மே 14 அன்று, நெல்லை அடைமிதிப்பான் குளம் கல்குவாரி விபத்தில் முருகன், விஜயன் இருவர் மட்டும் உயிரோடு மீட்கப்பட்டு சிகிச்சை யிலிருக்கின்றனர். அடுத்ததாக மீட்கப்பட்ட, இன்னொரு முருகன், செல்வம், செல்வக்குமார். மூன்று பேரும் பலியானார்கள். கடைசியாக, 9 நாட்களுக்கு பிறகு டிரைவர் ராஜேந்திரனை சடலமாக மீட்டிருக்கிறார்கள். குவாரி உரிமையாளர்கள் குமார், செல்வராஜ் கைது செய்யப் பட்டுள்ளனர். கல்குவாரி விபத்தில் 4 தொழி லாளர்கள் பலியான சம்பவம் மாவட்டத்தையே உறைய வைத்துள்ளது.

dd

நெல்லையைச் சுற்றியுள்ள அடைமிதிப்பான் குளம், ராமையன்பட்டி, தாழையூத்து, நரிக்குடி, மானூர், நாஞ்சன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வருகிற சுமார் 55க்கும் மேற்பட்ட கல்குவாரிகளில் 3,300க்கும் கூடுதலான தொழி லாளர்கள் பணியிலிருக்கிறார்கள். கேரள மாநிலத் தின் தேவைக்காக நெல்லை பகுதிகளிலிருந்து குவாரி மெட்டீரியல்கள் அதிகமாக சப்ளை செய்யப்படுவதால், இந்த குவாரிகள் தங்கச் சுரங்கங்கள் போன்று பார்க்கப்படுகின்றன. ஆனால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் உயிருக் கான பாதுகாப்பு கேள்விக்குறியாகவே உள்ளது.

கல்குவாரி பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் வகையில் வருவார்கள். இவர்களை, தொழிலாளர் நல உதவி ஆணையர், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தின் அமைப்பிற்குள் கொண்டு வரவேண் டும். ஒரு தொழிலாளியின் கூலியிலிருந்து பிடிக்கப் பட்ட குறிப்பிட்ட சதவிகிதத் தொகையுடன் அதே தொகையை அவர்களின் பெயரால் அந்த நிறு வனத்தில் வசூல் செய்து அமைப்புசாரா தொழி லாளர் நல வாரியத்தில் சேர்க்க வேண்டும். இது போன்று தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்குச் சந்தா இரண்டையும் வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பொறுப்பு நிறுவனத்தினுடை யது. அந்நிறுவனம் இந்த சந்தா தொகையினை வாரியத்திற்கு முறையாகச் செலுத்தி அதற்கான ரிஜிஸ்டர் உள்ளிட்ட ஆவணங்களை மெயின் டெய்ன் செய்ய வேண்டும். ஆய்விற்கு வருகிற தொழிலாளர் நல உதவி ஆணையர் இவற்றைக் கண் காணிக்க வேண்டும். இதுவே தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கான இன்சூரன்ஸாக மாறுகிறது.

இப்படியிருக்கும் பட்சத்தில், தொழிலாளி ஒருவர் காலமானாலோ, பணியின் போது மரணமடைய நேரிட்டாலோ முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் கிடைப்பதோடு, அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திலிருந்தும் நிவாரணத் தொகை அளிக்கப்படுமாம். தொடர்ந்து அந்தத் தொழிலாளியின் குழந்தைகளின் கல்விக்கான செலவையும் வாரியமே ஏற்றுக் கொள்ளும். அவரின் மனைவிக்கான எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான ஓரளவு ஊதியத் தொகையும் கிடைக்குமாம். ஆனால் இது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்படாமல் போனதால், அடைமிதிப்பான் கல்குவாரியில் பலியான தொழிலாளிகளுக்கு வாரியத்திலிருந்து கிடைக்க வேண்டிய அனைத்து நிவாரணங்களும் கிடைக்காமல் போயிருக்கிறது.

Advertisment

dssf

Advertisment

குவாரிகளில் களஆய்வுக்காகச் செல்கிற தொழிலாளர் நல உதவி ஆணையர் அங்கு பணியிலிருக்கும் தொழிலாளர் களுக்கான ஷேம நலன் நிதி முறையாக செலுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்பவர்கள். அது தொடர்பானவற்றை அமைப்பு சாரா வாரிய ஆவணங்களில் ஏற்றி பராமரிக்கிறார்களா என்பதையும் கண்டறிய வேண்டும். குவாரிகளில் மைன்ஸ் விதியை மீறி ஆழமாகத் தோண்டுவதற்கு தொழிலாளர்களை ஈடுபடுத்துகிறார்களா என்பதை ஆய்வுசெய்து, அப்படி முறைகேடு நடந்தால் குவாரியின் உரிமத்தைக் ரத்து செய்யக்கோரி மாவட்டக் கலெக்டருக்கு பரிந்துரை செய்யவும் அதிகாரமுள்ளது.

குவாரிகளின் உரிமம் புதுப்பித்தலுக்காக வரும்போது, முறையாக கள ஆய்வு செய்வதோடு, தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்து மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுக்கு ஆவணங்களை அனுப்ப வேண்டும். அதோடு, தொழிலாளர் நலன் சமூகப் பாதுகாப்புத்துறையின் தடையில்லாச் சான்று, தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்று ஆகியவை இணைக்கப்பட வேண்டும். இத்தனைக்குப் பின்பும், வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார், ஆர்.டி.ஓ., மைன்ஸ் உதவி இயக்குனர் மற்றும் கலெக்டர் உள்ளிட்டோரின் கூட்டுக் கள ஆய்வும் செய்யப்பட வேண்டும் என்கிற விதிமுறைகளும் இருக்கின்றன என்கிறார்கள்.

இது குறித்து, நெல்லை மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களின் உதவி ஆணையர், தொழிலாளர்கள் நலன், சமூகப் பாதுகாப்புத் திட்ட அதிகாரியான குணசேகரனிடம் கேட்டபோது, "முறைப்படி ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அவர்களுக்கான உதவித் தொகை, குடும்பம் மற்றும் பிள்ளைகளின் கல்வித் தொகை, பணி செய்கிற இடத்தில் விபத்தால் மரணம் ஏற்பட்டால் அதற்கான உதவித் தொகை ஆகியவை கிடைக்கும். ஆனால் அந்த குவாரியில் மரணமடைந்த நான்கு பேரும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யவில்லை. அதனால் விபத்திற்கான இன்சூரன்ஸ் நிவாரணங்கள் கிடைக்கவில்லை'' என்று முடித்துக்கொண்டார்.

நெல்லை சமூக நல ஆர்வலரும், வழக்கறிஞருமான பிரம்மா, "சட்டங்கள் போதுமான அளவிற்கு, தேவையான அளவு சரியாகத்தான் இருக்கிறது என்று அம்பேத்கரே சொல்லியிருக்கிறார். ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துகிற அதிகாரிகளின் கவனக்குறைவு தான் இதற்கு காரணம். மேலும் அதிகாரிகளுக்குத் தேவையான கட்டமைப்பு களையும் வழங்க வேண்டும்'' என்கிறார். பாமரத் தொழிலாளர்கள், உயிர்ப் பாதுகாப்பு பற்றி அறிய வாய்ப்பில்லை தான். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான அதிகாரிகள், அவர்களை நாடிச் செல்வதில் தான் அவர்களின் குடும்ப பாதுகாப்பே இருக்கிறது.