சினிமாவில் டயலாக் பேசுவதுபோல, தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டி என கர்ஜித்த நடிகர் விஜய், கரூர் சம்பவத்திற்குப் பிறகு அரசியல் ரீதியாக முடங்கியும், என்ன செய்வதென தெரியாமல் குழம்பிப்போயும் இருக்கிறார். இதைப் பயன்படுத்தி விஜய் எனும் மீனை கொத்திச் செல்ல பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் துடித்துக்கொண்டிருக்கின்றன. 

Advertisment

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர்களான பைஜெயந்த் பாண்டா, முரளிதர் மொஹல் ஆகியோர் அவசரமாக சென்னை வந்துள்ளனர்.  இவர்களில், விஜய்யை தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் அமித்ஷாவின் தூதுவரான முரளிதர் மொஹல்.     

Advertisment

amitsha-vijay1

இதனையறிந்து நாம் விசாரித்தபோது, "தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளர்களாக பாண்டேவும், முரளிதரும் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். இவர்கள் இருவரையும் தமிழக தேர்தல் பொறுப்பாளர்களாக தேர்வு செய்தவர் அமித்ஷா. இவர்களில் பா.ஜ.க.வின் தேசிய துணைத்தலைவராக பாண்டாவும், மத்திய விமானப் போக்குவரத்து இணையமைச்சராக முரளிதரும் இருக்கின்றனர். 

தமிழகத்தின் அரசியல் சூழல், பா.ஜ.க.வின் தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்து, விவாதித்து அதனை கட்சியின் மேலிடத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்பது பொறுப்பாளர்களின் பணி. 

Advertisment

தேர்தல் பொறுப்பாளர்கள் இருவரும் தமிழக பா.ஜ.க.வினருடன் ஆலோசனை நடத்துவதற்காகவே சென்னை வந்துள்ளனர். இதில், முரளிதர் மட்டும் முதல்நாளே (5-ந் தேதி) சென்னைக்கு வந்துவிட்டார். வழக்கமாக, டெல்லியிலிருந்து வரும் பா.ஜ.க.வின் பொறுப்பாளர்கள் பிரபலமான நட்சத்திர ஹோட்டலில் தங்குவார்கள். ஆனால்,  நட்சத்திர ஹோட்டலைத் தவிர்த்துவிட்டு துறைமுக கெஸ்ட்ஹவுசில் தங்கினார் முரளிதர். 

இதற்கு காரணம், பட்டினம்பாக்கம் வீட்டில் தங்கியிருக்கும் விஜய்யை ஹெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்து அவரிடம் முரளிதர் விவாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆக, பா.ஜ.க.வினருடன் கமலாலயத்தில் ஆலோசனை நடத்துவதற்காக முரளிதர் வந்திருந்தாலும், விஜய்யிடம் அமித்ஷாவின் தூதுவராக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்திருப்பதுதான் முக்கிய மானது. அதற்காகவே இவரது சென்னை விஜயம். 

அந்த வகையில், ஹெஸ்ட்ஹவுசில் இருவரும் சந்தித்து விவாதிப்பது என திட்டமிடப்பட் டிருந்ததால், 5-ந் தேதி இரவு, விஜய்யை தொ டர்பு கொண்டி ருக்கிறார் முரளிதர். ஆனால், "தி.மு.க. வின் உளவுத்துறை என்னை க்ளோ ஸாக கண்காணிக்கிறது. அதனால், சந்திப்பு வேண்டாம், போனிலேயே பேசுவோம்' எனச்சொல்லி, கடைசி நேரத்தில் சந்திப்புக்கு மறுத்துள்ளார் விஜய். இதனையடுத்து இருவரும் நீண்டநேரம் போனில் பேசியிருக் கிறார்கள். பேச்சுவார்த்தையின் விவரங்களை 5-ந் தேதி இரவே அமித்ஷாவை தொடர்புகொண்டு முழுமையாகத் தெரிவித்திருக்கிறார் முரளிதர்''’என்கின்றனர் பா.ஜ.க.வின் மேலிடத் தொடர்பாளர்கள். 

இதுகுறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ‘"ஒரே ஒரு கரூர் சம்பவத்தை வைத்து உங்களை முற்றிலுமாக முடக்கிவிட்டது தி.மு.க. இதனை நீங்கள் உணர்ந் திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  எவ்வளவு வேகமாக உங்களது அரசியல் இருந்ததோ அதனை இழந்துவிட்டு நிற்கிறீர்கள். தேர்தலைச் சந்திப்பதற்கு முன்பே இப்படி ஒரு சூழலை உங்களுக்கு தி.மு.க. ஏற்படுத்தி யிருக்கிறது. காரணம், கட்சி ரீதியாக உங்களுக்கு கட் டமைப்பு இல்லை என்பது தான். கட்சிக்கென வலிமையான கட்டமைப்பு இருந்தால்தான் தேர்தல் அரசியலில் பிரதான கட்சிகளை எதிர்க்க முடியும். இதையெல்லாம் கணிக்க நீங்கள் தவறிவிட்டீர்கள். தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் வாருங்கள். நீங்கள் நினைத்தது நடக்கும்'' என அரசியல்ரீதியாக பேச்சைத் தொடங்கியிருக்கிறார் முரளிதர். 

amitsha-vijay2

இதனை பொறுமையாகக் கேட்டுக்கொண்ட விஜய், "பா.ஜ.க.வை எங்களின் கொள்கை எதிரி என நான் சொல்லி வருகிறேன். அதனை அழுத்தமாகச் சொன்னாலும், என்னை பா.ஜ.க.வின் "பீ டீம்' என்றே பரப்பிவருகின்றனர். இந்தச்சூழலில், என்.டி.ஏ. (தே.ஜ.கூ.) வுடன் இணைந்தால் அது உண்மைன்னு ஆகாதா? அதுமட்டுமல்ல, என் ரசிகர்களைத் தாண்டி பொது மக்களிடமும், சிறுபான்மை மக்களிடமும் எனக்கு ஆதரவு இருக்கிறது. அதேபோல, தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தியாளர்களின் ஆதரவும் எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் எடுத்த சர்வே ரிசல்ட் இதைத்தான் சொல்கிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் இதனை நாங்கள் இழக்க வேண்டியதிருக்கும். அதனால்தான் யோசிக்கிறோம். 

 இப்போதைக்கு, கட்சியின் முன்னணி நிர்வாகிகளின் முன்ஜாமீன் விசயத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகியிருக் கிறோம். அதில் என்ன தீர்ப்பு வருகிறது என்பதில்தான் எங்கள் கவனம் இருக்கிறது. அதேபோல, எங்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் சிலரை கைது செய்துள்ளது போலீஸ். அவர்களை ஜாமீனில் எடுக்கவேண்டியதில் கவனம் செலுத்தியுள்ளோம். இதெல்லாம் முடியட்டும்' எனச் சொல்லியிருக்கிறார் விஜய். 

ஆனால், "உங்கள் கட்சியின் வலிமை என்ன? உங்களது இரண்டாம் நிலை லீடர்களின் வலிமை என்ன? என்றெல்லாம் தெரிந்து வைத்துள்ள தி.மு.க .தலைமை, நீங்கள் இந்த ஒரு சம்பவத்திலேயே பயந்து அடுத்து என்ன செய்வதென தெரியாமல் முடங்கிவிட்டீர்கள் என்பதை கணக்கிட்டு                   விட்டது. அதற்கேற்பத்தான், உங்களின் நிலையும் இருக்கிறது. அதனால், பா.ஜ.க. -அ.தி.மு.க. ஆதரவு இல்லையெனில் உங்களால் இந்த தேர்தலில் சர்வைவல் செய்ய முடியாது. அதனால், கொள்கையை தூரமாக வைத்துவிட்டு, சமயோஜிதமாக முடிவெடுங்கள். அதுதான் உங்களையும் உங்க கட்சியையும் காப்பற்றிக் கொள்ள ஒரே வழி' என முரளிதர் சொல்ல... "எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்கள்; யோசிக்கிறேன்னு சொல்லியிருக்கிறார் விஜய்' என்கிற தகவல்களும் கிடைக்கின்றன. 

கரூர் சம்பவத்தையடுத்து முடங்கிவிட்ட விஜய், அரசியல் ரீதியாக எந்த நடவடிக்கையையும் தைரியமாக எடுக்காததால் த.வெ.க. நிர்வாகிகளும், விஜய் ரசிகர்களும் விரக்தியில் இருக்கிறார்கள். அவர்களிடம் இனம்புரியாத சோர்வு தொக்கிக்கொண்டிருக்கிறது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள், "ஜீரணிக்க முடியாத ஒரு துயரம் நடந்துவிட்டது. சென்னைக்கு ஓடோடி வந்தவர், அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சியின் மா.செ.க்களை அழைத்து மீட்டிங் நடத்தியிருக்க வேண்டாமா? ஜனநாயகத்தில் இதுதானே முக்கியம். அதைச் செய்யாமல் வீட்டுக்குள்ளே பதுங் கிக்கொண்டால் எப்படி?  இதனால் நிர்வாகிகளும், தொண்டர்களும் சோர்வடைந்துவிட்டனர். விரக்தி யில்தான் இருக்கிறோம். 

விஜய்க்கு எதிராக கட்ட மைக்கும் அரசியல் சிக்கல்களை எதிர்கொள்ள சட்டரீதியாக அணுகுவது, போராடுவது சரிதான். ஆனால், சட்டரீதியாக போராடத் திட்டமிடும் விஜய், தனது கட்சிக்காக வலிமையாக வாதாடும் சட்ட நிபுணத்துவம் கொண்ட திறமைமிக்க சீனியர் வழக்கறிஞர்கள் யாரையுமே வைத்துக் கொள்ளவில்லை. புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், அருண்ராஜ் இவர்களிடம் ஆலோசிப்பது மட்டும் போதுமா? ஒரு சிக்கலான சூழலை கட்சி எதிர் கொள்ளும்போது, அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களுடன் தொடர்பு இருக்கவேண்டும். அவர்களது ஆலோசனைகளை கேட்டுப் பெறவேண்டும். ஆனால், அத்தகைய சிந்தனையே இல்லாமல் தன்னை சுற்றியிருக்கும் ஐவர் அணியின் ஆலோசனையை மட்டும் கேட்டு முடிவெடுப்பது சரியல்ல. விஜய்யிடம் யாரும் நெருங்கவிடாமல் தடைபோட்டு வருவதுதான் ஐவர் அணியின் தலையாய பணியாக இருக்கிறது.  இவர்களுக்             குள் நடக்கும் கோஷ்டி தகராறுகள் விஜய்க்கு           ஒரு பின்னடைவை ஏற்படுத்திக்கொண்டிருக்       கிறது.  

 விஜய் மற்றும் த.வெ.க.வின் பலம் என்னவென்பது இப்போது வெட்டவெளிச்சமாகி யிருக்கும் சூழலில், அரசியல்ரீதியாக தீர்க்கமான ஒரு முடிவை விஜய் எடுக்கவேண்டும். குறிப்பாக, தி.மு.க.வை எதிர்க்க வேண்டுமாயின் கொள்கை எதிரியோடு சமரசம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை. விஜய்க்கு எதிராக எல்லா அஸ்திரங்களும் வேகமாக வீசப்பட்டுவரும் சூழலில், அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும்தான் எங்கள் பக்கத்திலிருந்து பேசின; உதவ முன்வருகின்றன. அதனை பயன்படுத்திக்கொள்ள        விஜய் முன்வரவேண்டும். ஏனெனில், விஜய்யை நம்பி லட்சக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் இருக்கிறார்கள்''’என்று ஆதங்கத்துடன் விவரிக்கின்றனர். 

இதற்கிடையே, தன்னை கைது செய்துவிடுவார்கள் என பயந்து டெல்லி மற்றும் உத்தரகாண்டிற்கு தப்பிச்சென்ற ஆதவ் அர்ஜுனா, விஜய்யை வளைக்க பா.ஜ.க. கடும் முயற்சி எடுத்து வருவதையறிந்து, அவரிடம் பேசியிருக்கிறார். அப்போது, "பா.ஜ.க. வின் மாயவலையில் வீழ்ந்து விடாதீர்கள். காங்கிரஸ் தலை வர்களிடம் பேசிக்கொண்டிருக் கிறேன். நல்லதே நடக்கும் 'எனச் சொல்லி வருகிறார். ஆனால், அவரால் காங்கிரஸ் தலைமையை நெருங்க முடியவில்லை என்பதே உண்மை என்கிறார்கள். 

இந்த நிலையில், விஜய்யை கைது செய்யவேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருவதால் அது குறித்து ஆலோசித்துவருகிறது தி.மு.க. அரசு. "கைது செய்வதன் மூலம் எந்த சட்டம் -ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாது; சினிமாவில் மட்டுதான் அவர் ஹீரோ, நிஜத்தில் ஜீரோ என்பதை நிரூபித்துவிடலாம்' எனும் ஆலோசனை முதல்வர் ஸ்டாலினுக்கு சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், "எதையும் சட்டரீதியாகவே அணுகுவோம்; அரசியல் வேண்டாம்' என்று நினைக்கிறாராம் முதல்வர்.