அமைச்சர் கனவில் அர்ஜுன் ரெட்டி! -திருச்சி சூர்யா காட்டம்!

ass

2026-ல் தேர்தல் அரசியலில் வி.சி.க. அடி யெடுத்து வைத்தபோதே "ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’என்ற முழக்கத்தை முன்வைத்தது. இந்த முழக்கம் புதிதாக வைக்கப்பட்டது அல்ல' என்கிறாரே திருமா?

அது ஏன் திடீர்னு பேசுறீங்க, பிறகு மறந்துபோறீங்க... வேணும் என்கிறபோது எடுக்குறீங்க. வேண்டாம் என்கிறபோது பாய் மாதிரி மடிச்சி வைக்கிறீங்க. எச்.ராஜா அட்மின் போட்டார் என்று சொன்னதற்கு எவ்வளவு கிண்டல் செய்தோம். திருமாவளவன் பிறந்த நாளுக்கு நான் வாழ்த்து போட்டேன். பதிலுக்கு அவர் "தேங்க்யூ தம்பி'ன்னு போட்டார். பின்னர் அரைமணி நேரத்தில் அது டெலிட் ஆகுது. இதுகுறித்து விசாரிக்கும்போது, நான்கு பேர் கண்ட்ரோலில் இருக்கிறது. திருமாவளவன், வி.சி.க. ஐ.டி. விங், வன்னியரசு டீம், இன்னொன்று அர்ஜுன் ரெட்டியிடம் லாகின் இருக்கிறது. வேண்டுமென்றே தி.மு.க.வை வம்பிழுக்கணும் என்பதற்காகத்தான் அதிகாரத்தில் பங்கு என்ற வீடியோவை போட்டார் அர்ஜுன் ரெட்டி.

திருமாவளவன்தான் தெளிவாக தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என்று சொல்கிறாரே?

அவர் எங்க தெளிவாக சொல்கிறார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை அழிக்க என் தலைவன் அர்ஜூன் ரெட்டி ஒருத்தர் போதும். அர்ஜூன் ரெட்டிக்கு முழுமையாக திருமாவள வன் அடிமையாகிவிட்டார். தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என்றால், அமைச்சரவை மாற்றம் நடக்கலாம் என கூறப்படும் நிலையில் ஏன், எக்ஸ் பக்கத்தில் "அதிகாரத்தில் பங்கு' என்ற வீடியோவை போட்டார்கள்.

வீடியோ போட்டு டெலீ

வீடியோ போட்டு டெலீட் செய்ததற் கான காரணத்தையும் சொல்லிவிட்டார்கள்..

ஜிம் கோச்சர் என்ற அடையாளத்தை உடைக்கணும் என்பதற்காக புரமோஷன் மேனேஜ்மென்ட் கம்பெனியை உருவாக்குகிறார் அர்ஜுன்ரெட்டி. தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுக்கு வேலை பார்த்தார். லட்சக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு தனிப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இவரது கம்பெனி வேலை பார்த்தது. விலை உயர்ந்த கடிகார பிரச்சனை தமிழக அரசியலில் பெரிய அளவில் பேசப்பட் டது நினைவிருக்கிறதா? அதனை பரிசளித்தவர் அர்ஜுன்ரெட்டி அவர்கள். இவரும் சபரீசனும் நெருங்கிய நண்பர்கள். அர்ஜுன் ரெட்டிக்கு எம்.பி. ஆகணும் என ஆசை வருகிறது. ஆனால் தி.மு.க.வில் சீட் கிடைக்கவில்லை. சபரீசன் அழுத்தத்தினால் வி.சி.க.வில் இணைகிறார் அர்ஜுன்.ரெட்டி. திருமாவளவனிடம் உங்கள் பெரம்பலூர் மாநாட்டுச் செலவினை அர்ஜுன் ரெட்டி முழுமையாக ஏற்றுக்கொள்வார். பாராளுமன்ற செலவுகளையும் பார்த்துக்கொள் வார் என அவர் கட்சியில் சேரும்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. திருப்பதி உண்டியலே வரும்போது நமக்கு என்ன என்று வி.சி.க. அவரை சேர்த்துக்கொண்டது. திருமா வின் மாநாடு சக்ஸஸ் என தி.மு.க. அமைச்சர் களே சொல்ற அளவுக்கு நடந்தது. எம்.பி. தேர் தலின்போது வி.சி.க.வுக்கு ஒரு இடம் கூடுதலாக கேட்டார்கள். அது அர்ஜுன் ரெட்டிக்காகத்தான்.

surya

சட்டமன்றத் தேர்தலிலும் பொதுத் தொகுதி கேட்டு வெற்றி பெற்றோம், அதே போல எம்.பி. தேர்தலிலும் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கையில் கேட்டிருப்பார் கள். கூடுதல் இடம் கேட்டது இவருக்காகத் தான் என்பது உங்களது கற்பனையா?

அர்ஜுன் ரெட்டிக்காகத்தான் ஒரு இடம் கூடுதலாக வேண்டும் என்று கேட்கப்பட்டது. ஒருவேளை பொதுத்தொகுதி கொடுத்திருந்தால் அவரை கண்டிப்பாக வேட்பாளராக அறிவித்திருப்பார்கள். பெரம்பலூர் தொகுதியை முக்கியமாகக் கேட்டார்கள். பெரம்பலூர் பொதுத்தொகுதியில் அவர் போட்டியிட வேண்டும் என்பதற்காகத்தான் அங்கு மாநாடே போட்டார்கள். அப்போது வி.சி.க.வின் முக்கிய நிர்வாகி ஒருவர், பொதுத்தொகுதியில் அர்ஜுன் ரெட்டி போட்டியிட்டால் கட்சியை விட்டு வெளியேறுவேன் என்று சொன்னார். புதிதாக கட்சிக்கு வந்த இவருக்கு ஏன் திடீரென்று துணை பொதுச் செயலாளர் பதவி கொடுத்தார்கள்?

ஆட்சி, அதிகாரம் என்பதைப்போல கட்சி அதிகாரம் உண்டு. அந்த கட்சி அதிகாரத்தில் தலித் அல்லாதவர்களும் இடம்பெற வேண்டும் என்பதுதான் வி.சி.க. முடிவு. இதனை வேளச்சேரி தீர்மானம் சொல்கிறது என திருமாவளவனே சொல்லியிருக்கிறாரே?

கடந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பெரிய கூட்டணி அமைய வில்லை. இப்போது நேரம் இருக்கிறது என்பதால் தி.மு.க. கூட் டணியில் இருக்கும் கட்சிகளை இழுக்க நினைக்கிறது அ.தி.மு.க. அதற்காக வி.சி.க.விடம் முயற்சி செய்தது. கூடுதலாக காங்கிரஸ் கட்சியையும் சேர்க்க நினைக்கிறது. ஏற்கனவே ஓ.பி.எஸ்.ஸுக்கு டெபுடி சி.எம். கொடுத்தாலும், முழு அதிகாரத்தையும் கையில் வைத்திருந்தது எடப்பாடிதான். பெயரளவுக்குத்தான் அந்த பதவி என காட்டிவிட்டார் எடப்பாடி. ஆகையால் வி.சி.க.வுக்கு ஒன்று, காங்கிரஸ் கட்சிக்கு ஒன்று என இரண்டு டெபுடி சி.எம். கொடுக்க வும் தயாராகிவிட்டார். அதனால்தான் பொதுஊடகத்தில் பேசிய அர்ஜுன் ரெட்டி, வி.சி.க. இல்லாமல் வட மாவட்டங்களில் தி.மு.க. வெற்றிபெற முடியாது என்று பேசுகிறார். அதிகாரத்தில் பங்கு என்பதை இப்போதிலிருந்தே சொல்ல ஆரம்பித்தால் ஒன்றரை வருடமாக இது பேசுபொருளாக இருக்கும். பொதுத் தொகுதி கேட்டு கொடுக்கவில்லை. அரசாங்க வழக்கறிஞர் கேட்டோம் கொடுக்கவில்லை. வாரியத் தலைவர் பதவி கொடுக்கவில்லை. அமைச்சரவையில் இடம் கொடுக்க வில்லை என்று தேர்தல் நெருங்கும்போது "இது என்ன சமூகநீதிக் கட்சி என தி.மு.க.வை குறை சொல்லிவிட்டு, அந்த நேரத்தில் எடப்பாடி யேசுநாதர் போல கையை விரித் துக்கொண்டு வாருங்கள் நான் உங்களை அணைத்துக்கொள் கிறேன், உங்களுக்கு துணை முதல்வர் பதவி தருகிறேன் என்று சொல்லுவார். அதற்குத்தான் இந்த வேலையா?

s

அந்தக் கட்சியில் மற்றவர்களை சொல்வதை விட்டு விடுங்கள். திருமாவளவன் என்ன சொல்கிறார் என்பதை பாருங்கள்.

பண பலத்துடன் வந்தவர் எது வேண்டுமானாலும் பேசலாம். அவரை அந்தக் கட்சியில் கேள்வி கேட்கமாட் டார்களா. பல வி.சி.க. நிர்வாகிகள் சொல்வது என்ன தெரியுமா? ரவிக்குமார் அழுத்தத்தில்தான் தி.மு.க. கூட்டணி தொடர்கிறது என்பதுதான். தனி சின்னத்தில் ஜெயித்த கட்சிகள் எல்லாமே நினைப்பது என்னவென்றால் "ஆப்ஷன் பி' என இருக்கிறது என்பதைத்தான். ஆனால் வைகோ அப்படியில்லை. எந்த சூழ்நிலையிலும் ஸ்டாலினுக்கு எதி ராக போகமாட்டேன், ஸ்டாலினுக்கு துணையாக நிற்பேன் என்கிறார். திருச்சி தொகுதியை கொடுத்து அங்கு உள்ள இரண்டு அமைச்சர்கள் தீவிரமாக உழைத்து மகனை வெற்றி பெற வைத்தார்கள் என்று நன்றி விசுவாசத்தோடு இருக் கிறார். தனி சின்னமான பானை சின்னத்தில் வெற்றி பெற்றா லும் திருமாவளவனுக்கு தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள் எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை என்று சொல்வாரா?

வெற்றி பெற்ற பிறகு எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் உள்பட தி.மு.க.வினர் தனது வெற்றிக்கு உழைத்தார்கள் என்றுதான் சொன்னார் திருமாவளவன்...

அந்த நன்றி விசுவாசம் இருந்தால் அமைதி காத்திருக்க லாம். போன முறை எம்.பி., இந்த முறை எம்.பி., சட்ட மன்றத்தில் வெற்றி என இருந்தீர்கள். 2026ல் தி.மு.க.வுடன் இருந்தால் எம்.எல்.ஏ. ஆனாலும் அமைச்சராக முடியாது. அர்ஜுன் ரெட்டிக்கு அமைச்சர் ஆசை இருக்கிறது. பொதுத்தொகுதி கொடுத்து அவரை எம்.எல்.ஏ.வாக ஆக்கினாலும் அமைச்சராக முடியாது. ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு போனால் நாம் டிமாண்ட் வைக்கலாம் என நினைக்கிறார் அர்ஜுன் ரெட்டி. எடப்பாடியும் அதனை ஏற்க தயாராக இருக்கிறார் என்பதால் அமைச்சர் என்ன, துணை முதல்வர் பதவிகூட கிடைக்கும் என நினைக்கிறார் அர்ஜுன் ரெட்டி. அந்த கனவோடுதான் அர்ஜுன் ரெட்டி தொடர்ந்து பேசிக்கொண்டுவருகிறார். மது ஒழிப்பு மாநாடும் இந்த அரசியலுக்காகத்தான்.

(தொடரும்)

சந்திப்பு: -வே.ராஜவேல்

படம் : நவீன்

nkn051024
இதையும் படியுங்கள்
Subscribe