Advertisment

அமித்ஷா முன்னிறுத்தும் தமிழக பிரதமர்! பா.ஜ.க.வில் வெடிக்கும் பூசல்!

d

மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை உயர்த்திச் சொல்வார். அதற்கு ஒரு முக்கிய காரணம் ராகுல்காந்தி, “"தமிழ்நாட்டில் நீங்கள் என்றைக்குமே ஆட்சிக்கு வர முடியாது'” எனப் பாராளுமன்றத்தில் மோடியின் முகத்துக்கு நேரே உமிழ்ந்த வார்த்தைகள். அதே பாணியில் அமித்ஷா, "“தமிழர் ஒருவர் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும்'’என பா.ஜ.க. தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். இது தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளைவிட டெல்லியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது.

Advertisment

அமித்ஷாவின் இந்தப் பேச்சு முடிந்ததும் பத்திரிகையாளர்களை இரண்டுமுறை சந்தித்த அண்ணாமலை பல பொதுவான விஷயங்களைப் பற்றி கருத்து சொன்னார். ஆனால், திடீரென ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தை அழைத்த அண்ணாமலை, "அமித்ஷா தொண்டராயிருந்து தலைவராக மாறியவர், ஆதலால், ஒவ்வொரு தொண்டரும் தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் இருக்கும் தொண்டர் ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்றுதான் பேசினார்''’என நீண்ட விளக்கத்தை அளித்தார்.

Advertisment

dad

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தை தனியாக அழைத்து, அமித்ஷாவின் கருத்து குறித்து தமிழர் பிரதமராக வேண்டும் என தனியா

மோடி எங்கு சென்றாலும் தமிழின் பெருமையை உயர்த்திச் சொல்வார். அதற்கு ஒரு முக்கிய காரணம் ராகுல்காந்தி, “"தமிழ்நாட்டில் நீங்கள் என்றைக்குமே ஆட்சிக்கு வர முடியாது'” எனப் பாராளுமன்றத்தில் மோடியின் முகத்துக்கு நேரே உமிழ்ந்த வார்த்தைகள். அதே பாணியில் அமித்ஷா, "“தமிழர் ஒருவர் இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும்'’என பா.ஜ.க. தொண்டர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினார். இது தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வுகளைவிட டெல்லியில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டது.

Advertisment

அமித்ஷாவின் இந்தப் பேச்சு முடிந்ததும் பத்திரிகையாளர்களை இரண்டுமுறை சந்தித்த அண்ணாமலை பல பொதுவான விஷயங்களைப் பற்றி கருத்து சொன்னார். ஆனால், திடீரென ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தை அழைத்த அண்ணாமலை, "அமித்ஷா தொண்டராயிருந்து தலைவராக மாறியவர், ஆதலால், ஒவ்வொரு தொண்டரும் தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் இருக்கும் தொண்டர் ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்றுதான் பேசினார்''’என நீண்ட விளக்கத்தை அளித்தார்.

Advertisment

dad

ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தை தனியாக அழைத்து, அமித்ஷாவின் கருத்து குறித்து தமிழர் பிரதமராக வேண்டும் என தனியாக ஒரு விளக்கத் தை அளிக்க வேண்டிய நிர்பந்தம் அண்ணா மலைக்கு ஏன் வந்தது என பா.ஜ.க. வட் டாரங்களை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

“பிரதமர் மோடியின் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகின்றது. மோடி நூற்றி ஐம்பது கிலோமீட்டர் ‘ரோடு ஷோவை கர்நாடகாவில் நிகழ்த்தினார். இது தவிர நாற்பதாயிரம் கோடி ரூபாய் பணம் கர்நாடக தேர்தலில் பா.ஜ.க. விநியோகம் செய்தது. இவ்வளவு செலவழித்தும் கர்நாடகாவில் பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. அதற்குக் காரணம், பி.எல்.சந்தோஷ் என்கிற ஆர்.எஸ்.எஸ்.காரரும், அவரது சிஷ்யர் களான அண்ணாமலையும், சி.டி.ரவியும், எடியூரப் பாவுக்கு எதிராக நடத்திய கோஷ்டி அரசியலும் தான் என மோடி தரப்பு குற்றம் சாட்டுகிறது.

dd

“அதெல்லாம் காரணமில்லை. ‘மோடி மேஜிக்’ என்பது சரிந்து வருகிறது. தென் இந்தியாவில் நூற்றி நாற்பத்திரண்டு தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற முடியாது. தற்பொழுது தேர்தல் நடக்கும் மாநிலங்களில் மத்தியப்பிரதேசத்திலும், சட்டீஷ்கரிலும் பா.ஜ.க. காலி. ராஜஸ்தானில் சச்சின் பைலட் ஒத்துழைப்புடன் காங்கிரசை உடைப்பதால் மட்டுமே பா.ஜ.க. கொஞ்சம் தெம்புடன் இருக்கிறது. மகாராஷ்டிராவில் அவுரங்கசீப்பின் முகத்துடன் விநாயகரின் முகத்தை இணைத்து ஒரு உருவப் படத்தை உருவாக்கி அதை ‘வாட்ஸ் ஆப்’ மூலம் பரப்பி, ஒரு பெரிய கலவரத்தை உருவாக்கி பா.ஜ.க.வை பெரிய அளவில் வளர்க்க மோடி, அமித்ஷா கும்பல் திட்டமிட்டது. அதுவும் கை கொடுக்கவில்லை. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரங்களால் பா.ஜ.க.வின் இமேஜ் சரிந்துவிட்டது. அது அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ.க.வின் செல் வாக்கை குலைத்து விட்டது. தற் பொழுது குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களை நம்பிதான் தேசிய பா.ஜ.க. இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாகத் திரள ஆரம்பித்து விட்டன. பா.ஜ.க.வை அகில இந்திய அளவில் உயர்த்திப் பிடிக்க எந்த விசயமும் இந்தியாவில் இல்லை. எனவே, பிரதமர் மோடி என்கிற கோஷத்திற்கு மாற்று கோஷம் கண்டு பிடிக்கப்பட வேண்டும். மோடிக்கு எழுபத்தி ஐந்து வயது 2026-ல் வருகிறது. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற தலைவர்களை எல்லாம் வயதைக் காட்டி ஒதுக்கினார் மோடி. மோடியும் அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும், அவருக்குப் பதிலாக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அல்லது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை முன்னிறுத்த ஆர்.எஸ்.எஸ். விரும்பு கிறது. இதில் ஜெய்சங்கர் தமிழர். பிராமணரான அவரை ஆர்.எஸ். எஸ். முன்னிறுத்துகிறது. அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்தான் அமித்ஷா, "தமிழர்கள் இரண்டுமுறை பிரதமராகும் வாய்ப்பை இழந் தார்கள், இம்முறை தமிழர் பிரதமர் ஆகலாம் என மறைமுகமாகச் சொன்னார்'’என டெல்லி வட்டா ரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

உடனே டென்ஷனான மோடி, அமித்ஷாவிடம் விளக்கம் கேட்டார். அமித்ஷா, "நான் அப்படி சொல்ல வில்லை, பிரதமராகும் தகுதி அண்ணாமலைக்கு உண்டு என அண்ணாமலையின் ஆட்கள் ஏற்கெனவே பிரச்சாரம் செய்துவருகிறார்கள். சாதாரணமாக தொண்டர்கூட பிரதமர் ஆகலாம் என தமிழர்கள் பற்றி நான் சொன்னதை, ‘அண்ணா மலை பிரதமராகலாம்’ என்ற பொருள்பட ஊடகங்களில் கொளுத்திப் போட்டுவிட்டார்கள்''’ என விளக்கம் சொல்ல... "பிரதமர் அலுவலகத்திலிருந்து அண்ணாமலையைக் கூப்பிட்டு, அமித்ஷா வின் பேச்சுக்கு மறு விளக்கம் கொடுக்கும்படி‘ரைடு’ விட்டார்கள்'” என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

_______________

அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி!

தமிழ்நாடு விசிட்டில் வேலூர் மாவட்டம் கந்தனேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, "தி.மு.க. கூட்டணியுடன் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லையென்றும், தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில்தான் நிறைய தமிழ்நாட்டுக்காக செலவிடப்படுவதாக''வும் குற்றம்சாட்டினார்.

இதற்கு சுடச்சுடப் பதிலளித்த தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, "உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள நிதி ஒதுக்கீடுகள், மானியங்கள் எல்லாம் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு சட்டப்படி தரவேண்டியது. ஆண்டுதோறும் ஜி.எஸ்.டி மூலமாக 1.6 லட்சம் கோடியை ஒன்றியத்துக்கு தமிழ்நாடு தருகிறது. பதிலுக்கு 41ஆயிரம் கோடி மட்டுமே ஒன்றிய அரசு தருகிறது. கடந்த 9 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 2.47 லட்சம் கோடி தந்துள்ளதாக கூறுகிறார். அதே காலகட்டத்தில் உ.பிக்கு 10.73 லட்சம் கோடி தந்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரயில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 18 ஆயிரம் கோடி. 2023-24ஆம் ஆண்டு மட்டும் உ.பிக்கு 17,500 கோடி. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை நிதி ஒதுக்கவில்லை, சென்னை மாநகரத்துக்கு பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரை செய்த 500 கோடி ரூபாயை இரண்டு ஆண்டுகளாக தரவில்லை'' என்று புள்ளிவிவரங்களோடு வெளுத்து வாங்கிவிட்டார்.

-ராஜா

nkn140623
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe