"ஹலோ தலைவரே, முதலீடுகளை ஈர்க்க ஒருவார காலம் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின், ஓய்வுகூட எடுக்காமல்  பரபரப்பாக தன் வேலைகளைத் தொடங்கிவிட்டார்.''”

"ஆமாம்பா, கொஞ்சம்கூட ஓய்வெடுக் கலையே?''”

Advertisment

rang1

"உண்மைதாங்க தலைவரே, வெளிநாட்டி லிருந்து 8ஆம் தேதி திரும்பிய கையோடு தி.மு.க. மா.செ.க்கள் கூட்டத்தைக் காணொலியில் கூட்டி, சட்டமன்றத் தேர்தல் குறித்தும், செப்டம்பர் 17ஆம் தேதி கரூரில் நடக்கும் தி.மு.க.வின் முப்பெரும் விழா குறித்தும் விவாதிக்கத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின். மா.செ.க்கள் கூட்டத்தில் பேசிய அவர், ’வெளிநாட்டுப் பயண விபரங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, "முப்பெரும் விழாவில் தொண் டர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன். விழா சிறப்புற நடக்க அத்தனை பேரும் ஒத்துழைக்க வேண்டும். நமது அரசின் திட்டங்களால் மக்களிடையே  நமக்கு ஆதரவு பெருகியிருக்கிறது. அது சிதறிவிடாமல், தீவிரமாகக் களப்பணியாற்றவேண்டும். நமது இலக்கு 2026-ல் மீண்டும் நமது திராவிட மாடல் ஆட்சி அமையவேண்டும் என்பதாக இருக்கவேண்டும்'’ என்றெல்லாம் உணர்ச்சிப்பெருக்கோடு வலியுறுத்தினார். மேலும் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் குறித்தும் ஆர்வமாக விசாரித்து அறிந் திருக்கிறார் ஸ்டாலின்.''” 

"தி.மு.க. கூட்டணியை காங்கிரஸ் உடைக்க நினைக்கிறதா? என்ற விவாதம் காங்கிரசுக்குள்ளேயே எழுந்திருக்கிறதே?''”

Advertisment

"கடந்த 7ஆம் தேதி, வாக்குத் திருட்டுக்கு எதிராக போராடிவரும் ராகுல்காந்தியின் குரலை வலிமைப்படுத்தும் விதமாக நெல்லையில் மாநாடு நடத்தியது தமிழக காங்கிரஸ். 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை திரட்டியிருந்தனர். செல்வப் பெருந்தகை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ப.சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட தமிழகத் தலைவர்கள், கட்சியின் மேலிடப் பொறுப் பாளர் கிரிஸ் ஜோடங்கர், ராகுல்காந்தியின் நண்பர் பவன்கரே, உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். கிரிஸ் ஜோடங்கர் மற்றும் பவன்கரே ஆகியோர் ஆங்கிலத்தில் பேசியதை சொர்ணா சேதுராமன் மொழிபெயர்த்தார். ராகுல்காந்தியின் மனசாட்சி எனப்படும் கிரிஸ் ஜோடங்கர் பேசும்போது, "இந்தமுறை 125 தொகுதிகளை அடையாளம் கண்டு, அவற்றைக் குறிவைத்துத் தேர்தல் வேலை யை ஆரம்பியுங்கள்' என்று கட்சியினருக்கே கிறுகிறுப்பை ஏற்படுத்தினார். தி.மு.க.வில் காங்கிரசுக்கு 25 சீட்டுக்கு கூடுதலாக ஒரு சீட்கூட கொடுக்க இயலாது என்கிற கணக்கு ஏற்கனவே போடப்பட்டு விட்ட நிலையில்... இவரது பேச்சு உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அதேபோல, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமாரோ,  "காங்கிரசின் ஆதரவு இல்லாமல் எந்தக் கொம்பனும் ஆட்சி அமைக்க முடியாது'’என்று சூளுரைத்தார. இதையெல்லாம் பார்த்த கட்சியின் சீனியர்கள், "தி.மு.க. கூட்டணியை உடைக்க முடிவெடுத்துவிட்டார்களா?' என்று அங்கேயே தங்களுக்குள் விவாதிக்கத் தொடங்கி விட் டார்கள்.''”

"நடிகர் விஜய் தரப்பு, தங்களுக்கு காவல்துறையின் கெடுபிடி அதிகமாக இருப்பதாகப் புலம்புகிறதே?''”

"திருச்சியில் த.வெ.க. தலைவரான நடிகர் விஜய் தரப்பு கேட்டுக்கொண்டபடி 13ஆம் தேதி, அவர் தேர்தல் பிரச்சாரம் செய்ய மாநகர காவல் துறையினர் அனுமதியளித்திருக்கிறார்கள். அப்போது 23 நிபந்தனைகளை அவர்களுக்கு விதித்திருக்கிறார் கள்.  குறிப்பாக, ஒவ்வொரு இடத் திலும் டிராபிக்கை சமாளிக்க விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேசவேண்டும் என்றும், சில இடங்களில் உரையாற்றிவிட்டு பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்குச் சென்றுவிட வேண்டும் என்றும், பேசும் இடங் களைத் தவிர மற்ற இடங்களில் அவர் வாகனத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் வரையறுத்திருக்கும் காவல்துறை யினர், விஜய் வாகனத்தின் பின்னால் அதிக அளவில் வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுத்திருக்கிறார்கள். அதேபோல் மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் போன்ற வற்றை அக்கட்சியினரே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்றும். குழந்தைகள், கர்ப்பிணி கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோரை கூட்டத்திற்கு அழைத்து வரக்கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த விஜய் தரப்பு, இவ்வளவு கெடுபிடி தேவையா? என்று புலம்புகிறது.''”

Advertisment

"அன்புமணியை செயல் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் நீக்கி அதிரடி காட்டியிருக்காரே ராமதாஸ்?''

rang2

"ஆமாங்க தலைவரே, அவரோட இந்த கோபத்துக்கு அன்புமணியோட பொறுப்பற்ற செயல்தான் காரணமாம். அன்புமணி மீது ராமதாஸ் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு கடந்த 10 நாட்களாக எந்த பதிலும் சொல்லாம உதாசீனப்படுத்தியிருக்காரு அன்புமணி. இதனால நொந்துபோன ராமதாஸ், "கட்சி நிறுவனர் நான்தான். அதனால என்னை மதிச்சு குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லியிருக்கணும். கோர்ட்டுனா ஒரு புகாருக்கு கவுன்ட்டர் பைல் பண்ணுவாங்கள்ல, அது மாதிரியாவது ஏதோ ஒரு பதிலையாவது அவர் தாக்கல் பண்ணியிருக்கணும். எந்த ரெஸ்பான்ஸும் இல்லை. ஆனால் என்னை  ஒரு மனிதனாகக் கூட மதிக்காமல் உதாசீனப் படுத்தியதால்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன். அதுமட்டுமில்ல, அன்புமணியை மத்திய மந்திரியாக்கியதும் என்னை சந்தித்த அன்புமணி, "கட்சிக்காக நான் மரத்தை வெட்டினேன்... உயிரை விட்டேன்னு கட்சிக்காரங்க யார் வந்தாலும், நான் எதுவும் செய்யமாட்டேன்'னு சொன்னான். எம்.எல்.ஏ., எம்.பி.ன்னு யாரு வந்தாலும் அன்புமணி அவங்கள பார்க்கமாட்டான். இப்ப இந்தப் பிரச்சினை வந்தபிறகு மூணு மாசமாத்தான் எல்லாரையும் பார்க்கிறான். இதெல்லாமே ரொம்பநாளா என் மனசுல உறுத்துச்சு. ரொம்ப பொய் பேசுவான். அண்டப்புளுகு, ஆகாசப்புளுகுன்னு சொல்வாங்க. இனிமே அன்புமணி புளுகுன்னு ஒன்றை மத்திய அரசு சட்டமாகக் கொண்டுவரணும்'னு கடுப்பாகி... தனக்கு நெருங்கிய ஆட்களிடம் ராமதாஸ் புலம்பியிருக்கார். அதோட, அன்புமணிய கட்சிய விட்டு நீக்கிட வேண்டாம், அப்படி  நீக்கினால் என்னாலதான் நீக்கிட்டீங்கன்னு சொல்வாங்கன்னு ராமதாஸோட இரண்டாவது மனைவி சுசீலா கெஞ்சுனாங்களாம். இது சம்பந்தமா பேசக்கூடாதுன்னே கடந்த மூணு நாளா ராமதாஸோட இரண்டாவது மனைவியின் போன்காலை ராமதாஸ் அட்டெண்ட் பண்ணாம தவிர்த்து வந்தாராம். இப்ப கட்சி அங்கீகாரத்தை இழந்திருக்கிறது. அதனால சின்னத்துக்காக அன்புமணி கோர முடியாது. இனிமேல் பா.ம.க.ன்னாலே நான்தான்னும் ராமதாஸ் சொல்லியிருக்காரு''

"இந்த விவகாரம் தொடர்பா ராமதாஸ் நீதிமன்றத்துக்கும் போயிருக்காராமே?''

"ஆமாம் தலைவரே, ராமதாஸ் தன் மீது நடவடிக்கை எடுத்தபிறகு, நீதிமன்றத்தையும் தேர்தல் ஆணையத்தையும் அணுகி, தனது தலைமையில் இருப்பதுதான் உண்மையான பா.ம.க.ன்னு நிரூபிக்கலாம்னு அன்புமணி காத்திருந்தா ராம். இத தெரிஞ்சுக்கிட்ட ராமதாஸ், சைலண்டா கடந்த 10ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்த அவர், பா.ம.க.வின் கட்சிப் பெயருக்கும், சின்னத்துக்கும் உரிமை கோரி இந்த நீதிமன்றத்தை அன்புமணி அணுகினால், எங்களின் கருத்துக்களையும் கேட்க வேண்டும். எங்கள் கருத்துக்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாதுன்னு அதில் கோரியிருக்கிறார். ராமதாஸ் நீதிமன்றத்தில் வைத்திருக்கும் செக், அன்புமணி தரப்புக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி யிருக்குதாம்.''

’"பா.ஜ.க.வின் மாநில மாஜி  நிர்வாகி மீது அக்கட்சியின் தேசியத் தலைமை கடும் கோபத்தில் இருக்கிறது என்கிறார்களே?''’

"பா.ஜ.க. மாநில மாஜி நிர்வாகி, மிகப்பெரிய அளவில் ரியல் எஸ்டேட் தொழிலைச் செய்து வருவதை அறிந்து பா.ஜ.க.வினரே வாய்பிளக்கிறார்கள். கோவையில் ஒரு கோழி கம்பெனி பெயரில். ஜி ஸ்கொயர் போல் ரியல் எஸ்டேட் தொழிலை பக்காவாகச் செய்துவருகிறாராம். ஜக்கி வாசுதேவின் ஆசிரமம் இருக்கும் இக்கரை போளுவாம்பட்டியில் அவர் 20 ஏக்கர் நிலத்தை அண்மை யில் வாங்கியிருக்கிறார். இதன் மதிப்பு 80 கோடி ரூபாயாம். ஏற்னவே கோவையில் இருந்து கேரளா செல்லும் வழியில் நிலாம்பூரில் 8 ஏக்கர் நிலத்தை வாங்கினார். இதுபோல் பல இடங்களிலும் நிலங்களை வாங்கிக் குவித்து, அவரும் அவர் மனைவி அகிலாவும் ரியல் எஸ்டேட் தொழிலில் பெரும் முதலீட்டைச் செய்திருக்கிறார்களாம். இன்னொரு பக்கம் சவுதி அரேபியாவில் பெருமளவில் நிதியைத் திரட்டி வருகிறாராம் அந்த மாஜி. அண்மை யில் சந்திரபாபு நாயுடு மகனைச் சந்தித்த அவர், "எனக்கு பா.ஜ.க. மிகப்பெரிய துரோகத்தைச் செய்திருக்கிறது. அதனால் புதுக்கட்சி ஒன்றைத் தொடங்கி அதற்கு பதிலடி கொடுப்பேன்' என்று புலம்ப, அதை அவர் அப்படியே ஆடிட்டர் குருமூர்த்தியிடம் ஒப்பித் தாராம். மாஜி தங்களுக்கு எதிராக விசுவரூபம் எடுத்துவருவதை அறிந்த பா.ஜ.க. தேசியத் தலைமை, "புதுக்கட்சியாவது மண்ணாவது, அவரு கூட யாரு இருக்கா...'ன்னு கேள்விய கேட்டு, விரைவில் ரெய்டு ட்ரீட்மெண்ட் மூலம் அவருக்குப் பாடம் கற்பிக்கத் திட்டமிட்டிருக்கிறதாம்.''”

"பா.ஜ.க.வின் பயிற்சி முகாம் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறதே?''”

"பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில், பா.ஜ.க.வின் மாநில நிர்வாகிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் என 90 பேருக்கு மட்டும் தேர்தல் தொடர்பான பயிற்சி முகாம் நடத்த  திட்டமிடப்பட்டி ருந்தது. 11ஆம் தேதி மாலையில் தொடங்கி 12ஆம் தேதி மாலை யில் முடியும் வகையில் 24 மணிநேர பயிற்சி முகாமுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், துணை குடியரசுத் தலைவராக வெற்றிபெற்ற சி.பி. ராதாகிருஷ்ணன், 12ஆம் தேதி  முறைப்படி பதவி ஏற்றுக்கொள்ள இருப்பதால், தமிழக பா.ஜ.க.வினருக் கான அந்த பயிற்சி முகாம் 13 மற்றும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைக் கப்பட்டுள்ளது.''”

"தமிழகத்திலும் வாக்காளர்கள் திருத் தத்தை நடத்தவிருக் கிறதே தேர்தல் ஆணையம்.?''”

"தீவிர வாக் காளர் திருத்தத் தை மத்திய அரசின் உத்தரவால் பீகாரில் நடத்தியது தேர்தல் ஆணையம். இதற்கு தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின. நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தியும் இந்தியா கூட்டணிக் கட்சிகளும் இதனை மிகப்பெரிய மக்கள் மூவ்மெண்டாக தொடர்ந்து நடத்திவருகின்றனர். ஆனாலும், வாக்குத் திருட்டை தேர்தல் ஆணையம் நிறுத்திக்கொள்ள வில்லை. இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் இந்தியா முழுவதும் தீவிர வாக்காளர் திருத்தத்தை மேற்கொள்ள இருக்கிறது தேர்தல் ஆணையம். இதற்கான உத்தரவை மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. இன்னும் 6 மாதத்தில் தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் நடக்க விருக்கும் சூழலில், இந்தத் திருத்தப் பணிகள் தேர்தலில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, தமிழகத்தில் பிரதான ஆளும் கட்சியான தி.மு.க.வின் வாக்கு வங்கியை இது சிதைக்கும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள். எனவே கடும் எதிர்ப்பைச் சம்பாதிக்க விருக்கிறது தேர்தல் ஆணையம்.''”   

"அதிசயமாக ஜி.எஸ்.டி. வரிக்குழுவினர் சென்னை ஏர் போர்ட்டில் ரெய்டு நடத்தியிருக் கிறார்களே?''”

"இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அமலானதிலிருந்து எந்த ஒரு விமான நிலையத்திலும் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்புத் தொடர்பாக சோதனை நடந்ததில்லை இந்த நிலையில், சமீபத்தில் சென்னை விமான நிலையத்தில் உள்ள "ஸ்பீட் லிங்க்' என்ற நிறுவனத்தினுள் அதிரடியாக நுழைந்த ஜி.எஸ்.டி. குழுவினர் சோதனை நடத்தியிருக் கிறார்கள். இந்த நிறுவனம்.           கேரள மாநிலம் கொச்சியைத் தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. துபாய், திருவனந்தபுரம், கோழிக்கோடு, கோவை, லக்னோ, அகமதாபாத் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பணிகளை செய்து வருகின்றனர். பயணிகளிடமிருந்து அதிகபட்சம் 500 ரூபாய்தான் கட்டணமாக வசூலிக்க வேண்டும். ஆனால், இவர்கள் 2000 ரூபாய் வசூலித்து வந்துள்ளனர். இந்தக் கட்டண விவகாரத்தில் பல மோசடிகள் நடந்திருப்பதாக கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இந்த சோதனையை நடத்தியுள்ளனர். இதற்கு ஏர்போர்ட் அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு இருப்பதால் விரைவில் அவர்கள் தொடர்புடைய இடங்களிலும் ரெய்டு நடத்தப் படலாம் என்கிறது விமான நிலைய வட்டாரம்.''”

"நெல்லை காங்கிரஸ் பிரமுகர் படுகொலையில் விறுவிறுப்பான தகவல்கள் உலவுகிறதே?''”

"நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில், ஒன்றரை வருடங்களாகியும் இன்னும் துப்பு துலக்கவில்லை. தேர்தல் நெருங்கிவரும் நிலையில்,தேர்தலுக்கு முன்பாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று, காங்கிரசின் மாநிலத் தலைமை முதல் தேசியத் தலைமை வரை ஆர்வம் காட்டியும், எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் இந்த விவகாரத்தை அரசியலாக்கத் துடிக்கும் அ.தி.மு.க. தரப்பு, ஜெயக்குமாரின் நெருங்கிய உறவினரும் அ.தி.மு.க. ராஜ்யசபா உறுப்பினருமான வழக்கறிஞர் இன்பதுரை மூலம், இதை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கும் வியூகத்தில் இருக்கிறது. இதன்மூலம் கூட்டணிக் கட்சிப் பிரமுகர் படுகொலையிலேயே தி.மு.க. அரசு ஆர்வம் காட்டவில்லை என்கிற இமேஜை நிலை நிறுத்தலாம் என்றும் நினைக்கிறார்களாம். இந்த நிலையில், இதை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. பிரிவிற்கு ஒரு தகவல் கிடைத்திருக்கிறதாம். அங்கே களக்காடு பகுதியிலிருக்கும் அரசியலிலும் அடிதடியிலும் கோலோச்சி வருகிற ஒரு நபரை விசாரணை வளையத்திற்குக் கொண்டுவர அவர்கள் முயன்றபோது, அவர் வெளிநாட்டிற்குச் சென்ற தகவல் கிடைத்திருக்கிறதாம். அந்த நபருக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் எப்படி என்று விசாரணை டீம் ஆச்சரியத்தோடு தகவல்களைத் துருவி வருகிறதாம்.''”

"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் பலரும் சுயதொழில் தொடங்கும் ஆர்வத்தில், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையின் பரிந்துரையின் மூலம், கூட்டுறவு வங்கிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு வாகனத்தைக் கடனாக வாங்கினார்களாம். தற்போது சென்னை மாநகரப் பகுதிகளில் ஏற்படும் கழிவுநீர் கால்வாயின் அடைப்புகளை எல்லாம், அந்த வாகனங்கள்தான் சரிசெய்து வருகின்றன. தற்போது அரசுக்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, கடன் வாங்கிய பணியாளர்களுக்கு சம்மந்தப்பட்ட கூட்டுறவு வங்கிகள் ஏடாகூடமாக நோட்டீஸ்களை அனுப்பி யிருக்கிறதாம். இதைக் கண்டு அதிர்ந்த அவர் கள், இப்போது செல் வப்பெருந்தகையிடமே முறையிட்டு வருகிறார் களாம்.''”


_________________
இறுதிச்சுற்று!

சபரீசன் தந்தை மரணம்!

முதல்வர் ஸ்டாலினின் சம்மந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி, ஓ.எம்.ஆர். அப்பல்லோவில் மருத்துவ சிகிச்சைக் காக கடந்த சில நாட்களாக அட்மிட் செய்யப் பட்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் 11-ந் தேதி அவரது உயிர் பிரிந்துள்ளது. முதலீட்டாளர் மாநாட் டிற்காக ஓசூரில் இருந்த முதல்வர் ஸ்டாலினுக்கும், இமானுவேல் சேகரன் நினைவஞ்சலிக்காக பரமக்குடி சென்றிருந்த துணை முதல்வர் உதயநிதிக்கும், தனிப்பட்ட பயணமாக லண்டனில் இருந்த சபரீசனுக்கும் உடனடி தகவல் தெரிவிக்கப்பட்டது. லண்டனி லிருந்து உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டார் சபரீசன். நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஓசூரிலிருந்து ஸ்டாலினும், மதுரையிலிருந்து உதயநிதியும் அவசரம் அவசரமாக கிளம்பி மதியம் 3 மணிக்கு உதயநிதியும், மாலை 5 மணிக்கு ஸ்டாலினும்  சென்னைக்கு வந்தனர். வேதமூர்த்தியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.                   

-இளையர்

சமூக நீதி தியாகி இமானுவேல்!

தியாகி இமானுவேல் சேகரனாரின் 68ஆவது நினைவு தினத்தில் பரமக்குடியில் உள்ள தியாகி இம்மானுவேல் சேகரனா ரின் நினைவிடத்தில் தி.மு.க., சார்பில் தமிழக துணை முதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், கயல்விழி செல்வராஜ், தங்கம் தென்னரசு, மூர்த்தி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்ட நிலையில் "சமூக நீதிப்போராளி தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு நாளில் முதலமைச்சரின் அறிவுரைப்படி நானும், மூத்த அமைச்சர்களும் இங்கு மரியாதை செலுத்தினோம். சமூக நீதிக்காக தியாகி இமானுவேல் சேகரன் அரும்பாடுபட்டவர். அவருக்கு மணிமண்டபம் சிலை அமைக்க ஏற்கனவே மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கினோம். அதில் 95 சதவீதம் பணிகள் முடிந்து விட்டது. விரைவில், அதனுடைய பணிகள் அனைத்தும் முடிவடைந்து திறந்துவைக்கவிருக்கிறோம்'' என்று கூறினார் உதயநிதி. 

-நாகேந்திரன்