டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அந்த ஊர்தியை சென்னையில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கச் செய்ததுடன், முக்கிய நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லவும் கொடி அசைத்தார் முதல்வர்.

தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பலரது சிலையும் இந்த ஊர்தியில் இடம் பெற்றிருக்கிறது. அத்துடன், காந்திய பாதையில் பொதுவாழ்க்கை தொடங்கி சுயமரியாதை வீரராக சமூகநீதியை நிலை நாட்ட பெரியார் சிலையும் கம்பீரமாக அமைந்துள்ளது.

periyarsand

Advertisment

சென்னையில் இப்படி அணிவகுப்பு நடந்தநிலையில்... பெரியார் பிறந்த ஈரோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையைத் திறந்து வைத்து அம்மண்ணை, உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பெரியார் சிலை அருகே, சட்ட மேதை அம்பேத்கரின் சிலையைத் திறக்கவேண்டும் என்பது அங்குள்ள திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கோரிக்கையாக இருந்தது.

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற் காக அப்போது ஈரோடு வந்த மு.க.ஸ்டாலின், அவர்களின் கோரிக்கையை உணர்ந்து, ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா முகப்பில் அமைந்துள்ள பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் சிலைக்கு அருகில், அதே பீடத்தில் அம்பேத்கர் சிலை, தி.மு.க. சார்பில் வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், சொன்ன வாக்குறுதி யை மறக்காமல் அம் பேத்கர் சிலை திறப்புக் கான வேலைகளை முடுக்கிவிட்டார் ஸ்டாலின். இதைத் தொடர்ந்து தி.மு.க. மா.செ.வும் அமைச்சருமான முத்துச்சாமி, சில மாதங்களுக்கு முன்பே ஐதராபாத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு ஆர்டர் கொடுக்க, அந்தச் சிலை ஈரோட்டுக்கு வந்து சேர்ந்தது. அதற்கான சில லட்ச ரூபாய்க்கான செலவை தி.மு.க.வே ஏற்றுக் கொண்டது. இந்த சிலையை நிறுவுவதற்கான அனுமதியை கடந்த 22-ஆம் தேதி, தமிழக அரசு கொடுத்திருக்கிறது.

f

Advertisment

இதைத் தொடர்ந்து, குடியரசு தினமான ஜனவரி 26-ல், அம்பேத்கரின் சிலையை, சென்னை யிலிருந்தே காணொலிக் காட்சி மூலம் பலத்த கைத் தட்டலுக்கு நடுவே திறந்துவைத்தார் ஸ்டாலின்.

சுதந்திரப் போராட்டத்தில் தமிழர்களின், தமிழ்நாட்டின் பங்கை ஒன்றிய மோடி அரசு, மறுதலித்தாலும், அவற்றை இதயத்தால் ஏந்தும் வகையில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையைத் தமிழகமே பாராட்டிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான், ஈரோட்டு மண்ணில் தந்தை பெரியார் சிலைக்கு அருகே புரட்சியாளர் அம்பேத்கர் வெகு கம்பீரமாக காட்சி தர ஆரம்பித்திருக்கிறார்.