ஒரு வெள்ளைக் கார மூதாட்டிக்கு இத்தனை பேர் கண் ணீர் சிந்துகிறார்களே என ஆச்சர்யப்பட்டுப் போனார்கள் அவரைப் பற்றி அறியாதவர்கள்.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றுக் கொண் டிருந்தபோது அமெ ரிக்காவைச் சேர்ந்த எவாஞ்சலிகல் லூத் தரன் சபை, மெட்ராஸ் மாகாணத்தில் நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. நாகர் கோவில், திருவனந்தபுரம், ஆம்பூர் பகுதி யில் தனித்தனி திருச்சபைகள் உருவாக்கப் பட்டன. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் 1907-ஆம் ஆண்டு மருத்துவர் தியோடெர்லின், ஆம்பூரில் மருத்துவச் சேவையைத் தொடங்கினார். 1921-ல் சிறிய அளவில் பெதஸ்தா (கருணையின் வீடு) மருத்துவமனை உருவாக்கப்பட்டது. 300-க்கும் அதிகமான ஊழியர்கள் இங்கு பணியாற்றினர்.
கிறிஸ்துவ மதபோதகராக அமெரிக் காவிலிருந்து 1925-ஆம் ஆண்டு நாகர்கோவிலுக்கு வந்தவர் ரிச்சர்ட் ஹென்றி பிரயர். இவரது மனைவி ஏர்னா மிடில்டா. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். இவர்கள் அனைவரும் கொடைக்கானலில் படித்தனர். இந்தியா சுதந்திரமடைந்த ஓராண்டில் கல்லூரிப் படிப்புக்காக தன் பிள்ளைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச்சென்றார் பிரயர். அங்கே அவரது இளைய மகள் ஆலிஸ் மருத்துவம் படித்தார். படித்து முடித்ததும் "இந்தியாதான் நான் பிறந்த தேசம், நான் இந்தியாவில் ஊழியம் செய்யப்போகிறேன்'' என 1967-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து தமிழ்நாட்டி லேயே தங்கிவிட்டார் ஆலிஸ்.
மருத்துவரான இவரை ஆம்பூர் பெதஸ்தா மருத்துவமனையில் பணி செய்ய உத்தரவிட்டது சபை. ஆம்பூர், வாணியம்பாடி யைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு மாட்டுவண்டி யிலும், நடந்தும் சென்று நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார் ஆலிஸ். ஆம்பூர், வாணியம் பாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள நூற்றுக் கணக்கான கிராமங்களில் ஆலிஸ் கால்படாத கிராமங்களே கிடையாது. ஆயிரக்கணக்கான பிரசவங்கள் பார்த்த குழந்தை மருத்துவரான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. தொழுநோயாளிகள், காசநோயாளிகளை சமூகம் ஒதுக்கிவைத்தது. அவர்களை அரவணைத்து சிறந்த சிகிச்சையளித்ததோடு உணவும் வழங்கினார். தான் சார்ந்த சபை மூலமாக கண் தெரியாதவர்களுக்கு பள்ளி உருவாக்கினார்.
சபையின் கன்வீனரான ஆலிஸ், மருத்துவமனையில் நடைபெற்ற ஊழல்கள், மோசடிகள் குறித்து தலைமைக்கு தகவல் அனுப்பினார். இதனால் இச்சபை நிர்வாகத்திலிருந்தவர்கள் ஆலிஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர். அவரை புறக்கணிக்கவும் செய்தனர். ஊழல் மற்றும் அதனை சார்ந்து நிர்வாகரீதி யான பிரச்சனைகளால் 10 ஆண்டுகளுக்கு முன்பு 300 ஊழியர்களுடன் செயல்பட்ட இம் மருத் துவமனை மூடப்பட்டது. ஆனாலும் ஆலிஸ் தன் மருத்துவ சேவையை விடவில்லை. அப்போது, அமெரிக்காவிலுள்ள இவரது உறவினர்கள், அங்கே வந்துவிடச்சொல்லி பலமுறை அழைத்தபோது, "நான் இந்தியாவில் பிறந்தேன், என் இறப்பும் இந்தியாவில்தான். என் உடல் இங்கேயே அடக்கம் செய்யப்பட வேண்டும்'' எனச் சொல்லிவிட்டார். உடல்நலக்குறைவால் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, 86 வயதான ஆலிஸ் மருத்துவமனையில் மரணத்தைத் தழுவினார்.
ஆலிஸ் உதவியாளராக இருந்த கார் ஓட்டுநர் ஏசு ரவியிடம் பேசியபோது, "மருத்துவ மனை மூடப்பட்டபிறகும் அவுங்க கடந்த 10 வருஷத்துக்கு மேலா மக்களுக்கு சிகிச்சை அளிச்சிக்கிட்டு வந்தாங்க. கடந்த 5 ஆண்டுகளுக் கும் மேலா குழந்தை இல்லாதவர்களுக்கு சிகிச் சையளித்து குழந்தைப்பேறு அடையச் செய்தாங்க. அவரது உறவினர்கள் அமெரிக்காவி லிருந்து அனுப்பும் தொகையிலிருந்து மாதம் 100 ரூபாய் என 100 பேருக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கினார்''’என கண்கலங்கினார்.
கவிஞர் யாழன்ஆதி கூறும்போது, “"57 ஆண்டுகள் ஆம்பூரிலிருந்து ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவை செய்தார். தமிழ் மக்களுடன் பேச தனக்கு தமிழ் மொழி தெரியவேண்டும், என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு தமிழ் கற்றார். அந்த காலத்தில் பெண்கள் உடலில் சத்தில் லாமல் பலவீனம் காரணமாக, பிரசவத்தின் போது தாய்மார்கள், குழந்தை இறப்பு அதிகமாக இருந்தது. இதனைக் குறைக்க ஐதராபாத் சென்று ஊட்டச்சத்து மருத்துவம் ஓராண்டு படித்துவிட்டு வந்து அவரே சத்துமாவு தயாரித்து கர்ப்பிணிப் பெண் களுக்கு, குழந்தைகளுக்குத் தந்தார். அந்த மாவுக்கு மக்கள் வைத்தபெயர் மிசிமா. பின்னால் சத்துமாவு தயார் செய்த அவரையே மிஸ்சி யம்மா என அழைக்கத் தொடங்கினர். ஆயிரக்கணக் கான பிரசவங்கள் அவர் பார்த்துள்ளார். அவரே ஜீப் ஓட்டிக்கொண்டு தினமும் கிராமங்களுக்குச் சென்று ஏழை எளிய மக்களுக்கு சிகிச்சையளித்துவந்தார். பல்லாயிரக்கணக் கான மக்களுக்கு சிகிச்சையளித்தவர் ஆலிஸ். ஆம்பூர் பகுதி மக்களின் அன்னை தெரஸா''’என்றார் கலங்கிய குரலில்.
இந்த ஆம்பூர் அன்னை தெரஸாவை அடக்கம்செய்ய அவரது உறவினர்கள் யாரும் அமெரிக்காவிலிருந்து உடனடியாக வரமுடியவில்லை. தங்களின் குடும்பத்தில் ஒருவராக மிஸ்ஸியம்மாவைப் பார்த்த அனைத்து மதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக் கான மக்கள் அஞ்சலி செலுத்தி, அக்டோபர் 3-ஆம் தேதி பெத்தஸ்டா மருத்துவமனை வளாகத்தில் அடக்கம்செய்து நன்றி செலுத்தினர்.