ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கீழ்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த வினோத்பாபு என்ற மாற்றுத்திறனாளி, லண்டன் மற்றும் பாகிஸ்தானில் நடந்த மாற்றுத் திற னாளிகளுக்கான சக்கர நாற்காலி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கோப்பை வென்றதாக முதல்வர் வரை ஏமாற்றியுள் ளார். ஆஸ்திரேலியா, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ் தான், இலங்கை, பாகிஸ்தான் போன்ற 20 நாடுகள் இப்போட் டியில் பங்கு பெற்றதாகவும், அதில் பைனலில் பாகிஸ் தானை வீழ்த்தி உலகக் கோப் பையை வென்றதாகவும், சமூக வலைத் தளங்களில் சமீபத்தில் வீடியோ மற்றும் போட்டோவுடன் செய்திகள் பரவின.

இதனால் அப்பகுதி மக்கள் வினோத் பாபுவை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடி னர். இந்த செய்திகள் வெளியான நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமநாத புரம் மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸை நேரில் சந்தித்து, தன் தலை மையிலான மாற்றுத் திறனாளி களுக்கான அணி உலகக் கோப்பை கிரிக்கெட் போட் டியில் வெற்றிபெற்று வந்துள்ளதாகவும், அடுத்து நடக்க உள்ள போட்டி களில் பங்குபெற தமிழக அரசு மூலம் நிதியுதவி வழங்குமாறும் மனு அளித் துள்ளார்.

cc

Advertisment

இது ஒருபுறமிருக்க, பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனை நேரில் சென்று சந்தித்து உதவி பெற்றதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று கோப்பையுடன் வாழ்த்துப் பெற்ற படங்கள் வெளியானது. அடுத்த சில நாட்களில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற புகைப்படமும் செய்தியும் வெளியானது.

இதற்கிடையில் இந்த செய்திகளை வாசித்து அதிர்ச்சியடைந்த, உண்மையிலே மாற்றுத்திறனாளி களுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட சிலர் "இந்த வினோத்பாபு போட்டியில் கலந்துகொள்ளவும் இல்லை... கோப்பையை வெல்லவும் இல்லை' என தெரி வித்தனர்.

Advertisment

இதையடுத்து மாற்றுத்திறனாளிக்களுகான சக்கர நாற்காலி கிரிக்கெட் வீரர் முகமது கதாபியைத் தொடர்புகொண்டபோது, "வினோத்பாபு உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றது உண்மைதான். அவரைப் பற்றி வரும் செய்திகளில் நிறைய முரண்பாடுகள் உள்ளன. உலக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர் கிரிக்கெட் டீம் 10 கூட இருக்காது. இந்த நிலையில் இவர் எப்படி, 20 நாடுகள் பங்குபெற்ற போட்டியில் விளையாடியிருக்க முடியும்? இவரிடம் பாஸ்போர்ட்கூட இல்லாத நிலையில், எப்படி பாகிஸ்தான் சென்று விளையாடி கோப்பையை வென்றிருப்பார்? இந்திய கிரிக்கெட் அணியே, பாகிஸ்தான் சென்று விளையாட அனுமதியில்லாத நிலையில், இவர் மட்டும் எப்படி பாகிஸ்தான் சென்றிருப்பார்? fஅதேபோல இவர் வைத்திருந்த கோப்பையில் இந்திய நாட்டு தேசியக்கொடி இருந்தது, மற்றொரு நாட்டில் நடக்கும் போட்டியில் எப்படி இந்திய கொடி இருக்கும்? முதல்வரிடம் போலியான நபரை எப்படி அனுமதித்தார்கள்? உளவுத்துறை தூங்குகிறதா? இதுபோன்ற போலியான ஆட்கள் செய்யும், ஏமாற்று வேலைகளால், எங்களைப் போன்ற உண்மையான மாற்றுத்திறனாளி வீரர்கள் பாதிக்கப்படுவார்கள்''’என்றார்.

இது தொடர்பாக வினோத்பாபுவிடம் பேச தொடர்புகொண்டபோது, அவர் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. வினோத்பாபுவை பாராட்டியதாகக் கூறப்படும் அமைச்சர் ராஜகண்ணப்பனையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. உளவுத்துறை தலைமை அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை தொடர்பு கொண்ட போது அங்கும் இதே நிலைதான்.

நமக்குத் தெரிந்த காவல்துறை வட்டாரத்தை விசாரித்த போது, "இது முழுக்க முழுக்க வினோத்பாபு செய்த ஏமாற்று வேலை. இவரிடம் பாஸ்போர்ட்டே இல்லை. உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றபோது ஆட்களை வைத்து இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து வீடியோ எடுத்துக்கொண்டதாகவும், சில புகைப்படங்களும் எடுக்கப்பட்டதாகவும், அதை மார்பிங் செய்து இந்த மோசடி வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்'' என தெரிவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.