Advertisment

ராங்கால் ஈஷாவில் நடந்த கூட்டணி ப்ளான்! எடப்பாடியை அலற வைத்த வேலுமணி! பெரியார்! சுரண்டிப் பார்க்கும் சிறியார்!

ss

"ஹலோ தலைவரே, ஒருவழியாக சட்டமன்றக் கூட்டத் தொடர், பரபரப்பான காட்சிகளோடு நிறைவடைந்திருக்கிறது.''”

"ஆமாம்பா, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீப்பொறி பறந்ததே?''”

"முதல்வருக்கும் எடப்பாடிக்கும் இடையில் நடந்த வார்த்தைப் போரில் தீப்பொறி பறந்ததே?''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி கூடியது. 11ஆம் தேதி முதல்வரின் பதிலுரையுடன் அது நிறைவு பெற்றிருக்கிறது. கூட்டத்தொடரின் முதல் நான்கு நாட்கள்வரை அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவ காரத்தை கையில் எடுத்த அ.தி.மு.க.வினர்’"யார் அந்த சார்?'’ என்ற பேட்ஜை சட்டையில் அணிந்துகொண்டு பரபரப்பைக் கிளப்பினார் கள். 5ஆம் நாள் இந்த பேட்ஜை அவர்கள் அணியவில்லை. காரணம், அண்ணா நகர் சிறுமிக்கு எதிராக நடந்த பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டதால் அவர்கள் சங்கடத்தில் இருந்தனர். ஆனால் தி.மு.க. உறுப்பினர்களோ,’"இவர்தான் அந்த சார்'’ என்று, கைது செய்யப்பட்ட சுதாகரின் புகைப்படத்துடன் கூடிய பதாகையை ஏந்திய படி, சபைக்கு வந்து அவர்களுக்கு ஷாக் கொடுத்தனர். தி.மு.க. தரப்பு கொடுத்த இந்த பதிலடியால், அ.தி.மு.க. தரப்பு திகைத்துப் போனது. இந்த சம்பவம் சபையில் சுவாரஸ்யத் தை ஏற்படுத்தியது. இதன்பின் பொள்ளாச்சி விவகாரம் குறித்து, எடப்பாடியுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.''”

"அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதி ரடி உத்தவுகளைப் பிறப்பித்திருக்கிறதே?''”

"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் சென்னை சிட்டி கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்

"ஹலோ தலைவரே, ஒருவழியாக சட்டமன்றக் கூட்டத் தொடர், பரபரப்பான காட்சிகளோடு நிறைவடைந்திருக்கிறது.''”

"ஆமாம்பா, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீப்பொறி பறந்ததே?''”

"முதல்வருக்கும் எடப்பாடிக்கும் இடையில் நடந்த வார்த்தைப் போரில் தீப்பொறி பறந்ததே?''”

"உண்மைதாங்க தலைவரே, இந்த ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டம் கடந்த 6ஆம் தேதி கூடியது. 11ஆம் தேதி முதல்வரின் பதிலுரையுடன் அது நிறைவு பெற்றிருக்கிறது. கூட்டத்தொடரின் முதல் நான்கு நாட்கள்வரை அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவ காரத்தை கையில் எடுத்த அ.தி.மு.க.வினர்’"யார் அந்த சார்?'’ என்ற பேட்ஜை சட்டையில் அணிந்துகொண்டு பரபரப்பைக் கிளப்பினார் கள். 5ஆம் நாள் இந்த பேட்ஜை அவர்கள் அணியவில்லை. காரணம், அண்ணா நகர் சிறுமிக்கு எதிராக நடந்த பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் அ.தி.மு.க. வட்டச் செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டதால் அவர்கள் சங்கடத்தில் இருந்தனர். ஆனால் தி.மு.க. உறுப்பினர்களோ,’"இவர்தான் அந்த சார்'’ என்று, கைது செய்யப்பட்ட சுதாகரின் புகைப்படத்துடன் கூடிய பதாகையை ஏந்திய படி, சபைக்கு வந்து அவர்களுக்கு ஷாக் கொடுத்தனர். தி.மு.க. தரப்பு கொடுத்த இந்த பதிலடியால், அ.தி.மு.க. தரப்பு திகைத்துப் போனது. இந்த சம்பவம் சபையில் சுவாரஸ்யத் தை ஏற்படுத்தியது. இதன்பின் பொள்ளாச்சி விவகாரம் குறித்து, எடப்பாடியுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய வார்த்தைப் போர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.''”

"அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அதி ரடி உத்தவுகளைப் பிறப்பித்திருக்கிறதே?''”

"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் எஃப்.ஐ.ஆர். கசிந்த விவகாரத்தில் சென்னை சிட்டி கமிஷனர் அருண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இது ஐ.பி.எஸ். மற்றும் ஆட்சியாளர் கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. அதேசமயம், எஃப்.ஐ.ஆர். கசிந்தது காவல்துறை தரப்பிலிருந்து அல்ல; ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய தகவல் மையம் தரப்பிலிருந்து என்பதை ஆதாரப்பூர்வமாக திமுக அரசு வெளிப்படுத்தியது. இருப்பினும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்துள்ளது தி.மு.க. அரசு. அதேசமயம், உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கோ, பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடு வழங்குவதற் கோ அது மறுப்பு தெரிவிக்கவில்லை. காரணம், இதுகுறித்த ஆலோசனையின்போது கமிஷனர் மீதான நடவடிக்கைக்கு மட்டும் மேல்முறையீடு செய்வோம்.மற்றவற்றில் நமக்கு முரண் பாடு இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லிவிட்டாராம்.''’

"அ.தி.மு.க.வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நடத்த, பா.ஜ.க. தங்கள் பிரதிநிதியை டெல்லி அனுப்பி வைத்திருக் கிறதே?''”

Advertisment

ss

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க.வைத் தங்கள் கூட்டணியில் சேர்த்தே ஆகவேண்டும் என்று தீவிரமாகக் களத்தில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க.வின் தேசியத் தலைமை. இதற்காக ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயலை அது தமிழகத்திற்கு அனுப்பியிருக்கிறது. முன்னதாக, பா.ஜ.க. தரப்பு இது தொடர்பாக ஈஷா மைய ஜக்கியைத் தொடர்புகொண்ட போது, அ.தி.மு.க. மாஜி மந்திரி எஸ்.பி.வேலுமணியிடம் கலந்துபேசலாம் என்று அவர் சொல்லியிருக்கிறார். அதன்படி வேலுமணியிடம் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. அந்தக் கூட்டத்தை எடப்பாடிக்கு எதிரான சதிக்கூட்டமான மாற்றிய வேலுமணி, ’அதிமுகவில் இருக்கும் சீனியர்கள் எல்லோரும் பாஜக கூட்டணியை விரும்புகிறார்கள். எடப்படி மட்டும்தான் வீணாக முரண்டுபிடிக்கிறார். என்று சொல்லியிருக்கிறார்.''”

"ஓ...''”

vv

Advertisment

"இப்போது பியூஸ்கோயல் எடப்பாடியுடன் பேச்சுவார்த்தையை ரகசியமாக நடத்தி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணிச் செய்தியோடுதான் நான் டெல்லிக்குத் திரும்புவேன் என்று சபதம் செய்த அவர், இதற்காக பொங்கல் வரை 4 நாட்கள் தமிழகத்தில் தங்குகிறாராம். இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி குறித்து ஆலோசிக்க, அ.தி.மு.க. மா.செ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்துகொண்ட மா.செ.க்கள் பலரும் ஈரோடு கிழக்கில் நாமும் ஒரு கை பார்த்துவிடவேண்டும் என்று வலியுறுத்தினார்களாம். இதனால் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்கிற முடிவிற்கு எடப்பாடியும் வந்தாராம். அந்த நேரத்தில் பா.ஜ.க. தரப்பில் பியூஸ்கோயலிடம் இருந்து அந்த அதிரடி போன் வர, எடப்பாடி அலறிப்போய், இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடவில்லை என்று அறிவித்தாராம் எடப்பாடி. இப்படி அ.தி.மு.க.வின் இடைத்தேர்தல் முடிவை அதிரடியாக மாற்றிய பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணி குறித்த வெற்றிச் செய்தியையும் விரைவில் வெளியிடலாம் என்கிறார்கள் கமலாலயத் தரப்பினர்.''”

"சரிப்பா, தந்தை பெரியாரை மட்டமான புத்தியோடு கீழ்த்தரமாக விமர்சித்த நாம் தமிழர் சீமானை... விஜய்யும், எடப்பாடியும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லையே?''”

ss

"தந்தை பெரியாரை, தமிழினமே மாபெரும் புரட்சி யாளராகக் கொண்டாடி வரு கிறது. அப்படிப்பட்ட பெரியா ரைப் பற்றி வக்கிர மனப் பான்மையோடு கீழ்த்தரமாக விமர்சித்த சீமானுக்கு எதிராக, தமிழகமே கொந்தளித்து வருகிறது. இந்த நிலையில் தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் கடுமையாக அவரைக் கண்டித்துவருகின் றன. . பல ஊர்களிலும் அவர் மீது அவதூறு வழக்குகளும் பதிவாகியபடியே இருக்கின்றன. எனினும் பெரியாரை கொள் கைத் தலைவர் என்று அறிவித்த த.வெ.க. தலைவர் நடிகர் விஜய், இது குறித்து இதுவரை கண் டிக்கவில்லை. அதேபோல் பெரியாரையும் முன்னோடியா கக்கொண்டிருக்கும் அ.தி.மு.க. வின் சார்பில், அதன் தலைவர் எடப்பாடியும் எந்த கண்டன அறிக்கையும் தராமல், கண்டும் காணாததுபோல் இருந்தார். பா.ஜ.க. மீதான பயத்தில்தான் அவர் வாய் திறக்கவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது. இதற்கிடையே அ.தி.மு.க.வின் சீனியர்கள் எடுத்துச்சொன்ன நிலையில், பத்திரிகையாளர்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பியபோது, ’அவர் அவதூறாகப் பேசுவதை ஏற்கமுடியாது’ என்று பட் டும் படாமலும் வாய் திறந் திருக்கிறார் எடப்பாடி.''”

"மகாராஷ்டிர கவர்னர் இல.கணேசனின் சகோதரர் மறைந்திருக் கிறாரே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க.வின் மூத்த தலை வர்களில் ஒருவரும், மகாராஷ்ட்ரா மாநில கவர்னருமான இல.கணேச னின் சகோதரர் கோபா லன், முதுமை காரணமாக காலமானார். தி.நகரில் உள்ள அவர் வீட்டிற்கே சென்று முதல்வர் ஸ்டா லின் அஞ்சலி செலுத்தி னார். அப்போது, இல.கணேசனுக்கு ஆறுதல் சொல்லிவிட்டுக் கிளம்பிய அவருக்கு, கராத்தே தியாகராஜன் வணக்கம் வைத்தார். அவரை அருகில் அழைத்த ஸ்டாலின், "என்னாச்சு தியாகு? ரொம்பவும் இளைச்சிப் போயிருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சே?'’என்று அவருடன் கைகுலுக்கி நலம் விசாரிக்க... "ஆமாண்ணே..… ஹார்ட் ஆப்ரேசனுக்கு பிறகு சரியான உணவுக் கட்டுப்பாடு அதான்''’ என்றார் தியாகு. இதை அங்கிருந்த பா.ஜ.க.வினர் வியப்புடன் பார்த்திருக்கிறார் கள். 2019-க்கு பிறகு, இப்போதுதான் தியாகுவைப் பார்த்திருக்கிறார் ஸ்டாலின்.’அவர் பா.ஜ.க.வில் இருந்தாலும், அவரது அரசியலை தலைவர் மிகவும் ரசிப்பார்’என்கிறார்கள் அவருடன் வந்த உடன்பிறப்புகள்.''”

"மின்வாரியத்தில் சர்ச்சைகள் சுழன்றடிக்கிதே?''”

"தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒழுங்கு முறை ஆணை யத் தலைவர் பதவி கடந்த 1 வருடமாகக் காலியாக இருக்கிறது. தலைவர் பதவிக்கான நியமனம் தொடர்பாக மூன்று முறை விளம்பரம் கொடுக் கப்பட்டது. ஆனால், முடிவு கிட்டவில்லை. காரணம், வாரியத்தின் உயர் பொறுப்பில் இருந்த மணிவண்ணன் எனும் அதிகாரியை இந்தப் பதவியில் நியமிக்க வேண்டும் என்பதற் காக, அவர் ஓய்வு பெறும் நாளுக்காகக் காத்திருந் தனர். அதனாலேயே, இழுபறியில் இருந்தது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் ஓய்வு பெற்றார். அவரை நியமிக்க முடிவான போது, அது குறித்து நக்கீரனில் செய்தி வெளியானது. இதனால் அவரை நியமிப்பதில் சர்ச்சை உருவாக, அந்த நியமனம் நடக்கவில்லை. இந்த நிலையில், இப்போது அவ ரது நியமனம் குறித்த கோப்பில் முதல்வரிடம் கையெழுத்து பெறப் பட்டிருக்கிறது. அதே வேகத்தில் மணிவண்ணன் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பொறுப்பையும் ஏற்றுக்கொண் டார். இந்த நிலையில், ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் நியமிக்கக் கூடாது என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில், எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஏற்கனவே தொடர்ந்த வழக்கு, நிலுவையில் இருக்கும்போது இந்த நியமனம் எப்படி நடந்தது? என்றும் மீண்டும் மின்வாரியத்தில் சர்ச்சை உருவாகியிருக்கிறது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழக அரசு துறைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகா னந்தம், கடந்த 10ஆம் தேதி அதிரடி ஆய்வுகளை நடத்தி னார். அதில் நிதித்துறை, பொதுத்துறை உள்ளிட்ட துறை களைச் சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது, அனைத்து துறைகளிலும் அலு வலர்களின் பதவி உயர்வில் இடஒதுக்கீடு முறையை அமல் படுத்த வேண்டும் என்று அவர் அழுத்தமாகச் சொன்னதுடன், அதில் அக்கறை காட்டாத கூடு தல் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர்களைக் கடிந்து கொண்டிருக்கிறார். மேலும், இட ஒதுக்கீட்டினை முறையாக அமல்படுத்தவேண்டும் என்றும் அவர் கறாராக உத்தரவிட்டிருக் கிறாராம்.''”

nkn150125
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe