ஜோசப் விஜய் மெல்ல மெல்ல லோட்டஸ் விஜய் ஆகிவிட்டார். இந்த ஆபரேஷனுக்கு திட்டம் தீட்டி செயல் படுத்துபவர் சாட்சாத் அமித்ஷாதான். விஜய்க்கு  கட்சி ஆரம்பித்து சாதாரணமாக இருக்கும் போதே வ  பிரிவு பாதுகாப்பு கொடுத்து அவரை கவர முயற்சித்தது பா.ஜ.க. இப்பொழுது கரூர் பிரச்சனையை ஒட்டி புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். புஸ்ஸி ஆனந்த் ஏற்காடு மலை ரிசார்ட்டில் பதுங்கியிருந்தபோது அவரை போலீஸ் நெருங்கிவிட்டது. அவரிடமே தொலைபேசியில் உரையாடி ‘"நீங்கள் இங்கே இருப்பது தெரியும்'’ என போலீசார் சொல்லிவிட்டனர். புஸ்ஸி ஆனந்தின் குடும்பம் நேரடியாக விஜய்யை சந்தித்து அழுதது. அதேபோல் நிர்மல்குமாரின் இருப்பிடத்தையும் போலீசார் கண்டுபிடித்தனர். ஆதவ் அர்ஜுனா, ‘"நேபாளம் மாதிரி புரட்சி வெடிக்கும்'’ என போட்ட ட்வீட்டை ஒட்டி அவர் மீது எஒத பதிவு செய்த சென்னை நகர சைபர் க்ரைம் போலீசார் அந்த ட்வீட்டை அவர் டெலிட் செய்துவிட்டபோதும், அவரைத் தேடி அவரது போயஸ் கார்டன் வீட்டை சுற்றிவந்தார்கள். 

Advertisment

இப்படி விஜய்க்கு நெருக்க மானவர்களெல்லாம் போலீஸ் பிடியில் சிக்குவதை விஜய் விரும்பவில்லை. கொலம்பியா நாட்டில் ஓய்வெடுத்துக் கொண் டிருந்த ராகுல் காந்தியிடம் பேசி, தன் மீது வழக்குப் பதியாமல் பார்த்துக்கொண்ட விஜய்யால், தனது நெருங்கிய சகாக்கள் போலீசாரால் வேட்டையாடப்படுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காக மீண்டும் ராகுலிடம் பேச முயற்சிக்க, "அவர்களை நாங்கள் இப்பொழுது கைது செய்யமாட்டோம். அவர்கள் முன்ஜாமீன் வாங்க நீதிமன்றத்தை அணுகியிருக்கிறார்கள். முன்ஜாமீன் தீர்ப்பு                     வரும் வரை அவர்களைக் கைது செய்யமாட்டோம்'’என மாநில அரசு சொன்னதாக ராகுல் தரப்பால் விஜய்க்கு சொல்லப்பட்டது. விஜய் தனது வீடியோவில் குறிப்பிட்ட ‘"என்னைக் கைது செய்யுங்கள், என் சகாக்களை விட்டுவிடுங்கள்'’என்ற அந்த பகுதி ராகுல்காந்தியிடம், விஜய் வைத்த கோரிக்கை என்கிறார்கள் விஜய்க்கு நெருக்க மானவர்கள். 

Advertisment

தினமும் வியூக அமைப் பாளர் ஜான்ஆரோக்கியத்திடம் பேசும் விஜய், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுடன் நாம் இணைந்தால் என்ன நடக்கும்  என சாதக பாதகங்களை விவாதித்திருக்கிறார். அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க., அன்புமணி பா.ம.க., தே.மு.தி.க. இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கலாம். மேலும் கரூர் சம்பவம் தி.மு.க.வின் திட்டமிட்ட சதியால் உருவானது என வீடியோக்கள் மூலம் உறுதிப்படுத்தலாம் என ஜான் சொன்ன ஆலோசனையைக் கேள்விப்பட்ட தி.மு.க. அரசு, உடனடியாக அமுதா ஒஆநயை களமிறக்கி அரசு தரப்பிலிருந்து வீடியோக்களை வெளியிட்டது. செந்தில் பாலாஜி தனது விளக்கமாக ஒருமணி நேர பிரஸ் மீட்டை நடத்தினார். தி.மு.க. கைது நட வடிக்கைகளில் தீவிரம் காட்டவில்லையே தவிர, கரூர் சம்பவம் விஜய்யின் சைக்கோத்தனத்தால் ஏற்பட்டது என்கிற பிரச்சாரத்தில் பெருமளவில் வெற்றி பெற்றது. இதை கவனித்த மத்திய அரசு, முனைப்பாக ஹேமமாலினி தலைமையில் எம்.பி.க்கள் குழுவை கரூருக்கு அனுப்பியது. பிரதமர் மோடியே கரூருக்கு வருவதாக இருந்தது. மோடிக்குப் பதில் நிர்மலா சீதாராமன் கரூருக்கு அனுப்பப்பட்டார். 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் விஜய்க்கு ஆறுதலாக இருந்தது. உடனடியாக ஆதவ் அர்ஜுன் டெல்லிக்கு அனுப்பப்பட்டார். அவர் அங்கு பா.ஜ.க. தலைவர்களுடன் பேசி வருகிறார். இறுதியாக அ.தி.மு.க. கூட்டணியில் த.வெ.கவுக்கு 25 சீட்டுகள் என்பதுவரை தற்பொழுது பேசப்பட்டு வருகிறது. நீதிமன்ற விசாரணை பெரிதானால் சுப்ரீம் கோர்ட்டில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சி.பி.ஐ. விசாரணை வந்துவிட்டால் விவகாரம் கிணற்றில் போட்ட கல் போல ஆகிவிடும் என்ற ஒரு உறுதி விஜய்க்கு பா.ஜ.க. தரப்பில் தரப்பட்டுள்ளது. இதற்கிடையே, இறந்தவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் த.வெ.க. தரப்பில் தரப்படும் என அறிவிக்கப்பட்டது பற்றி யாரும் கண்டு கொள்ளவில்லை. 

Advertisment

“இந்தப் பிரச்னையிலிருந்து எப்படி வெளியே வருவது என்பதுதான் விஜய் தரப்பின் கவலையாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் சீட்டு எண்ணிக்கை வரை போன பா.ஜ.க. கூட்டணி விவகாரங்களை நயினார் நாகேந்திர னும் அ..மலையும் இணைந்து முன்னெடுக்கிறார் கள். கூட்ட நெரிசலில் சிக்கி செத்ததை சதித்திட்டம் எனச்சொல்லும் அவலம் மெல்ல மெல்ல அரங்கேறிக் கொண்டுள்ளது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.    

__________________
இறுதிச் சுற்று! 

திருமா ஆவேசம் 

amit-vijay-box

அக்டோபர் 2ஆம் தேதி, வியாழனன்று திருச்சியில் செய்தியாளர் களை சந்தித்த வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன், "விஜய், பா.ஜ.க. தூண்டுதல் காரணமாகவே அரசியலுக்கு வந்தார்.  தி.மு.க.வின் சிறுபான்மையினர் வாக்கை விஜய் மூலமாகப் பிரிப்பதே பா.ஜ.க.வின் திட்டம். அன்னாஹசாரேவை போல் விஜய்யை பா.ஜ.க. பயன்படுத்துகிறது. விஜயை பயன்படுத்தி அ.தி.மு.க.வை அழித்துவிட்டு அந்த இடத்துக்கு வர பா.ஜ.க. முயற்சிக்கிறது. விஜய், 3 நாட்கள் சும்மா இருந்துவிட்டு, ஆர்.எஸ்.எஸ். தலைமை சொன்னவுடன் வீடியோ வெளியிடுகிறார். ஹஸ்கி வாய்ஸில் பேசினால் சோகம் என நம்பிவிடுவார்கள் என நினைத்து விஜய் அப்படி பேசியுள்ளார். விஜய் மாதிரியான ஆபத்தான சக்தியிடம் சிக்கினால், தமிழகம் கலவர பூமியாகிவிடும். கரூர் துயரச் சம்பவத்திலிருந்து விஜய்யின் கொள்கை எதிரியான பா.ஜ.க.வே அவரை பாதுகாக்க நினைக்கிறது. கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் சில இளைஞர்கள் போதையில் இருந்துள்ள தாகத் தெரிகிறது. கூட்டத்தில் கழுத்தை நெரித்துக் கொன்றதற்கும், கல் வீசியதற்கும், ஸ்ப்ரே அடித்ததற்கும் ஆதாரம் உள்ளதா? புஸ்ஸி ஆனந்த் மீது வழக்கு போட்ட தமிழக அரசு, விஜய், ஆதவ் அர்ஜூனா மீது மட்டும் வழக்கு போட அஞ்சுகிறதா? விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாததில் த.வெ.க. -தி.மு.க. இடையே மறைமுக டீலிங் உள்ளதா?'' என்று பரபரப்பாக பேசியுள்ளார்.                  
                   
-கீரன்