தமிழக தேர்தல் களத்தில் கடைசிநேர பரபரப்பு காட்சிகள் வேகமாக அரங்கேறி வருகின்றன. ராஜ்யசபா தேர்தல் அறிவிக்கப் பட்டவுடன் அது இன்ன மும் வேகம் பெற்று வருகிறது.
தி.மு.க. கூட்டணியா, அ.தி.மு.க. கூட்டணியா என பிரேமலதா தடு மாற்றத்தில் இருக்க, ஜக்கி வாசுதேவ் அ.தி.மு.க.வின் கூட்டணி விஷயத்தில் மூக்கை நுழைத்தார். சிவராத்திரி கொண் டாட்டத்துக்கு பிரேம லதாவை அவர் அழைத் தார். பா.ஜ.க. தலைவர்கள் வருவார்கள், அ.தி.மு.க. தலைவர்கள் வருவார்கள், நீங்கள் வந்தால் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற ஜக்கியின் அழைப்பை முதலில் பிரேமலதா விரும்பவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை சென்னையில் நடத்தலாம் என பிரேமலதா கருத்து தெரிவித்தார். ‘விடாது கருப்பு’ என்பதைப்போல ஜக்கி கோவைக்கு வருமாறு அழைத்தார். பிரேமலதாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வேலுமணியும் ஆர்வம்காட்டினார். வேலுமணி, பிரேமலதா, மத்திய அமைச்சர் எல்.முருகன், ஜக்கி வாசுதேவ் ஆகியோர் அமர்ந்து கூட்டணி குறித்துப் பேசினார்கள்.
பேச்சுவார்த்தையின்போது, பிரேமலதா எடப்பாடி பற்றி புகார் சொன்னார். "நான் 30 சட்டமன்றத் தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட், ஒரு பெரிய தொகை கேட்டேன். நான் மிகப்பெரிய பண நெருக்கடியில் இருக்கிறேன். நான் கட்டிவரும் என் சொந்த வீட்டுப் பணிகள் இன்னும் முடியவில்லை. கல்லூரியும் அந்தரத்தில் நிற்கிறது. இன்னொரு கல்லூரி கட்ட, நான் போட்ட திட்டமும் நிறைவேறவில்லை. எனக்குப் பணத் தேவை அதிகமாக இருக்கிறது. அதை பா.ஜ.க.வும் எடப்பாடியும் புரிந்துகொள்ளவில்லை. எடப்பாடியைக் கேட்டால் அமித்ஷா முடிவுசெய்வார் என்று சொல்கிறார்'' என அங்கலாய்த்தார் பிரேமலதா.
அதற்கு எல்.முருகன், "அதையெல்லாம் அமித்ஷா பார்த்துக்கொள்வார்'' என உறுதியளித் தார். வேலுமணியோ, “"நான் நேரடியாக எதைப்பற்றியும் எடப்பாடியிடம் பேசமுடியவில்லை. எடப்பாடியின் மகன் மிதுனுடன்தான் பேச முடிகிறது. எடப்பாடி என் போனைக்கூட எடுப்ப தில்லை. நான் எப்படி உங்கள் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரமுடியும். எடப்பாடி மகன் மூலமாக முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கிறேன்''” எனச் சொல்லியிருக்கிறார்.
அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ராஜ்யசபா உறுப்பினர் சீட்டை அன்புமணி, ஜி.கே.வாசன், கேட்கிறார்கள். அ.தி.மு.க. வசம் இருப்பது 2 சீட்டுகள். யாருக்கு சீட் கொடுத்தாலும் இன்னொருவர் கோபித்துக் கொள்வார். இதற்கிடையே டி.டி.வி.தினகரனும் பா.ஜ.க. விடம் ராஜ்யசபா சீட் கேட்கிறார். அனைவரும் மத்திய மந்திரி கனவில் இருக்கிறார்கள். இந்தப் பிரச்னையை தீர்ப்பது நம்மால் முடியாது என அமித்ஷா பக்கம் ராஜ்யசபா சீட் விவகாரத்தை தள்ளிவிட்டு விட்டார் எடப்பாடி.
அதேநேரத்தில் சசிகலாவை, அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க. நிறுத்துகிறது என அமித்ஷாவிடம் புகார் செய்திருக் கிறது அ.தி.மு.க. தரப்பு. சசிகலா அ.தி.மு.க.வை பலவீனப்படுத்துவார் என்கிற உளவுத்துறை அறிக்கையும் அமித்ஷாவுக்குச் சென்றிருக்கிறது. சென்னைக்கு வரும் அமித்ஷா சசிகலாவை அழைத்துப்பேசுவார். ஓ.பி.எஸ்.ஸையும் ரகசியமாக சந்திப்பார். அ.தி.மு.க.வை பலவீனப்படுத்தும் அவர்களது முயற்சிகளை முறியடிக்க அமித்ஷாவை பெரிதாக நம்பியிருக்கிறார் எடப்பாடி. காங்கிரசுடன் இம்முறை பேச்சுவார்த்தை உறுத்தலாக இருக்கும் நிலையில், புதிதாக கூட்டணிக் கட்சிகளை சேர்க்க தி.மு.க. திட்டமிட்டு வந்தது.
இதற்கிடையே சசிகலாவிடம் அ.தி.மு.க. முன்னாள் மந்திரிகளான வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள் கூடிப் பேசிவருகிறார்கள். அவர்களை அணிதிரட்டும் வேலையை சசிகலாவின் சகோதரர் திவாகர் செய்துவருகிறார். டாக்டர் ராமதாஸ், திவாகர், ஓ.பி.எஸ். ஆகியோர் த.வெ.க.விடம் பேசிவருகிறார்கள். அன்புமணியும் தனக்கு கட்டாயம் ராஜ்யசபா சீட் கிடைக்கும் என எடப்பாடியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். காங்கிரசின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், ராகுல் காந்தியும் விஜய்யும் நேரடியாகப் பேசுகிறார்கள் என்ற புதிய கதை ஒன்றை உலாவவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையா என அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருக்கின்றன.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/dmdk1-2026-02-19-16-43-04.jpg)
இந்த நேரத்தில்தான் தி.மு.க. தரப்பில் தனது பேச்சுவார்த்தையை விரிவுபடுத்திய பிரேமலதா, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் மூலமாக தீவிரப்படுத்தினார். இதையடுத்து சில உடன்படிக்கைகள் ஏற்பட்ட நிலையில், பிப்ரவரி 19-ஆம் தேதி தேனாம்பேட்டையிலுள்ள அறிவாலயம் வந்த தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, தி.மு.க. தலைவரும் முதல்வருமான ஸ்டாலினைச் சந்தித்து தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளார். பிரேமலதா தம்பி சுதீஷுக்கு ராஜ்யசபா சீட்டை உறுதிபடுத்தியிருக்கிறது தி.மு.க. தே.மு.தி.க. முதல்முறையாக தி.மு.க.வுடன் கூட்டணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், தி.மு.க.வுடன்தான் கூட்டணி என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டாலும், அதை உறுதிப்படுத்துவதற்கான வியூகத்தில் தி.மு.க.வும், காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து தடுமாற்றமுமாக இருக்கிறது. மாறாக, எப்போதும்போல் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான கூட்டணிக் கவலைகள் இல்லாததால், வேட்பாளர் தேர்வில் மும்முரம் காட்டத் தொடங்கிவிட்டார். த.வெ.க. தரப்புடன் திவாகரன், ராமதாஸ் என பலரும் பேசுவதாகக் கூறப்பட்டாலும், உறுதியான எந்த அறிவிப்பும் வரவில்லை.
மோடி மார்ச் மாதம் தமிழகம் வரவிருப்பதால் மேலும் சில மாற்றங்கள் நடக்கும் என அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் கிசுகிசுக்கிறார்கள்.
இப்படியாக மலைக்க வைக்கும் பேரங்களுக்கு மத்தியில், ஆதாய, நட்டங்களைக் கணக்கிட்டு தமிழக கூட்டணி நிலவரங்கள் மெதுவாகத் தெளிவாகத் தொடங்கியிருக்கிறது.
-தாமோதரன் பிரகாஷ், கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/dmdk-2026-02-19-16-42-13.jpg)