"ஹலோ தலைவரே, நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரி, ஒன்றிய அமைச்சரவையை மோடி மாற்றி அமைச்சிருக்கார். தமிழ் நாட்டுக்கான பிரதிநிதித்துவமா பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு இணையமைச்சர் பதவி தரப்பட்டிருக்கு.''”
"ஆமாம்பா, பிரதமர் மோடி யால் 43 புதிய முகங்கள், ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்காங்க. அதேபோல், நாம் முன்னதாகவே ஸ்மெல் பண்ணி, பேசிக்கிட்ட மாதிரியே ஓ.பி.எஸ். மகன் ரவீந்திர நாத்துக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படலையேப்பா?''”
"ஆமாங்க தலைவரே, ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது ஏற்கனவே இருந்த 12 அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டிருக்கு. இந்த நிலையில், ஓ.பி.எஸ். தன் மகன் ரவீந்திரநாத்துக்கு ஒன்றிய அமைச்சர் பதவியை, ஆரம்பம் முதலே எதிர்பார்த்துக்கிட்டு இருந்தார். எடப்பாடியோடு நடக்கிற மல்லுக்கட்டில் தன் பவரைக் காட்டுவதற்காக மகனை மத்திய மந்திரியாக்க நினைச்சார். அமைச்சரவை மாற்றியமைக்கப்படும்போது வாய்ப்பு தருவோம்னு டெல்லி ஆறுதல் சொல்லியிருந்தது. ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தும் பா.ஜ.க.காரர் போலவே செயல்பட ஆரம்பிச்சார். தன் சட்டைப் பையிலும் லெட்டர் பேடிலும் மோடி படத்தை வச்சிருந்தாரு. ஆனாலும் கனவு நிறைவேறலை.''”
"சட்டமன்றத் தேர்தல் முடிவுகளும் இதற்கு காரணமா?''”
"அ.தி.மு.க., உரிய முறையில் ஒத்துழைப்பைத் தராததால்தான், தாங்கள் நின்ற 20 தொகுதியில் 4-ல் மட்டுமே கரையேற முடிஞ்சதுன்னு பா.ஜ.க. மேலிடம் வருத்தத்தில் இருந்தது. இந்த நேரத்தில் ரவீந்திரநாத் பற்றி இங்கிருந்து போன ரிப்போர்ட்டுகளும் பா.ஜ.க.வுக்கு திருப்தியைக் கொடுக்கலை. எடப்பாடியும் தன் டெல்லி லாபி மூலமா, ஓ.பி.எஸ் மகனுக்கு சீட் கிடைச்சிடக்கூடாதுன்னு கடைசி நேரம் வரை காய் நகர்த்தியிருக்காரு.''”
"புரியுதுப்பா...''”
"ஆமாங்க தலைவரே, நீங்க புரிஞ்சிக்கிட்டது சரிதான். தன் மகனுக்கு எப்படியாவது அமைச்சர் பதவியை வாங்கிடனும்ன்னு கடைசி நேரம் வரை காய் நகர்த்தினார் ஓ.பி.எஸ். அவர் மகனான ரவீந்திரநாத்தோ, தனக்கு அழைப்பு இல்லாத நிலையிலும், டெல்லிக்கு முன்னதாகவே போய் உட்கார்ந்துக்கிட்டு, பிரதமர் அலுவலகத்தின் அழைப்புக்காகக் காத்திருந்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தை நடத்திய மாஜி மந்திரி சி.வி. சண்முகம், பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துக்கொண்ட தால்தான் ஆட்சி அமைக்க முடியாதபடி நாங்கள் தோற்றோம்னும், இல்லைன்னா தேர்தல் முடிவே வேறுமாதிரி இருந்திருக் கும்னும், சிறுபான்மையினர் வாக்குகள் மூலம் விழுப்புரத்திலும் தனக்கு வெற்றி கிடைச்சிருக்கும்னும் ஒரு அணுகுண்டை பா.ஜ.க.வை நோக்கி வீசினார். ஏற்கனவே எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. தோற்றப்பவும் சண்முகம் இப்படித்தான் பேசினாரு. பா.ஜ.க சைடிலிருந்து கே.டி.ராகவன், அ.தி. மு.க.வால்தான் தோற்றோம் என்ற எண்ணம் எங்களுக்கும் இருக்குன்னு பதிலடி கொடுக்க, ஓ.பி.எஸ் பதறிட்டாரு.''’
"தேச நலனுக்காகவும் தமிழ்நாட்டு நலனுக்காகவும் கூட்டணி தொடரும்னு அறிக்கை கொடுத்திருந்தாரே?''
"ஆமாங்க தலைவரே, ஆனாலும் டெல்லி சைடில் க்ரீன் சிக்னல் கிடைக்கலை. அப்பதான், சி.வி.சண்முகத்தை விட்டு, பா.ஜ.க.வுக்கு எதிராக குண்டு போட வச்சவரே எடப்பாடிதான்னு ஓ.பி. எஸ்.கிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளே சொல்லியிருக்காங்க. கேபினட் மாற்ற லிஸ்ட்டில் ரவீந்திரநாத் பெயர் இல்லை. தமிழ் நாட்டின் சார்பில் எல்.முருகனுக்கு பதவி வழங்கப் பட்டிருக்கு. அவர் விரைவில் ராஜ்ய சபா எம்.பி.யா தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் இருக்காரு. புதுச்சேரியில் விரைவில் காலியாகவிருக்கும் ராஜ்யசபா சீட்டை ஈஸியா ஜெயிச்சிடலாம். அது தங்களுக்கு சாதகமா இருந்தாலும் கூடுதலா தமிழ்நாட்டிலிருந்து ஒரு சீட்டை வாங்கிடணும்னு பா.ஜ.க. கணக்குப் போடுது.''”
"அது என்ன கணக்கு?''”
"தமிழ்நாட்டில் காலியாக இருக்கிற 3 ராஜ்யசபா சீட்டுகளுக்கும் தனித்தனியா தேர்தல் நடத்தினால் மூன்றையும் தி.மு.க. ஜெயிச்சிடும். சேர்த்து தேர்தல் நடத்தினால், எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கைப்படி அ.தி.முக.வுக்கு ஒரு சீட் கிடைக்கும். அ.தி.மு.க சீட்டுதான் முருகனுக்குன்னு டெல்லி முடிவு பண்ணிடிச்சாம். அ.தி.மு.க.வில் உறுதியாகாத ஒற்றை சீட்டுக்கு பலத்த போட்டி இருக்குது. பா.ஜ.க.. மேலிடமோ தங்களுக்கு இந்த சீட்டைத் தரலைன்னா, ஏற்கனவே ரெடியா இருக்கிற ஊழல் பைல்களை தூசு தட்டுவோம்னு எடப்பாடிக்கும் ஓ.பன்னீருக்கும் டேஞ்சர் சிக்னல் போட, அவங்களும் அப்படியே செய்றோம் எஜமான்ங்கிற லெவ லுக்கு வந்துட்டாங்களாம்.''”
"டெல்லி செங்கோட் டைகிட்ட பணிஞ்சு போனாலும், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அ.தி. மு.க அதிகாரம் இன்னும் மிச்சமிருக்குதாமே?''”
"ஆமாங்க தலைவரே, கடந்த வாரம் கோட்டையில் இருக்கும் துறைச் செயலாளர்கள் உள்ளிட்ட அத்தனை அதிகாரிகளின் டேபிளுக்கும் ஒரு பிரௌன் கவர் விநியோகிக்கப்பட்டது. அதை திறந்து பார்த்தவங்களுக்கு அதிர்ச்சி. அ.தி.மு.க. அரசின் சாதனை நினைவு மலர்ங்கிற பெயரில், காஸ்ட்லியாகத் தயாரிக்கப் பட்ட 2 சிறப்பு மலர்கள் இருந்திருக்கு. அதன் பக்கங்களில், எடப்பாடியும் அவரது பழைய அமைச்சரவை சகாக்களும் சிரிச்சபடி போஸ் கொடுத்திருக்காங்க. அ.தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட மலர் தயாரிப்பு வேலை சமீபத்தில்தான் முடிஞ்சிருக்கு. தகவல் தொழில் நுட்பத் துறையிடம் புத்தகங்கள் வந்திருக்கு. அந்தத் துறையின் கூடுதல் இயக்குநராக இருக்கும் மேரி வினிதாவும், எல்காட் நிறுவனத்தின் டெபுடி ஜி.எம்.மாக இருக்கும் சுமதியும் இந்த காலாவதி மலரை, தங்களின் அ.தி.மு.க விசுவாசத்தைக் காட்டும் வகையில் இப்ப ரிலீஸ் செய்திருக்காங்க.''”
"தமிழ்நாட்டில் ஒரு பல்கலைக் கழகத்தையே பா.ஜ.க.வினர் தங்கள் கட்சி அலுவலகமாக மாற்றி இருக்காங்களே?''”
’"ஆமாங்க தலைவரே, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் விலங்கியல் துறைத் தலைவரும், பல்கலைக் கழகத்தின் பதிவாளருமான பேராசிரியர் கடற்கரை முருகன், ஜூன் 30-ந் தேதி ஓய்வு பெற்றார். அதற்கு மறுநாளான ஜூலை 1-ந் தேதி அவர் பா.ஜ.க.வில் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அதற்கான நிகழ்ச்சி அந்தப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் காளிராஜின், அறையை ஒட்டியிருக்கும் லாபியிலேயே நடந்திருக்கிறது. பா.ஜ.க.லிஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்துக்கிட்டு, உறுப்பினர் அட்டையை வழங்கியிருக்காங்க. பா.ஜ.க.வுக் குள்ளேயே இருக்கும் இரண்டு கோஷ்டிகளின் உள்ளடியில் பல்கலைக்கழகம் படாதபாடு படுதாம்.'' ”
"போயஸ் கார்டனில் கட்டியிருக்கும் புதிய பங்களாவில் விரைவில் சசிகலா குடியேற இருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு எதிரே, பிரமாண்டமான பங்களாவைக் கட்டி முடித்திருக்கிறார் சசிகலா. வருமானவரித்துறை இந்த பங்களாவை முடக்கி வைப்பதாக நோட்டீஸ் அனுப்பிய நிலையிலும், கட்டிடம் கட்டத் தடை ஏதும் விதிக்கப்படாததால், பங்களா வேலை விரைவாக முடிக்கப்பட்டிருக்கிறது. பங்களாவில் குடியேற சட்டச் சிக்கல் இல்லாத நிலையில், ஆவணி மாதம் அதில் கிரஹப்பிரவேசம் செய்ய இருக்கிறாராம் சசி. இதற்கிடையே, மாவட்டம் தோறும் அ.தி.மு.க.வினர், அவருக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றியது போல், அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தைக் கூட்டி, அதிலும் சசிக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்னு எடப்பாடி சொல்ல, அதை ஏற்க மறுத்துவிட்டாராம் ஓ.பி.எஸ். இது சசிகலா தரப்பை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கு.''”
“"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஹை சொஸைட்டின்னு தங்களைச் சொல்லிக் கொள்கிறவர்களால் நடத்தப்படும் சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளி, சிவசங்கரனின் சுஷில்ஹரி பள்ளி ஆகியவற்றில் குழந்தைகளுக்கும் மாணவிகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அரங்கேறி வந்ததை, நக்கீரன் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தியதால், அவை சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு ஆளாகிவருகின்றன. இதேபோல், காஞ்சி சங்கரமடத் தரப்பு கீழ் திருப்பதி மற்றும் மகாராஷ்டிர மாநில நாசிக் ஆகியவற்றில் நடத்திவரும் பள்ளிகளில் இருந்தும், இப்போது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் புகார்கள் எழுந் துள்ளன. அதேபோல் சென்னையில் அதே சங்கர மடம் நடத்திவரும் ‘ஏ.பி.சி. மருத்துவமனையில் இருந்தும் பாலியல் புகார்கள் கிளம்பிக்கொண்டு இருக் கின்றன. மருத்துவமனையில் நிர்வாகியாக இருக்கும் 87 வயது கொண்ட நபரும், இந்த குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.''