Advertisment

அதானியுடன் கூட்டணி! பா.ஜ.க. ஆட்சியின் பங்குச் சந்தை மோசடி! - அதிரவைக்கும் ஹிண்டன் பர்க் அறிக்கை!

adhani

பிரதமர் மோடியின் நண்பரான தொழிலதிபர் அதானி குழுமத்தை கடந்த வருடம் அசைத்துப் பார்த்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு, தற்போது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் வாரியமான செபியின் தலைமையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதன் பார்வை இந்தியா மீது பதிந்துள்ளது.

Advertisment

கடந்த வருடம் ஜனவரியில், உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான இந்திய தொழி லதிபர் அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான 80-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியது ஹிண்டன்பர்க். இந்த குற்றச்சாட்டுகள் இந்திய பங்கு சந்தையில் நிலநடுக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் சீட்டுக் கட்டுகளைப் போல மளமளவென சரிந்தன. மூன்றாவது பெரிய பணக்காரரான அதானி, உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் 15 இடத்தைக்கூடப் பிடிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல், பல ஆயிரம் கோடிகள் நட்டத்தையும் சந்தித்தார் அதானி. இத னால் பிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும் அதிர்ந்து போனார்கள்.

adhani

ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட, ஹிண்டன் பர்க்கின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு செபிக்கு உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்த செபி, அதானி குழுமத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியதையடுத்து, ‘’ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை”எனத் தீர்ப் பளித்தது உச்சநீதிமன்றம். அதானி நிறுவனங் களுக்கு எதிரான ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டுகள் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்

பிரதமர் மோடியின் நண்பரான தொழிலதிபர் அதானி குழுமத்தை கடந்த வருடம் அசைத்துப் பார்த்த அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு, தற்போது இந்திய பங்குச் சந்தைகள் மற்றும் நிதிச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் வாரியமான செபியின் தலைமையை குறிவைத்து தாக்குதலை நடத்தியிருப்பது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக இதன் பார்வை இந்தியா மீது பதிந்துள்ளது.

Advertisment

கடந்த வருடம் ஜனவரியில், உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான இந்திய தொழி லதிபர் அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான 80-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தியது ஹிண்டன்பர்க். இந்த குற்றச்சாட்டுகள் இந்திய பங்கு சந்தையில் நிலநடுக்கத்தை ஏற்படுத்த, அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் சீட்டுக் கட்டுகளைப் போல மளமளவென சரிந்தன. மூன்றாவது பெரிய பணக்காரரான அதானி, உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் முதல் 15 இடத்தைக்கூடப் பிடிக்க முடியவில்லை. அது மட்டுமல்லாமல், பல ஆயிரம் கோடிகள் நட்டத்தையும் சந்தித்தார் அதானி. இத னால் பிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும் அதிர்ந்து போனார்கள்.

adhani

ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட, ஹிண்டன் பர்க்கின் குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு செபிக்கு உத்தரவிடப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தனது அறிக்கையைத் தாக்கல் செய்த செபி, அதானி குழுமத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கூறியதையடுத்து, ‘’ஹிண்டர்ன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை”எனத் தீர்ப் பளித்தது உச்சநீதிமன்றம். அதானி நிறுவனங் களுக்கு எதிரான ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டுகள் இந்திய பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய விவகாரம் இன்னமும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது.

Advertisment

இந்த நிலையில்தான், அதானி பங்குதாரராக உள்ள சர்ச்சைக்குரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மீது எவ்வித நடவடிக்கைகளையும் செபி எடுக்கவில்லை என்றும், அத்தகைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவல் புச் ஆகியோர் கணிசமான பங்குகளை வைத்திருக்கிறார்கள் என்றும் சில குண்டுகளை கடந்த 10-ந்தேதி வீசிய ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்திய பங்குச் சந்தைகளில் மீண்டும் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இதுகுறித்து பொருளாதார அறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, "வெளிநாடுகளில் அதானிக்கு பல ஷெல் நிறுவனங்கள் இருக்கின்றன. அந்த நிறுவனங்களை சில நிதி நிறுவனங்கள் மூலம் ஆப்ரேட் செய்து வருகிறார் அதானி. குறிப்பாக, இந்தியா ஃபோக்கஸ் நிதி நிறுவனத்தையும் இ.எம். ரீசர்ஜண்ட் நிதி நிறுவனத்தையும் இந்தியா இன்ஃபோ லைன் எனும் நிறுவனம் நடத்திக்கொண் டிருக்கிறது. மேற்கண்ட இந்தியா ஃபோக்கஸ் மற்றும் இ.எம்.ரீசர்ஜண்ட் வழியாக அதானியின் நிறுவனங்கள் சில இயக்கப்படுகின்றன. இதில் நிறைய தவறுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இவைகள் மீது மத்திய அரசின் செபி அமைப்பு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

adhani

அந்த வகையில், அதானியின் சகோதரர் வினோத் அதானியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மொரீசியஸ் மற்றும் பெர்முடாவில் நாடுகளில் இயங்கும் நிறுவனங்களில் செபியின் தலைவர் மாதபி புச்சும், அவரது கணவர் தவல் புச்சும் மறைமுகமாக பங்குகள் (ஷேர்கள்) வைத்திருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தி பல குற்றசாட்டுகளை வைத்திருக்கிறது ஹிண்டன்பர்க். இந்த பங்குகளின் நிகர மதிப்பு சுமார் 10 மில்லியன் அமெரிக்க டாலர்.

அதாவது, செபியின் தலைவர், தங்களுக்கான ஆதாய பங்குகளை அதானி நிறுவனத்தில் வைத் திருப்பதால் தான், அதானி நிறுவன முறைகேடுகள் மீது செபி நிறுவனம் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பது இதன் சாராம்சம். அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதானிக்கும் தங்களுக்கும் நிதி இழப்பு ஏற்படலாம் என்பதுதான். அதனால், ஹிண்டர்பர்க் வைத்துள்ள இத்தகைய குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி விடாமல், இது குறித்த முழுமையான விசாரணையை மோடியின் மத்திய நிதி அமைச்சகம் நடத்தி உண்மைகளை அறிவித்தால் மட்டுமே இந்திய பொருளாதாரக் கட்டமைப்பு நிலையாக இருக்கும்'' என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான செபியின் தலைமை மீதே முறைகேடு புகார்களை அமெரிக்க நிறுவனம் சுமத்தியிருப்பது இந்திய பொருளாதாரத்தில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

adhani

இதுகுறித்து எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள், மோடி அரசுக்கு எதிராக போர்க்குரல் உயர்த்தி வருகின்றனர். காங்கிரஸின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் எம்.பி., "அதானியின் ஊழல்களை விசாரிக்க செபி தயங்குவதான குற்றச்சாட்டு நீண்ட வருடங்களாக இருந்து வருகிறது. செபியின் தலைவர் அதானியின் முறை கேடு நிறுவனங்களில் பங்குகள் வைத்திருப்பது அதிர்ச்சியைத் தருகிறது. உடனடியாக செபியின் தலைமையிலிருந்து மாதபி புச் நீக்கப்பட வேண்டும்.

அதிகாரிகளின் உடந்தை யில்லாமல் இத்தகைய ஊழல்கள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைத் தேவை. அந்த விசாரணை நடந்தால்தான் இந்த மெகா ஊழல்களில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? இல்லையா? என்பது தெரிய வரும்'' என்கிறார்.

இப்படி,செபிக்கு எதிரான விசாரணையை தொடங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்துவரும் நிலையில், ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர், 9-ந்தேதியோடு முடிக்கப்பட்டி ருக்கிறது. காரணம், அதானிக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் மீண்டும் தனது தாக்குதலை தொடுக்கப்போகிறது என்பது தெரிந்ததாலா? என்கிற கேள்வி யையும் எழுப்புகின்றன எதிர்க் கட்சிகள்.

அதானி நிறுவனங்களோடு தொடர்புபடுத்தி செபியின் தலைமை மீதான இத்தகைய குற்றச்சாட்டு மோடி தலைமையிலான மத்திய அரசை குறி வைக்கிறது என்பதை உணர்ந்துள்ள செபியின் தலைவர் மாதபி புச், அவரது கணவர் தவல் புச் ஆகிய இருவரும், "எங்களுடைய வாழ்க்கையும், நிதிப் பரிவர்த்தனைகளும் எப்போதுமே திறந்த புத்தகமாகவே இருந்துள் ளன. நாங்கள் தனி நபர்களாக இருந்தபோது எங்களிடம் இருந்த ஆவணங்கள் உட்பட எங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் செபியிடம் அளித்திருக்கிறோம். ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் கொண்டவை. செபியின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறது ஹிண்டன்பர்க்'' என்று மறுத்துள்ளனர். இவர்களைப்போலவே, அதானி நிறுவனமும் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு களை மறுத்துள்ளது.

ஆனால், செபியின் தலைவராக மாதபி புச் நியமிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, மொரிசீயஸ் நாட்டை சேர்ந்த நிதி நிர்வாக நிறுவனமான ட்ரைடெண்ட் ட்ரஸ்ட்டுக்கு, க்ளோபல் டைனமிக் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் எனும் நிறுவனத்தில் தானும் தனது மனைவியும் வைத்துள்ள முதலீடுகள் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்திருக்கிறார் தவல் புச். இதற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது ஹிண்டன்பர்க்

ஹிண்டன்பர்க்கின் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் மத்திய மோடி அரசின் நிர்வாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் என்பதால், இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்படும் நிலநடுக்கம் பரபரப்பை உருவாக்கியபடி இருக்கிறது என்கிறார்கள். இந்திய பொருளாதாரத்தில் அதானி குழுமம் ஊடுருவியுள்ள ஆக்டோபஸ் கரங்களின் ஆணிவேர் வரை அம்பலப்படுத்துவதிலிருந்து ஹிண்டன்பர்க் விலகப்போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

__________

இறுதிச் சுற்று!

aa

தமிழக அரசின் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஜி.யான பொன்மாணிக்கவேலின் சென்னை வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் டி.எஸ்.பி. காதர் பாஷா தொடர்ந்த வழக்கில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக இந்த ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. விருதுநகரில் கண்டெடுக்கப்பட்ட 3 உலோக சிலைகளையும் கடத்தி அதனை டி.எஸ்.பி. காதர்பாஷாவும், கோயம்பேடு காவல்நிலைய எஸ்.ஐ. சுப்புராஜும் சேர்ந்து விற்றுவிட்டதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்திருந்தார் பொன்.மாணிக்கவேல். ஆனால், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனக்கு எதிராக பொய் வழக்குப் போட்டதாக அவர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் காதர்பாஷா வழக்குத் தாக்கல் செய்ய, அது குறித்த விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கு கடந்த 2023-ல் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திவரும் சி.பி.ஐ. அதிகாரிகள், பொன் மாணிக்க வேல் வீட்டில் ரெய்டு நடத்தி சில ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ள னர். ஆவணங்களை ஆராய்ந்துள்ள சி.பி.ஐ., ஆகஸ்ட் 12ஆம் தேதி நடந்த ஆலோசனையில் பொன் மாணிக்கவேலுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க முடிவு செய்துள்ளதாம்.

-இளையர்

nkn140824
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe