"பத்து நாள் கெடு. வெளியே உள்ள எல்லோரையும் அ.தி.மு.க.வில் இணைக்கவேண் டும். இல்லையென்றால் எல்லோ ரும் இணைந்து ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை உருவாக்குவோம்'' என்று 5 -ஆம் தேதி மனம்திறந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை 6 -ஆம் தேதி கட்சிப் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கினார் எடப் பாடி. மேலும், செங்கோட் டையனின் ஆதரவாளர்கள் என கட்சிப் பொறுப்பிலிருந்த 17 பேரையும் கட்சியை விட்டே நீக்கினார் எடப்பாடி.

Advertisment

இதுபற்றி கருத்துக் கூறிய செங்கோட்டையன், "கட்சி யில் ஜனநாயகத்தன்மை இல்லை. நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கவேண்டும். அவையெல்லாம் எதுவுமில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்திருப்பது கட்சி அமைப்பு விதிக்கு எதிரானது. காலம் பதில் சொல்லும்'' எனக் கூறினார்.

7ஆம் தேதி பிற்பகல் கோபிசெட்டிப்பாளையம் அருகே யுள்ள குள்ளம்பாளையம் கிராமத்தில் தனது தோட்டத்துப் பங்களாவில் தனது ஆதரவாளர்களை சந்தித்துக்கொண்டிருந்த செங்கோட்டையனுக்கு  டெல்லியிலிருந்து தொலைபேசி அழைப்பு வர,   டெல்லி அழைப்புக்கு பதில்  கொடுத்தார் செங்கோட்டையன்.  டெல்லியிலிருந்து பேசியது உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அலுவலக அதிகாரி. 8 ஆம் தேதி மதியம் டெல்லியில் இருக்கவேண்டும் என்பதுதான் அந்த அழைப்பில் விடுக்கப்பட்ட தகவல். 8ஆம் தேதி காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து டெல்லி சென்ற செங்கோட்டையன், "மன நிம்மதிக்காக ராமரை தரிசிக்கச் செல்கிறேன்' என பத்திரிகையாளர்களிடம் கூறிவிட்டு டெல்லி சென்றார். 

துணை ஜனாதிபதி தேர்தலையொட்டிய அந்த பரபரப்புக்கிடையே செங்கோட்டையனை சந்தித்த அமைச்சர் அமித்ஷா, "எல்லோரையும் இணைக்கவேண் டும் என்ற உங்கள் குரலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச் சாமியுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள்  யார், யாரெல்லாம் உங்களிடம் பேசினார் கள்...?'' என்ற விவரத்தை கேட்க... தளவாய்சுந்தரம் தொடங்கி விஜயபாஸ்கர், சி.வி சண்முகம், தங்க மணி, வேலுமணி என ஒரு நீண்ட பட்டிய லையே கூறியிருக்கிறார் செங்கோட்டையன்.

Advertisment

"ஓ.கே. நீங்க போய் நிதியமைச்சர் நிர்மலாவை பாருங்க''’ என அனுப்பியிருக்கிறார் அமித்ஷா. நிர்மலா சீதாராமன்... எடப்பாடி பழனிச்சாமியின் ரியாக்சன், அ.தி.மு.க .சீனியர்களின் மன            நிலை என பல்வேறு விஷயங்களை  செங்கோட்டையனிடம் பேசியிருக்கிறார்.

 அதன்பிறகு, "பழனிச்சாமி பிடிவாதம் பிடிப்பது சரியில்லை என்ற கடுமையான தகவலை அவருக்கு அனுப்பியிருக்கிறோம். நீங்கள் வழக்கம்போல் எல்லோரோடும் தொடர்பில் இருங்கள். ஒருவாரம் கழித்து பழனிச்சாமியை டெல்லி வரச்சொல்லி பேசுகிறோம். அதன்பிறகு, ஒன்றுபடவேண்டும், அப்போதுதான் எதிரியை வீழ்த்தமுடியும்'' என பழனிச்சாமி வாயிலிருந்தே வார்த்தைகள் வரும். அமித்ஷா பல வேலைகளில் இருக்கிறார். அவர் ஃப்ரீயாகட்டும். பழனிச்சாமி டெல்லி வரும் தேதியை நாங்கள் முடிவுசெய்கிறோம்'' எனச் சொல்லி  செங்கோட்டையனை அனுப்பி வைத்திருக்கிறார் நிர்மலா சீதாராமன்.

 இதனைத்தொடர்ந்து கோவை வந்த செங் கோட்டையன் "அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தேன். சந்திப்பு திருப்திகர மாக இருந்தது. எல்லாம் நல்லபடியாக நடக் கும்''” என்று நம்பிக்கையோடு கூறியிருக்கிறார்.

Advertisment

இந்த நிலையில் ஈரோடு மேற்கு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பி லிருந்து செங்கோட்டையனை விடுவித்து அந்தப் பொறுப்புக்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜை எடப்பாடி பழனிச் சாமி நியமித்திருந்தார். அந்த செல்வராஜிற்கு வாழ்த்து சொல்வதுபோல் கோபிசெட்டி பாளையம், அந்தியூர், பவானிசாகர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதியிலுள்ள அ.தி. மு.க.வினர் பலரையும் அழைத்துச்சென்று மேட்டுப்பாளையத்தில் ஒவ்வொரு நாளும் தடபுடலான விருந்து வைத்து வருகிறார் சசிபிரபு. இவர் எடப்பாடி பழனிச்சாமி மனைவி யின் அக்கா மருமகன். அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பிலும் இல்லையென்றாலும், செங் கோட்டையனுக்கு எதிராக களமிறக்கப்பட்ட இந்த சசிபிரபுவுக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறித்து ஏற்கனவே நக்கீரனில் எழுதியிருக் கிறோம். ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த ராவணன் "அ.தி.மு.க. நிழல் தலைவராக' எப்படி செயல்பட்டாரோ அதுபோல இந்த சசிபிரபுவைச் செயல்பட வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. 

 செங்கோட்டையன் விதித்த கெடு 15-ஆம் தேதியோடு முடிவடைய, மேலும் 3 அல்லது 4 நாட்கள் கால அவகாசம் வழங்கியிருக்கிறது டெல்லி. அனேகமாக 20-ஆம் தேதிக்குப் பிறகு டெல்லிக்கு அழைக்கப்படுவார் எடப்பாடி பழனிச்சாமி. செங்கோட்டையன் எப்படி ராமரைத் தரிசிக்கப்போகிறேன் என்று சொல்லி டெல்லிசென்று அமித்ஷாவை சந்தித்தாரோ, அதேபோல், குடியரசுத் துணைத் தலைவராக ஒரு தமிழர் பொறுப்பேற்றிருக்கிறார். அவரை வாழ்த்தவேண்டியது தமிழர்களின் கடமை” என்று சொல்லி டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்துவரு வார் எடப்பாடி. அதன்பிறகு எடப் பாடியின் இந்த வீறாப்பெல்லாம் மாறி, ஒருங் கிணைந்த அ.தி. மு.க. உருவாக இசைவு தெரிவிப் பார் என்கிறார்கள் அ.தி.மு.க. சீனியர்கள்.