கூட்டணி மாறுகிறாரா திருமா! மது ஒழிப்பு மாநாடு சர்ச்சை !

77

லிமையான, உறுதியான கூட்டணி என அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் மிரளும் தி.மு.க. கூட்டணிக்குள் விடுதலை சிறுத்தைகளால் முதல் குழப்பக் குரல் எழுந்திருக்கிறது. தனது கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க.வை திருமாவளவன் அழைத்திருப்பதுதான் குழப்பத்திற்கு காரணம். திருமாவின் இத்தகைய அரசியலால் தி.மு.க. கூட்டணி சிதறுகிறதா? என்கிற கேள்வி தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tt

மூன்று மாதங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராயச் சாவுகள் தமிழகத்தையே உலுக்கி எடுத்திருந்தன. தி.மு.க. ஆட்சி மீது அந்த சம்பவம் ஒரு கரும்புள்ளியாக விழுந்தது. மது விலக்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் முடிவெடுக்க வேண்டும் என்கிற குரல்களும் அப்போது கடுமையாக எதிரொலித்தன.

தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் கூட, ’"மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும்' ’என்கிற ரீதியில் குரல் எழுப்பின.

இந்த நிலையில்தான், மகாத்மா காந்தி பிறந்த நாளில் (அக்டோபர் 2) கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மது ஒழிப்பு மாநாடு நடத்த தீர்மானித் தார் திருமாவளவன். அதற்கான திட்ட மிடல்கள் நடந்துமுடிந்த நிலையில், இதோ அக்டோபர் 2-ல் மது ஒழிப்பு மாநாட்டை சீரியசாக நடத்துகிறது தி.மு.க. கூட்டணியிலுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி.

திருமாவளவன் நடத்தும் இந்த மது ஒழிப்பு மாநாட்டை தி.மு.க. தரப்பு அவ்வளவாக ரசிக்க வில்லை. திருமாவுக்கு எதிரான விமர்சனங்கள் தி.மு.க.வில் அலை யடித்தபடி இருந்து வருகின்றன.

இந்த நிலையில்தான், எங்கள் மாநாட்டில் அ.தி.மு.க.வும் பங்கேற்க லாம் என்று திருமாவளவன் சொல்லியிருப்பது, அ.தி.மு.க.வை நேரடியாக அழைத்திருப்பதாகவே அரசியலில் பேசு பொருளாகி வருவதுடன், தி.மு.க.வில் அதிச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்கேற்ப, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு இப்படி ஒரு மாநாட்டினை முன்னெடுத்திருப் பது நல்ல விசயம். மதுவிலக்கு என்பது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி. இதற்காக கருப்புச் சட்டையும், பதாகைகளும் ஏந்தி போராடியதை நாட்டு மக்கள் மறக்கமாட்டார்கள். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதை தவற விட்டுவிட்டனர். இதை திருமாவளவன் சுட்டிக்காட்டுவதை நல்ல விஷயமாக பார்க்கிறோம்'' என்று அதிரடி காட்டியிருக்கிறார்.

தி.மு.க. ரசிக்காத ஒரு விச யத்தை திருமாவளவன் கையி லெடுத்திருப்பது குறித்து தி.மு.க. வின் சீனியர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, "மது ஒழி

தி.மு.க. ரசிக்காத ஒரு விச யத்தை திருமாவளவன் கையி லெடுத்திருப்பது குறித்து தி.மு.க. வின் சீனியர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, "மது ஒழிப்பு மாநாட்டை சிறுத்தைகள் நடத்து வது கட்சியின் (தி.மு.க.) தலைமைக்கு ஏற் புடையதாக இருக்க வில்லை. இப்படி ஒரு மாநாட்டை நடத்துகிறோம் என முதல்வர் ஸ்டாலினிடம் திருமாவளவன் முன்கூட்டியே தெரிவித்திருந்தாலும் கூட, அது சரியானதில்லை என்கிற சீனியர்களின் கருத்துக்கள் முதல்வருக்கு தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

அதாவது, தி.மு.க. கூட்டணிக்குள் இருந்துகொண்டே, தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் ஒரு விசயத்தை (மது ஒழிப்பு) திருமாவளவன் கையில் எடுத்திருப்பது ஆரோக்கிய மானது கிடையாது. மது ஒழிக்கப்பட வேண்டும்; டாஸ்மாக் மூடப்பட வேண்டும்; மது விலக்கை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்பதெல்லாம், திருமாவள வனுக்கு மட்டுமல்ல; எல்லா கட்சிகளுக்கும் உடன்பாடு தான். ஆனால், தற்போதைய சூழல்களில் மது விலக்கு சாத்தியமா? என்பதில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது.

அதை உணர்ந்த தினால்தான் அ.தி. மு.க., பா.ம.க., பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கூட, மது ஒழிப்பு என்கிற பெய ரில் மாநாடோ, பொதுக்கூட்ட மோ நடத்த ஆலோசிக்க வில்லை. அப்படிப் பட்ட சூழலில் தி.மு.க. கூட்டணியில் உள்ள திருமாவளவனே, இப்படி ஒரு மாநாட்டை நடத்துவதில்தான் தி.மு.க. வுக்கு நிறைய நெருடல்களும், சந்தேகங் களும் இருக்கிறது. குறிப்பாக, தி.மு.க. கூட்டணி உடையவேண்டும்; உடைக்க வேண்டும் என காய்களை நகர்த்தி வரும் எடப்பாடியின் தூண்டிலில் திருமா என்ற மீன் சிக்கியுள்ளதோ என் கிற சந்தேகம் தி.மு.க.வுக்கு இருக்கிறது.

அந்த வகையில், திருமாவளவ னுக்கு ஏதோ ஒரு அரசியல் அஜெண்டா இருக்கவேண்டும். அது, அ.தி.மு.க. அஜெண்டாவாக கூட இருக்கலாம். இல்லையெனில், தி.மு.க. அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் மது ஒழிப்பு விசயத்தை கையில் எடுத்திருக்க மாட்டார் திருமா'' என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார்கள் தி.மு.க. சீனியர்கள்.

tt

விடுதலை சிறுத் தைகள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிலரிடம் விசாரித்தபோது, ’"விடு தலை சிறுத்தைகளின் கொள்கை களுக்கும், தி.மு.க. கூட்டணிக்கும் சம்மந்தம் கிடையாது. கூட்டணி என்பது வேறு; கொள்கை என்பது வேறு. கூட்டணியிலுள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. கூட்டணிக்காக அதனை விட்டுத் தந்திட முடியாது. அந்த வகையில், இன்றைக்கு தமிழகத்தை பெரிய அளவில் சீரழிப்பது மதுவும் போதைப்பொருளும்தான். அவை ஒழிக்கப்பட வேண்டும் என்பது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு இருப்பதுபோல எங்களுக்கும் உண்டு.

இந்த விசயத்தில் அந்த கட்சிகள் நேரடியாக களத்திற்கு வருவதில்லை. அதனால் நேரடி களத்திற்கு நாங்கள் வருகிறோம். மது ஒழிப்பு கொள்கையில் எல்லா கட்சிகளுக்கும் உடன்பாடு உண்டு என்பதால்தான், மதவாத, சாதிய கட்சிகளைத் தவிர்த்து எல்லா கட்சிகளும் மாநாட்டில் பங்கேற்கலாம். அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என பொதுக் கருத்தில் எங்கள் தலைவர் திருமாவளவன் சொல்லியிருக்கிறார். அதேபோல, நடிகர் விஜய்யையும் அழைத்துள் ளார். அரசியல் காரணங்களுக்காக அவரது கருத்து சர்ச்சையாக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால், பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்க கேள்வி ஒன்றுக்கு அ.தி.மு.க.வும் பங்கேற்கலாம் என்றுதான் திருமா சொன்னாரே தவிர, அ.தி.மு.க.வுக்கு எந்த நேரடி அழைப்பையும் கொடுக்கவில்லை. அதனால், தி.மு.க. கூட்டணிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணிக்கு எங்களால் தர்மசங்கடமும் ஏற்படாது. கூட்டணி வேறு; கொள்கை வேறு என்பது தி.மு.க. தலைமைக்கும் நன்றாகத் தெரியும்''’என்று சமாளிக்கின்றனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் உள்வட்டாரங்களில் விசாரித்தபோது, நடந்துகொண்டிருக்கும் அரசியல் விவகாரங்கள் கூடுதலாகக் கிடைத்தன.

கூட்டணியின் பலத்தால் தான் நாடாளு மன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றியது என்பது எதார்த்தமாக இருந்தாலும், திமுகவின் செல்வாக்கு, திமுக அரசின் நலத்திட்டங்கள், முதல்வர் ஸ்டாலின் நல்லாட்சி ஆகியவைகளால் மட்டுமே 40 இடங்களையும் ஜெயிக்க காரணங்களாக இருந்தன. தி.மு.க. ஒத்துழைக்கவில்லையெனில் கூட்டணி கட்சிகள் ஒரு இடத்தில் கூட ஜெயித்திருக்க முடியாது என்று தி.மு.க. தலைமை மட்டுமல்ல; தி.மு.க. உடன்பிறப்பு களும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

தி.மு.க.வின் செல்வாக்கும், ஸ்டாலினின் நல்லாட்சியும் இருக்கும்போது, வருகிற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்களை தந்துவிடக் கூடாது. 200-க்கும் குறையாத இடங்களில் உதயசூரியன்தான் களத் தில் போட்டியிட வேண்டும். அதிக எண்ணிக்கையில் போட்டியிடும்போதுதான் நமக்கான பெரும்பான்மை வெற்றி அதிகமாக கிடைக்கும். அதாவது, 200 இடங்களில் போட்டி யிடும்போது, ஒரு 50 இடங்கள் சறுக்கினாலும் கூட 150 இடங்களை தி.மு.க. கைப்பற்றும். எந்த நெருக்கடியும் இல்லாமல் ஆட்சியை தக்கவைக்க முடியும்.

அதனால் கூட்டணி கட்சிகளுக்கு அள்ளிக் கொடுக்காமல், 34 சீட்டுகள் மட்டுமே பகிர்ந்தளித்தால் போதுமானது. அவர்களுக்கு அதிக சீட்டுகள் கொடுத்து, அவர்களின் வெற்றிக்காக பணமும் கொடுத்து தி.மு.க.காரன் சுமப்பதைவிட அவர்களுக்கு செய்யக்கூடிய செலவுகளை நம் கட்சியின் வேட்பாளர்களுக்கு செலவு செய்துவிடலாம் என்றெல்லாம் ஆலோசிக்கப் பட்டது.

அந்தவகையில், 200 இடங்களில் தி.மு.க. போட்டி என்கிற இலக்கை மையப்படுத்தி இப்போதே தேர்தல் பணிகளைத் துவக்கவேண்டும் என்கிற திட்டமிடலில்தான் தேர்தல் ஒருங்கிணைப்பு கமிட்டியை சமீபத்தில் அமைத்தார் முதல்வர் ஸ்டாலின். அந்த கமிட்டியும் தனது பணிகளில் தீவிர கவனம் செலுத்திவருகிறது.

th

தி.மு.க.வின் இந்த மாநிலங்களவை திட்டமிடலை அறிந்ததால்தான், தங்களின் சீட் பேரங்களை அதிகரித்துக்கொள்ள, தி.மு.க.வுக்கு இப்போதே கடிவாளம் போடவேண்டும் என திட்டமிட்டு, நெருக்கடியைத்தரும் சூழலை உருவாக்குகிறார் திருமாவளவன். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி உட்பட 3 தொகுதிகளை கேட்டு முரண்பட்டது சிறுத் தைகள். 1 சீட்தான்; அதுவும் ரிசர்வ் தொகுதிதான் என தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டது.

உடனே அ.தி.மு.க.வுக்கு தாவுவோம் என்பதுபோல அக்கட்சியுடன் கூட்டணி வைக்க சிறுத்தைகள் விரும்புகிறது என்பதாக செய்திகளை பரப்பினர். சிறுத்தைகள் தொடங்கி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி களும் இந்த மிரட்டலை தி.மு.க.வுக்கு எதிராக பயன்படுத்தின. இதனை யடுத்து யோசித்த ஸ்டாலின், கூட் டணியை தக்கவைக்க வேண்டும்; உடைந்துவிடக் கூடாது என முடிவு செய்து, முந்தைய தேர்தலில் ஒதுக்கப்பட்ட எண்ணிக்கை யையே ஒதுக்கி கூட்டணியை நிலைநிறுத்தினார்.

நாடாளுமன்றத் தேர்தல் சூழல்போல ஒரு நெருக்கடியை உருவாக்கினால், தங்களுக்கான சீட் எண்ணிக்கை எதிர்பார்ப்பை நிறைவேற்றும் முகமாக தி.மு.க. இறங்கிவரும் என்பதை கணக்கிட்டே மது ஒழிப்பு மாநாடு, அ.தி.மு.க.வுக்கு அழைப்பு என்கிற அஸ்திரத்தை திருமாவளவன் ஏவுகிறார். ஆனால், நாடாளுமன்ற தேர்தல்போல, கூட்டணி கட்சிகளின் நிர்பந்தங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் தி.மு.க. பயந்துவிடாது.

அதனால்தான், திருமாவின் அ.தி.மு.க. அழைப்பு பற்றி அமைச்சர் உதயநிதியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, அது அவர்கள் (சிறுத்தைகள்) விருப்பம் என்று ஒற்றை வரியில் தி.மு.க.வின் நிலைப்பாட்டை திருமாவுக்கு புரியும் பாஷையில் தெரிவித்துவிட்டார். ஆக, திருமாவின் பேர அரசியல் அஜெண்டா சட்டமன்றத் தேர் தலில் தி.மு.க.விடம் எடுபடாது'' என்று தி.மு.க. உள்வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைக் கின்றன.

அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியினரோ, கூட்டணியின் பலம் இல்லாமல் ஆட்சியை தி.மு.க. பிடித்த வரலாறு கிடையாது. கூட்டணியின் முக்கியத்துவம் மற்றவர்களுக்கு தெரிகிறதோ, இல்லையோ தி.மு.க. தலைமைக்கு நன்றாகவே தெரியும். அதனால் கூட்டணி உடைய முதல்வர் ஸ்டாலின் விரும்பமாட்டார்.

தேர்தல் காலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஷேரிங்கில் உரிய மரியாதை கொடுக்கப்பட்டால்தான் களத்தில் இரு தரப்பும் வெற்றிக்காக உழைக்கும்.

அந்த வகையில், எங்கள் கட்சியில் 2 எம்.பி.க் கள் இருக்கிறார்கள். அதன்படி கணக்கிட்டால் 12 சட்டமன்ற தொகுதிகள் எங்களுக்கு தி.மு.க. கொடுக்கவேண்டும். நாங்கள் இந்த முறை 20 சீட்டுகளை தி.மு.க.விடம் கேட்போம். 15 ஒதுக்கினால் சம்மதிப்போம் என்பது சிறுத்தைகளின் நிலைப்பாடு. இது நியாயமான எதிர்பார்ப்புதான்.

மக்கள் விரும்பும் அர சியலையும் எதிர்பார்ப்பையும் மையப்படுத்தி அரசியல் செய்தால்தானே தேர்தலில் சிறுத்தைகள் ஜெயிக்கமுடியும். இன்றைக்கு மக்களின் விருப்பமாக இருப்பது மது ஒழிப்புதான். அதனால் அதை மையப்படுத்தி மாநாடு நடத்து கிறோம். சட்டமன்ற தேர்தலில் மரியாதைக்குரிய சீட்டுகளை திருமா எதிர்பார்க்கிறார். அது கிடைக்காதபோது, அ.தி.மு.க. கூட்டணிங்கிற சாய்ஸை நாங்கள் பரிசீலிப்பது தவறு கிடையாது.

"உங்கள் செல்வாக்கும் எங்கள் செல்வாக்கும் இணைந்து நாம் ஜெயிப்போம்' என்பதுதானே கூட்டணி உடன்பாடு. அதில் மரியாதை இல்லை யெனில் அடுத்த வாய்ப்பை நோக்கி நகர்வது இயல்பானதுதான். தி.மு.க. கூட்டணியை விட்டு சிறுத்தைகள் வெளியேறாது. வெளியேற்றினால் அதை அரசியல் ரீதியாக திருமா எதிர்கொள்ளவும் தயங்கமாட்டார்’என்று சிறுத்தைகள் சீறுகின்றனர்.

இந்தநிலையில், சிறுத்தைகளுக்கு எதிராக எழுந்துள்ள சர்ச்சை குறித்துப் பேசிய திருமா, "இளைய சமுதாயத்தை சீரழிக்கும் மதுவை ஒழிப்பதுதான் எங்களின் நோக்கம். அதற்காக கட்சி அரசியலைக் கடந்து, ஜனநாயக சக்திகளின் துணையோடு போராடி வருகிறோம். நாடு முழுவதும் மதுவிலக்கை கொண்டு வரவேண்டும். அதற்கான பொறுப்பு எங்களுக்கு மட்டுமல்ல, தி.மு.க. அ.தி.மு.க., பா.ஜ.க. கட்சிகளுக்கும் இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டும்தான் தேர்தல் பணிகள் குறித்து சிந்திபோம். மற்ற நேரங்களில் கூட்டணி சேரலாமா? கூடாதா? லாபம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது பற்றி யோசிப்பதுகூட கிடையாது. பேர அரசியல் எங்களுக்குத் தெரியாது'' என்கிறார் திருமாவளவன்.

"அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் 14-ந் தேதி சென்னை திரும்பு கிறார். அதன்பிறகு தி.மு.க. கூட்டணி விவகாரம் இன்னும் சூடுபிடிக்கும்' என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அதற்கேற்ப, "சிறுத்தைகள் மாநாட்டில் அ.தி.மு.க. சார்பில் சீனியர் ஒருவரை கலந்துகொள்ளவைத்து கூட்டணி உரசலை பெரிதுபடுத்தலாம்' என்கிற திட்டத்தில் ஆலோசிக்கிறார் எடப்பாடி பழனிச் சாமி.

nkn140924
இதையும் படியுங்கள்
Subscribe