நித்தியின் கைலாசா சார் பாக, அமெரிக்காவின் முப்பதுக் கும் மேற்பட்ட நகரங்களுடன் ஒப்பந்தம் போட்டு ஏய்க்கமுயன்ற விவகாரம் சமீபத்தில் அம்பல மாகியுள்ளது.
பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக ஐ.நா. அமைப்பு நடத்திய மாநாடு ஒன்றில் என். ஜி.ஓ.க்கள் சார்பாக நித்தியானந் தாவின் சிஷ்யைகள் கலந்து கொண்டு, ஐ.நா. மாநாட்டில் கைலாசா அங்கீகரிக்கப்பட்டது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயன்று தோல்வியடைந்தனர். சுதாரித்த ஐ.நா., “"நித்தியின் சீடர் கள் கலந்துகொண்டது நாட்டின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் மாநாடு அல்ல,…ஆர்வலர்கள் யார்வேண்டுமானாலும் கலந்துகொள்ளும் மாநாடு'’ என பட்டவர்த்தமான அறிவித்தது.
அடுத்தபடியாக அமெ ரிக்காவின் 30-க்கும் அதிகமான நகரங்களை நித்தியின் சிஷ்யை கள் தொடர்புகொண்டு கலாச் சார கூட்டாண்மை என்ற பெய ரில் நாடாளுமன்ற உறுப்பினர் கள், மேயர்களுடன் ஒப்பந்தம் போட்டது அம்பலமாகி யிருக்கிறது.
2019-ல் கற் பழிப்புக் குற்றச் சாட்டு உள் ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டு களுடன் தலைமறைவாகியிருந்த நித்தியானந்தா, எந்த நேரம் வேண்டுமானாலும் இந்திய அரசு கைதுசெய்யும் என்ற நிலையில், இந்தியாவைவிட்டு தப்பியோடி னார். அப்படி தப்பிச்சென்ற நித்தி யானந்தா, 2019-ன் இறுதியில் ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி, கைலாசா என்று இந்து நாட்டை உரு வாக்கியிருப்பதாகவும் இங்கே 20 லட்சம் பேர் இந்து மதத்தைப் பின்பற்றுவதாகவும் கூறினார். தனிக் கொடி, பாஸ் போர்ட் என தினம் ஒரு செய்தி வெளியிட்டு சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில்தான் 2023 ஜனவரி 12-ஆம் தேதி யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் கைலாசா, நியூ ஜெர்சி மாகாணத்தின் நெவார்க் நகரத்துடன் சிஸ்டர் சிட்டி எனும் கலாச்சார ஒப்பந்தம் ஒன் றைப் போட்டிருப்பதாக பரபரப் புச் செய்தி வெளியானது. அமெ ரிக்கா போன்ற ஒரு நாடு, கைலாசா போன்ற போலி நாட்டை எப் படி அங்கீகரித் தது என பல ரின் விழிகளும் உயர்ந்தன.
சிஸ்டர் சிட்டி ஒப்பந் தம் என்பது என்ன? அமெரிக்க நகரம் அல்லது மாகாணம், மற்றொரு நாட்டைச் சேர்ந்த அங்கீகரிக்கப்பட்ட அதி காரியுடன் ஒரு முறையான ஒப் பந்தத்தில் கையெழுத்திடுவது தான் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தம். பொதுவாக இதில் நகர மேயரோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ கையெழுத்திடலாம். இதனால் இரு நாடுகளுக்கு இடையே கலாச்சாரப் பரிமாற்றம் உள் ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இருந்தாலும், நித்தியானந்தா இந்நகரங்களின் தொழிலதிபர் களிடமிருந்து நிதி திரட்டும் நோக்கிலும், கைலாசாவுக்கு ஒரு சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கத்திலேயே இந்த ஒப்பந் தங்களை மேற்கொண்டுள்ளார்.
தற்போது கைலாசாவுடன் நெவார்க் மட்டுமல்லாமல் விர்ஜினியா, ஒஹியோ, ப்யூனோ பார்க் என முப்பதுக்கும் அதிக மான நகரங்கள் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது தெரியவந்துள்ளது. இதன்படி, இந்த நகரங்களிலுள்ள தொழிலதி பர்களை கைலாசாவின் பிரதிநிதி கள் அணுகி கைலாசாவின் மேம் பாட்டுக்காக நிதிகள் பெறமுடி யும். அந்த நிதிக்குக் கைமாறாக, கைலாசாவின் நகரங்களுக்கும் தெருக்களுக்கும் அந்த தொழிலதி பர்களின் பெயரைச் சூட்டிப் பெருமைப்படுத்துவதாக நித்தி தரப்பு அணுகியுள்ளது.
அமெரிக்காவின் ஜாக்சன் வில்லே நகர மேயர், “"எங்கள் பிரகடனம் அங்கீகாரம் அல்ல. கைலாசாவின் விண்ணப்பத்துக் கான பதில்தான்'’ என பின்வாங்கி யுள்ளதுடன், கைலாசா என்று இல்லவே இல்லாத, சர்வதேச அங்கீகாரம் பெறாத நாட்டிடம் ஏமாந்ததை ஒப்புக்கொண்டுள் ளது. நியூ ஜெர்ஸி மேயர் ராஸ் பராகா, கலிபோர்னியாவின் நோர்மா டோரஸ் ஆகியோர் நித்தியானந்தாவின் வலையில் சிக்கியுள்ளது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
அதேபோல நெவார்க் நகர மேயரும், அந்த ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக அறிவித்துள் ளார். அதேசமயம் ஒரு போலிச் சாமியாரிடம் அமெரிக்காவின் முப்பது நகரங்கள் ஏமாந்தது அமெரிக்க ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆனால் விஷயம் அதையும் தாண்டிச் சென்றுள்ளது. நித்தியானந்தா அமெரிக்காவை மட்டும் குறி வைக்காமல், பிரான்ஸ், கினீ, சியாரா லியோன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நகரங்களுட னும் சிஸ்டர் சிட்டி ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.
இந்தச் செய்தியை வெளிக் கொண்டுவந்த அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ், "போலிச் சாமியார்களிலே உச்சம்தொட்ட ஒருவரை நாங்கள் கண்டுபிடித் திருக்கிறோம்’'’ என செய்தி வெளி யிட்டுள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் அல்லது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரம் பெறாத, நாடென்று அழைக்கத் தகுதியே இல்லாத தீவே கைலாசா என்பதையும் வெளிப்படையாகக் கூறியுள்ளது.
கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள் என்பது பழமொழி. ஐ.நா. நிகழ்வு மூலமாக கைலாசா வை இறையாண்மை உள்ள நாடாகக் காண்பிக்க முயன்று மூக்குடைபட்ட நித்தியானந்தா, தற்போது அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரான்ஸ் நாடுகளின் பகைமைகளையும் சந்தித்து, உலக அளவில் தேடப்படும் போலிச் சாமியாராக ஆகியிருக்கிறார்.
இந்த விவகாரத்துக்குப் பின் நித்தியை, அமெரிக்கா கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. இதுவரை இந்தியச் சிறைகள் மட்டும் திறந்திருந்த நிலையில், நித்தியானந்தா தன் ஆன்மிக சக்தியால் உலகச் சிறைகள் அனைத்தையும் தனக்காகத் திறந் திருக்கும்படி மாற்றியிருக்கிறார்.