திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் பிரியாணிக்கும், தோல் பொருட் களுக்கும் பெயர்பெற்ற ஆம்பூர் தொகுதியில் இஸ்லாமியர்கள், பட்டியலினத்தவர்கள், வன்னியர்கள், நாயுடுகள் பெருமளவு உள்ளனர்.
எனினும், தொகுதியின் வெற்றியை தீர்மானிப்பது இஸ்லாமியர்களின் வாக்குகள் மட்டுமே. தோல் தொழிற்சாலைகள் நிரம்பிய இத்தொகுதியில் தொழிலாளர்கள் அதிகம். எம்.எல்.ஏ.வாக யார் வெற்றி பெறவேண்டும் என்பதன் பின்னணியில் கம்பெனி முதலாளி களின் லாபி மறைமுகமாக இத்தொகுதியில் உள்ளது.
2011 தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த அஸ்லம் பாஷாவும், 2016-ல் அ.தி.மு.க.வை சேர்ந்த பாலசுப்பிரமணியும் வெற்றி பெற்றார்கள். அ.தி.மு.க.வில் நடந்த உட்கட்சி பிரச்சனையில் எம்.எல்.ஏ. பதவியை பாலசுப்பிரமணி பறிகொடுத்ததால் 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்த ஒ.செ. வில்வநாதன் வெற்றிபெற்றார். 2021-லும் அவரே மீண்டும் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.
அவரோ, ஆம்பூரில் அரசு மேல் நிலைப்பள்ளி, அரசு மகளிர் கலைக்கல்லூரி, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் கொண்டுவருவேன், ஆம்பூர் நகரத்திலிருந்து பெத்லேகம், ரெட்டிதோப்பு செல்ல ரயில்வே மேம்பாலம் கட்டித்தருவேன், மின்னூர் பகுதியில் சிப்காட் கொண்டுவருவேன், மிட்டாளம் ஊட்டல் பகுதி, நாயக்கனேரியை சுற்றுலாத்தலமாக்கு வேன், அகரம்சேரி -மேல்ஆலத்தூர் இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டித் தருவேன், மின்னூர் டூ வடகரை இடையே பாலாற்றில் தரைப்பாலம் கட்டித்தருவேன் எனத் தேர்தல் வாக்குறுதிகளை அடுக்கி யிருந்தார்.
இதில் 80 சதவித வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தேசிய நெடுஞ் சாலையிலுள்ள நகரம் என்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் ஆம்பூரில் புதியதாக பிரமாண்டமாக மருத்துவமனை கொண்டு வந்தார்.
ஆனால் மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் கிடையாது. அதை சரிசெய்ய இதுவரை எம்.எல்.ஏ. குரலெழுப்பவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள் .
"கட்சியில் எத்தனையோ பேர் இருக்க, அரசியலே தெரியாத தனது மகன் அசோக்குமாரை உதவியாளராக வைத்துக்கொண்டார். இப்போது, எம்.எல்.ஏ. வில்வநாதனா? அவரது மகன் அசோக்குமாரா? என்கிற சந்தேக மாயிருக்கு. மாதனூர் பி.டி.ஓ. அலுவலகம், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் அமர்ந்துகொண்டு வேலைகளுக்கான கமிஷன் வாங்குவதை மட்டுமே செய்கிறார். கட்சியினரிடமே சாதி பார்க்கிறார். யாரையும் அரவணைத்து செல்வதில்லை. மாதனூர் ஒன்றியக்குழு தலைவர், ஒ.செ. சுரேஷ்குமார், தனக்கு எம்.எல்.ஏ. வில்வநாதன் தரும் நெருக்கடி குறித்து தலைமைக்கு கடிதம் எழுதி பரபரப்பாக்கியுள்ளார். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஆம்பூர் தொகுதி நிர்வாகிகளை முதல்வர் சந்தித்துப் பேசியபோது, எம்.எல்.ஏ. குறித்து முதல்வரிடம் நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர். இப்படி கட்சியினராலேயே வெறுக்கப்படுபவர் மீண்டும் எம்.எல்.ஏ. சீட்டை எதிர்பார்க்கிறார்'' என்கிறார்கள் உ.பி.க்கள்.
வேட்பாளராகக் களமிறங்க, ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலன், பொதுச்செயலாளர் துரைமுருகன், மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு என இரண்டு வழிகளிலும் முயற்சி செய்கிறார். என் மனைவி மாவட்ட ஒன்றியக்குழு துணைத்தலைவராக இருக்கிறார். கட்சிக்காக ஒன்றியத்தில் அலுவலகம் கட்டியுள்ளேன். இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டுமென்பதற்காக தளபதி நூலகம் அமைத்துள்ளேன், எனக்கு சீட் தந்தால் தேர்தல் செலவை நானே பார்த்துக்கொள்கிறேன் என அமைச்சர் வேலுவை கிரிவலம் வந்துகொண்டிருக்கிறார். மருமகன் சபரீசனின் நண்பர் தொழிலதிபர் ஆர்.டி.சரவணன் மூலமாக சாதிரீதியாக மாதனூர் சேர்மன் சுரேஷ்குமார் சீட் வாங்க முயற்சிக்கிறார். புதியதாக நியமிக்கப்பட்ட ஆம்பூர் கிழக்கு பகுதி ந.செ. தொழிலதிபர் ஷபீர் அகமத் எதிர்பார்க்கிறார்.
தி.மு.க.வுடனான கூட்டணியில் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் விஜய் இளஞ்செழியன் முயற்சி செய்கிறார். அதேபோல் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சியும் ஆம்பூர் தொகுதியை தி.மு.க.விடம் கேட்கவுள்ளன. லீக் கட்சிக்கு ஒதுக்கினால் முன்னாள் எம்.எல்.ஏ. அப்துல் பாசித் சீட் பெற காய்நகர்த்துகிறார். ம.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டால் மா.செ. நசீர் அகமத் போட்டியிட விரும்புகிறார்.
"அ.தி.மு.க. -அ.ம.மு.க. என பயணமாகி, எம்.எல்.ஏ. பதவியை பறிகொடுத்த பாலசுப்பிரமணி, அரசியலில் சைலன்ட் மோடுக்கு போய்விட்டார். 2021-ல் அ.தி.மு.க.வை சேர்ந்த ஆடிட்டர் நாசர் முகமது போட்டியிட்டார். இப்போது அரசியலே வேண்டாமென ஒதுங்கி அமைதியாகிவிட்டார். 2019-ல் போட்டி யிட்டு தோல்வியடைந்த மாதனூர் கி.ஒ.செ. ஜோதிராமலிங்கம், வயதாகிவிட்டதால் தந்தால் நிற்கலாம் என்கிற எண்ணத்தில் உள்ளார். வாணியம்பாடி தொகுதியைவிட ஆம்பூர் தொகுதியில் முஸ்லிம் மக்கள் அதிகமென்பதால் வாணியம்பாடியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நிலோபர்கபில் வாங்க முயற்சித்தார், கட்சி நிர்வாகிகளிடம் எதிர்ப்பு வந்ததால் பின்வாங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.
மாநில அம்மா பேரவை நிர்வாகியான வழக்கறிஞர் டெல்லி பாபு விருப்ப மனு தந்துள்ளார். இவர்களோடு, மாதனூர் மேற்கு ஒ.செ. பொறியாளர் வெங்கடேஷ் களமிறங்க விருப்பம் தெரிவித்து மனு தந்துள்ளார். மா.செ.வும், முன்னாள் அமைச்சருமான வீரமணி இவருக்கு சப்போர்ட் செய்து தலைமைக்கு சிபாரிசு செய்துள்ளார். இ.பி.எஸ்.ஸும் இவரை டிக் செய்து நம்பிக்கை தந்துள்ளதால் தொகுதியிலுள்ள ஒவ்வொரு பூத் வாரியாக கட்சியினரின் செலவுக்கு முதற்கட்ட பட்டுவாடாவை முடித்துள்ளார் வெங்க டேசன்'' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/01/06/ambur-2026-01-06-11-55-28.jpg)