"வரலாறு தெரியாதவனால் வரலாறு படைக்க முடியாது' என்பதற்கேற்ப இந்து மத கோயில் பற்றிய தமிழர்களின் வரலாற்று அறிவு குறைவாக இருப்பதால், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று உண்மை மறைக்கப்பட்டுவிட்டது.

ஆங்கில அரசாங்கம், சமய நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை அந்தந்த மதங்களைச் சார்ந்த ஓரு குறிப்பிட்ட சாதிக்கோ, வகுப்புக்கோ, ஒரு பிரிவினருக்கோ, ஒரு குழுவுக்கோ மாற்றம் செய்யவில்லை. அதற்கு மாறாக, இந்து மதத்தைச் சார்ந்த அனைத்து இந்துக்களுக்கும் மத நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரம் உண்டு என்று தெரிவித்தது.

d

இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும்.

Advertisment

கோயில்களை மேலாண்மை செய்யும் கட்டுப்பாடு(Board Of Revenue) வசம் இருந்தது. இதை இந்துக்கள் எதிர்க்கவில்லை.

ஆனால், கிருத்துவ மிஷனரிகள் இந்துக் கோயில்களை ஆங்கில கிருத்துவ அரசாங்கம் நிர்வகிப்பது கூடாது என்று எதிர்த்தது.

ஆக... 1814#ACT XX 1863 சட்டத்தின்படி, "போர்ட்டர் ரெவின்யூ' கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு நிர்வாகக் குழுவிடம் ஒப்படைப்பட்டது.

Advertisment

இது வரலாற்று முக்கியம் வாய்ந்தது. இந்த மாற்றத்திற்கு பிராமணர்களுடைய ஸ்மிருதியோ, சைவர் களுடைய ஆகமமோ, வேறெந்த புனித நூலோ அல்லது மரபோ அல்லது வருணாசிரம பழக்கமோ, எந்த ஒரு இந்துவோ காரணகர்த்தாவாக இல்லை என்பது வெள்ளிடை மலை.

dd

இன்று காணப்படும் தேவஸ்தான குழு, அறங்காவலர்கள் ஆகியவை தோன்றுவதற்கு முழுக்க முழுக்க காரணமாக இருந்தது கிருத்துவ மிஷனரியே ஆகும்.

1810லில் வங்களத்திலும், மெட்ராஸில் 1817லிலும், 1827லில் பம்பாயிலும் சமய நிறுவனங்களை நிர்வகிக்கும் அதிகாரத்தை போர்டு ஆப் ரெவென்யூவிடம் கிழக்கிந்திய கம்பெனி ஒப்படைத்திருந்தது. இவை அனைத்தும் 1863லில் முழு விடுதலையடைந்தன.

இதற்கு முன் கோயிலுக்குச் சொந்தமான பல கிராமங்கள், நிலங்கள், சொத்துக்களை முகமதிய அரசாங்கம் மதுரையில் தங்களது சொந்த பொறுப்பில் 1790 வரையில் தக்க வைத்துக் கொண்டிருந்தன என்பது வரலாறு.

இப்படி பழைய வரலாறு இருக்கையில், அபுதுபே என்ற பிரெஞ்சு பாதிரியார் கூறுவதாவது:

ஆங்கில அரசாங்கத்திடமிருந்து இந்து சமய நிறுவனங்கள், ஏனைய அறக்கட்டளைகள் ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்பு பிராமணர்களி டம் நேரிடையாக மாற்றப்பட்டது. அப்படி மாற்றப்பட்டதும் பிராமணர்கள் வர்ணாசிரம முறையை வேதகால அடிப்படையாகக் கொண்டு நிலைநிறுத்தத் தலைப்பட்டனர். பிராமணர்கள், பழைய சாஸ்திர, சம்பிரதாயங்கள் அனைத்திற்கும் திராவிட சாதியினரை அடிமைப்படுத்திச் சுரண்டுகின்ற வகையில் விளக்கம் அளித்தனர்.

பார்ப்பனர்கள், இந்துக் கோயில்கள், அறக்கட்டளைகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பெற்று, திராவிட மக்களை இழிவுபடுத்தி சாஸ்திர சம்பிரதாயங்களைக் கூறி ஒதுக்கி வைத்து அடிமைப்படுத்திவிட்டனர்.

ஜே.சி.கோஷ், "ஆகமங்கள் என்பவை திராவிடச் சாதியினர் கோயில்களில் வழிபடும் உரிமை குறித்த தொகுக்கப்பட்ட வரன்முறைகள்'' என்கிறார். பி.ஆர்.கணபதி அய்யர் தனது "சமய அறக்கட்டளைகள்' என்ற நூலில் அறிஞர்கள், ஆகம சாஸ்திரத்திலும் தாந்திரிக் அம்சங்களிலும் போதிய கவனம் செலுத்தவில்லை' என்றார்.

ஸ்மிருதிகள் தோற்றுவாய் வேதமாகும். ஆனால், ஆகமங்கள் அல்லது "தாந்திரிக்' போன்றவை தமிழர்களுடையது ஆகும்.

ஆகமங்கள் என்பது திராவிடக் கடவுள்களான சிவனையும், சக்தியையும் எவ்வாறு வழிபட வேண்டும் என்ற விதிமுறைகளைக் கூறுவதாகும்.

ஆக, ஆகமங்கள் திராவிடர்களுக்கும், ஸ்மிருதிகள், புராணங்கள் பிராமணர்களுக்கும் மட்டும் என்பதே சனாதன மதம் செய்துள்ள விதியாகும்.

தென்னிந்தியா முழுவதும் ஆகமங்கள் அடிப்படையாகக் கொண்ட உருவ வழிபாடு நடைபெற்று வருகின்றது. இதில் அனைத்துச் சாதியினரும் கோயில்களில் சென்று வழிபடும் உரிமை உண்டு.

பிரிவ்வி கவுன்சில் வழக்கு:

ஒரு வழக்கு இங்கிலாந்திலுள்ள பிரிவ்வி கவுன்சிலுக்கும் சென்றது. அவ்வழக்கில் நீதிபதி சேஷகிரி அய்யர் கூறியது முக்கியம்.

அர்ச்சகர்கள் பரம்பரையாக அர்ச்சகர்களை உருவாக்கும் குடும்பத்திலிருந்து வராதவர்களால் தொகுக்கப்பட்டதுதான் இந்த வழக்கு.

ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்திருந்தால் தான் கோயிலுக்குள் நுழைந்து பூஜை செய்யும் உரிமை உண்டு என்ற விதி ஆகமத்தில் இல்லை என்று அய்யர் வாதிட்டார்.

சிதம்பரம் நடராசர் கோயில் வழக்கு:

இக்கோயிலிலுள்ள அர்ச்சகர்கள் இக்கோயி லின் மூலவிக்ரகம்... அதாவது நடராச சுவாமிகள் இந்தப் பூமிக்கு வந்தபோது அக்கோயிலின் அர்ச்சகர்களாகிய தீட்சிதர்களும் உடன் வந்ததாகக் கூறி வருகின்றனர்.

கடவுளுடன் தாங்கள் வந்ததாகக் கூறும் அவர்கள் அக்கோயிலில் அனைத்து உரிமைகளை யும் பெற்றவராவர்.

வேறு எவருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதே அவர்களின் அடிப்படை வாதமாகும்.

ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது. சிதம்பரம் கோயில் தீட்சிதர் கள் பிராமணர்கள் அல்லர். அதே நேரத்தில் கோயில் பூசாரி பிராமணராகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியும் இல்லை. அதைப்போல், ஒரு குறிப்பிட்ட சாதியை அல்லது வகுப்பைச் சார்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்ற நியதியும் இல்லை.

தென்னிந்தியாவில் பல பெரிய கோயில்களில் பூசாரிகளாக இருப்பவர்கள் யாவரும் சூத்திரர்கள் ஆவர்.

இதை ஆய்வு செய்துதான் சேஷகிரி அய்யர், சிதம்பரம் கோயிலில் உள்ள பூசாரிகள், பிராமணர்கள் அல்லர் என்பதைக் காட்டி, பூசாரியாக இருப்பதற்கு எந்த குறிப்பிட்ட வகுப்பிலேயோ, சாதியிலேயோ பிறந்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

கோயில் கர்ப்பகிரஹத்தில் ஒரு சூத்திரர் நுழைந்துவிடலாம். ஆனால், ஒரு பிராமணர் நுழைய முடியாது. அது மட்டுமன்று, சங்கராச்சாரியார் கர்ப்ப கிரகத்தினுள் நுழையக்கூடாது.

காரணம், ஆகம விதிப்படி தீட்சை பெறவில்லை. தீட்சை பெற்ற ஒரு சூத்திரர், கர்ப்பக்கிரகத்தினுள் நின்று பூஜை செய்து இறைவனுக்கு உகந்தது.

ஒரு பிராமணன் கர்ப்பக்கிரகத்தினுள் நுழைந்தால், அக்கோயில் புனிதத்தன்மை யை இழந்துவிடுகிறது. இதுவே ஆகம விதி.

பிராமணர்கள் அக்னிகோத்ரியில் கிளியை வணங்குபவர்கள். உருவ வழிபாடு கிடையாது.

திராவிடர்கள் உருவ வழிபாட்டினர். உருவ வழிபாட்டிற்கே ஆகம விதிமுறைகள் உண்டு. உருவக்கடவுளை எப்படி வணங்குவது என்பதை வழிகாட்டிக் காட்டுவதே திராவிட ஆகமம் ஆகும்.

எனவே, "அனைத்து சாதியின ரும் அர்ச்சகராகலாம் என்பதற்கு எந்த ஆகமமும் தடை யாக இல்லை' என்பதே இந்து மதம் காட்டும் விதிமுறையாகும்.