Advertisment

அமர்பிரசாத் ரெட்டி கைது! அடுத்து... அண்ணாமலை? -பா.ஜ.க. கொடிமர சர்ச்சை!

bjp

மிழக அரசியலில் நிழல் உலகப் பிரமுகர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த அரசியலையே தங்களது செல்வாக்கின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அனைத்து அமைப்புகளையும், தரப்பினரையும் சவாலுக்கு அழைப்பார் கள். அந்த நிழல் உலகப் பிரமுகர்களைத் தொடுவதற்கு காவல்துறைகூடப் பயப்படும். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் அமர்பிரசாத்ரெட்டி. கடந்த இரண் டரை வருடமாக ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக இருந்த அண்ணாமலைக்கு, ‘ஜெ.வுக்கு ‘சசி போல் நிழலாக இருந்தவர் அமர்பிரசாத்ரெட்டி. அவரை சத்தமே இல்லாமல் கைது செய்து சிறையில் அடைத்ததோடு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் அளவிற்கு வழக்குகளைப் புனைந்துள் ளது தமிழக அரசு. இதனால் அடுத்த கைது அண்ணா மலையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒருபக்கம் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தி.மு.க. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், அ.ராசா ஆகி யோர் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் மீது கைது நடவடிக்கைகள் பாயும் என செய்திகள் வந்துகொண்டிருந்தன.

Advertisment

ss

சென்னை -கிழக்கு கடற்கரைசாலை, பனையூரில் அண்ணாமலையின் வீடு உள்ளது. திருவாரூரைச் சேர்ந்தவருக் குச் சொந்தமான அந்த வீடு அண்ணாமலை குடி வருவதற்கு முன்பு தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடப் படும் விருந்தினர் மாளிகையாக இருந்தது. அதை நீலாங்கரை முனுசாமி என்கிற

மிழக அரசியலில் நிழல் உலகப் பிரமுகர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். அவர்கள் ஒட்டுமொத்த அரசியலையே தங்களது செல்வாக்கின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு அனைத்து அமைப்புகளையும், தரப்பினரையும் சவாலுக்கு அழைப்பார் கள். அந்த நிழல் உலகப் பிரமுகர்களைத் தொடுவதற்கு காவல்துறைகூடப் பயப்படும். அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் அமர்பிரசாத்ரெட்டி. கடந்த இரண் டரை வருடமாக ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஊதுகுழலாக இருந்த அண்ணாமலைக்கு, ‘ஜெ.வுக்கு ‘சசி போல் நிழலாக இருந்தவர் அமர்பிரசாத்ரெட்டி. அவரை சத்தமே இல்லாமல் கைது செய்து சிறையில் அடைத்ததோடு அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாயும் அளவிற்கு வழக்குகளைப் புனைந்துள் ளது தமிழக அரசு. இதனால் அடுத்த கைது அண்ணா மலையா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒருபக்கம் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தி.மு.க. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், ஜெகத்ரட்சகன், அ.ராசா ஆகி யோர் மீது அமலாக்கத்துறை மூலம் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் துரைமுருகன், ஜெகத்ரட்சகன் மீது கைது நடவடிக்கைகள் பாயும் என செய்திகள் வந்துகொண்டிருந்தன.

Advertisment

ss

சென்னை -கிழக்கு கடற்கரைசாலை, பனையூரில் அண்ணாமலையின் வீடு உள்ளது. திருவாரூரைச் சேர்ந்தவருக் குச் சொந்தமான அந்த வீடு அண்ணாமலை குடி வருவதற்கு முன்பு தினமும் பத்தாயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு விடப் படும் விருந்தினர் மாளிகையாக இருந்தது. அதை நீலாங்கரை முனுசாமி என்கிற பா.ஜ.க. பிரமுகர், 3,60,000 ரூபாய் மாத வாடகை 40,000 ரூபாய் பராமரிப்பு என நான்கு லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டு அண்ணாமலை தங்க ஏற்பாடு செய்து கொடுத்தார். அந்த வீட்டின் முன்பு ஐம்பதடி உயரத் தில் பா.ஜ.க. கொடியை அமைக்க அண்ணாமலை முடிவு செய்தார். அந்த முயற்சிக்கு வீட்டின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன், நவீன குடியிருப்புகள் அடங் கிய அந்தப் பகுதியில் எந்த அரசியல் கட்சிகளும் கொடிகளை வைக்கக்கூடாது என அந்தப் பகுதி குடியிருப்போர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்தது. அத்துடன், இஸ்லாமியர்கள் நிறைந்த அந்தப் பகுதியில் பா.ஜ.க. கொடி ஏற்றப்படு வதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. வாடகை வீட்டின் முன்பு கொடி ஏற்றுவதில் பிரச்னை வந்தபோது, பல கோடிகள் மதிப்புமிக்க அந்த வீட்டை விலைக்குக் கேட்டார் அண்ணாமலை. அதற்கு வீட்டின் உரிமையாளர் உடன் படவில்லை. வீட்டின் உரிமையாளரை மிரட்ட, ஐம்பதடி கொடிக்கம்பத்தை நடுமாறு பாதயாத்திரையில் இருந்த அண்ணாமலை, யாத்திரையின் ஒருங் கிணைப்பாளராக இருந்த அமர்பிரசாத்ரெட்டிக்கு உத்தரவிட்டார்.

Advertisment

கொடிக்கம்பம் நடப்படுவதைப் பார்த்த குடி யிருப்புவாசிகள் காவல்துறையிடம் புகார் செய் தனர். காவல்துறையினர் வந்து கேட்டபோது அவர் களைக் கிண்டல் செய்து அனுப்பியிருக்கிறார்கள் அமரின் ஆட்கள். உடனே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரத்துடன் கொடிக்கம் பத்தை அகற்ற வந்தார்கள். போலீஸ் காவலுடன் வந்த அவர்களுக்கும் பா.ஜ.க.வினருக்கும் தகராறு ஏற்பட்டது. அண்ணாமலையின் யாத்திரைக்கு நடுவே கொடிக்கம்ப விவகாரத்திற்காக சென்னைக்கு கிளம்பி வந்த அமர், உடனடியாகக் களத்தில் குதித் தார். கொடிக்கம்பத்தை அகற்ற முன்வந்த ஜே.சி.பி. இயந்திரத்தின் கண்ணாடியை அமர் உடைத்தார்.

அரசு வாகனம் தாக்கப்பட்டது என்பதை அறிந்த போலீசார் சீரியஸ் ஆனார்கள். போலீஸ் கமிஷனர் அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ். சம்பவ இடத் திற்கு வந்தார். நீலாங்கரை முனுசாமி, கரு.நாக ராஜன், மாரிமுத்து மற்றும் ஐந்து பேர் போலீசா ரிடம் வாக்குவாதம் செய்தார்கள். கமிஷனர் அ.அமல்ராஜ் ஐ.பி.எஸ். முன்னிலையில் கொடிக் கம்பம் அகற்றப்பட்டது. கம்பம் அகற்றப்படும் போது தகராறு செய்த பா.ஜ.க.வினரை போலீசார் தடியடி நடத்தி விரட்டினார்கள். அத்துடன், அரசு சொத்தான ஜே.சி.பி. வாகனத்தைச் சேதப்படுத்திய செக்சன் உட்பட ஆறு செக்சன்களில் அமர் பிரசாத் ரெட்டி உட்பட ஆறுபேர் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்துவிட்டு மற்ற பா.ஜ.க.வினரை துரத்தி விட்டார்கள். இந்த சம்பவத்தால் கோவையிலிருந்து சென்னை வந்த அண்ணாமலை முழு சம்பவத்தை யும் கேள்விப்பட்டு ஏர்போர்ட்டிலேயே தலையில் கை வைத்து உட்கார்ந்து விட்டார். பின்னர், "கொடிக்கம்பத்தை அகற்றியதை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு நூறு கொடிக்கம்பங்கள் என கோடிக்கணக்கான கொடிக்கம்பங்கள் நடப் படும். அடுத்த வருடம் பனையூரில் போலீசாரிடம் நடைபெற்ற தாக்குதலில் காயமடைந்த தொண்டர் தலைமையில் அதே இடத்தில் கொடிக்கம்பம் நடப்படும்'” என அறிக்கை மட்டும் விட்டார். நடந்த சம்பவத்திற்கு போலீசார் சீரியஸ் ஆக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அங்கு சென்றால், தானும் கைது செய்யப்படுவோம் எனத் திரும்பி கோயம்புத்தூருக்கே பறந்து சென்றுவிட்டார் அண்ணாமலை.

இதில் முதல் குற்றவாளியான அமர் பிரசாத் ரெட்டியை அவரது கோட்டூர்புரம் வீட்டிற்குச் சென்று போலீசார் கைது செய்தனர். அவர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்படுவதுவரை பா.ஜ.க. வினர் பெரிய அளவில் அமருக்கு ஆதரவாகத் திரளவில்லை. அமர் மீது கை வைப்பதா? என போலீஸ் யோசித்தது. அமர் கைது செய்யப்பட் டால் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு சூழ்நிலை உருவாகுமா எனவும் போலீஸ் யோசித்தது. ஆனால், அண்ணாமலையைத் தவிர பா.ஜ.க.வினர் யாரும் அமரின் கைது குறித்து வாய் திறக்கவில்லை.

ss

அண்ணாமலையின் குருவான பி.எல். சந்தோஷின் சிபாரிசின் பேரில் அண்ணாமலை யுடன் இணைந்த அமர்பிரசாத் ரெட்டிதான் இதுவரை பா.ஜ.க.வில் நடந்த அனைத்துப் பிரச் னைகளுக்கும் மூல காரணம். ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் சிக்கிய ஹரீஷ், ஆர்.கே.சுரேஷ் ஆகி யோர் அமரால் பா.ஜ.க.வுக்குக் கொண்டுவரப்பட்ட வர்கள். ‘மோடி கபடி லீக்’ என்ற பெயரில் விளை யாட்டுப்போட்டி நடத்தி கோடிக்கணக்கில் திருடி னார் என ஆர்.எஸ்.எஸ். தலைமையகமே அமர் மீது விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரிக்கிறது. கே.டி.ராகவன் போன்று பா.ஜ.க.வில் எழுந்த அனைத்து செக்ஸ் குற்றச்சாட்டுகளுக்கும் பிதாமகன் அமர்தான். தொழிலதிபர்களை மிரட்டி வசூல் செய்த தாக ஏகப்பட்ட புகார் அமர் மீது வந்துள்ளது.

கொடிக்கம்ப விவகாரத்தில் "பயந்துட்டியா ஸ்டாலின்'’என தமிழக முதல்வரைக் கிண்டலடித்து சமூக வலைத்தளங்களில் எழுத வைத்தார் அமர். முதல்வரைத் தொட்டதும் காவல்துறை குண்டர் தடுப்புச் சட்டம் பிரயோகிக்க ஏதுவான பொதுச் சொத்தை சேதப்படுத்தும் பிரிவின் கீழ் கைது செய்து அமரை சிறையில் அடைத்துள்ளது. இதைப் பார்த்து அண்ணாமலை அதிர்ந்துபோய்விட்டார்.

அமர் மீது எழும் அனைத்துப் புகார்களிலும் அண்ணாமலையின் பெயரும் இடம் பெறுகிறது. கொடிக்கம்ப வழக்கில் அண்ணாமலையைக் கைது செய்யலாமா என தமிழக காவல்துறை யோசித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் அமர் மீது அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கிறார்களா என போலீஸ் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. புகார்கள் வருமானால் அமருக்கு குண்டாஸ் அண்ணாமலை கைது என சீன்கள் விரிவடையும் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

"ஆயுத பூஜைக்கு கோர்ட் விடுமுறையில் இருக்கும் நாட்களில் முக்கியமான பா.ஜ.க.வின் ஆயுதமான அமரை சிறையில் வைத்து, அண்ணா மலைக்கும் குறிவைக்கும் இந்நிகழ்வானது, ஒன்றிய பா.ஜ.க. அமலாக்கத்துறை மூலம் தி.மு.க. வி.ஐ.பி.க் கள் மீது தொடுத்த கைதுகள், மிரட்டல்கள் சவாலுக்கு பதிலுக்குப் பதில் என, அமர்பிரசாத் கைது மூலம் தமிழ்நாடு அரசு பா.ஜ.க.வுக்கு எதிர்வினை ஆற்றி யுள்ளது'’என்கிறார்கள் அரசியல் பார்வையாளர் கள்.

ff

nkn251023
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe