Advertisment

ஏலகிரி! அரசு கவனிக்குமா? -சுற்றுலா பயணிகள் ஏக்கம்!

ee

கொடைக்கானல், ஊட்டியில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணி கள் வருகையால் அந்த சின்னஞ்சிறு மலைநகரங் கள் தத்தளிக்கின்றன. இதனால் இ-பாஸ் வாங்கிக்கொண்டுதான் மலைமீது செல்லவேண் டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு போட்டுள் ளது. அதேநேரத்தில், ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் கோடைக்காலத்தை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிகிறார்கள். அப்படி வருபவர்கள் ஏமாந்தே செல்கிறார்கள். அடிப்படை வசதிகளே இங்கு கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

Advertisment

ye

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு நாம் விசிட் அடித்தோம். 14 கொண்டை ஊசி வளைவு கள் வழியாகச் சென்றபோது மலையில் சமூக விரோதிகள் தீ வைத்ததால் அங்கிருந்த மரங்கள் எரிந்துபோய் இருந்தன. மலை உச்சியைச் சென்றடைந்தபோது 110 டிகிரி வெயில் சுட்டெரித் தது. படகு இல்லத்தில் நுழைய நபருக்கு 20 ரூபாய் கட்டணம், உள்ளே ஊஞ்சல், ராட்டினம் என எதில் அமரவேண்டும் என்றாலும் குறைந்தது 30 ரூபாய் வேண்டும். ஏரியில் தண்ணீர்

கொடைக்கானல், ஊட்டியில் கட்டுக்கடங்காத சுற்றுலா பயணி கள் வருகையால் அந்த சின்னஞ்சிறு மலைநகரங் கள் தத்தளிக்கின்றன. இதனால் இ-பாஸ் வாங்கிக்கொண்டுதான் மலைமீது செல்லவேண் டும் என தமிழ்நாடு அரசு உத்தரவு போட்டுள் ளது. அதேநேரத்தில், ஏழைகளின் ஊட்டியான ஏலகிரியில் கோடைக்காலத்தை முன்னிட்டு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து குவிகிறார்கள். அப்படி வருபவர்கள் ஏமாந்தே செல்கிறார்கள். அடிப்படை வசதிகளே இங்கு கிடையாது என குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

Advertisment

ye

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு நாம் விசிட் அடித்தோம். 14 கொண்டை ஊசி வளைவு கள் வழியாகச் சென்றபோது மலையில் சமூக விரோதிகள் தீ வைத்ததால் அங்கிருந்த மரங்கள் எரிந்துபோய் இருந்தன. மலை உச்சியைச் சென்றடைந்தபோது 110 டிகிரி வெயில் சுட்டெரித் தது. படகு இல்லத்தில் நுழைய நபருக்கு 20 ரூபாய் கட்டணம், உள்ளே ஊஞ்சல், ராட்டினம் என எதில் அமரவேண்டும் என்றாலும் குறைந்தது 30 ரூபாய் வேண்டும். ஏரியில் தண்ணீர் குறைந்து விட்டதால் 10 நிமிடம் ரவுண்ட் அடித்துவிட்டு கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள். பூங்காவுக்குள் நுழைந்தால் ஓய்வெடுக்கலாம், மற்றபடி எதுவுமில்லை. இதைத்தாண்டி தனியார் தங்களது இடங்களில் சில விளையாட்டுக்களை வைத்துள்ளார்கள் அவ்வளவே. திரும்பிய இடங்களெல்லாம் சொகுசு விடுதி, விடுதி, விடுதிகள் மட்டுமே.

Advertisment

ஏலகிரியைச் சேர்ந்த கவியரசு, “"படகு குழாம், பார்க் இதைத்தவிர இங்கே பார்க்கறதுக்கு எதுவும் இல்லை. ஊராட்சிகளில் படகு குழாம், பார்க் பராமரிக்க முடியலன்னு தனியாருக்கு டெண்டர் விட்டுருக்காங்க. உள்ளே போக 20 ரூபாய்தான் பீஸ். நீங்கள் வெளியே வரும்போது ஒரு குடும்பத்துக்கு சாதாரணமா 1000 ஆயிரம் ரூபாய் செலவாகியிருக்கும். சில லட்சத்துக்கு டெண்டர் எடுத்து பல கோடி ரூபாய் சம்பாதிக்கறாங்க. பராமரிப்பு சுத்தமாக இல்லை. தனியார் இடத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் வைத்துள்ளார்கள், ஒரு நபருக்கு 500 ரூபாய். ஏழைகளுக்கான சுற்றுலாத்தலம்னு விளம்பரம் செய்றாங்க, இவ்ளோ செலவானால் ஏழை மக்கள் எப்படி வருவாங்க? சுற்றுலாத்துறை ஏலகிரியை புரமோட் செய்துக்கிட்டே இருக்காங்க. சுற்றுலா வருபவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்கூட இங்கில்லை. ஒரே ஒரு பொது பாத்ரூம் மட்டுமே இங்கே உள்ளது, அதுவும் பல வருடங்களாக பூட்டியிருக்கு. ஹோட்டல், லாட்ஜ்களில் வந்து பாத்ரூம் போகவேண்டும்னு கெஞ்சறாங்க. மலையில் சன்செட் பாய்ன்ட், டெலஸ்கோப் மையம் இருக்கு. அதை பராமரிப்ப தில்லை, மக்கள் பார்வைக்குத் திறந்துவிடறதும் இல்லை. தாவரவியல் பூங்கா அமைக்கப்படும், பாராகிளைடிங் அமைக்கப்படும், மலையேற் றம் செய்யப்படும்னு சொன்னாங்க. எதுவும் செய்யல. திருப்பத்தூர் மாவட்டம் பிரிஞ்சு 5 ஆண்டுகள் ஆகிறது. இன்னமும் கோடை விழாவே நடத்தல. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லையென்றால் இப்போது வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வெகுவாகக் குறைந்துவிடும்''’என்றார் எச்சரிக்கை குரலில்.

ஏலகிரி மலையை 1984-ஆம் ஆண்டு சுற்றுலாத்தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மலைமீதுள்ள முத்தனூர், கொட்டையூர், புங்கனூர், அத்தனாவூர், கோட்டூர், பள்ளக்கனியூர், மேட்டுக்கனியூர், நிலாவூர், ராயனேரி, புத்தூர், தாயலூர், மங்களம், மஞ்சக்கெல்லிபுத்தூர் என 14 குக்கிராமங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வண்ணம் ஏற்பாடுகள் செய்யவேண்டும் என முடிவுசெய்தனர். காகித அளவிலேயே அந்த முடிவுகள் இருந்தன. 2005-ஆம் ஆண்டுக்குப் பின்னர்தான் ஏலகிரி மலைமீது பணக்காரர்களின் பார்வை பட்டு ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், அரசியல் பிரபலங்களின் சொகுசு பங்களாக்கள் உருவாகின.

yy

தங்கும் விடுதிகள் உருவானபின் பெங்களுரூ, சித்தூர், சென்னை, வேலூரிலிருந்து ஐ.டி. இளைஞர்கள், கல்லூரி இளசுகள் வருகை, பார்ட்டி, டிஸ்கோ என தூள் பறக்கத்துவங்கியது. இதன் மூலமாகவே பிற மக்களின் பார்வை இதன்மீது விழுந்தது, மக்கள் வருகைதரத் துவங்கினார்கள். ஏலகிரியை மேம்படுத்த வேண்டுமென 2010-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் நிலாவூரில் 81 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைக்க இடம் தேர்வாகி 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆட்சி மாற்றமாகி அ.தி.மு.க. பதவிக்கு வந்ததும் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. திருப்பத்தூர் புதிய மாவட்டமாக உருவானபின் 2020 அக்டோபரில் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சராக இருந்த வீரமணி, தாவரவியல் பூங்கா, உள்விளையாட்டு அரங்கம், அரசு அலுவலர்களுக்கான பயிற்சி மையம் அமைக்கப்படும் என அறிவித்தார். எந்த முன் னேற்றமும் இல்லை. 2023 ஆகஸ்டில் சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் அறிவித்த படகு இல்லம் மேம்படுத்துதல், தாவரவியல் பூங்கா அறிவிப்பும் அப்படியே உள்ளது.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஏலகிரி, ஏற்காடு, கல்வராயன்மலை போன்ற மலைப்பகுதிகளை சுற்றுலாவுக்கு தயார்படுத்தினால் ஊட்டி, கொடைக்கானல் சென்று மக்கள் குவிவது தடுக்கப்படும். இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருவதன் மூலம் பொருளாதாரம் உயரும், வாழ்க்கைத் தரம் மேம்படும். ஊட்டி, கொடைக் கானல் பாதுகாக்கப்படும் என்கிறார்கள். நடவடிக்கை எடுக்குமா அரசு?

nkn150524
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe