? கண்ணெதிரில் கூட்ட நெரிசலை காணவில்லையா...? என அடுத்தடுத்து கேட்கப்பட்ட கேள்விகளில் சிலவற்றுக்குப் பதிலளிக்க அவகாசம் கேட்டிருக்கிறார்.
பிரச்சாரம் செய்த தெரு வளைந்து, வளைந்து இருந்ததால்தான் நெரிசல் ஏற்பட்ட தாகவும், தமிழக போலீஸார் வழிகாட்டலிலேயே, தான் பிரச்சாரம் செய்ததாக தெரிவித்திருக்கிறார் விஜய். ஆடத்தெரியாத நாட்டியக்காரி தெருக் கோணல் என கூறியதுபோல் விஜய் பதிலளித் திருப்பது பலராலும் விமர்சிக்கப்படுகிறது.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/19/amithsha-2026-01-19-16-05-14.jpg)