"ஹலோ தலைவரே, அரசியல் களம் முழுக்க இப்ப பரபரப்பில் இருக்கும் நிலையில், தி.மு.க. விலும் அதிரடிக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.''”
"திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய கூட்டத்தைச் சொல்றியா?''
"ஆமாங்க தலைவரே... த.வெ.க. தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி தன்னு டைய முதல் தேர்தல் பரப்புரையை திருச்சி மாநகரில் மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கினார். அவரது பிரச்சாரத்தில் தி.மு.க.வையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை யும் அட்டாக் செய்தே பேசிவருகிறார். இந்நிலை யில், த.வெ.க.வுக்கு பதிலடியாக, தி.மு.க. சார்பில் சனிக்கிழமையன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் விஜய் நடத்திய அதே மரக்கடை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் கே.என்.நேருவின் தலைமையில் புத்தூர் நான்கு சாலையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருக் கிறார்கள். ஐ.பி. ரிப்போர்ட்டே இது என்றால் இதைவிட அதிகம் வந்திருக்க வாய்ப்பு இருக் கிறது என்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு தி.மு.க.வினர் சளைத்தவர்கள் இல் லைன்னு திருச்சி மாவட் டத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் நிரூபித் திருப்பதாக தி.மு.க. உடன்பிறப்புக்கள் சந்தோசத் தில் இருக்காங்களாம். அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய விழா குறித்து "முப்பெரும் விழா என்று பெயர் சூட்டிவிட்டு ஐம்பெரும் விழாவை நடத்தி யிருக்கிறார். எப்போதும் மாணவர்களுக்குத்தான் ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். ஆனால் வர வேற்புரை மூலமாக ஆசிரியர்களுக்கே பாடம் எடுத் திருக்கிறார் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யா மொழி என்று முதல்வரே பாராட்டியிருக்காரே.''”
"சரிப்பா, ராமஜெயம் கொலை வழக்கு தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் 2012 மார்ச்சில் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவ்வ ளவு காலம் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், டி.ஐ.ஜி. வருண்குமார் குழுவின ரிடம் இந்த வழக்கு கைமாறியது. ஏற்கனவே சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், பிரபல ரவுடிகளான சாமிரவி, திலீப், சிவராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் என 12 பேரிடம் உண்மையறியும் சோதனையை நடத்தியிருந்தனர். குடவாசல் சண்முகம் மட்டும் இந்த சோதனைக்கு உட்பட மறுத்துவிட்டார். தற்போது சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக உள்ள வருண்குமார், வழக்கை துரிதமாக விசாரித்து வருகிறார். பாளை. சிறையில் உள்ள கைதி சுடலைமுத்து, சென்னை புழல் சிறையில் உள்ள மண்ணச்ச நல்லூர் குணா ஆகியோரிடம் சிறைக்கே சென்று விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ், திருவாரூரைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோரை இரண்டு நாட்களுக்கு முன் காஜாமலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் வைத்து ரகசியமாக விசாரித்தார். இவர்கள் இருவருக்கும் உண்மை கண்டறி யும் சோதனை நடத்தப்படும் என்கிறது விசாரணை டீம். ராமஜெயம் கொலையின் மர்ம முடிச்சு விரைவில் அவிழும் என்கிற எதிர்பார்ப்ப
"ஹலோ தலைவரே, அரசியல் களம் முழுக்க இப்ப பரபரப்பில் இருக்கும் நிலையில், தி.மு.க. விலும் அதிரடிக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.''”
"திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய கூட்டத்தைச் சொல்றியா?''
"ஆமாங்க தலைவரே... த.வெ.க. தலைவர் விஜய், கடந்த 13ஆம் தேதி தன்னு டைய முதல் தேர்தல் பரப்புரையை திருச்சி மாநகரில் மரக்கடை பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கினார். அவரது பிரச்சாரத்தில் தி.மு.க.வையும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை யும் அட்டாக் செய்தே பேசிவருகிறார். இந்நிலை யில், த.வெ.க.வுக்கு பதிலடியாக, தி.மு.க. சார்பில் சனிக்கிழமையன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் விஜய் நடத்திய அதே மரக்கடை பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் 12ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டிருக்கிறார்கள். அதேபோல் ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் கே.என்.நேருவின் தலைமையில் புத்தூர் நான்கு சாலையில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருக் கிறார்கள். ஐ.பி. ரிப்போர்ட்டே இது என்றால் இதைவிட அதிகம் வந்திருக்க வாய்ப்பு இருக் கிறது என்கிறார்கள். இதன் மூலம், நடிகர் விஜய்யின் த.வெ.க.வுக்கு தி.மு.க.வினர் சளைத்தவர்கள் இல் லைன்னு திருச்சி மாவட் டத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் நிரூபித் திருப்பதாக தி.மு.க. உடன்பிறப்புக்கள் சந்தோசத் தில் இருக்காங்களாம். அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய விழா குறித்து "முப்பெரும் விழா என்று பெயர் சூட்டிவிட்டு ஐம்பெரும் விழாவை நடத்தி யிருக்கிறார். எப்போதும் மாணவர்களுக்குத்தான் ஆசிரியர்கள் பாடம் எடுப்பார்கள். ஆனால் வர வேற்புரை மூலமாக ஆசிரியர்களுக்கே பாடம் எடுத் திருக்கிறார் நம்முடைய அன்பில் மகேஷ் பொய்யா மொழி என்று முதல்வரே பாராட்டியிருக்காரே.''”
"சரிப்பா, ராமஜெயம் கொலை வழக்கு தீவிரமாகப் போய்க்கொண்டிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் 2012 மார்ச்சில் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவ்வ ளவு காலம் கடந்தும் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், டி.ஐ.ஜி. வருண்குமார் குழுவின ரிடம் இந்த வழக்கு கைமாறியது. ஏற்கனவே சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், பிரபல ரவுடிகளான சாமிரவி, திலீப், சிவராஜ்குமார், சத்யராஜ், சுரேந்தர், நாராயணன், சிவா, கணேசன், தினேஷ், கலைவாணன், மாரிமுத்து, செந்தில் என 12 பேரிடம் உண்மையறியும் சோதனையை நடத்தியிருந்தனர். குடவாசல் சண்முகம் மட்டும் இந்த சோதனைக்கு உட்பட மறுத்துவிட்டார். தற்போது சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி.யாக உள்ள வருண்குமார், வழக்கை துரிதமாக விசாரித்து வருகிறார். பாளை. சிறையில் உள்ள கைதி சுடலைமுத்து, சென்னை புழல் சிறையில் உள்ள மண்ணச்ச நல்லூர் குணா ஆகியோரிடம் சிறைக்கே சென்று விசாரணை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல்லைச் சேர்ந்த தினேஷ், திருவாரூரைச் சேர்ந்த மாரிமுத்து ஆகியோரை இரண்டு நாட்களுக்கு முன் காஜாமலை பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில் வைத்து ரகசியமாக விசாரித்தார். இவர்கள் இருவருக்கும் உண்மை கண்டறி யும் சோதனை நடத்தப்படும் என்கிறது விசாரணை டீம். ராமஜெயம் கொலையின் மர்ம முடிச்சு விரைவில் அவிழும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.''”
"அமைச்சர் ஐ.பெரியசாமி கண்கலங்கிப் பேசியிருக்கிறாரே?''”
"தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்புக் கூட்டம் நடந்துவருகிறது. திண்டுக்கல்லில் அதை 13 இடங்களில் பெரிய எல்.இ.டி. திரைகளில் ஒளிபரப் பியது திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. 25ஆயிரத் திற்கு அதிகமானோர் கலந்துகொண்ட அந்தக் கூட்டத் தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மாஜி மந்திரி பொன்.முத்துராமலிங்கம், பழனி சட்ட மன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய அமைச்சர் ஐ.பெரிய சாமி, "இந்தக் கூட்டத்தை தமிழ்நாடே திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இன்று டெல்லியிலிருக்கும் அரசு பிரித்தாளும் சூழ்ச்சியால் வெற்றிபெறலாம் என்று நினைக்கிறது. 1965-ருந்து இந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. அதை எதிர்க்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. பலர் இதற்காக உயிர்விட்டுள்ளனர். தி.மு.க. தொண்டன் எதையும் எதிர்பார்க்கமாட்டான். சுய மரியாதையை மட்டுமே எதிர்பார்ப்பான். திண்டுக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தொண்டர்களை நான் இமைபோல் காப்பேன். எனது கடைசி மூச்சு இருக்கும்வரை தொண்டர்களுக்காக இருப்பேன்’ என்றபடி கண்கலங்கினார். இது தி.மு.க.வினர் அனைவரையும் நெகிழவைத்தது.''”
"டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி மிரட்டப்பட்டார் என்று சொல்லப்படுகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அமித்ஷாவைச் சந்திக்க, தங்கள் டீமுடன் உற்சாகமாக டெல்லி சென்ற எடப் பாடி, அவரை சந்தித்துவிட்டுத் திரும்பி வரும்போது, கர்ச்சிப்பால் முகத்தை மூடியபடி, குழப்பத்தோடு திரும்பி வந்த காட்சி, அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியது. இது குறித்த கூடுதல் தகவல் டெல்லியிலிருந்தே கசிகின்றது. அமித்ஷா எடப்பாடி சந்திப்பின்போது, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் குறித்து அமித்ஷா கறார் குரலில் நினைவுபடுத்தினாராம். இது எடப்பாடியை வெலவெலக்க வைத்துவிட்டது என்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து, குற்றவாளிகளுக்கு நடுவே நடந்த போன் உரையாடல்கள், பி.எஸ்.என்.எல். தொலை தொடர்பு நிறுவனம் மூலம், விசாரணைக் குழுவால் தொகுக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவணங்கள் தற்போது மத்திய அரசின் வசம்தான் இருக்கிறது. இது தங்கள் கைவசம் இருப்பதால், அமித்ஷாவின் குரல், மிரட்டும் தொனியில் இருந்ததாகவும், டெல்லி சொல்வதை எல்லாம் கேட்டாக வேண்டிய நிலைக்கு எடப்பாடி வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டிருப்பதாகவும் பா.ஜ.க. தரப்பிலேயே பேச்சு உலவுகிறது.''”
"இந்த நிலையில் எடப்பாடியை பா.ஜ.க. நயினார் சந்தித்திருக்கிறாரே?''”
"எடப்பாடியை சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்திருக்கிறார் பா.ஜ.க. நயினார். அவர் அக்டோ பர் 11-ல் இருந்து தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்குகிறார். இதை எடப்பாடி தொடங்கி வைக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கவே இந்த சந்திப்பு நடந்திருக்கிறது. எடப்பாடியும் அதற்குச் சம்மதம் சொல்லியிருக்கிறார். இவர்களின் சந்திப்பு ஒருமணி நேரம் நடந்தது. அப்போது, தனது சுற்றுப் பயணத்துக்கு அனைத்து மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பு வேண்டும் என நயினார் கேட்க, "இதுகுறித்து எங்கள் மா.செ.க்களுக்கு அறிவுறுத்துகிறேன்' என்றாராம் எடப்பாடி. மேலும் பா.ம.க., தே.மு.தி.க. மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிகளை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கவேண்டும் என்றும் விவாதித்தனர். அதோடு, தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் நீர்த்துப்போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அப்போது அவர்கள் உறுதியெடுத்துக் கொண்டார்களாம்.''”
"இந்த நேரத்தில் எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க. சீனியர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி ஒரு புகைப்படத்தையும் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, அதாவது... கே.பி.முனு சாமி, தங்கமணி, வேலுமணி மற்றும் அ.தி.மு.க. எம்.பி.க்களுடன் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி. இவர்கள் சந்தித்த புகைப் படங்கள் ரிலீஸானது. அந்த சந்திப்பும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. ஆனால், இன்னொரு சந்திப்பும் நடந்திருக்கிறது. அது, பிரதமர் மோடி யை கே.பி.முனுசாமி தனியாக சந்தித்திருக்கிறார். இது மிகரகசியமாக நடந்திருக்கிறது. இந்த நிலையில், மோடியை அவர் சந்தித்த படத்தையும், தந்தை பெரியாரை அவர் பிறந்தநாளில் வணங்குகிறோம் என்றபடி அவர் பட முள்ள போஸ்டரை யும் திடீரென ரிலீஸ் செய்திருக்கிறார் பெரியாரிஸ்டான கே.பி.முனுசாமி. இவைதான் அ.தி.மு.க. தரப்பில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியிருக்கிறது. நீங்கள் மறைத்தாலும் பிரதமர் மோடியை சந்தித்த படத்தை நான் வெளியிடுகிறேன் என்று எடப்பாடிக்கு சவால் விடும் தொனியிலேயே அவர் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதாகச் சொல்கிறார்கள். அதேபோல, பெரியார் பிறந்த நாளில் அவரை வணங்காத எடப்பாடிக்கு உறுத்த வேண்டும் என்பதற்காக பெரியாரை வணங்கும் போஸ்டரையும் வெளியிட்டாராம். எடப்பாடிக்கு எதிராக கே.பி.முனுசாமியும் வரிந்துகட்டத் தொடங்கிவிட்டாரே என்று கட்சியின் ஏனைய சீனியர்கள் திகைத்துப்போயிருக்கிறார்களாம்.''”
"நடிகர் விஜய்யும் எடப்பாடியும் தங்களுக் குள் ரகசிய நட்பை வளர்த்துக்கொண்டு, அரசியல் செய்கிறார்களாமே?''”
"அண்மைக்காலமாக நடிகர் விஜய், தங்கள் த.வெ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும்தான், இப்போது நேரடிப் போட்டி என்று அதிரடியாகப் பேசிவரு கிறார். இது அ.தி.மு.க. சீனியர்களைக் கோபப் படுத்தி வரும்நிலையிலும், எடப்பாடி அலட்டிக் கொள்ளவேயில்லை. நடிகர் விஜய் இப்படிச் சொல்லிவருவது குறித்து எடப்பாடியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "அது அவரது சொந்தக் கருத்து' என்று கூலாகவே சொல்லியிருக் கிறார். இதுகுறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, அண்மைக்காலமாக நடிகர் விஜய் அ.தி. மு.க.வை விமர்சிப்பதை நிறுத்திவிட்டார் என்றும். அதேபோல் எடப்பாடியும் நடிகர் விஜய்யை தாக்கு வதை நிறுத்திவிட்டார் என்றும் கூறுகிறார்கள். காரணம், இவர்கள் இருவருக்கும் மத்தியில் நட்பு வலுத்துவருவதாகவும், அடிக்கடி எடப்பாடியும் விஜய்யும் தங்களுக்குள் பேசிவருவதாகவும் சொல் கிறார்கள். தனது பிரச்சாரக் கருத்துகளைக்கூட எடப்பாடியிடம் கலந்து ஆலோசித்துவிட்டு பேசும் நிலைக்கு விஜய் வந்திருக்கிறாராம். எல்லாம் கூட் டணி ஆசை படுத்தும் பாடுதான் என்கிறார்கள்.”
"என்னப்பா, அன்புமணி ஊழல் செய்திருப்ப தாக பா.ம.க. ராமதாஸ் தரப்பே அதிரடியாகக் குற்றச்சாட்டை வைக்க ஆரம்பித்துவிட்டதே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ம.க.வின் முகநூல் பக்கத்தை சாமிநாதன் என்பவர்தான் நிர்வகித்து வந்தார். இதை அன்புமணி தரப்பு முடக்கிவிட்டது. அதனால் கடுப்பான ராமதாஸ், இப்போது தங்கள் தரப்பிற்காக புதிய முகநூல் பக்கத்தை தொடங்கச் செய்திருக்கிறார். அதில் அவர் தரப்பின் செய்திகள் பலவும் அவர் பெயரோடு வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவர் தரப்பின் முகநூல் பக்கத்திலேயே, அன்புமணி ஊழல் செய்தார் என்ற செய்தி அதிரடியாக இடம்பெற்றி ருக்கிறது. இது அன்புமணி தரப்பை அதிரவைத் திருக்கிறது. அடுத்த கட்டமாக, தன் ஆதரவாளர் களை வைத்தும் அன்புமணியின் ஊழல் விவகாரங்களை ராமதாஸ் பேச வைப்பார் என்கிற நிலை அங்கே உருவாகியிருக்கிறதாம். இது அன்பு மணி தரப்பை ஆட்டம் காண வைத்திருக்கிறது என்கிறார்கள். இந்நிலையில் இதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத அன்புமணி ராமதாஸ், "ஜி.எஸ்.டி வரிச் சீர்திருத்தங்களின் ஒருகட்டமாக பால் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுவிட்டது. அதன் பயனாக குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொதுத்துறை பால் நிறு வனமான அமுல், கர்நாடகப் பொதுத்துறை நிறு வனமான நந்தினி மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் பொருள்களின் விலையை ரூ.25 முதல் ரூ.40 வரை குறைத்துள்ளன. ஆனால், ஆவின் நிறுவனம் வரி குறைக்கப்பட்ட பிறகும் விலைகளை குறைக்கவில்லை. ஆவின் பால் பொருள்களை பயன்படுத்தும் மக்கள் ஏழைகள்தான். அவர்களைச் சுரண்டுவது மனித நேயமற்ற செயலாகும். ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலைகளை குறைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.''”
"வாக்காளர் பட்டியல் திருத்தம் தமிழகத்தில் நடப்பதற்கான ஆயத்தங்கள் ஆரம்பித்துவிட்டதே?''”
"உண்மைதாங்க தலைவரே, இதற்கான ஆலோசனைக் கூட்டங்களை கலெக்டர்கள் நடத்தி வருகிறார்கள், வேலூர் மாவட்டத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது, அங்கே வாக்காளர் பட்டியலில் ஒருவருடைய பெயர் டபுள் என்ட்ரியாகவும், ட்ரிபிள் என்ட்ரியாகவும் இருந்துள்ளன. இதுதவிர, வட இந்தியர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக இணைந்ததற்கு அடையாளமாக, அந்த பட்டிய லில், பல பெயர்கள் ஹிந்தியில் இருந்துள்ளது. இதுகுறித்த புகார்கள் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்துக்கு சென்றுள்ள நிலையில், அதை கலெக்டர் சுப்புலட்சுமி கண்டுகொள்ளவே இல்லை யாம். தமிழகத்தில் வட இந்தியர்கள் சுமார் 90 லட்சம் பேர் வாக்காளர்களாக இணைந்துள்ளனர் என்று நமது நக்கீரன் ஏற்கனவே பதிவு செய்திருக்கிறது. வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கிற பெயரில் தமிழர்கள் பலரின் பெயர்கள் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு கள் அதிகம் என்கின்றனர்.''
"இதையெல்லாம் கவனிக்காமல் போனால், பல சிக்கல்களை தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகள் சந்திக்க வேண்டிவரும் என்கிறார்கள்.''”
"“என்னப்பா அத்தானை மைத்துனர் பலமா மிரட்டு றாராமே.?''”
"ஆமாம் தலைவரே... உங்களுக்குத் தெரியாததா? அ.தி.மு.க.விலிருந்து, தி.மு.க.வுக்கு வந்து மீனுக்கு அமைச்சரானவர் அவர். அந்த அமைச்சருக்கு ஆலோசகராகவும் நண்பராகவும் உமரி பெயர் கொண்ட அவர் அமைச்சரின் தனிப்பட்ட உதவி யாளராக ஆனார். இருவரும் தனியாக இருக்கையிலே அத்தான்னு கூப்பிட்டுப் பேசுற அளவுக்கு நெருக்கம். ஆனால் தற்போதைய அரசில், அமைச்ச ருக்கு உதவியாளராக ஒருவர் நியமிக்கப்பட்டார். இந்த உதவியாளரோட பெயர் நடிகர் தனுஷ் படப் பெயர்தான். ஏனோ அந்த நிழல் உதவியாளருக்கும் அரசு உதவியாளருக்கும் ஒத்துப்போகலை. அரசு உதவியாளர் அரசுப் பணியாளர்களின் இட மாற்றங்கள், ஒப்பந்தம் போன்ற விவகாரங்களில் புகுந்து விளையாடி கோடிக்கணக்கில் பார்த்துவிட்டார். இதை நிழல் உதவியாளர் எடுத்துச் சொல்லியும் அமைச்சர், அவரை மாற்ற எதுவும் செய்யலை. இதனால் கடுப்பாகிப்போன உறவினரும் உதவியாளருமான உமரி பெயர் கொண்டவர், நான் சொல்றதை கேக்கமாட்டிங்களோ, ஒண்ணு அவனைத் துரத்துங்க,… இல்லை நான் போறேன் என அமைச்சரின் கழுத்தில் கத்தி வைத்ததுபோல நெருக்கிவருகிறாராம்.''”
"அதிருக்கட்டும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ்- பென்னிக்ஸ் வழக்கிலே விரைவில் தீர்ப்பு வருதாமே''…”
"காவல்துறை சித்ரவதையால்தான் தந்தை- மகன் இருவரும் இறந்தனர் என்பதை ஆதாரத் துடன் முதன்முதலில் அம்பலப்படுத்தி நம்ம நக்கீரன் தொடர்ச்சியா கட்டுரைகள் வெளியிட்டது. இதனால் இன்ஸ்பெக்டர் முதல் கான்ஸ்டபிள்கள் வரை 10 பேர் கைதானாங்க. 20-09-2025ல் சி.பி.ஐ. புலன் விசாரணை அதிகாரி விஜயகுமார் சுக்லாவின் சாட்சியத்தை குற்றவாளிகளின் வழக்கறிஞர்கள் குறுக்குவிசாரணை செய்ததோடு விசாரணை நிறைவுபெற்றிருக்கிறது. அதனால் சீக்கிரமே இந்த வழக்கில் தீர்ப்பு வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்த வழக்கு வேகமெடுத்து, தீர்ப்பு விரைவில் வெளிவரக் காரணமே நம்ம நக்கீரனுடைய புலனாய்வுச் செய்திகள்தான்.''
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக மத்தியைச் சேர்ந்த ஒரு மூத்த அமைச்சரின் உதவியாளராக பணியாற்றும் சபரிமலை தெய்வத்தின் பெயர் கொண்டவர், சமீப காலமாக அமைச்சருக்குத் தெரியாமல் பல லீலைகளையும் செய்து வருவதாகவும், ஒப்பந்தப் பணிகளுக்குத் தனியாக 2 சதவீதம் கட்டிங் வசூலிப்பதாகவும் சொல்கிறார்கள். அதிலும் தி.மு.க.வைச் சேர்ந்த காண்ட்ரக்டர்களுக்கு வழங்கும் ஒப்பந்தப் பணிகளை விட, இவர் அ.தி.மு.க.வினருக்கு வழங்கும் ஒப்பந்தப் பணி அதிகமாம். கட்டிங் கொடுக்காத தி.மு.க.வினரின் ஒப்பந்த வேலைகளை எல்லாம் இவர் அ.தி.மு.க.வினருக்கு வாரிக் கொடுத்து, வாங்க வேண்டி யதை வாங்கிக்கொள்கிறாராம். இதனால் தி.மு.க. ஒப்பந்த தாரர்கள் குமுறி வருகிறார் களாம்.''
_______________
இறுதிச்சுற்று!
சதுர்வேதி சாமியார் மீது வழக்கு பதிவு!
சென்னை தி.நகர் பகுதியில் "ஸ்ரீராமனுஜர் மிஷன் டிரஸ்ட்' என்ற பெயரில் பிரசன்ன வெங்கடா சதுர்வேதி சாமியார் என்பவர் அறக்கட்டளை ஒன்றை நடத்திவந்தார். இவர் தன்னை ‘கிருஷ்ண னின் அவதாரம்’ என்று அறிவித்துக்கொண்டு, சொற்பொழிவு நடத்துவதும், தனது சொற்பொழிவால் ஈர்க்கப்பட்ட பெண்களிடம், "நான்தான் கிருஷ்ணன்' எனக்கூறி பாலியல் தொல்லைகளும் கொடுத்துவந்தார். இவரது லீலைகள் குறித்தெல்லாம் ஏற்கெனவே நமது நக்கீரனில் செய்தி வெளியிட்டுள்ளோம். இந்நிலையில் அவர்மீது தொழிலதிபர் அளித்த புகாரின் பேரில் கைதுசெய்து, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில்... சதுர்வேதி சாமியார் மீது மேலும் பல புகார்களும் குவிய, 2016ஆம் ஆண்டில் தலைமறைவானார். அவர் மீதான வழக்கில் ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத நிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சதுர்வேதி சாமியார் மீது 22ஆம் தேதி திங்களன்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
-கீரன்