Advertisment

அம்பேத்கர் பாதையில்… பூர்வீக பௌத்தத்தை நோக்கி திருமா!

tt

பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கருக்கு காவி ஆடை, திருநீறு, குங்குமம் இட்டு அவமதித்த இந்து மக்கள் கட்சி யைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.சி.க. தலைவர் திருமா, "இந்தியா முழுவதும் அனைத்துத் துறைகளிலும் 99 விழுக்காடு பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் மற்றும் தலித்துகள் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளையும், அதி காரத்தையும் இழந்து நின்றார்கள். இது ஏன் என்ற ஆய்வுகளை வாழ்நாள் முழுக்க நடத்திய வரே புரட்சியாளர் அம்பேத்கர். புரட்சியாளர் அம்பேத்கர் கற்றுணர்ந்த பிறகு தான், "பௌத்தத் திற்கும் ஆரியத்திற்கும் ஏற்பட்ட கோட்பாட்டு யுத்தமே இந்திய வரலாறு' என்று சொல்கிறார்

Advertisment

இந்தியா முழுவதும் பௌத்தம் பரவி இருந்ததை வரலாறு சொல்கிறது. பார்ப்பனியத் திற்கு எதிரானவர்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டார்கள். இப்படி மனித நேயமும்,

பாபாசாகேப் அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கருக்கு காவி ஆடை, திருநீறு, குங்குமம் இட்டு அவமதித்த இந்து மக்கள் கட்சி யைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisment

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய வி.சி.க. தலைவர் திருமா, "இந்தியா முழுவதும் அனைத்துத் துறைகளிலும் 99 விழுக்காடு பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். பிற்படுத்தப்பட்ட சூத்திரர்கள் மற்றும் தலித்துகள் கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளையும், அதி காரத்தையும் இழந்து நின்றார்கள். இது ஏன் என்ற ஆய்வுகளை வாழ்நாள் முழுக்க நடத்திய வரே புரட்சியாளர் அம்பேத்கர். புரட்சியாளர் அம்பேத்கர் கற்றுணர்ந்த பிறகு தான், "பௌத்தத் திற்கும் ஆரியத்திற்கும் ஏற்பட்ட கோட்பாட்டு யுத்தமே இந்திய வரலாறு' என்று சொல்கிறார்

Advertisment

இந்தியா முழுவதும் பௌத்தம் பரவி இருந்ததை வரலாறு சொல்கிறது. பார்ப்பனியத் திற்கு எதிரானவர்களே தீண்டத்தகாதவர்களாக மாற்றப்பட்டார்கள். இப்படி மனித நேயமும், சமத்துவமும் இல்லாத இந்து மதத்தில் இருந்து வெளியேறப் போகிறேன் என அறிவித்து, 10 லட்சம் பேருடன் பௌத்த மதத்துக்கு மாறினார் அம்பேத்கர். தமிழர்கள், திராவிடர்களான நாகர்கள் வாழ்ந்த இடமான நாகபுரி என்ற நாக்பூரைத்தான் அந்நிகழ்விற்காக அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார்.

tt

அவர் பௌத்தம் மாறும்போது "பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களைக் கடவுளாக வணங்க மாட்டேன். மனிதநேயம், சமத்துவமற்ற, முட்டாள்தனமான இந்து மதத்தை விட்டொழித்து பௌத்தம் ஏற்கிறேன்' என்றார். இப் படிப்பட்ட புரட்சியாளரை இழிவுபடுத்துவதை இனியும் பொறுத்துக்கொள்ள மாட் டோம்'' என எச்சரித்தார். புத்தர் வாழ்ந்தக் காலத்தில் 100க்கும் மேற்பட்ட தத்து வப் பிரிவுகளும், சமூகத்தைப் பிளவுப்படுத்திய சனாதன மதம்/ பார்ப்பனீய மதம்/ வைதீக மதம் இருந்தது. இந்த மதத்தினை புத்தர் கடு மையாக எதிர்த்தார். எனவே அதற்கு எதிரான மதமாக பௌத்த மதத் தினை கட்டமைத்ததார். இந்தியா வில் பெரும்பான்மையான மக்கள் அதில் இணைந்து பார்ப்பனீய மேலாண்மையை எதிர்த்தனர். பார்ப்பனீய எதிர்ப்பைத் தமது வாழ்க்கை முறையாகக் கொண்டு வாழ்ந்தனர். இதனால் விரைவிலேயே பார்ப்பனீய மதம் பலமிழந்து போனது. ஆனால் பௌத்த அரசாட்சியான மௌரிய ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த சுங்கர்கள், மௌரிய ஆட்சியை வீழ்த்தி சுங்கர்கள் வம்ச ஆட்சியை அமைத்தனர். இவர்களின் மூலமாக பார்ப்பனர்கள் மீண்டும் கோலோச்சத் தொடங்கினர்.

தமிழகத்தில் மன்னர்களுக்கு ஒரு கட்டமைப்பு தேவைப்பட்டதால், புராண காலத்து சோழர்கள், வட நாடுகளிலிருந்து பிராமணர்களை அழைத்து வந்து தமிழகத்தில் குடியமர்த்தி, அவர்களின் மூலமாக வேத நாகரிகத்தை வளர்த்துள்ளதாக பல கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளில் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்படி இந்தியா முழுவதும் இருந்த பௌத்தர்களின் மீது, பார்ப்பனியம் சில மன்னர்களுடன் கை கோர்த்துக்கொண்டு, தீண்டாமை யைத் தொடுத்தனர். இப்படித்தான் பௌத்தர்கள் பழிவாங்கப்பட்டதாக அம்பேத்கார் எடுத்துரைத்துள்ளார். இந்த வைதீன மதமான பார்ப்பன மதம்தான் பிற்காலத்தில் இந்து மதமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது எனவும் விளக்கியுள்ளார். இதேபோல, பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் இவர்களின் தெருக்களில் வந்தால், அவர்களின் பாதம்பட்ட இடங்களுக்கு சாணம் தெளித்துக் கழுவியுள்ளனர். பார்ப்பனியத்தின் மனுஸ்மிருதியை ஏற்றுப் பயணித்தவர்கள் சூத்திரர்கள் ஆனார்கள். இதை எதிர்த்த பூர்வ குடிகள், தாழ்த்தப்பட்டவர்களாக ஆனார்கள்.

இந்துத்வவாதிகள், ஓட்டு அரசியலுக்காக பூர்வ குடிகளை இந்துக்கள் என்று தொடர்ந்து சொல்லிவந்தனர். இவர்கள் இந்துக்கள் அல்ல பூர்விக பௌத்தர்கள். இதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கரும் சொல்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும்போது மதத்தின் அடிப்படையில் கொடுக்காமல், சமூகத்தின் அடிப்படையில், தனி சிறுபான்மை மக்கள் என இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இதன்பிறகு, அவசர அவசரமாக ஜனாதிபதி ஆணையைக் கொண்டுவந்து, "இந்துவாக இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு' எனக் கட்டாய மதமாற்றம் செய்துள்ளனர். 22 சதவீதம் மக்கள் இந்துவாக இல்லாமல் தனி சமூகமாக சென்றுவிட்டால் இந்துவின் மெஜாரிட்டி குறைந்துவிடும் என்பதற்காகவே இவர்களை இந்துவாக சேர்த்துக்கொண்டனர். இதற்கான வழக்கும் இன்னும் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையிலிருக்கிறது. இந்தியா முழுவதும் 85 லட்சம் பேர் முறையாக மதமாற்றம் செய்து பௌத்தர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அதேபோல தமிழகத்தில் 11,186 பேர் வாழ்ந்து வருகிறார்கள். எஸ்.சி சான்றிதழ் பெற்று பௌத்தவர்களாக உள்ளவர்களையும் கணக்கில் சேர்த்தால் மேலும் இருமடங்கு கூடும் என்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான், வி.சி.க. தலைவர் திருமா, தலித்துகள் பூர்வீக பௌத்தர்கள் என்பதை நினைவுபடுத்தியுள்ளார். அம்பேத்கர் சொன்னதை மீண்டும் மக்களிடம் கொண்டுசெல்லப் போகிறார் என்பதையே அவரது பேச்சு உணர்த்துவதாகக் கூறுகிறார்கள். இதுகுறித்து வி.சி.க. துணை பொதுச்செயலாளர் கௌதம் சன்னாவிடம் கேட்டபோது, "வி.சி.க.வை பொறுத்தமட்டில் மத மாற்றுதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆனால் "தலித்துகள் மதம்மாறும் பட்சத்தில் அதை வரவேற் கவும், ஒத்துழைக்கவும் தயாராக இருக்கிறோம். அவர்களின் உரிமைக்கும் பாதுகாப்புக்கும் உறுதுணையாக எப்போதும் வி.சி.க. இருக்கும்'' என்றார்.

nkn211222
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe