குடியுரிமை சட்டத்திற்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. போராட்டம் நடத்திய ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைக் கழகங்களின் மாணவர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார் கள். நாடெங்கிலும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் உத்தரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை சேர்ந்த தமிழ் மாணவரும், மாணவர் பேரவையின் தலைவருமான கவுதம், நக்கீரனுக்கு அளித்த பேட்டி.

டெல்லியில் நடந்த மாணவர்கள் போராட்டம், போலீசாரின் தடியடி, துப்பாக்கிச்சூடு எல்லாம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. அங்கு என்ன நடந்தது?

ஜாமியா போராட்டம் சாயங்காலம் நடந்தது. இதையடுத்து கொதித்தெழுந்த எங்கள் அலிகார் பல்கலைக்கழக மாணவர்கள் ஜனநாயக முறையின்படி போராடினோம். போராட்டத்தை ஒடுக்கும் விதமாக போலீசார் எங்கள் மீது தடியடி நடத்தினார்கள். கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசினார்கள். ரப்பர் பிஸ்டலும் பயன்படுத்தினார்கள். மாணவர் அமைப்பைச்சேர்ந்த சல்மான் நித்தியாஸ் நெஞ்சு மீது கண்ணீர்க்குண்டை வீசியதில் அவர் மூச்சுவிட முடியாதபடி அவதிப்பட்டு வருகிறார். ரப்பர் பிஸ்டலால் சுட்டதில் மாணவர் ஒருவரின் கை துண்டாகிவிட்டது. அவர் இனி எப்படி எழுதுவார் என்று கவலையாக இருக்கிறது. கல்லூரி விடுதிக்குள் புகுந்த போலீசார், ஒவ்வொரு அறையாக சென்று தூங்கிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். மோரிஷன் ஹாலில் இருந்த ஒரு அறையை முழுவதுமே போலீசார் எரித்துவிட்டார்கள். அங்கிருந்த மாணவர்களின் உடமைகள், ஆவணங்கள் தீயில் கருகிவிட்டன.

hh

Advertisment

கற்கள் வீச்சு, பேருந்துகள் எரிப்பு என்று மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டதால்தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறதே?

இந்தியாவெங்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்றாலும், இஸ்லாமிய பல்கலைக்கழக மாண வர்களின் போராட்டங்கள்தான் ஒடுக்கப்படுகின்றன. ஜாமியா, அலிகாரில் மட்டும் கலவரம் ஏற்பட்டதாக சொல்லப்படுவது உண்மை அல்ல. தமிழகத்தில் ஜல்லிக்கட்டில் நடந்தது போலவே போலீசாரே கலவரத்தை தூண்டிவிட்டனர். வாகனங்களுக்கு தீ வைத்தனர். டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆர்.எஸ்.எஸ். கொள்கை உடைய மாணவர்கள் போலீசாருடன் சேர்ந்துகொண்டு, போலீசார் போலவே உடை அணிந்துகொண்டு போராட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கான காணொலிக் காட்சிகள், ஆதாரங்கள் இருக்கின்றன.

இஸ்லாமியர்கள் என்ற பார்வை இருப்பதாலும், ஜாமியா, அலிகார் பல்கலை மாணவர்கள்தான் போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள் என்பதாலும்தான் போராட்டத்தை ஒடுக்க நினைத்தார்களா?

Advertisment

இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அலிகார் மாணவர் அமைப்பின் நோக்கம். ஜாமியா பல்கலைக்கழக மாண வர்களின் நோக்கமும் அதுதான். இந்த நோக்கத்தின்படி அலிகார் மாணவர்கள் இதற்கு முன்னர் நிறைய போராட்டங் களை முன்னெடுத்திருக்கிறோம். அலிகா ரும், ஜாமியாவும் முஸ்லிம் பல்கலைக்கழகங் கள் என்பதாலும்தான் குறிவைக்கப்படுகின் றன. விடுதலை பெற்றது முதற்கொண்டே சிறுபான்மையினர் அதிகம் படிக்கும் அலிகார் பல்கலைக்கழகத்தின் மீது தாக்குதல் நடத்துவது ஒன்றையே வலதுசாரிகள் குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள். சாவர்க்கர் பிரிவினையை தூண்டியது முதல் இப்போதுவரை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத்தான் குறிவைக்கிறார்கள்.

அலிகார், ஜாமியாவில் இஸ்லாமிய மாணவர்கள்தான் போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். அந்த இஸ்லாமிய மாணவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று பா.ஜ.க. தரப்பில் சொல்லப்படுகிறதே?

அலிகார் பல்கலைக்கழகத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு மாணவர்கூட இல்லை. இப்போதிருக்கும் பாசிச பா.ஜ.க. ஆட்சியில் ஒரு பாகிஸ்தான் மாணவர் இங்கே இருந்து படிக்க முடியுமா என்ன? அலிகாரில் முஸ்லிம் மட்டுமல்ல பிற மதத்தினரும் உள்ளனர். முஸ்லிம்களை இந்த நாட்டைவிட்டு விரட்டவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் நோக்கம். இந்த நாட்டில் பிறந்த மாணவர்கள் நாங்கள், இந்த நாட்டில் பிறந்த சக முஸ்லிம் மாணவர்களை விரட்டியடிக்க விடமாட்டோம். இன்னுயிர் இருக்கும்வரை எங்களின் போராட்டம் தொடரும்.

-சந்திப்பு: பெலிக்ஸ்

தொகுப்பு: -கதிரவன்

படம்: ஸ்ரீபாலாஜி