Advertisment

த.வெ.க.வுடன் கூட்டணி? எடப்பாடிக்கு சசி செக்?

sasi

"டெல்டா, தென் மாவட்டங்களில் முக்குலத்து சமூக வாக்குகள் சுமார் 60 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிகளைத் தீர்மானிக்கின்றன. குறைந்தது 30 சட்டமன்றத் தொகுதிகளிலாவது போட்டியிடுவோம்'' என அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச் சித்திரங்களுடன் அ.தி.மு.க. வின் கட்சிக்கொடியான கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் கொடியினை வெளியிட்டு தனது நீண்டநாள் எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா.

Advertisment

ஜெ. மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிய சசிகலாவுக்கு அன்றிலிருந்து இறங்குமுகம்தான். ஒருகட்டத்தில் கட்சியைவிட்டே நீக்கப்பட்டார். அமைதியாக இருந்தவர் இதுதான் சரியான தருணமென அரசியல் களத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

Advertisment

"அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி பக்கமிருந்து எந்தவொரு சாதகமான சிக்னலும் வரவில்லை. செங்கோட்டையன் உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளுக்கு அங்கு மரியாதை இல்லை என்பதால் அவர் த.வெ.க.வில் சேர்ந்துவிட்டார். ஒன்றிய அரசு தன்னை காபந்து செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையிலிருந்த ஓ.பி.எஸ்.ஸுக்கும் அ.தி.மு.க. கதவு அடைக்கப

"டெல்டா, தென் மாவட்டங்களில் முக்குலத்து சமூக வாக்குகள் சுமார் 60 சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிகளைத் தீர்மானிக்கின்றன. குறைந்தது 30 சட்டமன்றத் தொகுதிகளிலாவது போட்டியிடுவோம்'' என அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச் சித்திரங்களுடன் அ.தி.மு.க. வின் கட்சிக்கொடியான கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணத்தில் கொடியினை வெளியிட்டு தனது நீண்டநாள் எண்ணத்தினை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா.

Advertisment

ஜெ. மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கிய சசிகலாவுக்கு அன்றிலிருந்து இறங்குமுகம்தான். ஒருகட்டத்தில் கட்சியைவிட்டே நீக்கப்பட்டார். அமைதியாக இருந்தவர் இதுதான் சரியான தருணமென அரசியல் களத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். 

Advertisment

"அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிச்சாமி பக்கமிருந்து எந்தவொரு சாதகமான சிக்னலும் வரவில்லை. செங்கோட்டையன் உள்ளிட்ட முதன்மை நிர்வாகிகளுக்கு அங்கு மரியாதை இல்லை என்பதால் அவர் த.வெ.க.வில் சேர்ந்துவிட்டார். ஒன்றிய அரசு தன்னை காபந்து செய்துகொள்ளும் என்ற நம்பிக்கையிலிருந்த ஓ.பி.எஸ்.ஸுக்கும் அ.தி.மு.க. கதவு அடைக்கப் பட்டது. கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பது எடப்பாடி பழனிச்சாமிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் தானே ஜெயலலிதாபோல் சர்வாதிகாரப் போக்கை கடைப்பிடிப்பதை கட்சியிலுள்ள எவரும் ரசிக்கவில்லை. 

சசிகலா அ.தி.மு.க.வில் இருக்கும்வரை தன்னை முக்குலத்தோர்களின் பிரதிநிதியாகத்தான் இருந்தார். அவர் அமைதி காத்தபொழுது ஓ.பி.எஸ். ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாகக் களமிறங்கினார். அவரை எங்களின் பிரதிநிதியாக பார்த்தோம். வாக்குகள் அளித்து எங்களது பலத்தைக் காண்பித்தோம். வெல்ல வில்லை என்றாலும் எங்களின் வாக்குகள் பலம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இப்பொழுது சசிகலாவே புதிய கட்சியுடன் களமிறங்குகின் றார் என்றால் எங்களது சமூக மக்களின் பிரதிநிதியாக  அவரை வரவேற்போம். இருப் பினும் தம்பி மகனுக்காக கட்சியை துவக்குகின் றார் என்பதுதான் சற்று நெளியவைக்கின்றது'' என்கிறார் கீழத்தூவலைச் சேர்ந்த முனியசாமி.

"கடந்த முறை ஜெ. பிறந்தநாளின்போது என்னுடைய நலம்விரும்பிகளை உசிலம்பட்டி யில் சந்தித்தேன். இந்த முறை கட்சிக்கான அறிமுகம். கொடிக்கான அறிமுகம். ஆகையால் நம்முடைய பசும்பொன்னில் கூட்டத்தினை வைத்துக்கொள்வோம். தேவர் திருமகனாரும் நம்மை ஆசிர்வதிப்பார். ஆகையால் 20,000 நபர்களாவது கட்சியின் கொடி அறிமுகக் கூட் டத்திற்கு வரவேண்டும்" என சசிகலா ஆணை யிட, கமுதியின் முன்னாள் பஞ்சாயத்து தலைவ ரான ராமகிருஷ்ணன் கூட்டத்திற்கான வேலை களை ஆரம்பித்தார். இடையில் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதி எக்ஸ் எம்.எல்.ஏ. சந்திரபிரபா, தூரி மாடசாமி, தென்காசி பொன்னுத்தாய், திவாகரனுக்கு நெருக்கமான சரவணன் உள்ளிட்டோர் இணைந்துகொள்ள, மகளிருக்கான நலத்திட்டங்களை வழங்கவுள் ளோம் என கூட்டத்தினை திரட்டும் வேலை களில் ஈடுபட்டனர். முன்னாள் காவல் அதி காரியான வெள்ளைத்துரையும் ஒருங்கிணைப் பில் கலந்துகொண்டார். 

சுமார் 15,000 மக்கள் கமுதி கோட்டை மேடு மாநாட்டுத் திடலை ஆக்ரமித்திருக்க, 34 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்ட நிலையில் மேடைக்கு வந்தார் சசிகலா. இடையில் திவாகரன் மேடையேற முயற்சிக்க, "உங்களுக்கு மேடையில் இடமில்லை. முதல் வரிசையில் அமருங்கள்' என கீழே அனுப்பிவிட்டார் ஜெய லலிதாவின் பி.எஸ்.ஓ.வாக இருந்த கருப்பசாமி.

மகளிருக்கான நலத்திட்டங்களை வழங்கிய சசிகலா, "சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட சூழலில் அம்மா அமைத்த அரசு கலைக்கப்பட்டுவிடக்கூடாது எனக் கருதி அந்த ஆளை (எடப்பாடி பழனிசாமியை, பெயர் சொல்ல விரும்பவில்லை) முதல்வராக்க அனைவரது சம்மதத்தையும் வாங்கினேன். அவரைப் பற்றி அப்போது எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் சிறையிலிருந்தபோது அவர் எனக்குப் பல இடையூறுகளைச் செய்தார். என் கணவர் இறந்தபோதுகூட அவருக்கான காரியங் களைச் செய்யக்கூட அனுமதிக்காமல் இடையூறு செய்தார். 9 ஆண்டுகாலமாக இந்த உண்மைகளை எல்லாம் மனதில்போட்டு மறைத்து வைத்திருந் தேன். ஆனால் கட்சியும், கட்சித்தொண்டர்களின் நிலையும் சரிந்து கீழே போய்க்கொண்டிருக்கும் நிலையில், உண்மைகளை எவ்வளவு காலம் மறைக்கமுடியும். இந்தச் சூழலில்தான் சட்டமோ, அரசோ கொடுக்குற தீர்ப்பைவிட மக்கள் கொடுக்கும் தீர்ப்பே முக்கியமானது எனக் கருதி புதிய களம் காணப்போகிறேன். அதற்காக புதிய கட்சியை ஆரம்பிக்கிறேன். ஏழை, எளிய சாமானியர்களின் கட்சியாகவும் திராவிடக் கட்சியாகவும் இது இருக்கும். அதன் கொடியை இங்கு அறிமுகம் செய்கிறேன்'' என்றார் சசிகலா.

புதிய கட்சியின் பெயரை அறிவிக்காமலேயே சென்ற நிலையில், "234 சட்டமன்றத் தொகுதிகளில் சுமார் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முக் குலத்து மக்களின் வாக்கு வங்கி அதிகம். இதுதவிர ஜெயலலிதாவின் உண்மையான ஆதரவாளர்களும், உண்மையான அ.தி.மு.க.வினரும் எங்களை, எங்களின் தலைமையை நம்புவார்கள். டெல்டா, தென்மாவட்டங்களிலுள்ள 30 தொகுதிகளிலாவது போட்டியிடுவோம். அனேகமாக செங்கோட்டை யன் மூலமாக த.வெ.க. கூட்டணியில் இந்த கட்சி வரலாம். அதுதான் சசிகலாவின் எண்ணமும்கூட. இது முக்குலத்து வாக்குகள் நமக்கு வந்துவிடுமென டி.டி.வி. தினகரனை கூட்டணியில் இணைத்த எடப்பாடி பழனிச்சாமிக்கு செக்'' என்றார் ஏனாதியைச் சேர்ந்த ராஜகோபால்.   

இந்நிலையில், சசிகலா கணவர் நடராஜனின் மூத்த அண்ணன் சாமிநாதன் செவ்வாய்கிழமை காலை காலமானார். இதையறிந்த சசிகலா, கடைசி நேரம் என்பதால் கூட்டத்தை ரத்து செய்தால் சரியாகயிருக்காது என பசும்பொன் கூட்டத்தில் கலந்துகொண்டார். இதனால் அப்செட் மூடிலேயே இருந்தார் சசி. 

இதேவேளையில், "திடீர் இட்லி, திடீர் சாம்பார்போல புதிய கட்சிகள்,  பதர்களால் பாதிப்பில்லை''’என சசிகலாவை மறைமுகமாக சாடினார் டி.டி.வி.தினகரன். 

சபாஷ் சரியான போட்டி!

-வேகா
படங்கள்: விவேக்

nkn280226
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe