Advertisment

காவல்துறையில் அசத்தும் பெண் அதிகாரிகள்! -கமிஷனர் பெருமிதம்!

dd

சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையில் அசத்தும் பெண் அதிகாரிகளுக்கு சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவில், சைபர் கிரைம், வங்கி மோசடி, நில அபகரிப்பு, விபச்சாரத் தடுப்பு, பாஸ்போர்ட் மோசடி, கந்துவட்டி மற்றும் சிட்ஃபண்ட் மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, ஆவண மோசடி பிரிவு என எட்டு பிரிவுகள் உள்ளன. இந்த எட்டு பிரிவுக்கும் கூடுதல் கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்வரி செயல்பட்டு வருகிறார். இவர்களுக்கு கீழே நான்கு அதிகாரிகளை நியமித்துள்ளனர். அதில், துணை ஆணை யரான நாகஜோதிக்கு வங்கி மோசடி, பாஸ்போர்ட் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, கந்துவட்டி மற்றும் சிட்ஃபண்ட் மோசடி தடுப்புப் பிரிவுகளையும், அடுத் துள்ள ஆவண மோசடிப் பிரிவுக்கு துணை ஆணையர் மீனா, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை கமிஷனராக ஷாஜிதா, விபச்சாரத்தடுப்பு பிரிவுக்கு உதவி கமிஷ னராக ராஜலட்சுமி என ஒவ்

சென்னை மத்திய குற்றப் பிரிவு காவல்துறையில் அசத்தும் பெண் அதிகாரிகளுக்கு சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை மத்திய குற்றப்பிரிவில், சைபர் கிரைம், வங்கி மோசடி, நில அபகரிப்பு, விபச்சாரத் தடுப்பு, பாஸ்போர்ட் மோசடி, கந்துவட்டி மற்றும் சிட்ஃபண்ட் மோசடி, வேலை வாய்ப்பு மோசடி, ஆவண மோசடி பிரிவு என எட்டு பிரிவுகள் உள்ளன. இந்த எட்டு பிரிவுக்கும் கூடுதல் கமிஷனராக ஐ.பி.எஸ். அதிகாரி மகேஸ்வரி செயல்பட்டு வருகிறார். இவர்களுக்கு கீழே நான்கு அதிகாரிகளை நியமித்துள்ளனர். அதில், துணை ஆணை யரான நாகஜோதிக்கு வங்கி மோசடி, பாஸ்போர்ட் மோசடி, வேலைவாய்ப்பு மோசடி, கந்துவட்டி மற்றும் சிட்ஃபண்ட் மோசடி தடுப்புப் பிரிவுகளையும், அடுத் துள்ள ஆவண மோசடிப் பிரிவுக்கு துணை ஆணையர் மீனா, சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை கமிஷனராக ஷாஜிதா, விபச்சாரத்தடுப்பு பிரிவுக்கு உதவி கமிஷ னராக ராஜலட்சுமி என ஒவ்வொருவரும் அவர்களுக்கு ஒதுக்கப் பட்ட துறையில் அசத்திவருகிறார்கள். மத்திய குற்றப்பிரிவில் இதுவரை 572 வழக்குகளைப் பதிவுசெய்து, அதில் 559 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.

Advertisment

ww

ஒரு வங்கி இயங்கவேண்டு மானால் ஆர்.பி.ஐ. சட்டப்படி ஆர்.பி.ஐ.யிடம் லைசன்ஸ் பெற்றுதான் நடத்தமுடியும். மேலும், வங்கிசாரா நிதி நிறு வனங்களை நடத்தி னாலும் அதற்கும் ஆர்.பி.ஐ. லைசன்ஸ் பெற்றாக வேண்டும். அப்படி இருக்கையில், லைசன்ஸ் பெற்றது போலவே ஆர்.ஏ.எப்.சி. பேங்க் என்ற பெயரில், வடபழனி, ஆவடி உட்பட எட்டு இடங் களில் கிளைகளைத் தொடங்கி நடந்திவந்த டெல்லி அபிசேக் என்பவரை துணை ஆணையர் நாகஜோதி மேற்பார்வையில் உள்ள வங்கி மோசடி தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். சிட்ஃபண்ட் மற்றும் கந்துவட்டி மோசடி தொடர்பாக 236 வழக்குகளை பதிந்து கைது செய்துள்ளது கூடுதல் துணை ஆணையர் பிரபாகர் தலைமையிலான டீம். அதேபோல பாஸ்போர்ட் மோசடிக் கும்பலைச் சேர்ந்த முகமது இலியாஸ் புகாரி, சிவகுமார் ஆகியோரை கைது செய்துள்ளனர். இதேபோல் இந்த மோசடி தொடர்பாக இதுவரை 50 வழக்குகள்வரை பதிவாகி கைது செய்துள்ளனர். வேலைவாய்ப்பு வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

துணை கமிஷனர் மீனா மேற்பார்வையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் விடைத்தாள் மோசடி வழக்கில், தேர்வாணை யத்தில் பணிசெய்த சிவசங்கர், குமரேசன், ராம்குமார், பெருமாள், பால்ராஜ் ஆகிய 5 நபர் கள் கைது செய்யப்பட்டனர். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் அளித்தது போன்ற போலிசான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்து, சென்னை தியாகராயா கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக விரிவுரையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர் வீரப்பன் என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். அதேபோல, மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஷாஜிதா மேற்பார்வையில், சைபர் ஹேக்கத் தான் என்ற சவாலான சைபர் கிரைம் போட்டி யை சிறப்பாக செய்து முடித் தார். இதுவரை குற்றம்சாட்டப்பட்டவர்களை பிடித்துவந்த நிலையில், சைபர் க்ரைம் தொடர்பான 9 நைஜீரியன் குற்றவாளிகளை வெவ்வேறு மாநிலத்தில் கைது செய்துள்ளார்.

ww

விபச்சார தடுப்புப் பிரிவில் 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்கள் 357 பேரை மீட்டு பெற்றோர்கள் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதில், பாதிக் கப்பட்ட 39 பெண்களுக்கு மறுவாழ்வு நிவராணத் தொகை வழங்கப்பட்டது. இத்தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட 10 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 30 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப் பட்டுள்ளது. அதில் 2.06.23 அன்று இறுதியாக சென்னை மடிப்பாக்கத்தில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிரபல விபச்சார புரோக்கர் சல்மான் என்பவர் பாலியல் தொழில் நடத்தி வருவதாகவும், ரகசிய தகவலின் பேரில் உதவி ஆணையாளர் ராஜலட்சுமி தலைமையில் விபச்சாரத் தடுப்புப் பிரிவு 2 காவல் ஆய்வாளர் சீனிவாசன் டீம் கைது செய்து, அந்த பெண்களை சென்னை மயிலாப்பூர் அரசினர் மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். கடந்த பத்தாண்டுகளில் இதுவே அதிகபட்சமாகும். இவர்கள் அனைவரையும் பாராட்டிய சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால், தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும்படி ஊக்கப் படுத்தினார்.

இதுகுறித்து சென்னை கமிஷனர் சங்கர் ஜிவால் கூறுகையில், "பெண் அதிகாரி கள் என்றாலே ஒருவிதமான தாழ்ந்த பார்வை இருக்கிறது. அதை உடைத்து, எங்க ளால் முடியும் எனும் அளவிற்கு சாதித்து உள்ளனர். மத்திய குற்றப்பிரி வில் உள்ள ஒவ் வொரு பிரிவுகளிலும் இவர்களின் செயல் பாடுகள், வேகம் போற்றப்பட வேண்டி யதாகும். இதுபோன்று மேலும் சிறப்பாக செயல்படவே நாம் அவர்களை பாராட்டி ஊக்கப்படுத்தினோம்'' என்றார்.

தமிழகம் முழுவதும் இதே போல் காவல் துறையினர் செயல் பட்டால்...!

-அருண்

nkn140623
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe