ள்ளாட்சித் தேர்தலில் மேயர், நகர் மன்றத் தலைவர் பதவிக்கு தலைமை அறிவித்த வேட்பாளர்களை அ.தி.மு.க.வுடன் கைகோர்த்துக் கொண்டு கலங்கவைத்துள்ளனர் தி.மு.க. கவுன்சிலர்கள். பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் கட்சித் தலைமைக்கு புகார்களை அனுப்ப, மூன்றுபேர் கொண்ட குழு அமைத்து விசாரித்து வருகின்றது தி.மு.க.

கொங்கு மண்டலம் ஈரோடு வடக்கு மாவட்டத்திலுள்ள ஏலத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 9 வார்டுகளில் தி.மு.க.வும், 4 வார்டுகளில் அ.தி.மு.க.வும், 2 வார்டுகளில் சுயேட்சைகளும் வெற்றிபெற்றுள்ளனர். சுயேட்சைகள் இருவரும் தி.மு.க.வில் சீட்டு கிடைக்காத நிலையில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளனர். தி.மு.க. தலைமை சார்பாக நகரமன்ற தலைவருக்கு ஆர். நளினாவை அறிவித்திருந்தனர்.

dmk

Advertisment

தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றித் தேர்வாவார்கள் என எதிர்பார்த்த நிலையில், மற்றொரு தி.மு.க. வேட்பாளரான பேரூர் கழகச் செயலாளர் மருமகள் ராஜேஸ்வரி களமிறங்கினார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பினாமியும் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளருமான தம்பி என்ற சுப்பிரமணியன், தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர் சென்னிமலை ஆகியோர் ஆதரவு திரட்டி ராஜேஸ்வரியை வெற்றிபெற வைத்துள்ளனர்.

இந்த நகராட்சியில் அ.தி.மு.க.வினர் பல கோடிகளில் மணல் கொள்ளை அடித்துள்ள னர். இதுகுறித்து கம்யூனிஸ்ட் எம்.பி. சுப்பராயன் வழக்கு தொடுத்துள்ளார். தி.மு.க. நகராட்சித் தலைவருக்கு நிறுத்திய நளினா வழக்கறிஞர் என்பதால் அவர் பதவிக்கு வந்தால், மணல் விவகாரத்தை கையிலெடுப்பாரோ என்ற அச்சத்தில் அ.தி.மு.க. இந்த சதுரங்கவேட்டை ஆட்டத்தை ஆடியுள்ளது. நெரிஞ்சிப்பேட்டை, ஒரகடத்திலும் இதேபோன்ற காட்சிகள் அரங்கேறியுள்ளது.

கொங்கு மண்டல பார்டரான தர்மபுரியிலும் இதே நிலைதான். மொத்தமுள்ள 33 வார்டில், தி.மு.க. 20, அ.தி.மு.க. 13 தொகுதி களைக் கைப்பற்றியிருந்த நிலையில், தி.மு.க. நகரமன்றச் செயலாளர் நித்தியா அன்புக்கு சேர்மன் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது. அ.தி.மு.க. டி.எம்.சி. இளங்கோவின் பினாமியான லட்சுமி நாட்டான் மாதுவுக்கு கிடைத்துள்ளது. இவர் தி.மு.க. வேட்பாளராக இருந்தாலும் இவரது செயல்பாடு அ.தி.மு.க.வுக்கு ஆதரவாகவே இருக்கிறது என உடன்பிறப்புகள் கொதிக்கின்றனர்.

பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்கு உட் பட்ட 15 வார்டுகளில், தி.மு.க. 10 வார்டுகளிலும், பா.ம.க. 3 வார்டுகளிலும், வி.சி.க. 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்த பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான பட்டியலில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில், பேரூராட்சி தலைவர் பதவிக்கான போட்டி நடைபெற்றபோது தி.மு.க.வின் சாந்தி போட்டியிலிறங்கியது அதிர்ச்சி ஏற்படுத்தியது. சாந்திக்கு 8 வார்டு உறுப்பினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சின்னவேடி என்பவருக்கு 7 வார்டு உறுப்பினர்களும் வாக்களித்த நிலையில் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த சாந்தி வெற்றிபெற்றார். கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கியதை தி.மு.க. போட்டியிட்டு வென்றது வி.சி.க. மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

dmk

Advertisment

இப்படி தலைமை நிறுத்திய வேட்பாளருக்கு எதிராகப் போட்டியிட்டவர்கள், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் போட்டியிட்டு வென்றவர்களை ஆ.ராசா, எ.வ.வேலு, கே.என். நேரு ஆகிய மூன்று பேர் கொண்ட குழு விசாரித்துவரு கின்றது. சென்னையிலும் தி.மு.க. கழக மா.செ.க் கள் அ.தி.மு.க.வுடன் கைகோர்த்துக்கொண்டு செயல்பட்டதாகவும் அதற்கான ஆதாரமாக செல்போன் ரெக்கார்ட் மற்றும் பணப்பரிமாற் றத்திற்கான ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ள தாக இந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.

வடசென்னையை தி.மு.க. கோட்டை என நிரூபித்துக்காட்ட தலைமை நினைத்திருந்த நிலையில், 33 வார்டுகளில் தி.மு.க. 26 வார்டு களை வென்றிருந்தது. அ.தி.மு.க. 7 வார்டுகளை வென்றுள்ளது. அ.தி.மு.க. மா.செ.வான மாத வரம் மூர்த்தி, தி.மு.க. மா.செ.வான மாதவரம் சுதர்சனம் ஆகிய இருவரும் கூட்டுச்சேர்ந்து செயல்பட்டதின் விளைவே, வடசென்னையில் தி.மு.க. 7 வார்டுகளை இழந்துள்ளது.

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான குப்பன் மகனுக்கு சீட் ஒதுக்கப்பட்டபோது, தி.மு.க. அந்த வார்டில் பலம்வாய்ந்த வேட்பாளர் ஆதிகுருசாமியை நிறுத்தாமல், டம்மி வேட்பாளரை நிறுத்தி குப்பன் மகனை வெற்றிபெறவைத்தார் சுதர்சனம். அதேபோல சென்னை மேயர் வேட்பாளர் என ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கீதா நாராயணன் வார்டிலும் மூர்த்தியுடன் கூட்டுச்சேர்ந்து அந்த வார்டிலும் அ.தி.மு.க.வை வெற்றிபெறவைத்தார். இப்படி 7 வார்டுகளையும் உள்குத்தாலேயே தி.மு.க இழந்துள்ளதென உடன்பிறப்புகள் குமுறு கின்றனர். இதற்கான ஆதாரங்களும் தலைமைக்குக் கிடைத்துள்ளதாகத் தொண் டர்கள் கூறுகின்றனர்.

அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தையே தி.மு.க. கோட்டையாக மாற்றும் கனவை நிலைநிறுத்த தலைமை பாடுபடுவதால், தலைமையின் உத்தரவை மீறும், தலைமை நிறுத்தும் வேட்பாளர்களைத் தோற் கடிக்கும் உள்குத்து விவகாரங்களில் தனிக் கவனம் செலுத்த முடி வெடுத்துள்ளாராம் முதல்வர்!.