"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் எடப்பாடியோடு போட்டி போடும் சொந்தக் கட்சிப் புள்ளிகளின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கு.''
""இ.பி.எஸ். போனது போலவே ஃபாரினுக்குப் போய் அவர் போட்ட மாதிரியே கோட் போட்டு கலக்கிய ஓ.பி.எஸ்.ஸை சொல்றியா?''
""அதை அப்புறம் சொல்றேங்க தலைவரே.. இது இன்னொரு அமைச்சர் சம்பந்தப்பட்டது. ஏற்கனவே இ.பி.எஸ் ஸின் முதல்வர் நாற்காலியை ஈஷா ஜக்கி மூலமா எஸ்.பி.வேலுமணி குறி வச்சி, டெல்லி வரைக்கும் காய் நகர்த் தினாரு. அதை ஒரு வழியா டெல்லித் தொடர்புகள் மூலமா சமாளிக்க எடப்பாடிக்கு இப்ப டஃப் கொடுப்பவரு, இரங்கல் கவிதை எழுதி மீடியா அட்டென்ஷனைப் பெற்ற மந்திரி.''
""ஓ.. சுகாதாரத்துறையா?''’
""சரியா பாயிண்ட்டைப் பிடிச்சிட்டீங் களே தலைவரே, ஏற்கனவே அமைச்சரவை சகாக்களே எடப்பாடிகிட்ட சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் பற்றி எச்சரிச்சிருக்காங்க. 40 எம்.எல்.ஏ.க்களை, மாதாந்திர சம்பளம் கொடுத்து கையில் வச்சிருக்கும் விஜயபாஸ்கர், எதிர்க் கட்சி எம்.எல்.ஏ.க்களிடமும் கெட்டி யான நட்பையும் ஏற்படுத்தி வச்சிருக்கார்ன்னு உஷார்படுத்தியிருந்தாங்க. அதனால் அண் மைக்காலமாவே எடப்பாடியின் சந்தேக வளை யம் அமைச்சர் விஜயபாஸ்கரைச் சுற்றி விழுந் திருந்தது. அதனால் அவ்வப்போது தட்டிக் கேட்கவும் ஆரம்பிச்சார். குறிப்பா நடுகாட்டுப் பட்டி சிறுவன் சுஜித் விவகாரத்தில் கூட விஜய பாஸ்கர் நடந்துக்கிட்ட முறைகளைப் பார்த்து அவரிடமே தன் அதிருப்தியைத் தெரிவிச்சார் எட""பத்து நிமிசத்துக்கு ஒரு முறை முதல்வர் விவரம் கேட்குறாருன்னு மந்திரி சொன்னது இதைத்தானா?''’
""தலைவரே.. சுஜித்துக்கு அஞ்சலி செலுத் துறதுக்காக அந்தப் பையன் வீட்டுக்கு எடப்பாடி வந்தப்ப, அவ்வளவு நேரம் மீடியா முன்னே நின்ற விஜயபாஸ்கர் சற்று பம்மி, பின்னே போனதையும் அதன் பின்னணியும் நம்ம நக்கீரன் மட்டும்தான் சொல்லியிருந்தது. சுஜித்தை காப்பாற்ற பேரிடர் மீட்புக் குழு மட்டும் ஸ்பாட்டில் இருந்தா போதும்ங்கிறதுதான் எடப்பாடி ஐடியா. ஆனால் அந்த மாவட்டத்துக்குக் கொஞ்சமும் சம்பந்த மில்லாத, அமைச்சர் விஜயபாஸ்கர் அங்கே போய் டேரா போட்டதும் சீன் போட்டதும், சிறுவன் உடல்நிலை குறித்து ஏறுக்கு மாறா சொல்லி நம்பிக்கையை உண்டாக்கி கடைசியா கவிழ்த்ததும் எடப்பாடியை டென்ஷனாக்கிடிச்சி. அதனால தான், உங்க துறையில் நடக்கும் அரசு மருத்துவர் கள் போராட்டத்தைக் கூட கவனிக்காம, அங்க போய் எதை சாதிச்சீங்கன்னு கோபமா கேட்டி ருக்கார். அதுமட்டும் இல்லாமல், மணல் விவகாரத்திலும் விஜயபாஸ்கரின் தந்திர நட வடிக்கைகளைப் பார்த்தும் கோபப்பட்டிருக்கார் எடப்பாடி.''’
""விபரமா சொல்லுப்பா?''’
""தமிழகம் முழுக்க எடப்பாடிக்கு நெருக்க மான தரப்புதான் மணல் குவாரி பிஸ்னஸை, லீகலாவும் இல்லீகலாவும் நடத்திக்கிட்டு இருக்கு. இந்த நிலையில், புதுக்கோட்டையில் பாறைகளில் இருந்து மணலைத் தயாரிக்கும் ’எம் சாண்ட் ’தொழிற்சாலையைத் தொடங்கியிருக்கார் விஜய பாஸ்கர். தங்களின் தயாரிப்புக்கு டிமாண்ட்டை அதிகரிக்கணும்னு பல்வேறு நடவடிக்கைகளை அவர் எடுத்திருக்கார். உதாரணமா அங்கிருக்கும் கறார் எஸ்.பி.அசோக் மூலம், ஆற்று மணலை எடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கு. இதுவும் எடப்பாடி கவனத் துக்குப் போனதால், விரைவில் எஸ்.பி.க்கு டிரான்ஸ் பர் உத்தரவு பிறப்பிக்கப்படலாம்னு டாக் அடிபடுது. இப்படி பிஸ்னஸ் ரீதியாவும் தனக்கு நெருக்கடி கொடுத்த விஜயபாஸ்கர், டெல்லியின் தயவைத் தக்கவச்சிக்க எடப்பாடி கையாளும் டெக்னிக்கையும் ஸ்மெல் பண்ணி, அதே பாணியில் ரூட் போட்டதைப் பார்த்து ரொம்பவே அரண்டு போய்ட்டார்.''’
""அது என்ன டெக்னிக்?''’
""பா.ஜ.க.வைப் பொறுத்தவரை இந்தியா முழுக்க தாமரையை மலர வைக்க, அமித்ஷா மேற்பார்வையில் நிதி மேலாண்மையில் சிறப்பு கவனம் செலுத்துது. இதையெல்லாம் புரிஞ்சிக் கிட்டுதான், தன் ஆட்சியைத் தக்க வச்சிக்க முதல்வர் எடப்பாடி மாதாந்திர மொய்யை, தனக்கு நம்பிக்கையான அமைச்சர்கள் மூலம் டெல்லி எஜமானர்களுக்கு அனுப்பிவச்சிக்கிட்டு இருக்கார். சசிகலா தரப்பும், விரைவில் விடுதலை யாவதற்காக டெல்லியுடன் இந்த ரூட்டில்தான் பேச்சுவார்த்தை நடத்திக்கிட்டு இருக்குதாம். இந்த ஸ்பெஷல் ரூட்டை ஸ்மெல் செய்த விஜய பாஸ்கர், அமித்ஷா மகனான ஜெய்ஷாவிடம், ஸ்பெஷல் ’பசையால்’ ஒட்டிக்கொண்டு, எம்.எல். ஏ.க்களின் ஆதரவு எனக்கும் இருக்கு. அதனால் என்னை முதல்வர் நாற்காலியில் உட்கார வையுங்கள். அதற்கு 25 ஆயிரம் பெருசு வரை முன்னதாகவே மொய் எழுதவும் தயார்ன்னு தெரிவிச்சிருக்கார். இந்த விபரமெல்லாம் எடப் பாடியின் கவனத்துக்கு உரியவர்கள் மூலம் வந்து சேர, ஹைவோல்ட் அதிர்ச்சிக்கு ஆளான அவர், விஜயபாஸ்கருக்காகத் திறக்கப்பட்ட டெல்லிக் கதவுகளை மூடும் முயற்சிகளில் மும்முரமா இறங்கியதோட, விரைவில் அமைச்சரவையில் இருந்து விஜயபாஸ்கருக்குக் கல்தா கொடுக்கும் தீர்மானத்திற்கும் வந்துட்டாராம்.''’
""துணை முதல்வர் ஓ.பி.எஸ். மேற்கொண்டி ருக்கும் அமெரிக்கப் பயணமும் எடப்பாடியை ரொம்பவே சூடேத்துதாமே?''’
""இப்படியொரு டூர் போனால் சூடேற் றாமல் இருக்குமா? அரசு முறைப் பயணமாக அதிகாரிகள் சிலருடன் அமெரிக்கா டூருக்கு ஆயத்தமான ஓ.பி.எஸ்., முதலில் தன் மனைவியை மட்டுமே அழைத்துச் செல்வதாக இருந்தாராம்.. கடைசி நேரத்தில்தான் தன் மகனான ரவீந்திரநாத் எம்.பி.யை யும் சேர்த்துக்கொண்டாராம். அதனால் ஏதோ நெருடுதேன்னு நினைச்சி, ஓ.பி.எஸ்.சுக்கு செக் வைக்க, அவருக்குப் பிடிக்காத அதிகாரியான நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணனையும், அவர் கூடவே அமெரிக்காவுக்கு இ.பி.எஸ். அனுப்பி வச்சிட்டாராம். அமெரிக்கா நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஓ.பி.எஸ்., அங்கெல்லாம் தனக்குத் தரப்படும் முக்கியத்துவத்தையும் மரியாதையையும் தன் மகன் ரவீந்திரநாத்துக்கும் தரவேண் டும்ன்னு நிர்பந்தம் கொடுத்து நிறைவேற் றியதை தெரிந்துகொண்ட எடப்பாடி, எரிச்சலாகியிருக்கிறார். சிகாகோ உலகத் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் மைக் பிடித்த ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத், நான் மோடியின் பூமியில் இருந்து உங்களை சந்திக்க வந்திருக்கேன்னு பெருமிதமா பிரகடனம் செய்தாரு. இதுவும் எடப்பாடிக்கு வாட்ஸ்ஆப் வீடியோவாகப் போக. எம்.ஜி.ஆர்., ஜெ. பெயர்களை மீறி மோடி பெயரைச் சொல்லி, டெல்லியைக் கணக்குப் பண்ணுறாங்களேன்னு அப்பா மேலேயும் மகன் மேலேயும் டென்ஷனாயிட்டாராம். அமெ ரிக்காவில் தங்கத் தமிழ்மகன், ரைசிங் ஸ்டார்னு ஓ.பி.எஸ்.ஸுக்கு விருதுகள் வழங்கப்பட்டதும் இங்கே டென்ஷனை ஏற்படுத்தியிருக்கு.''
""ம்..''
""என்னதான் இ.பி.எஸ்.ஸிடம் அதிகாரம் இருந்தாலும் இப்பவும், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளில் பெரும்பாலோர் ஓ.பி.எஸ்.சின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்று ஒரு ரிப்போர்ட் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்தது. இப்ப உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நேரம்ங்கிறதால, ஓ.பி.எஸ். இமேஜ் டெவலப் ஆவதை இ.பி.எஸ். விரும்பலை. அமெரிக்காவிலிருந்து ஓ.பி.எஸ். திரும்பி வந்ததும் அவருக்குத் தரப்படும் முக்கியத் துவத்தையும் பழையபடி குறைக்கத் திட்டமிட்டிருக்காராம்.''’
""ஊருக்கு முன்பாக உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போட்டியிட தன் கட்சிக்காரர்களிடம் 15, 16 தேதிகளில் அ.தி.மு.க. விருப்பமனு வாங்கப்போறதா அறிவிச்சிதே?''’
""ஆமாங்க தலைவரே, தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் விருப்ப மனு விவகாரத்தில் அ.தி.மு.க. காட்டிய வேகம், மற்றக் கட்சிகளைத் திகைக்க வச்சிருக்கு. ஏறத் தாழ ஒரு லட்சம் உள்ளாட்சிப் பதவிகளுக்கு நடக்க இருக்கும் தேர்தலில், கட்சிகளின் தொகுதிப் பங்கீடு, விருப்பமனு பெறல், வேட்பாளர் தேர்வு போன்றவற்றிற்குப் போது மான அவகாசம் கொடுக்காமல், எடப்பாடி அரசு அவசர கதியில் தேர்தலை நடத்தப் பார்க்குதோங்கிற சந்தேகம் அனைத்துக் கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தி.மு.க.வும் வரும் 14 ஆம் தேதியில் இருந்து உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு பெறப்படும்ன்னு திங்கட்கிழமை நடந்த மா.செ.க்கள் கூட்டத்துக்குப் பிறகு, அதிரடி அறிவிப்பை வெளியிட் டிருக்கு. இதேபோல் தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளும் அவசர ஆலோசனை களில் இறங்கி இருக்கு. இது ஒருபுறம்ன்னா அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க.வையும் அ.தி.மு.க.வின் வேகம் திகைக்க வச்சிருக்கு. நாம் பேச்சுவார்த்தை நடத்தி நமக்கான தொகுதிகளைப் பெறக் கூட அ.தி.மு.க. அவகாசம் கொடுக்காதோன்னு கூட்டணிக் கட்சிகள் சந்தேகப்படுது.''’
""அ.தி.மு.க.விடம் இருந்து தங்களுக்கான தொகுதிகளைப் பெறுவதில் பா.ம. க.வும் தே.மு. தி.க.வும் தெளிவாக இருப்பதுபோல் தெரியுதே?''’
‘உண்மைதாங்க தலைவரே... அண்மையில் தைலாபுரத்தில் ஆலோசனை நடத்திய டாக்டர் ராமதாஸ், இங்க இருக்கும் 15 மாநகராட்சி மேயருக்கான தொகுதிகளில் நாம் வேலூரையும் சேலத்தையும் வாங்கியாகணும்னு சொல்ல, அதற்கு அன்புமணி, முதல்வர் எடப்பாடியின் சொந்தத் தொகுதியான சேலத்தை நமக்குத் தருவார்களா? அதனால் சேலத்துக்கு பதிலா சென்னையைக் கேட்போம்ன்னு பதில் சொல்லியிருக்கார். சென்னையை பா.ஜ.க.வும் குறி வச்சிருப்பதை சொன்ன ராமதாஸ், உள்ளாட்சி யின் அனைத்து நிலைகளிலும் நாம் 20 சத தொகுதிகளைப் பெற்றே தீரணும்னு அழுத்தமா சொல்லியிருக்கிறார். இதேபோல் தே.மு.தி.க. விலும் ஆலோசனைகள் நடக்குது. அதுவும் சேலம், வேலூர், திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் தங்களுக்கு 2 தேவைன்னு சொல்லுது. மொத்தமா 25 சதவீத உள்ளாட்சி சீட்டுகளை வாங்கிவிடவேண்டும் என்பதும் தே.மு.தி.க.வின் டார்கெட்டாம். கடந்த எம்.பி. தேர்தலின் போது பா.ம.க. முந்திக்கொண்டது போல், இந்த முறை சீட் ஷேரிங்கில் நாம் முந்திக் கொள்ள வேண்டும் என்று கட்சிப் பிரமுகர்களிடம் உறுதியான குரலில் சொல்லியிருக்கார் பிரேமலதா.''’
""தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கும் அரசுக்குச் சொந்தமான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்துக்கும் இடையிலான வாடகை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி திடீர் அக்கறை காட்டியிருக்காரே?''’
""உண்மைதாங்க தலைவரே, தமிழக அரசுக்குச் சொந்தமான இடத்தில்தான் ஸ்டேடியம் அமைக்கப்பட்டிருக்கு. இடத்திற்கான வாடகைத் தொகையான ஏறத்தாழ 2,500 கோடி ரூபாயைக் கொடுக்காமல் நிலுவையில் வச்சிருக்கு தமிழக கிரிக்கெட் சங்கம். இது தீராப் பிரச்சி னையா இழுபட்டு வந்த நிலையில், முதல்வர் எடப் பாடியின் நெருங்கிய நண்பரும் சேலம் கிரிக்கெட் சங்க பிரமுகருமான ராமசாமி என்பவர், வாட கைத் தொகையைக் குறைத்து நிர்ணயிக்கணும்னு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் முதல்வர் எடப் பாடியை ’வெயிட்டாகவே’ அணுகியிருக்கார். இதைத் தொடர்ந்து அந்த வாடகையை குறைக்க மூவர் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருக்கிறது.''’
""நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அரசின் தலைமைச் செய லாளரான சண்முகம், கடந்த வாரம் சேலம் கொங்கணாபுரத்தில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் கலந்துக்கிட்டார். அப்ப அவர், தமி ழகத்தில் எத்தனையோ முதல்வர்கள் இருந்திருக் கிறார்கள். ஆனால் இப்போதைய முதல்வர் எடப் பாடியைப் போன்ற ஒரு கருணை மிக்க, பன் முகத்திறன் கொண்ட முதல்வரை யாரும் பார்த்த தில்லைன்னு ஆரம்பிச்சி, ஒரு வட்டச் செயலா ளர் ரேஞ்சுக்கு ஏகத்துக்கும் பாராட்டு மழை பொழிஞ்சிருக்கார். இந்தத் தகவல்கள் கோட்டை வரை எதிரொலிக்க, ஆளுங்கட்சிக்காரராவே தலைமைச் செயலாளர் மாறலாமான் னு சீனியர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் முணுமுணுக்குறாங்க.''’