மோடியையும் அமித்ஷாவையும் எதிர்க்கும் ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறை, சமீபகாலமாக அமைதியாக இருந்தது. இதனால் அமலாக்கத்துறையின் மீதான அலட்சியம், எதிர்க்கட்சிகளிடம் குடியிருந்த சூழலில், அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான ரெய்டுமூலம் மீண்டும் தனது ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது அமலாக்கத்துறை.
அமலாக்கத்துறையின் ஆக்ஷன்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் போடப்பட்ட வழக்குகளின் விசாரணையின்போது, அமலாக்கத்துறை வரம்பு மீறுகிறது என்று நீதிபதிகள் கடுமையாகக் கண்டித்தனர். அமலாக்கத்துறை யினர் வைத்த கோரிக்கைகளைப் புறந்தள்ளியதுடன் அவர்களுக்கு எதிரான உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டன.
இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குகளை உற்றுக் கவனித்துவரும் சென்னை உயர்நீதிமன்ற தி.மு.க. வழக்கறிஞர்கள் நம்மிடம் பேசும்போது, "எதிர்க்கட்சிகளை மிரட்டும் ஆயுதமாக அமலாக்கத்துறையை டெல்லி பயன் படுத்துகிறதே தவிர, உண்மையாக வழக்குகளை பதிவு செய்வ தில்லை. அதனால்தான் நீதிமன்றங்களின் கண்டனங்களை அமலாக் கத்துறை அதிகாரிகள் எதிர்கொள்கிறார்கள். இதனால்தான் அண் மைக்காலமாக, எந்த ரெய்டுகளையும் நடத்தாமல் இருந்திருக்கிறார் கள். இப்போது மீண்டும் ரெய்டில் இறங்கியிருப்பதால் அதன் பின்னணியில் சீக்ரெட் ப்ளான் இருக்கலாம்''’என்கின்றனர்.
அமலாக்கத்துறையின் உண்மை முகத்தை அம்பலப் படுத்துவதற்காக, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு களின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார் மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் நெருங்கிய நண்பரான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.யுமான சாகேத் கோகுலே. அவரது கேள்விக்கு பதிலளித்த மோடி, "அரசாங் கத்தின் நிதியமைச்சகம், கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குகளின் எண்ணிக்கை 5,892. இதில், 1,398 வழக்கு கள் மட்டுமே நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்தன. அவைகளில் 8 வழக்குகளில் மட்டுமே தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. அமலாக்கத் துறையினர் பதிவு செய்த வழக்கு களில் 77 சதவீத வழக்குகளுக்கு ஆதாரம் இல்லாததால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை''’என்று தெரிவித்திருக்கிறது.
இதனை அம்பலப்படுத்தியுள்ள எம்.பி. சாகேத் கோகுலே, "குற்றங்களை நிரூபிக்க முடியாதாபோது, பொய் வழக்குகளை பதிந்த அமலாக்கத்துறைக்கு என்ன தண்டனை? யார் தருவது? அமலாக்கத்துறை என்பது மோடி மற்றும் அமித்ஷாவின் கிரிமினல் சிண்டிகேட் தவிர வேறில்லை. "பா.ஜ.க.வுக்காக மிரட்டி பணம் பறிப்பதும், மோசடி செய்வதும் மட்டுமே அமலாக்கத்துறையின் ஒரே பணி'’ என்று ஆவேசப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் இத்தகைய விமர்சனங்களை உள் வாங்கியுள்ள மத்திய பா.ஜ.க. அரசு, அமலாக்கத்துறையின் வழக்குகள் குறித்து சில உத்தரவுகளை உயரதிகாரிகளுக்குப் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளின்படி, பல்வேறு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியுள்ளனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அமலாக்கத்துறை ஃபெமா மற்றும் பி.எம். எல்.ஏ. எனும் 2 சட்டங்களை கையாள்கிறது. இதில் ஃபெமா என்பது சிவில் சட்டம்; பி.எம்.எல்.ஏ. என்பது குற்றவியல் சட்டம். இதில், பி.எம்.எல்.ஏ. எனும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தைத்தான் உயர்த்திப் பிடிக் கிறது. இந்த சட்டத்தின்படி, மோசடியில் ஈடுபடுபவர்களை கைது செய்து வழக்குப் பதிவு செய்வதற்கும், அத்தகைய குற்றங்களில் பெறப்பட்ட சொத்துக்களை கண்டறிந்து பறிமுதல் செய்வதற்கும் அதிகாரம் இருக்கிறது. அதனடிப்படையில், அந்த அதிகாரத்தை வேகமாக பயன்படுத்த அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள வழக்குகள் அனைத்தையும் விரைந்து முடித்து தண்டனை பெற்றுத் தருவதற்காக, சில முடிவுகளை எடுத்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
அதாவது, இதுவரையில் அமலாக்கத்துறை கையாண்டு வந்த பி.எம்.எல்.ஏ. சட்ட வழக்குகள் மத்திய நிதியமைச்சகத் தின் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்த வழக்குகள் மட்டும் தற்போது நிதி அமைச்சகத்திடமிருந்து அமைச்சர் அமித்ஷா வசமுள்ள மத்திய உள்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதனால், இனி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நிலுவையி லுள்ள வழக்குகள் வேகமெடுக்கும்.
அது மட்டுமல்ல, பதியப்படாமல் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் கோப்புகளின் நாடாக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அந்த கோப்புகளின் அடிப்படையில் சில புதிய வழக்குகள் பதிவதிலும் கவனம் செலுத்த அமலாக்கத்துறைக்கு ஆர்டர் பாஸாகி யிருக்கிறது. பீஹாரில் வாக்காளர் பட்டி யல் திருத்த விவகாரத்தில் மத்திய அரசு சீரியசாக இருப்பதாலும், உச்சநீதிமன்றத் தில் நவம்பரில் ஏற்படும் சில பல மாற்றங்களுக்காக காத்திருப்பதாலும் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதே தவிர, நீர்த்துப்போகவில்லை.
இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளி நாட்டு நிறுவனங்களின் பங்குகளை (ஷேர்கள்) வாங்கியதாக தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு எதிராக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில், நேரில் ஆஜராகுமாறு ஜெகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது அமலாக்கத்துறை. அந்த நோட்டீஸை எதிர்த்து, ஜெகத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறையின் நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இது குறித்து பதிலளிக்கு மாறு அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
எதிர்க்கட்சிகள் அலட்சியமாக இருக்கும் தருணங்களில் அமலாக்கத் துறையின் புதிய ஆபரேசனைத் தொடங் கும் நடவடிக்கைகள் திட்டமிடப் படுகின்றன. இந்த புதிய ஆபரேசனில் சிக்கப்போவது, இதுவரை ரெய்டுகளை எதிர்கொள்ளாத தி.மு.க.வின் 5 அமைச் சர்கள் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.