மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முன்னோட்டமாக இருந்தாலும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்புதான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்குக் கிடைக்கப்போகும் முதல் அங்கீகாரம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலையொட்டி அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சில அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ராஜ்பவன் அதிகாரிகள் தரப்பு, "அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் 4 நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடம் நடந்தது. அதில் தி.மு.க. அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய கோரிக்கை மனு ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது.

Advertisment

stalin

தேர்தலில் தோல்வியைத் தவிர்க்க நினைக்கும் ஆளுங்கட்சி, தேர்தல் ஆணைய அதிகாரிகள் -போலீஸ் அதிகாரிகள் -அரசு அதிகாரிகள் துணையுடன் தில்லுமுல்லு செய்ய திட்டமிட்டுள் ளது. திமுகவின் கைப்பாவையாகவே மாநிலத் தேர்தல் ஆணையம் மாறிவிட்டது. பல இடங்களில் ரவுடிகளை வைத்து மிரட்டி அ.தி.மு.க. வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்திருக்கிறார்கள். அந்த ரவுடிகளின் அராஜகம் அதிகரித்து வருகிறது. இந்த மிரட்டல்களை ஆணைய அதிகாரிகளுக்கும் போலீசுக்கும் தெரிவித்தால் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. அப்படி மிரட்டியதால் அ.தி.மு.க. வேட்பாளர் ஒருவர் தற்கொலையே செய்துகொண்டார்.

தேர்தல் நடக்கும் பகுதிகளின் தன்மைக்கேற்ப ஒரு ஓட்டுக்கு 1000 முதல் 3000 வரை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தி.மு.க. அமைச்சர்கள் வளைக்கின்றனர். இதை யெல்லாம் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டி ருக்கும் அதிகாரிகள் கண்டுகொள்வதே இல்லை. தேர்தல் நடத்தை விதிமுறைகளை முதல்வரின் மகன் உதயநிதி உள்பட தி.மு.க.வினர் மீறிக்கொண்டிருக்கிறார்கள். எந்த நடவடிக்கையும் இல்லை. ரவுடிகளால் வாக்காளர்கள் மிரட்டப்படுகின்றனர். அதிகாரிகள் மற்றும் ரவுடிகள் மூலம் கள்ள வாக்குகள் பதிவு செய்ய திட்டமிடுகிறது ஆளும் கட்சி. அதேபோல, வாக்குகள் எண்ணிக்கையின் போதும், பூத் கேப்ச்சரிங் மூலம் ரிசல்ட்டை ஆளும் கட்சிக்கு சாதகமாக அறிவிக்கச் செய்யவும் திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், சட்டத்தின் ஆட்சியையும் ஜனநாயக நெறிமுறைகளையும் நிலைநிறுத்த... இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கும் காவல்துறைக்கும் நீங்கள் ஸ்ட்ரிக்டாக உத்தரவிட வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளனர் அ.தி.மு.க. மாஜிக்கள்.

அதற்கு ஆளுநர், "உள்ளாட்சி தேர்தலை நான் உன்னிப்பாகத் தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வித அசம்பாவிதம் இல்லாமலும், சட்டத்திற்கு உட்பட்டும் தேர்தல் நடக்க வேண்டும். தேர்தலை மையப்படுத்தி ரவுடியிசம், ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பாடுகள் எதுவும் நடந்தால் அதனை வீடியோவில் பதிவு செய்து எனக்கு அனுப்பி வையுங்கள். தேர்தலை மையப்படுத்தி சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனை ஏற்பட்டால் நான் அமைதியாக இருக்க மாட்டேன். ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை யும் நான் ஏற்க மாட்டேன். ஆதாரமிருந்தால் ஆக்ஷன் எடுக்கப்படும்'' எனச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்த சந்திப்பில் நடந்த விசயங்கள், முதல்வருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில், தேர்தலின் போதும் வாக்குகள் எண்ணும் மையங்களிலிலும் விருப்பந்தகாத எந்த சம்பவமும் நடக்கக் கூடாது. குறிப்பா, ரவுடிகள் பிரச்சனை எதுவும் வரக்கூடாது. சட்ட ஒழுங்குக்கு பிரச்சனை ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும். இந்த உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகளின் எதிர்பார்ப்புகளுக்கு இடம் தந்திடக்கூடாது. எச்சரிக்கையாக இருங்கள். அராஜகத்தின் மூலம் கிடைக்கும் எந்த வெற்றியும் நமக்கு வேண்டாம். மக்களின் ஆதரவு நமக்குத்தான் இருக்கிறது.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாமல் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றனர். அதற்கு இரையாகிவிடாதீர்கள். அமைதியாக தேர்தல் நடந்து முடிந்தது என்றும், தி.மு.க. அதன் வெற்றி இலக்கை அடைந்துள்ளது என்றும் ரிசல்ட் வருவதுதான் எதிரிகளுக்கு நாம் தரும் பரிசு என உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். இதே அறிவுறுத்தல்கள் காவல்துறை அதிகாரிகளுக்கும் சொல்லப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலில் கலவரம் உருவானால் அதை வைத்தே தேர்தல் ரத்தாகும்; ஆட்சியின் சட்ட ஒழுங்குக்கு கெட்ட பெயர் ஏற்படும்; தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் மோதல் போக்கு இருக்கும் நிலையில் தேர்தலில் நடக்கும் விரும்பத்தகாத சம்பவங்களால் அதை வைத்தே தி.மு.க. அரசுக்கு எதிராக கவர்னர் டெல்லிக்கு நோட் போட வசதியாகும் என்றெல்லாம் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் எதிர்பார்க்கின்றன.

அதனை முறியடிக்கும் வகையில் சமயோஜிதமாக யோசித்து, ’தேர்தல் நியாயமாகவும் ஜனநாயக ரீதியாகவும் நடக்க வேண்டும்; எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது‘என தி.மு.க. அமைச்சர்களுக்கு உத்தர விட்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால் அ.தி.மு.க. -பா.ஜ.க.வின் எண்ணம் ஈடே றாது‘’என்று விரிவாக சுட்டிக் காட்டுகிறார்கள் கோட்டை அதிகாரிகள்.

இந்த நிலையில், தி.மு.க. வினர் யாரும் தேர்தல் அராஜகத் தில் ஈடுபட்டு விடக்கூடாது என கண்கொத்திப் பாம்பு போல தி.மு.க.வினரை கண்காணித்து வருகிறார்கள் முதல்வரின் உத்தரவுக்கேற்ப செயல்படும் காவல்துறை அதிகாரிகள்.

Advertisment