அ.தி.மு.க. -பா.ஜ.க. விடையே கூட்டணி குறித்த கருத்து ஒற்றுமை, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டேயிருக் கிறது. ஜெயங்கொண்டம் கூட்டத்தில், “"யார் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டான் அ.தி.மு.க. தொண்டன். அவன் திருப்பி அடிப்பான்'’ என்று உணர்ச்சிவசப்பட்டு எடப்பாடி பேசினார். அதே நேரத்தில் தஞ்சை மாவட் டத்திற்கு விசிட்டடித்த வேலுமணியோ அங்கிருக்கும் ஓ.எஸ்.மணியன் மற்றும் காமராஜிடம், “"நான்தான் அடுத்த முதலமைச்சர் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர்'’எனக்கூறி தனியாக அணி திரட்டல் வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார். கட்சிக்குள் வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே கடுமையான உட்கட்சிப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. வேலுமணியின் நண்பர்களான பியூஷ்கோயல் மற்றும் அமித்ஷா ஆகியோர் யாரை ஆதரிக்கிறார் கள் என்பதே அ.தி.மு.க.வி
அ.தி.மு.க. -பா.ஜ.க. விடையே கூட்டணி குறித்த கருத்து ஒற்றுமை, நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மாறிக்கொண்டேயிருக் கிறது. ஜெயங்கொண்டம் கூட்டத்தில், “"யார் அவமானப்படுத்தினாலும் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டான் அ.தி.மு.க. தொண்டன். அவன் திருப்பி அடிப்பான்'’ என்று உணர்ச்சிவசப்பட்டு எடப்பாடி பேசினார். அதே நேரத்தில் தஞ்சை மாவட் டத்திற்கு விசிட்டடித்த வேலுமணியோ அங்கிருக்கும் ஓ.எஸ்.மணியன் மற்றும் காமராஜிடம், “"நான்தான் அடுத்த முதலமைச்சர் பா.ஜ.க. தலைமையில் கூட்டணி ஆட்சி செங்கோட்டையன் அடுத்த பொதுச்செயலாளர்'’எனக்கூறி தனியாக அணி திரட்டல் வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார். கட்சிக்குள் வேலுமணிக்கும் எடப்பாடிக்கும் இடையே கடுமையான உட்கட்சிப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. வேலுமணியின் நண்பர்களான பியூஷ்கோயல் மற்றும் அமித்ஷா ஆகியோர் யாரை ஆதரிக்கிறார் கள் என்பதே அ.தி.மு.க.வில் கேள்வியாகி வருகிறது. வேலுமணி தமிழ்நாடு முழுவதும் சுற்றிவருகிறார். ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரிடம் விரிவாகப் பேசிவருகிறார். இவர்களு க்கு அ.தி.மு.க.வில் இடம் மற்றும் எம்.எல்.ஏ. சீட் போன்றவைகளை பா.ஜ.க. வின் அனுமதியுடன் நான் வாங்கித் தரு கிறேன் என வேலுமணி உறுதியளிகிறார். நான் எந்த காரணத்தைக் கொண்டும் ஓ.பி.எஸ்.ஸை கட்சியில் சேர்க்கமாட்டேன் என அமித்ஷாவை சந்தித்து பா.ஜ.க.வுடன் கூட்டணி என முடிவானபோதே எடப்பாடி அறிவித்துவிட்டார்.
பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சேர்ந்து தனியாக ஆலோசனைக் கூட்டம் நடத்திய ஓ.பி.எஸ். நாங்கள் தனிக்கட்சி என விஜய்யை வரவேற்கும் தொனியில் கட்சிக்காரர்களிடம் பேசினார். எடப்பாடிக்கு எதிராக ஓ.பி.எஸ். எதையும் பேசவில்லை. சசிகலா யாரையும் சந்திக்காமல் எதையும் பேசாமல் மௌன விரதத்தைக் கடைபிடித்து வருகிறார். டி.டி.வி. தினகரன் பா.ஜ.க. சொல்வதற்கு ஏற்ப பேசி வருகிறார். அன்புமணி ராமதாஸ் கூட்டணி ஆட்சியில் நாங்கள் இடம்பெறுவோம் என அவரும் பா.ஜ.க. சொல்வதையே பேசிவருகிறார். இவர்கள் அனைவருடனும் தொடர்பு வைத்தி ருக்கும் ஒரே நபர் எஸ்.பி.வேலுமணியோ நான்தான் முதல்வர் என்கிறார். எஸ்.பி.வேலுமணி யின் ‘நான் முதல்வர்’ கோஷம் எடப்பாடியை டென்சன் ஆக்கியுள்ளது. யார் முதல்வர் என்பதை களத்தில் தீர்மானிப்போம் என யாத்திரையை தொடங்கினார் எடப்பாடி. அந்த யாத்திரை கோவை பகுதியில் நடந்தபோது எஸ்.பி. வேலுமணிதான் அந்த யாத்திரையை நடத்தினார். ஒரு பக்கம் எடப்பாடி எதிர்ப்பு, நான் முதல்வர்’ கோஷம்... மறுபக்கம் எடப்பாடி யின் யாத்திரைக்கு ஆள் திரட்டுவது என வேலுமணி போட்ட இரட்டை வேசத்தைப் பார்த்து அ.தி.மு.க.வினரே அரண்டுபோனார்கள். யாத்திரைக்கு ஆள் திரட்டாதவர்களுக்கு எம்.எல்.ஏ. சீட் கிடையாது என எடப்பாடி அறிவிக்க, கட்சிக்காரர்கள் திரண்டுவந்து எடப்பாடி வாழ்க என கோஷமிட்டார்கள்.
இதில் உற்சாகமடைந்த எடப்பாடி பா.ஜ.க.வுடன் பேச ஆரம்பித்தார். ‘கூட்டணி ஆட்சி என்று பேசுவதை தற்காலிகமாக தள்ளி வையுங்கள்’ என எடப்பாடி தரப்பு வைத்த கோரிக்கையை பா.ஜ.க. ஏற்றுக்கொண்டது. "எடப்பாடியின் யாத்திரைக்கு முழு ஒத்துழைப்பு கொடுங்கள்' என தமிழக பா.ஜ.க. தலைவர் நயினாருக்கு பா.ஜ.க. மேலிடம் உததரவிட்டுள்ளது. ஆனால் தற்போது பா.ஜ.க. எங்களுக்கு 50 சட்டமன்ற சீட் தரவேண்டும் என கோரிக்கையை எழுப்பியுள்ளது. இது மிகமிக அதிகம் என எடப்பாடி தரப்பு சொல்லியுள்ளது. இந்த சீட்டு சண்டையில் பா.ஜ.க.வின் கை ஓங்குவதற்கு வேலுமணி, ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. அவர்களை களத்தில் முறியடிப்போம் என எடப்பாடி யாத்திரை நடத்தி வருகிறார். இந்தப் போராட்டம் முடியாமல் அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி இணைந்து செயல்படுவது சாத்தியமே இல்லை என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
“அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையேயான இந்த சீட் மோதலை முடிவுக்குக் கொண்டுவர நேரடியாக அமித்ஷாவும், எடப்பாடியும் சந்தித்து பேசவுள்ளார்கள். ஓ.பி.எஸ்., சசிகலா ஆகியோரை அ.தி.மு.க. அணியில் இணைக்க பா.ஜ.க. முயலுகிறது. அவர்கள் இல்லாமல் உங்களுக்கு எவ்வளவு சீட் வேண்டும் என எடப்பாடி பா.ஜ.க.விடம் கேள்வி கேட்கிறார். பா.ஜ.க.வின் மிரட்டல்கள் வேலுமணி மூல மாக கட்சியில் மறைமுகமாக அரங்கேறுவதை எடப்பாடி நிறுத்தச் சொல்கிறார். அழுத்தங்கள் இல்லாத பேச்சுவார்த்தைக்காகத்தான் "எந்த மிரட்டலுக்கும் அ.தி.மு.க. தொண்டன் பயப்படமாட்டான்'’ என ஜெயங்கொண்டம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேசினார். ‘தொடர்ந்து அமித்ஷாவுடன், எடப்பாடி ஓயாத மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறார். "நித்திய கண்டம் பூரண ஆயுசு’ என்கிற அடிப்படையில் அ.தி.மு.க. கூட்டணி நகர்ந்துகொண்டிருக்கிறது'’என்கிறார்கள் அரசியல் கூர்நோக்கர்கள்.