Advertisment

அமித்ஷா -எடப்பாடி சந்திப்பு! மாறும் கணக்குகள்!

eps-amitsha

மிழக தேர்தல் களத்தில் வேகவேகமாக அரசியல் காட்சிகள் மாறிவருகிறது. சமீபத்தில் திருச்சிக் கும், புதுக்கோட்டைக்கும் வந்த அமித்ஷாவின் விசிட் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக் கோட்டை விழாவில் பேசிய அமித்ஷா, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அறிவிக்கவில்லை. 

Advertisment

அமித்ஷா புதுக்கோட் டையில் பேசிக்கொண்டிருக் கும்போதே சேலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டி ருந்த எடப்பாடி பழனிச்சாமி, "கூட்டணி ஆட்சி இல்லை. தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையோடு அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்' என அறிவித்தார். 

Advertisment

இப்படி முரண்பாடுகள் நிறைந்துள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கு பேட்ச்அப் செய்வதற்கே வேலுமணி அமித்ஷாவை சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில் முகம் வாடி வெளியே வந்தார் வேலுமணி. தமிழகத்திற்கு வந்த அமித்ஷாவை ஏன் எடப்பாடி சந்திக்கவில்லை என்கிற கேள்வி அனைவருக்கும் எழுகிறது.

மிழக தேர்தல் களத்தில் வேகவேகமாக அரசியல் காட்சிகள் மாறிவருகிறது. சமீபத்தில் திருச்சிக் கும், புதுக்கோட்டைக்கும் வந்த அமித்ஷாவின் விசிட் பூகம்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புதுக் கோட்டை விழாவில் பேசிய அமித்ஷா, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என அறிவிக்கவில்லை. 

Advertisment

அமித்ஷா புதுக்கோட் டையில் பேசிக்கொண்டிருக் கும்போதே சேலத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டி ருந்த எடப்பாடி பழனிச்சாமி, "கூட்டணி ஆட்சி இல்லை. தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையோடு அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்' என அறிவித்தார். 

Advertisment

இப்படி முரண்பாடுகள் நிறைந்துள்ள அ.தி.மு.க. கூட்டணிக்கு பேட்ச்அப் செய்வதற்கே வேலுமணி அமித்ஷாவை சந்தித்தார். இரண்டு மணி நேரம் நடந்த அந்த சந்திப்பில் முகம் வாடி வெளியே வந்தார் வேலுமணி. தமிழகத்திற்கு வந்த அமித்ஷாவை ஏன் எடப்பாடி சந்திக்கவில்லை என்கிற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. இந்த கேள்விக்கு அமித்ஷாவும் எடப்பாடியும் எந்த பதிலும் தரவில்லை. அதன்பிறகே கவர்னரை சந்தித்துவிட்டு டெல்லிக்கு சென்றார் எடப்பாடி.

தமிழகத்திற்கு வந்த அமித்ஷாவை சந்திக்காமல், டெல்லிக்குப் போய் ஏன் சந்தித்தார்? என்பதற்கு காரணம்... அமித்ஷா இட்ட நிபந்தனைகள்தான். அமித்ஷா, எடப்பாடியை சந்திக்க விரும்பவில்லை. கூட்டணியை உறுதி செய்துகொண்டு வாருங்கள் என கட்டளை யிட்டதன் பேரில் அவசர அவசரமாக பா.ம.க. அன்புமணியை அழைத்து அவருடன் கூட்டணி யை உறுதி செய்தார் எடப்பாடி.

அவர், ஒரு ராஜ்யசபா இடத்தை தனது மனைவிக்கு கொடுக்க வேண்டுமென கண்டிசன் போட்டார். "இந்தமுறை நான் ராஜ்யசபா உறுப் பினராகமாட்டேன். தமிழக அரசியலில் ஈடுபடப் போகிறேன். பென்னாகரத்தில் போட்டியிட்டு ஜி.கே.மணியை தோற்கடிப்பேன்' என்றார்.

அவருக்கு 17 சீட்டை கொடுத்துவிட்டு, அவரது தந்தை ராமதாசுக்கு 8 சீட் கொடுப்பதே எடப்பாடியின் ப்ளான். ஆனால், "மாம்பழம் சின்னம் எனக்குத்தான். நான்தான் ஒரிஜினல் பா.ம.க.' என்றார் அன்புமணி.

மேலும், "ராஜ்யசபா சீட்டை இந்தமுறை உங்களுக்குத் தரமுடியாது. இந்தமுறை தே.மு.தி.க.வுக்கே கொடுப்பதாக வாக்குறுதி அளித்துள்ளேன். வரும் பிப்ரவரி மாதத்தில் உங்களுக்கு தருகிறேன் என எடப்பாடி சொன்னார். அந்த விஷயத்தில் வாக்குவாதம் இருவருக்கும் தடித்தது. நான் ஏன் ஏற்கனவே உங்களுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தேன். ஏன் எங்கள் கூட்டணியை தவிர்த்து பா.ஜ.க. கூட்டணிக்கு சென்றீர்கள்?' என குரலை உயர்த்தி பேசி அன்புமணியை அடக்கினார் எடப்பாடி.

உடனே ராமதாஸை தி.மு.க. வட்டாரங்கள் தொடர்புகொண்டன. அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் தனது மகள் ஸ்ரீகாந்தி, அருள், ஜி.கே.மணி ஆகியோர் எம்.எல்.ஏ. ஆக வேண்டும். இதுதான் எனது கோரிக்கை. நான் கூட்டணிக்கு வரத்தயார் என சொன்ன ராமதாஸ், ஒரிஜினல் பா.ம.க. நான்தான். அன்புமணிக்கு கூட்டணி பற்றி பேச எந்த அதிகாரமும் இல்லை என அறிவித்தார்.

டெல்லிக்கு சென்ற எடப்பாடி அமித்ஷாவிடம் ஒருமணி நேரம் பேசினார். அதில் ஓ.பி.எஸ், சசிகலா ஆகியோரை அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தினார்.

அவர்கள் இரண்டு பேரும் அ.தி.மு.க.வை சீர்குலைக்க உள்ளே வர நினைக்கிறார்கள். அவர்களை அ.தி.மு.க.வுக்குள் அனுமதிக்க முடியாது. அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெறட்டும். இருவருக்கும் தலா 10 சீட்டுகள் தருகிறேன் என எடப்பாடி வாக்குறுதி அளித்தார். ஆனால் ஓ.பி.எஸ், அ.தி.மு.க.வுக்கு எதிராக தொடுத்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என உறுதியாகப் பேசினார் எடப்பாடி.

இப்படி பா.ஜ.க.வுக்கு அதிக தொகுதிகள் தருகிறேன் என அமித்ஷா வலியுறுத்திய தொகுதிகளின் எண்ணிக்கையையும் பா.ஜ.க. கேட்ட தொகுதிகளையும் ஒத்துக்கொண்டார் எடப்பாடி.

பிறகு பேச்சு விஜய் பக்கம் திரும்பியது. விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு வந்த தடை மற்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு விஜய் ஆஜராவது பற்றி பேசிய அமித்ஷா, "பார்த்தீர்களா இவ்வளவு நடந்தும் விஜய் பா.ஜ.க.வை எதிர்த்துப் பேசவில்லை. விஜய்யிடம் பா.ஜ.க. கூட்டணிக்கு வந்துவிடுங்கள் என்று கேட்போம். வந்தால் நல்லது, வராவிட்டால் அவர் மூலம் தி.மு.க. வாக்குகளை உடைப்போம்'' என அமித்ஷா தனது பார்முலாவைச் சொன்னார். இதுவரை டி.டி.வி. தினகரன் விஜய் பக்கம் போவேன் எனச் சொல்லிக்கொண்டிருப்பது அ..மலை மூலம் பா.ஜ.க. சொன்னதைத்தான் அவர் செய்துகொண்டி ருக்கிறார் என டி.டி.வி. தினகரன் நிலையை விளக்கியிருக்கிறார் அமித்ஷா.

ஓ.பி.எஸ்.சை அ.தி.மு.க.விற்குள் சேர்க்காத தால், எடப்பாடி டெல்லி சென்றது உலக அதிசயமா என வெறுப்புடன் கேட்ட ஓ.பி.எஸ்.ஸிடம், தி.மு.க. கூட்டணிக்கு செல்வோம் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

அ..தி.மு.க. -பா.ஜ.க. -டி.டி.வி. -பா.ம.க. என அ.தி.மு.க. முகாம் கூட்டணிக்கு பேசிவருகிறது. தி.மு.க. பக்கம் செல்வதற்கு ஓ.பி.எஸ்.ஸும் ராமதாசும் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் உடையும் நிலையிலிருக்கிறது. த.வெ.க. அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதுதான் தமிழக அரசியல் நிலவரம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

nkn100126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe