"ஹலோ தலைவரே, கட்சிகளுக்கிடையில் தேர்தல் காய்ச்சல் தொடங்கியதால், தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.''”
"ஆமாம்பா, கட்சிப் பிரச்சினைகளையும் தீர்த்தாகணுமே?''”
"உண்மைதாங்க தலைவரே, கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி, ஆ.ராசா, சக்கரபாணி, எம்.ஆர்.கே., தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி ஆகிய தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்களு டன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, அவரவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் தேர்தல் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட சில மாவட்டப் பிரச்சினைகளில் கவனம் செலுத்து மாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார். உளவுத்துறையும், சபரீசனின் "பென்' அமைப்பும் கொடுக்கும் ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் பொறுப்பாளர்களிடம் விவாதித்த அவர், தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் நாம்தான் ஆட்சி அமைப்போம். நம்மைக் குழப்ப மற்றவர்கள் பரப்பும் செய்திகளுக்குக் காது கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு நிறைவேற்றி யுள்ள நலத்திட்டங்கள், அனைத்துக் குடும்பத்திற் கும் கிடைத்துள்ளனவா? என்பதை அறியும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சர்வே எடுக்க தி.மு.க. அரசு உத்தரவிட்டிருக்கிறது.''’
"தமிழக எதிர்க்கட்சிகளையெல்லாம் தனது பொறிக்குள் சாதுர்யமாக அமித்ஷா சிக்க வைத்திருக்கிறாரே?”
"தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று வரிந்துகட்டியிருக்கும் அமித்ஷா, பல்வேறு காய்களை நகர்த்திவருகிறார். டெல்லியில் 7ஆம் தேதி அமித்ஷாவுடன் எடப்பாடியின் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், அமித்ஷா தரப்பிலிருந்து வரும் தகவல்களுக்காக, தன் தரப்பிலிருந்து முன்னாள் எம்.பி. தர்மர் உள்ளிட்டவர்களை டெல்லியிலேயே உட்கார வைத்திருந்தார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மீது அமலாக்கத்துறை வழக்குகள் இருப்பதால், அமித்ஷாவின் வாக்கே வேதவாக்கு என்று எண்ணுகிறார் ஓ.பி.எஸ். அதேபோல் எடப்பாடி மகன் மிதுன் மீதும் கணிசமான வழக்குகள் இருக்கின்றன. எனவே அவரும் அமித்ஷா கிழித்த கோட்டைத் தாண்ட முடியாதவராகவே இருக் கிறார். இதேபோல் கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியிருக்கும் விஜய்யையும் தங்கள் ரிமோட்டுக்கு ஆடுபவராகவே கருதுகிறாராம் அமித்ஷா. அவர் பா.ஜ
"ஹலோ தலைவரே, கட்சிகளுக்கிடையில் தேர்தல் காய்ச்சல் தொடங்கியதால், தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.''”
"ஆமாம்பா, கட்சிப் பிரச்சினைகளையும் தீர்த்தாகணுமே?''”
"உண்மைதாங்க தலைவரே, கே.என்.நேரு, எ.வ.வேலு, கனிமொழி, ஆ.ராசா, சக்கரபாணி, எம்.ஆர்.கே., தங்கம் தென்னரசு, செந்தில்பாலாஜி ஆகிய தி.மு.க.வின் மண்டலப் பொறுப்பாளர்களு டன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, அவரவர்களுக்கும் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் நடக்கும் தேர்தல் பணிகள் குறித்து அவர் கேட்டறிந்தார். மேலும், தனது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட சில மாவட்டப் பிரச்சினைகளில் கவனம் செலுத்து மாறும் அவர்களைக் கேட்டுக்கொண்டார். உளவுத்துறையும், சபரீசனின் "பென்' அமைப்பும் கொடுக்கும் ரிப்போர்ட்டுகளின் அடிப்படையில் பொறுப்பாளர்களிடம் விவாதித்த அவர், தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் நாம்தான் ஆட்சி அமைப்போம். நம்மைக் குழப்ப மற்றவர்கள் பரப்பும் செய்திகளுக்குக் காது கொடுக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க. அரசு நிறைவேற்றி யுள்ள நலத்திட்டங்கள், அனைத்துக் குடும்பத்திற் கும் கிடைத்துள்ளனவா? என்பதை அறியும் வகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் சர்வே எடுக்க தி.மு.க. அரசு உத்தரவிட்டிருக்கிறது.''’
"தமிழக எதிர்க்கட்சிகளையெல்லாம் தனது பொறிக்குள் சாதுர்யமாக அமித்ஷா சிக்க வைத்திருக்கிறாரே?”
"தமிழகத்தில் தி.மு.க.வை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று வரிந்துகட்டியிருக்கும் அமித்ஷா, பல்வேறு காய்களை நகர்த்திவருகிறார். டெல்லியில் 7ஆம் தேதி அமித்ஷாவுடன் எடப்பாடியின் சந்திப்பு நிகழ்ந்த நிலையில், அமித்ஷா தரப்பிலிருந்து வரும் தகவல்களுக்காக, தன் தரப்பிலிருந்து முன்னாள் எம்.பி. தர்மர் உள்ளிட்டவர்களை டெல்லியிலேயே உட்கார வைத்திருந்தார். ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மீது அமலாக்கத்துறை வழக்குகள் இருப்பதால், அமித்ஷாவின் வாக்கே வேதவாக்கு என்று எண்ணுகிறார் ஓ.பி.எஸ். அதேபோல் எடப்பாடி மகன் மிதுன் மீதும் கணிசமான வழக்குகள் இருக்கின்றன. எனவே அவரும் அமித்ஷா கிழித்த கோட்டைத் தாண்ட முடியாதவராகவே இருக் கிறார். இதேபோல் கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையில் சிக்கியிருக்கும் விஜய்யையும் தங்கள் ரிமோட்டுக்கு ஆடுபவராகவே கருதுகிறாராம் அமித்ஷா. அவர் பா.ஜ.க. கூட்டணிக்கு வந்தால் தான் "ஜனநாயகன்' படத்தின் சிக்கல் தீரும். இப்படி தி.மு.க. நீங்கலாக, தமிழகத்தில் இருக்கும் கட்சி களையெல்லாம் பொறியில் சிக்க வைத்திருக்கும் அமித்ஷாவைக் கண்டு அரசியல் தலைவர்கள் பலரும் திகைத்துப் போயிருக்கிறார்கள்.''”
"தி.மு.க. ஆட்சியில் 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக, கவர்னர் ரவியை சந்தித்து எடப்பாடி புகார் மனு கொடுத்திருக்கிறாரே?''”
"கவர்னரிடம் எடப்பாடி கொடுத்த ஊழல் புகாரில் ஒவ்வொரு துறை சார்ந்தும் விபரங்கள் கொடுக்கப்பட்டிருந்தன. கவர்னரோ, புகார்கள் குறித்து விசாரிக்கிறேன் என்று சொல்லி எடப்பாடியை அனுப்பி வைத்தாராம். மேலும் இந்த சந்திப்பில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கும் தொகுதிகள் குறித்த பட்டியலையும் கவர்னரிடம் கொடுத்தாராம் எடப்பாடி. அதில் 40 தொகுதி களுக்கான விபரங்கள் இருந்ததாம். ஏற்கனவே, பா.ஜ.க. கேட்கும் தொகுதிகளின் பட்டியலும் கவர்னரிடம் இருந்ததாம். அவைகளோடு எடப்பாடி கொ டுத்த பட்டியலை ஒப்பிட்டு பார்த்து டெல்லிக்கு தகவல் தந்தாராம் கவர்னர். இந்த நிலையில், கவர்னரிடம் கொடுத்த பா.ஜ.க.வுக்கான தொகுதிகள் பட்டியலை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு பறந்துள்ளார் அ.தி.மு.க. மாஜி மந்திரியான எஸ்.பி. வேலுமணி.''”
"என்.டி.ஏ. கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்கிறார்களே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/rang1-2026-01-08-14-53-58.jpg)
"சமீபத்தில் தஞ்சையில் அ.ம.மு.க. பொதுக் குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களிடம் பேசிக்கொண்டி ருந்தபோது, உங்களின் மன ஓட்டத்தை நான் அறிவேன். நிச்சயம் வெற்றிக் கூட்டணியில் இணைவோம். அதிகாரத்தில் பங்கு கொடுக்கிற கூட்டணியில் நாம் இருப்போம். இந்த முறை, அதிகாரத்தில் அ.ம.மு.க. இருக்கும் என்று நம்பிக் கைக் கொடுத்தாராம். இதனால், த.வெ.க.வுடன் கூட்டணி வைக்க தினகரன் சம்மதித்து விட்டார் என்று அ.ம.மு.க.வினர் மத்தியில் நம்பிக்கை எதி ரொலிக்கிறது. மேலும், த.வெ.க.வில் இணைந்தவர் கள் மாதிரி, எங்களை விஜய் நடத்தக்கூடாது. ஒருமுறை என்னை சந்திக்க விஜய் வரவேண்டும். அந்த சந்திப்புக்குப் பிறகுதான் த.வெ.க.வுடன் கூட்டணியை உறுதிப்படுத்துவேன் என்றும் அழுத்தமாகச் சொல்கிறாராம் தினகரன்.''”
"அமித்ஷாவின் அழுத்தத்தால்தான் எடப் பாடியுடன் கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கிறார் அன்புமணி என்கிறார்களே?''”
"அன்புமணி தலைமையிலான பா.ம.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி ஒப்பந்தம் உறுதியாகியிருக் கிறது. எடப்பாடியை அவரது இல்லத்தில் 7ஆம் தேதி சந்தித்தார் அன்புமணி. 18 சீட் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு எடப்பாடி சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கூட்டணி உறுதியான நிலையில், இதற்கான ஒப்பந்தத்தில் எடப்பாடியும் அன்பு மணியும் கையெழுத் திட்டதாகச் சொல் லப்படுகிறது. ஆனால், அமித்ஷாவை சந்தித்த பிறகு ஒப்பந்தத்தை ரிலீஸ் செய்யலாம் என இருவரும் முடிவெடுத் துள்ளனராம். இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டைக்கு வந்திருந்த அமித்ஷா, அங்கிருந்தபடியே அன்புமணியிடம் பேசியிருக்கிறார். அந்த பேச்சின் அடிப்படையில் தான், எடப்பாடியை அவசர அவசரமாக சந்தித்து கூட்டணியை அன்புமணி உறுதிப் படுத்தினார் என்கிறார்கள். இந்த நிலையில், அமித்ஷாவை சந்திக்க எடப்பாடியும், அன்பு மணியும் டெல்லிக்கு விரைகின்றனர். இந்த முறை ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்று த.வெ.க.வுடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்திவந்த அன்புமணி கூறியிருந்தார். அதனால் விஜய் கட்சியுடன் கூட்டணி சேருவார் என்று தொண்டர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அமித்ஷாவின் அழுத்தத்தால்தான் எடப்பாடியை சந்தித்து அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் இணைந் துள்ளாராம் அன்புமணி.''”
"மத்திய தணிக்கை வாரியத்தின் அடம் மற்றும் ஒன்றிய அரசின் கெடுபிடியால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருக்காங்க போலிருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, பொங்கலை முன்னிட்டு "ஜனநாயகன்' படத்தை 9ஆம் தேதி ரிலீஸ் செய்வதா அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படத்துக்கான சென்சார் சர்டிபிகேட் தருவதில் சிக்கல் எழுந்ததால் திட்டமிட்டபடி படம் ரிலீஸாகுமா என திக் திக் மனநிலையில் இருந்தார் விஜய். இதனையடுத்து, தணிக்கை வாரியத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்தார் தயாரிப்பாளர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆஷா முன்பு வந்தபோது, படத்தின் தயாரிப்பாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சதீஷ் பராசரன், "மத்திய திரைப்பட வாரியம் வெளிப்படையான முறையில் செயல்படவேண்டும். மறுஆய்வுக் குழுவுக்கு படத்தை அனுப்புவது தொடர்பான அந்தக் கடிதம் செயற்கையாக எழுதப்பட்டுள் ளது. இந்தப் படத்துக்காக 500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகளில் ஒருவரே புகார்தாரராக மாறியிருப்பது ஏற்கக்கூடியதல்ல. எனவே, தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடவேண்டும்' என்று வாதிட்டார். இந்த வாதத்தை எதிர்த்து சென்சார் போர்டு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சுந்தரேசன், "படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் எந்த தீய எண்ணமும் இல்லை. படத்தை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்புவதற்கு வாரியத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. 500 கோடி ரூபாய் படமாக இருந்தாலும் 1 கோடி ரூபாய் படமாக இருந்தாலும், தணிக்கை வாரியத்துக்கு எல்லாம் ஒன்றுதான்'’என வாதிட்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி ஆஷா, "படத்தை ஆய்வுசெய்த குழுவில் இருந்தவரே புகார் கொடுப்பது வினோதமாக இருக் கிறது. யு/ஏ சான்று வழங்க முடிவு செய்தபின் மறு ஆய்வுக்கு அனுப் பியது ஏன்? படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியதை தயாரிப்பு நிறுவனத் துக்கு ஏன் தகவல் சொல்லவில்லை' என்று அடுக்கடுக்காக கேள்வியெழுப் பியவர், வழக்கின் தீர்ப்பை 9-ஆம் தேதி வழங்குவதாக அறிவித்தார். இதனால் தீர்ப்பைப் பார்த்துவிட்டு படத்தை வெளியிடலாம் என முடிவெடுத்த தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யும் பட வெளியீடு தற்காலிக மாக நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், வெளியீட்டுத் தேதி பின்னர் அறி விக்கப்படும் எனவும் அறிவிச்சதால பயங்கர ஏமாற்றத்துக்கு ஆளாகி யிருக்காங்க ரசிகர்கள்.''’
"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க.வில் கோஷ்டிப் பூசல்கள் உச்சத்தில் இருக்கிறது. கும்மிடிப் பூண்டி எம்.எல்.ஏ. கோவிந்த ராஜனுக்கும், கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ்ராஜுக்கும் ஏழாம் பொருத்தம். இவர்களின் கோஷ்டி தகராறால் மாவட்ட தி.மு.க. தகித்துவருகிறது. இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி எல்லாபுரம் ஒன்றியத்தில் திராவிட பொங்கல் போட்டிகளின் துவக்க விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார் மாவட்டப் பொறுப்பாளர் ரமேஷ்ராஜ். இந்த விழாவுக்கு ஒன்றிய தி.மு.க. அவைத்தலைவர் முனிவேலை தனது காரில் அழைத்துக்கொண்டு ரமேஷ்ராஜ் வர, அவரைப் பார்த்ததும் ஆத்திரமான கோவிந்தராஜன், முனிவேலைப் பார்த்ததும் ஓங்கி அறைந்தார். இது மாவட்ட தி.மு.க.வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. அவைத் தலைவரை எம்.எல்.ஏ. அறைந்த வீடியோ அறிவாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாம்.''
______________
இறுதிச்சுற்று!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/rangbox-2026-01-08-14-54-24.jpg)
"அன்புமணி மோசடிப் பேர்வழி!''-ராமதாஸ் காட்டம்
அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் அன்புமணி இணைந்திருக்கிறார். அவர் கூட்டணி வைத்ததை, அ.தி. மு.க.வுடன் பா.ம.க. கூட்டணி வைத்திருப்பதாக பிரகடனப் படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில், வியாழக்கிழமை பத்திரிகை யாளர்களைச் சந்தித்த டாக்டர் ராமதாஸ், "பா.ம.க.வும் தொண்டர்களும் என்னிடத்தில்தான் இருக் கிறார்கள். ஒரு நபர், ஒரு கட்சியோடு பேசியிருக்கிறார். ஒப்பந்தம் போட்டாரா? கையெழுத்து போட்டாரா? என எனக்குத் தெரியாது. பா.ம.க.வை பொறுத்தவரை நான் ஆரம்பித்த கட்சி. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. தகுதியும் கிடையாது. அன்புமணி ஒரு மோசடிப் பேர்வழி. என்னிடமிருந்து கட்சியை பறிப்பதற்கு சதி திட்டம் தீட்டி சூழ்ச்சியோடு செயல்பட்டு வருகிறார். எந்த ஒரு கட்சியும் என் தலைமையில்தான் கூட்டணி பேசமுடியும். அ.தி.மு.க.வினர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. பொய் சொல்லி எடப்பாடியை அன்புமணி ஏமாற்றிவிட்டார். அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே கட்சியிலிருந்து நீக்கினேன். அன்புமணியின் துரோகத்தை கட்சியில் உள்ள எல்லோரும் புரிந்துகொண்டார்கள். அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு பா.ம.க தொண்டர்களும் மக்களும் ஓட்டுப் போடமாட்டார்கள். பா.ம.க சார்பில் அன்புமணி கூட்டணி பேசுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். கூட்டணி பேச அன்புமணிக்கு எந்தத் தகுதியும் இல்லை. யாரோடு அவர் கூட்டணி பேசினாலும் அது செல்லாது. நான் அமைக்கின்ற, நான் இருக்கின்ற கூட்டணிதான் ஆட்சி யமைக்கும். அதனால், அன்புமணி -எடப்பாடி சந்திப்பு ஒரு தெருக் கூத்து; ஒரு நாடகம்'' என்று கடுமையாகத் தாக்கினார் ராமதாஸ்.
-இளையர்
பொங்கல் பரிசு ரூ.3000
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/08/rangbox1-2026-01-08-14-54-38.jpg)
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை யை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடுவதற் காக, தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பரிசுத் தொகுப்பாக, ரூ.3,000 ரொக்கப் பணத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை, ஜனவரி 8ஆம் தேதி வியாழனன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலந்தூரில் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுக்க, 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 730 அரிசி ரேஷன் அட்டைதாரர் களுக்கும், இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. விழாவில் அமைச்சர்கள் பெரியகருப்பன், மா.சுப்பிரமணியன், தா.மொ.அன் பரசன், டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இத்திட்டத்திற்கென 6 ஆயி ரத்து 936 கோடியே 17 லட்சத்து 47 ஆயிரத்து 959 ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us